சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Socialist Party leads polls in Dutch elections

சோசலிஸ்ட் கட்சி டச்சுத் தேர்தல்களில் முன்னிலையில் உள்ளது

By Sven Heymann and Peter Schwarz
30 August 2012

use this version to print | Send feedback

கருத்துக் கணிப்புக்களின்படி, செப்டம்பர் 12ல் நடக்க இருக்கும் டச்சுப் பாராளுமன்ற தேர்தல்களில்  சோசலிஸ்ட் கட்சி (SP) வெற்றி பெற உள்ளது.

சமீபத்தியக் கருத்துக் கணிப்புக்கள், முதலில் ஒரு மாவோயிசக் குழுவில் இருந்து உருவான சோசலிஸ்ட் கட்சி 150 இடங்கள் உள்ள கீழ்மன்றத்தில் 35 இடங்களைப் பெறும் என்ற குறிப்பைக் காட்டின. இது அதன் தற்போதைய மொத்த 15 பிரதிநிதிகளைவிட இரு மடங்கு அதிகம் ஆகும்; இதையொட்டி இக்கட்சி வலதுசாரி லிபரல் கட்சி (VVD) ஐ விட முன்னால் இருத்தப்படுகிறது; தற்போதைய ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும், Mark Rutte இன் தலைமையில் உள்ள இக் கட்சி, 31 இடங்களைத்தான் பெறும்.

PvdA எனப்படும் தொழிற் கட்சி 16 இடங்களைத்தான் பெறும் (முன்பு 30), கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் CDA 14 இடங்களைப் பெறுவர் (முன்பு 21) என்று கணிப்புக்கள் கூறுகின்றன. இரு கட்சிகளும் டச்சு அரசியலில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக மேலாதிக்கம் கொண்டவை, SP ஐ விடக் கூட்டாகக் குறைந்த வாக்கைத்தான் கொள்ளும்.

தீவிர வலது, இஸ்லாமிய எதிர்ப்பு சுதந்திரக் கட்சி (PVV), Geert Wilders உடையதும் இழப்புக்களை பதிவு செய்கிறது. கருத்துக் கணிப்புக்கள் இக்கட்சிக்கு புதிய பாராளுமன்றத்தில் தற்போதைய 24 இடங்களுக்கு பதிலாக 18 இடங்களைத்தான் கொடுக்கின்றன.

இப்பொழுது முக்கிய சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான எமிலி ரோமர் அடுத்த டச்சுப் பிரதமராகக் கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால், 50 வயது ஆசிரியர் சில கூட்டணிப் பங்காளிகளைப் பெற வேண்டும். இப்பொழுது டச்சுப் பாராளுமன்றத்தில் 10 கட்சிகள் பிரதிநிதித்துவம் கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை தேர்தலுக்குப் பின் 12 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக் கணிப்புக்களில் வெளிப்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு யூரோ நெருக்கடியின் ஒரு நேரடி விளைவாகும்; ஏனெனில் அரசியல் அதிர்ச்சி அலைகள் இப்பொழுது யூரோப் பகுதியின் ஐந்தாம் மிகப் பெரிய பொருளாதாரத்தை தாக்குகின்றன. ஆனால், இந்தப் போக்கின் வேர்க்காரணங்களை அறிந்து கொள்ள 30 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

1982ம் ஆண்டு தொழிற்சங்கங்களும் முதலாளிகளின் அமைப்புக்களும் Wassenaar Treaty என்னும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இது போல்டெர் மாதிரி என்பதற்கு அடிக்கல் நாட்டியது; இதையொட்டி சமூக பங்காளிகளும் அரசாங்கமும் ஒன்றாக இணைந்து ஊதியங்களைக் குறைத்து, சமூக நலச் செலவுகளைக் குறைத்து, தொழிலாளர் சந்தையை கட்டுப்பாட்டில் இருந்து அகற்றி, நெதர்லாந்தின் உலகப் போட்டித்தன்மையை அதிகரித்தன.

போல்டர் மாதிரி உண்மையில் 1990களில் செயல்பட்டது; அப்பொழுது சமூக ஜனநாயக மற்றும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் விம் கோக் பிரதம மந்திரியானார். கோக்கின் கொள்கைகள் டோனி பிளேயர் மற்றும் புதிய தொழிற் கட்சி என்று இங்கிலாந்து, மற்றும் ஜேர்மனியில் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர் செயற்பட்டியல் 2010 ன் கீழ் கொண்டுவந்த செய்பாடுகளுக்கு முன்னிழலாக இருந்தன.

