WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் : மத்திய
கிழக்கு :
சிரியா
பிரான்ஸ், துருக்கி
ஐ.நாவில் சிரியா மீது பறக்கக் கூடாது பகுதிக்கு வலியுறுத்துகின்றன
By Chris
Marsden
31 August 2012
use this version to print | Send
feedback
சிரியாவில்
மேற்குநாடுகளின் இராணுவத் தலையீட்டிற்கான வலியுறுத்தல் துருக்கியுடன் சேர்ந்து
பிரான்ஸினால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இவை இரண்டிற்கும் அமெரிக்கா, பிரித்தானியா
மற்றும் பிராந்திய பிற்போக்குத்தன முடியரசுகளான சவுதி அரேபியா மற்றும் கட்டார்
போன்றவற்றின் ஆதரவும் உள்ளது. அனைத்துமே ஈரானைத் தனிமைப்படுத்துவதற்காக சிரிய
ஜனாதிபதி அல்-அசாத்தின் அரசாங்கத்தை தூக்கிவீசுவதில் தீவிரமாக உள்ளன.
நேற்று
ஐ.நா.பாதுகாப்புக் குழுக் கூட்டம் ஒன்று துருக்கிய வெளியுறவு மந்திரி அஹ்மத்
டவுடோக்லு சிரியா மீது ஒரு பறக்கக்கூடாது பகுதி உருவாக்கப்பட வேண்டும் என்ற
முறையீட்டைக்கேட்டது. இவ்வாறான ஒரு மனிதாபிமான ஆரம்பமுயற்சி, அகதிகள் வெள்ளமென
வெளியேறுதலைத் தடுத்தல் என்று காட்டப்பட்டாலும், இத்தகைய பகுதி நிர்ணயிக்கப்படுவது
சிரியாவிற்கு
எதிரான இராணுவத் தலையீடு என்று ஆகும். இராணுவத் தலையீட்டை எதிர்க்கும் நாடுகள்,
எல்லாவற்றிற்கும் மேலாக ரஷ்யா மற்றும் சீனாவைத் துருக்கி குறைகூறியுள்ளது.
புதன்கிழமை
அன்று டவுடோக்லு செய்தி ஊடகத்திடம்,
“சிரியாவிற்குள்
இருக்கும் அகிதகளைப் பாதுகாப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை தலையிடும் என்றும்
முடிந்தால் அங்கிருக்கும் முகாம்களில் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் என்று
நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
என்றார்.
துருக்கியப்
பிரதம மந்திரி ரெசிப் தயிப் எர்டோகன் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, சிரியாவில்
நடக்கும் அடக்குமுறைக்கு மறைமுகமான ஆதரவு போன்றது என்றும், சீனா மற்றும் ரஷ்யா
ஆகியவை ஐ.நா. பாதுகாப்பு சபையில் சிரிய எதிர்ப்பிற்கு தடுப்பதிகாரத்தைப்
பயன்படுத்தியது
“பெரும்
தவறு”
ஆகும் என்றார்.
இத்திட்டம்
ஏற்கப்படுவதற்கான சாத்தியப்பாடு இல்லை. பாதுகாப்புக்குழுக் கூட்டம் ஒரு பிரிவின்
கூட்டமாகப் போயிற்று; சிரிய அரசாங்கத்தை பலாத்காரமாக அகற்றும் நோக்கம் உடைய
சக்திகள் மட்டும்தான் கூட்டத்தில் இருந்தன ஏனைய பங்கு பெற்ற நாடுகள் தங்கள்
எதிர்ப்பை காட்டத்தான் வந்தன.
