WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The tripling of US
arms sales
அமெரிக்க ஆயுத விற்பனை மூன்று மடங்கு அதிகமாகின்றது
Bill Van Auken
30 August 2012
வெளிநாடுகளுக்கு அமெரிக்க ஆயுதங்களின் விற்பனை மூன்று மடங்கி அதிகமாகி மிக உயர்ந்த
அளவில் $66.3 பில்லியன் என ஆகியிருப்பது பாரசீக வளைகுடா மற்றும் உலகளவில் போர்
உந்துதல் விரைந்திருப்பதை துல்லியமாகக் காட்டும் அளவு கோல் ஆகும். அமெரிக்க
ஏற்றுமதிகளில் இந்த ஒரு வன்முறைத் துறையின் ஏற்றம் ஒரு நோயுற்ற முதலாளித்துவ
பொருளாதாரத்தையும் மற்றும் சமூகத்தையும் பிரதிபலிக்கிறது.
இதன் நிதிய-பெருநிறுவன உயரடுக்கு அமெரிக்காவில் பொதுப் பொருளாதாரச்
சரிவை ஈடுகட்டுவதற்கு இராணுவவாதத்திற்கு செல்கிறது என்பதையும் இது காட்டுகிறது.
இந்த வாரம்
CRS
எனப்படும்
காங்கிரசின் ஆய்வுப் பணிப் பிரிவு வெளியிட்டுள்ள உலகளாவிய ஆயுத விற்பனை பற்றிய
ஆண்டு அறிக்கை அமெரிக்காவை உலகிற்கு நவீன ஆயுதங்களை வழங்கும் முதல் நாடாக மிக
அதிகப் பெரும்பான்மையான அளவில் இருத்தியுள்ளது.
“2011ல்
உலகெங்கிலும் ஆயுதங்கள் மாற்றப்படுவதில் அமெரிக்கா முன்னின்று, $66.3 பில்லியன்
மதிப்புடைய உடன்படிக்கைகளை செய்துகொண்டது (இத்தகைய மொத்த உடன்படிக்கைகளில் இது
77.7% ஆகும்). 2010ல் இருந்த $21.4 பில்லியனில் இருந்து ஒரு அசாதாரண அதிகரிப்பு
ஆகும். 2011ல் அமெரிக்கா உலகம்முழுவதும் கொண்ட உடன்பாடுகள் அமெரிக்க ஆயுத
ஏற்றுமதித் திட்ட வரலாற்றில் ஒரு ஆண்டில் மிக அதிகமான தொகையாக உள்ளது”
என்று காங்கிரசிற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது.
ஒரு முந்தைய
காலத்தில், வாஷிங்டன் இத்தகைய ஆயுத உடன்பாடுகளை அதன் குளிர்யுத்தகால மூலோபாயமான
சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கை எதிர்ப்பதற்கு மாஸ்கோ மற்றும் அதன் நட்பு
நாடுகளுக்கு எதிராக மேலை நாடுகளுடன் இணைந்துள்ள ஆட்சிகளை முட்டுக் கொடுத்தல் என்ற
பெயரில் நியாயப்படுத்தியது. இது சோவியத் மூன்றாம் உலகு என அழைக்கப்பட நாடுகளுக்கு
ஆயுதங்களை விற்ற நிலைமைக்குள் நடந்ததுடன், அமெரிக்காவின் ஏற்றுமதியை சில நேரம்
கடந்துவிட்டது.
ஆனால்,
இன்று
CRS
அறிக்கை
தெளிவாக்குவது போல், அமெரிக்கா உலக ஆயுத விற்பனைகளில் முக்கால் பகுதிக்கு மேல்
கொண்டுள்ளது. இதன் மிக நெருக்கமான போட்டி நாடான ரஷ்யா கிட்டத்தட்ட 5.6% ஆயுத
மதிப்பைத்தான் விற்கிறது.