இதன் விளைவு அதுவரை ஒப்புமையில் சமத்துவம் கொண்டிருந்த டச்சு சமூகம் எதிர்முனைப் பிரிவுகளில் மாறியது. OECD கருத்துப்படி, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்தில் ஒப்புமையில் வறுமை என்பது 1990 களில் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாயிற்று. சிறுபான்மையினர் ஒதுக்கப்பட்டனர், வாடகைகள் நகரங்களில் உயர்ந்தன, ஏழைகளிடம் இருந்து செல்வந்தர்களுக்கு செல்வம் மறுபங்கீடு செய்யப்பட்டது அரசியல் முறையை அதிர்விற்கு உட்படுத்தியது.

சமூக ஜனநாயக வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நெருக்கமான போல்டர் மாதிரியுடன் அடையாளம் காணப்பட்ட சூழலில், வலதுசாரி ஜனரஞ்சகக் கட்சிகள் சமூக அழுத்தங்களில் இருந்து பயன்பெற முடிந்தது. Pim Fortuyn அதற்குப் பின் போர்ட்யுன் படுகொலைக்குப்பின், கீர்ட் வில்டெர்ஸ் முக்கிய வலதுசாரிப் பிரச்சினைகளான இனவெறி மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு ஆகியவற்றை ஓரின அரசியல், அடையாள அரசியல் ஆகியவற்றுடன் முழுமையாக இணைத்தார். இந்த அடிப்படையில் PVV கணிசமாக தேர்தல் வெற்றியை பெற்றது; வறிய புறநகர்ப்பகுதிகள், மற்றும் ஒருநிலைக்கு வரத் துடிக்கும் மத்தியதர அடுக்குகள் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றது. 2010ல் வில்டர்ஸின் PVV டச்சுப் பாராளுமன்றத்தில் வலதுசாரி லிபரல்கள் மற்றும் தொழிற் கட்சியை அடுத்து மூன்றாம் இடத்தைப் பெற்றது.

நீண்ட, பயனற்ற பேச்சவார்த்தைகளுக்குப்பின், வில்டெர்ஸ் இறுதியில் உட்குறிப்பாக மார்க் ருட்டே தலைமையிலான ஒரு சிறுபான்மை அரசிற்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்தார். ஆனால் ருட்டேயின் தடையற்ற சந்தை, வங்கிகள் சார்பு போக்கு விரைவில் PVV  யின் மக்களைத் திருப்பதி செய்யும் கருத்துக்களை உதறித்தள்ளியது.

Rutte அதன்பின் ஒரு சிக்கனப் பொதியை அளித்தார் இது 16 பில்லியன் யூரோ அளவைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு-செலவு திட்ட பற்றாக்குறை அளவுகோலை 2012 வசந்த காலத்தில் நிறைவேற்ற உதவியது. இதன்பின் அந்நிலைப்பாட்டில் இருந்து வில்டெர்ஸ் மாறினார். அரசாங்கத்திற்குக் கொடுத்த ஆதரவை அவர் பின்வாங்கிக் கொண்டார்; பிரஸ்ஸல்ஸின் அழுத்தத்தை ஒட்டி ஓய்வூதியங்கள் குறைக்கப்படுவதைத் தான் அனுமதிக்க முடியாது என்று வாதிட்டு முன்கூட்டிய தேர்தல்களுக்கு வழிசெய்தார். இம்மாதத் தேர்தல் 10 ஆண்டுகளில் நான்காவது ஆகும்.

பரந்த சமூக மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மைச் சூழலில், தோற்றப்பாட்டில் கறைபடியாத சக்திபோல் உள்ள சோசலிஸ்ட் கட்சி அதன் சேவையை டச்சு முதலாளித்துவத்தை காப்பாற்ற அளிக்கவுள்ளது.

1972ல் ஒரு மாவோயிசக் குழுவினால் நிறுவப்பட்ட சோசலிஸ்ட் கட்சி விரைவில் வலதிற்கு நகர்ந்தது. மாவோயிசத்துடனான பிணைப்பு என்று தான் கூறியதை அது அகற்றிவிட்டு, தொழிற்சங்கங்களின் நடைமுறைப் போராட்டத்தில்குவிப்புக் காட்டியது. 2000ம் ஆணடில் கட்சி அதன் மூலோபாய இலக்கு, பாராளுமன்றத்திற்குள் இடம் பிடித்தல் என அறிவித்தது.