வெளிநாட்டு
மந்திரிகளின் அவசரக் கூட்டம் எனக் கூறப்பட்டு, பிரான்ஸ் குழுத் தலைவர் என்னும்
முறையில் அதைக் கூட்டிய நிலையில், ஐந்து நிரந்தர அங்கத்தவ நாடுகளில் லோரன்ட்
ஃபாபியுஸ் மற்றும் பிரித்தானியாவில் வில்லியம் ஹேக் ஆகியோர்தான் பங்கு பெற்ற
மந்திரிகளாவர். குழு உறுப்பினர்களில் 15 பேரில் பாதி பேருக்கும் குறைவாகத்தான்
மந்திரிகளை அனுப்பி வைத்திருந்தனர்.
சீனாவும்
ரஷ்யாவும் கூட்டத்தைக் கிட்டத்தட்ட புறக்கணித்தன. கூட்டத்தின் ஒரேயொரு நோக்கம்
சிரியாவிற்கு எதிரான போரை நியாயப்படுத்துதல்தான். இது துருக்கி, லெபனான் மற்றும்
ஜோர்டானுக்கு விடுத்த அழைப்பில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. இவை அனைத்தும்
அமெரிக்க ஆதரவுடைய அசாத் எதிர்ப்புச் சக்திகளான சிரியத் தேசியக் குழு, சுதந்திர
சிரிய இராணுவம் மற்றும் பல அல்குவேதா மாதிரியிலான குழுக்களுக்கு உதவுகின்றன.
ஓர்
“இரட்டை
நிராகரிப்பை”
பிரான்ஸ்
ஒப்புக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்க வெளவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன்
கூட்டத்திற்கு வரவில்லை.
“அமெரிக்காவும்
பிரித்தானியாவும் பாதுகாப்புக்குழுவின் மூலம் முடிவாக அடையப்படக்கூடியதை நாம்
அடைந்துவிட்டோம் என்று நம்புகின்றன, மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் அத்தகைய தீர்மானம்
ஒருதலைப்பட்சமான ஆதரவுடையதாக இருக்கும் என்று கூறுகின்றன”
என்று ஒரு தூதர் கூறினார்.
கிளின்டனின்
நிலைப்பாடு இன்று முடிவடையும் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் ஐ.நா.சபைக்கான பாதை
மூடப்பட்டுவிட்டது, ஒரு புதிய ஈராக்கிய மாதிரியிலான
“விருப்பம்
உடையோர் கூட்டம்”
செயல்பட வேண்டும் என்பதற்கு நிரூபணம் ஆகும் என்பதாகும். அமெரிக்க ஜனாதிபதி பாரக்
ஒபாமா, பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி
பிரான்சுவா ஹாலண்ட ஆகியோர் கடந்த சில நாட்களில் சிரியா இரசாயன ஆயுதங்களைப்
பயன்படுத்தக்கூடும் என்னும் அச்சுறுத்தல் ஒரு
“சிவப்புக்கோடாக”,
இருக்குமெனவும் மற்றும் இது இராணுவத் தலையீட்டைக் கொண்டு வரலாம் என
தெரிவித்துள்ளனர். இத்தகைய “பேரழிவு
ஆயுதங்கள்”
பற்றிக்கூறுதல் அல்லது வார்த்தையாடல்களான
“மனிதாபிமான”
அக்கறைகள் என்று கூவுதல் வாஷிங்டன், பாரிஸ் மற்றும் லண்டனுக்கு ஒரு துருக்கியத்
தலைமையிலான இராணுவத் தலையீடு, சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆதரவுடன்
நடத்தப்படுதற்கு ஒரு போலிக்காரணமாக இருக்கும்.
முஸ்லிம்
சகோதரத்துவம் இப்பிராந்தியத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முக்கிய
கருவியாகிவிட்டது. ஏகாதிபத்திய சக்திகள் தொழிலாள வர்க்கப் போராட்டங்களானால்
வாஷிங்டனின் இரு முன்னாள் நண்பர்களான துனிசியாவின் ஜைன் எல் அபிடைன் பென் அலி
மற்றும் எகிப்தின் ஹொஸ்னி முபாரக் ஆகியோர் பதவி இழந்தபின் இது பதவிக்கு வந்துள்ளதை
ஆதரித்துள்ளன.