அமெரிக்க
ஆயுதங்களின் விற்பனையில் பாரிய உயர்வு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மூலோபாய
இலக்குகளைச் சாதிக்க ஆக்கிரமிப்பு போருக்கு மாற்றம் என்பதை விரைவுபடுத்தும்
உந்துதலுடன், அமெரிக்காவின் பெருகிவிட்ட இராணுவத்-தொழில்துறை பிரிவின் மற்றும் இலாப
உந்துதலின் தீராத ஆசையினாலும் நிலைபெற்றுள்ளது.
இப்படி
ஆயுதங்கள் விற்பனையில் மிகப் பெரிய பங்கு சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள்
ஆகியவற்றிற்கு செல்லுகிறது. இரண்டும் இணைந்து $38.2 பில்லியன் என்று மொத்த $66.3
பில்லியனில் கொண்டுள்ளன. பிற முக்கிய விற்பனைகள் $2 பில்லியன் மதிப்புடைய ஏவுகணை
எதிர்ப்பு மின்கலங்களை சீனாவிற்கு எதிராகத் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக தைவானுக்கு
விற்றது. மற்றும் $6.9 பில்லியன் மதிப்புடைய ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்றது.
இதனால் அதன் பிராந்திய விரோதி பாக்கிஸ்தானுடன் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
சவுதி
முடியரசு 84 நவீன
F15
போர்
விமானங்களை டஜன் கணக்கான இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ஆயுதங்களை
வாங்கியிருப்பது போயிங் மற்றும் யுனைட்டெட் டெக்னாலஜிஸிற்கு மிகதிக இலாபங்களைக்
கொடுத்துள்ளது. எமிரேட்டில் உள்ள ஆட்சி $3.5 பில்லியன் மதிப்பிற்கு மிக நவீன,
நுணுக்கமான ஏவுகணைப்பாதுகாப்பு முறையை பெற்றுள்ளது. இது லாக்ஹீட் மார்ட்டின்
நிறுவனத்திற்குப் பெரும் ஆதாயங்களைக் கொடுத்துள்ளது.
CRS
அறிக்கை கீழ்க்கண்ட
கருத்தையும் கூறியுள்ளது:
“வெளிநாடுகளுக்கு
ஆயுதங்களை அளிக்கும் நம் நிறுவனங்களுக்கு முக்கிய உந்துதல் கடந்த ஆண்டுகளில்
வெளியுறவுக் கொள்கை இலக்கை ஆதரிப்பதற்கு என்று இருந்திருக்கலாம் என்றாலும், இன்று
உந்துதல் அத்துடன் கூட, இன்னும் அதிகமான முறையில் வெளியுறவு அல்லது தேசியப்
பாதுகாப்புக் கொள்கையின் பொருளாதார கருத்துக்களையும் அடித்தளமாக கொண்டுள்ளது.”
உண்மையில்,
இந்த வெளியுறவுக் கொள்கை இலக்குகள் மற்றும் பொருளாதார நலன்கள் ஒன்றுக்கொன்று ஊட்டம்
கொடுக்கின்றன. இராணுவ-தொழில்துறைக்கூட்டு என்று முன்னாள் தளபதி ட்வைட் டி. ஐசனோவர்
அவருடைய ஜனாதிபதிப் பதவிக்கால இறுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் எச்சரித்தது
இப்பொழுது மலைபோன்ற பரிமாணங்களுக்கு வளர்ந்து, அமெரிக்க அரசாங்கத்தையும், இரு
முக்கிய கட்சிகளையும் மேலாதிக்கம் கொண்டு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதற்கு
பொருத்தமற்ற மிக அதிக பங்கை கொண்டுள்ளது. வெளிநாட்டில் இராணுவவாதம் மற்றும்
உள்நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் இரண்டிற்கும் இது சக்திவாய்ந்த ஊக்கத்தை
வழங்குகிறது.
ஒரு புறம்,
அரபு உலகிலுள்ள முடியாட்சி அரசுகள் ஆயுதங்களை வாங்குவது
“அரபு
வசந்தம்”
என்று வர்ணிக்கப்பட்ட மக்கள் எழுச்சிக்கு அவற்றின் எதிர்விளைவுக் காட்டுகிறது
என்றால், மறுபுறம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மற்றொரு போருக்கான
தயாரிப்பில் இருந்து, இம்முறை ஈரானுக்கு எதிராக என, வெளிப்படுகிறது.
சவுதி
அரேபியாவை குடும்பச் சொத்துபோல் நடத்தும் சவுதிய மரபு, துனிசியா, எகிப்து மற்றும்
குறிப்பாக பஹ்ரைனில் நடந்த நிகழ்வுகளை அதன் வரம்பற்ற ஆட்சிக்கு அழிவுதரும்
அச்சுறுத்தல் என்று கருதியது; குறிப்பாக பஹ்ரைனில் அதன் துருப்புக்கள் வெகுஜன
எதிர்ப்புக்களை நசுக்கப் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவின் அடிப்படைப் பகுதி
பாரியளவில் இதன் இராணுவ அமைப்பு விரிவாக்கப்பட்டுள்ளது ஆகும்.
ஒரு
தசாப்தத்திற்கு முன் ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்பு போரில் இருந்ததை போலவே
ஈரானுக்கு எதிரான போர்த் தயாரிப்புக்கள்,
“பேரழிவு
ஆயுதங்கள்”
கொடுக்கக்கூடும் எனக்கூறப்படும் அச்சுறுத்தலுக்கு ஒரு பதில் என
பகிரங்கமாக நியாயப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானின்
அணுத் திட்டம் அணுவாயுதங்களை உற்பத்தி செய்ய இயக்கப்படுகின்றன எனக் கூறுகின்றன;
இக்குற்றச்சாட்டு பலமுறை ஈரானின் அரசாங்கத்தால் மறுக்கப்பட்டுள்ளது. அது சமாதானப்
பயன்பாட்டிற்குத்தான் அணுசக்தி என்றும் வலியுறுத்தி வருகிறது.
ஈரானுக்கு
எதிரான இக்குற்றச்சாட்டுக்களின் பாசாங்குத்தனம், முடக்கிவிடும் பொருளாதாரத்
தடைகளைச் சுமத்தப் போலிக்காரணமாக இருப்பது, அமெரிக்க வான் மற்றும் கடற்படைப் பெரும்
பிரிவை பாரசீக வளைகுடாவில் நிறுத்துவதும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
ஆத்திரமூட்டப்படாத இராணுவத் தாக்குதல் நடத்த இருப்பதாகக் கொடுக்கும்
அச்சுறுத்தல்களும் அமெரிக்க ஆயுத விற்பனை அறிக்கையில் வந்துள்ள புள்ளிவிவரங்களில்
வெளிப்படையாகின்றன. வாஷிங்டன் சவுதிக்கும் ஐக்கிய அரபு எமிரேட் ஆட்சிகளுக்கும்
மட்டும் கொடுத்த ஆயுதங்கள் கடந்த ஆண்டு ஈரானின் முழு இராணுவ செலவுத்தொகையைப்போல் 6
மடங்கு அதிகமாகும்.
இந்த ஆயுத
விற்பனைக்கு ஆதரவு கொடுப்பதில் உள்ள அமெரிக்கப் பூகோள மூலோபாய நோக்கம் ஈரானில்
ஆட்சி மாற்றத்திற்கான வலுவான ஆயுதங்களை அதன் ஆதரவாளர்களுக்கு போருக்காக வழங்குவது
ஆகும். இந்த வழிவகை ஏற்கனவே சிரியாவில் நடைபெற்று வருகிறது. அங்கு சவுதி அரேபியா
மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் போன்ற வாஷிங்டனின் முக்கிய ஆயுதம் வாங்குபவை
ஈரானின் முக்கிய அரபு நட்பு நாடான பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை அகற்ற முற்படும்
எழுச்சியாளர்கள் எனப்படுபவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பதாகும். இத்தகைய
ஆதரவு $100 மில்லியன் நிதியைத் தோற்றுவித்து சிரிய அரசாங்கத்திற்குச் சவால் விடும்
கிளர்ச்சியாளர்களுக்கு ஊதியம் கொடுத்தல் மற்றும் ஆயுதங்கள் வழங்கல் ஆகியவற்றிற்கு
உபயோகிக்கப்படுகிறது. இதற்கு துருக்கியில் இருக்கும்
CIA
ஒழுங்கமைப்பதுடன் ஐயத்திற்கு இடமின்றி சிரிய நாட்டிலும் உள்ளது.