இதன்
பிரயோசனம் 120 நாடுகள் அடங்கிய அணிசாரா இயக்கத்தின் மாநாடு தெஹ்ரானில் நடந்தபோது
அமெரிக்கப் பயிற்சி பெற்ற உயர்கல்வியாளரும் புதிய எகிப்து ஜனாதிபதியான முகம்மது
முர்சியின் செயல்களால் வலியுறுத்தப்பட்டன. 1961ம் ஆண்டு யூகோஸ்லாவிய ஜனாதிபதி
ஜோசிப் ப்ரஸ் டிட்டோவின் முயற்சியில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பை அமெரிக்காவினால்
தனிமைப்படுத்தப்படுவதை எதிர்க்கும் அரங்காக ஈரான் பயன்படுத்த முற்றபட்டது. ஆனால்
முர்சி வார இறுதியில் நடந்த நிகழ்வில் பேசியபோது அசாத்தின் ஆட்சியை
“தனது
சட்டபூர்வதன்மையை இழந்துவிட்ட அடக்குமுறை ஆட்சி”
என்று கண்டித்து,
“நாம்
அனைவரும் தீவிரமாகத் தலையிட வேண்டும்”
என்றும் வலியுறுத்தினார்.
ஈரான் ஒரு
நான்கு நாடுகள் தொடர்புக் குழு என்று எகிப்து, துருக்கி மற்றும் சவுதி அரேபியாவுடன்
சேர்ந்து அசாத் அகற்றப்படுவதை அடித்தளமாக்க கொண்ட சிரிய நெருக்கடிக்கான
முற்றுப்புள்ளிக்குப் பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்று முர்சி கோரினார். இவருடைய
முறையீடு தற்பொழுது வாஷிங்டனின் மேற்பார்வையுடன் சிரியாவில் கட்டாயமாக ஆட்சியை
மாற்றுவதை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதி ஆகும்.
தவறான
தகவல்களைத் தரும் இப்பிரச்சாரத்தின் முக்கியக் கூறுபாடு இடைவிடாமல் சிரியாவின்
இறப்பு எண்ணிக்கை குறித்து ஆதாரம் இல்லாமல் மிகைப்படுத்துவது ஆகும். இத்துடன் சிரிய
இராணுவம் கணக்கிலடங்கா படுகொலைகள் மற்றும் கொடூரங்களைச் செய்வதாகவும்
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
பாதுகாப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்னதாக, தரயா நகரத்தில் படுகொலைகள் என்ற
எதிர்த்தரப்பின் கூற்றுக்களைச் சுற்றிக் குற்றச்சாட்டுக்கள் மையப்படுத்தப்பட்டன.
ஞாயிறன்று கிட்டத்தட்ட 200 பேர் -பெரும்பாலனவர்கள் சுன்னிகள்- கொல்லப்பட்டனர் என்று
கூறப்பட்டது. புதன் கிழமையையளவில் எண்ணிக்கை 400 என உயர்த்திக் கூறப்பட்டது.
ஹௌலா
மற்றும் க்வபைரிலும் இத்தகைய படுகொலைகள் நடந்ததாக முந்தைய பாதுகாப்புக்குழுக்
கூட்டங்களில் கூறப்பட்டது. இவையும் சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என்பதை நியாயப்படுத்துவதற்காகக் கூறப்படுபவை. தரயா பற்றிய செய்தி ஊடகத்
தகவல்கள் இவ்வகையில்தான் வெளிப்படுகின்றன.