ஈரானுக்கு
எதிரான போர்த்தயாரிப்புக்கள் பேர்சிய வளைகுடா மற்றும் காஸ்பியன் கடற்பகுதியில்
எரிசக்தி செழிப்பு உடையநாடுகளில் அமெரிக்க மேலாதிக்கத்தை இறுக்குவதற்கு
இயக்கப்படுகிறது. இங்கெல்லாம் ஈரானின் நிலப்பகுதி படர்ந்துள்ளது. அவ்வகையில்
ஆக்கிரமிப்பிற்கான தளம் ஈரான் மற்றும் அதன் மக்களுக்கு எதிராக ஒபாமாவால்
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு எதிராக புஷ் தொடங்கிய போர்கள் கொண்டிருந்த
அடித்தளத்தின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகிறது;
ஆயுதத்
தொழில்துறை மிகப் பெரியளவில் அமெரிக்காவின் வரிசெலுத்துவோரின் உதவிநிதிகளைப்
பெறுகிறது. அரசியல் நடைமுறையும், செய்தி ஊடகமும் வேலைகள், கௌரவமான ஊதியங்கள்,
கல்வி, முக்கிய பொதுப் பணிகள் ஆகியவற்றிற்கு கொடுக்க வேண்டும் என வரும்போது
“பணம்
இல்லை”
என
வலியுறுத்துகையில், முடிவில்லான பில்லியன்கள் அமெரிக்காவின் இறப்பைக் கொடுக்கும்
வணிகர்கள் மீது பொழியப்படுகின்றன.
இந்த
அரசாங்க உதவி நிதிபெரும் துறையின் இலாபங்களிலோ அதன் சக்தி வாய்ந்த ஆயுத முறை
விற்பனைகள் பிற்போக்குத்தன ஆட்சிக்கு நடத்தப்படுவதிலோ அமெரிக்கத் தொழிலாளர்
வர்க்கம் எந்தப் பங்கையும் கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றிற்கு எதிரான
போர்களில் வெகுஜன எழுச்சி ஏற்பட்டதை போலவே, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு
எமிரேட்டுக்கள் முடியரசுக்களுக்கு மிக அதிக அளவு ஆயுதங்கள் கொடுக்கப்படுவதற்கும்
மக்கள் எதிர்ப்பு உள்ளது. ஈரானுக்கு எதிராக இம்முறை மற்றொரு போர் கூடாது என்ற
கருத்துத்தான் உள்ளது.
போருக்கு
எதிரான வெகுஜன எதிர்ப்பு மறைந்துவிட்டது மக்கள் உணர்வை ஒட்டி அல்ல, மாறாக ஒரு சலுகை
பெற்ற மத்தியதர வகுப்பு அடுக்குப் போலி இடதுகளின் பிற்போக்குத்தன அரசியலினால்தான்.
அது வேண்டுமென்றே போர் எதிர்ப்பு உணர்வை ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகப்
பின்னிறுத்த உழைக்கிறது.
போருக்கு
எதிராக ஒரு புதிய வெகுஜன இயக்கம் ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்காவில் இருகட்சி
முறையை சமரசத்திற்கு இடமின்றி முறித்துக் கொள்ளுவதின் மூலம்தான் முடியும். இதற்குத்
தேவையானது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல்
அணிதிரளலாகும். அதில் ஆயுதத் தயாரிப்புத் துறையை பொது உடைமையாக்கி அங்குள்ள வசதிகளை
பெரும் கொலைகள் என்பதற்குப் பதிலாக மனிதத் தேவைகளுக்காக மாற்றுவதும் அடங்கும். |