தரயா பற்றிய
முதல் தகவலைக் கூறிய மேலைச் செய்தியாளர் இண்டிபென்டென்ட்டின் செய்திதாளின்
ரோபர்ட் பிஸ்க் ஆவார். புதன் அன்று, ஆத்திரமூட்டப்படாத வகையில் ஏராளமான குடிமக்கள்
படுகொலைகள் செய்யப்பட்டதின் விளைவு என்பதற்கு மாறாக, பல உள்ளூர் மக்கள் அவரிடம்
“சுதந்திர
சிரிய இராணுவம் கைப்பற்றி பிணையமாக வைத்துள்ள நபர்கள் மற்றும் விட்டோடிய கைதிகள்
பரிவர்த்தனைப் பேச்சுக்கள் ஆயுதமேந்திய விரோதிகளுக்கும் சிரிய இராணுவத்திற்கும்
இடையே நடைபெற்றது. இது ஜனாதிபதி பஷர் அல்-அசத் அரசாங்கப் படைகள் நகரத்தில் புயல்
போல் நுழைந்து எதிர்த்தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்பதற்கு முன் நடந்தது.”
என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.
எதிர்த்தரப்பினர் குடிமக்களையும் பணிநேரத்தில் இல்லாத இராணுவத்தினரையும் கடத்தினர்,
பலரைக் கொன்றனர், மற்றவர்களை கைதிகளைப் பறிமாற்றம் செய்வதற்குப் பிணைக் கைதிகளாக
நடத்தினர் என்று அங்கு வசிக்கும் மக்கள் விளக்கினர்.
“ஊகிக்ககூடியதைவிட
அதிகமானதாகக் கூறப்படும் கொடுமைகளைப் பொறுத்தவரை”,
ஒரு பெண்மணி “குறைந்தப்பட்சம்
10 சடலங்கள் அவருடைய வீட்டிற்கு அருகே கிடத்தப்பட்டதைப் பார்த்தார்....சிரியத்
துருப்புக்கள் அப்பொழுது தரயாவிற்குள் நுழையவில்லை”
என்று கூறியதாக பிஸ்க் மேற்கோளிட்டுள்ளார்.
மற்றொரு
நபர் கல்லறையில் கிடத்தப்பட்ட சடலங்கள் என்று காட்டும் புகைப்படங்கள் பலவும்
மற்றும் இது சிரிய இராணுவத்தினால் கொல்லப்பட்டவர்கள் என்று கூறுவதும்,
“அரசாங்கத்தின்
படைகளைச் சேர்ந்தவை, இதில் பணியில் இல்லாத கட்டாயமாக சேர்க்கப்பட்ட படையினரும்
அடங்குவர்”
என்றார்.
“இறந்த
ஒரு நபர் அஞ்சல்துறை ஊழியர்
–
அவரை அவர்கள் சேர்த்த
காரணம் அவர் அரசாங்க ஊழியர் என்பதால்”
என்று சாட்சி கூறினார்.
“இக்கதைகள்
உண்மை என்றால், முகமூடி அணிந்த ஆயுதமேந்திய நபர்கள் தன்னுடைய வீட்டிற்குள்
பலவந்தமாக நுழைந்தவர்கள், தன் குடும்பத்தினரைக் கொல்வதைத் தடுப்பதற்காக அவர்களுக்கு
முத்தமிட்ட மற்றொரு பெண்மணியின் கருத்துப்படி சிரிய அரசாங்கத் துருப்புக்கள் என்பதை
விட ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள்தான்.”
என பிஸ்க் கூறியுள்ளார்.
விமர்சனமற்ற
வகையில் எதிர்த்தரப்பினர் கூறும் அறிக்கைகளை எல்லாம் பெரிதும் முழக்கமிட்டு,
அனைத்து இறப்புக்களையும் உள்நாட்டுப்போரில் ஒருபுறத்துத் தவறுகள் என்று கூறும்
வகையில், ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கைத் தமக்கிடையே பங்கு போட முயல்வதற்கு
ஆதரவான ஒரு கருவியாகத்தான் செய்தி ஊடகம் செயல்பட்டு வருகிறது. |