சோசலிஸ்ட் கட்சியின் சோசலிசம்என்பது மனித கௌரவத்திற்கு, சமத்துவத்திற்கு, ஒற்றுமைக்கு மதிப்பு என்னும் பொதுவான உறுதிப்பாட்டுடன் வரம்பைக் கொண்டுள்ளது. இருக்கும் நிலைமையை அனுசரித்துப் போகும் வரை, அது ஒரு பெருமையான கடந்தகாலத்தின் பெயரில் செய்கிறது; இதில் மக்கள் ஒருவரை ஒருவர் நம்பினர், ஒன்றாக உழைத்து சமூக, வர்க்க வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது வாழ்ந்தனர் என்கிறது.

இவ்வகையில் ஒரேமாதிரி இருப்பவை, Rutte அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் பற்றிய பாராளுமன்ற விவாதத்தின் போது Roemer கூறிய கருத்துக்கள்தான். சமூகம் நம்பிக்கையில்லாமல் செயல்பட முடியாது. கடைக்காரருக்கும், பொருளை வாங்குபவருக்கும் இடையே, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே, மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே, வக்கீலுக்கும் கட்சிக்காரருக்கும் இடையே நம்பிக்கை தேவை. கடந்த இருபது ஆண்டுகளில் இந்த நம்பிக்கை ஓரளவு அரசாங்கத்தின் கொள்கையினால் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது, இந்த அரசாங்கத்தின் கொள்கைகள் இதை உறுதியாக முன்னேற்றுவிக்காது.என்றார் Roemer.

தன்னுடைய தேசியவாதத்தை மறைக்க சோசலிஸ்ட் கட்சி முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை; அரசாங்கத்திற்கு அதன் விசுவாசத்தையும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன திரட்டு குறித்த அதன் விரோதப்போக்கையும் மறைக்கவில்லை. குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளை செயல்படுத்துவது என வரும்போது சோசலிஸ்ட் கட்சி, வில்டர்ஸின் PVV இரண்டிற்கும் இடையே அதிக வேறுபாடுகள் இல்லை.

1980 களில் கட்சி Guest Labour and Capital, என்னும் தலைப்பில் ஒரு பொருளுரையை வெளியிட்டது; இதில் குடியேறும் தொழிலாளர்கள் நாட்டின் மொழி மற்றும் வழக்கங்களை ஏற்க வேண்டும் இல்லாவிடின் நாட்டை விட்டு நீங்க வேண்டும் என்று கூறப்பட்டது. கல்வியறிவற்ற குடியேறிய தொழிலாளர்கள் மூலதனம்தொழிலாளர்களை பிளவுபடுத்த பிரித்து ஆளும் கொள்கையை ஒட்டி அனுமதிக்கின்றன என மிகத்தவறான முறையில் கட்சி வாதிட்டது.

தன்னுடைய வலைத் தளத்தில் கருத்துக்கள்என்ற தலைப்பில் கட்சி அயல்நாட்டவர்கள்குறித்து எழுதுகிறது; நூறாயிரக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் இருக்கும் வரை, அயல்நாடுகளில் இருந்து தொழிலாளர்களைக் கொண்டுவருவது விரும்பத்தக்கது அல்லஎன்று எழுதியது. சோசலிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இதே கருத்தைத்தான், இயலும்போது எல்லாம் தஞ்சம் நாடுபவர்கள் அவர்கள் பகுதியிலேயே நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.

நிதிய ஒருங்கிணைப்பின் தேவை குறித்து சோசலிஸ்ட் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து வருமானத்தைவிட அதிகம் செலவழிக்க முடியாது. அது உண்மை, எனவேதான் நான் சிக்கனங்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன்.உத்தியோகபூர்வ சோசலிஸ்ட் கட்சி  வலைத் தளத்தில் அவ்வாறு ரோமர் அறிவித்தார். தற்போதைய கொள்கைகள் செயல்பாட்டை அவர் மாற்ற விரும்புகிறார்: ஏனெனில் வெட்டுக்கள் மிகவும் அதிகமாக, அல்லது அதிக விரைவில் உள்ளன; பொருளாதாரத்திற்கும், வேலைகளுக்கும் பேரழிவு தரும்.

ஓய்வூதியங்கள்மீது தாக்குதல்கள் முன்னேற்றமானவை என்று காட்ட சோசலிஸ்ட் கட்சி முயல்கிறதுஇதையொட்டித்தான் PVV அதன் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டது. இக்கட்சி ஓய்வூதிய வயது 65 என இருக்க வேண்டும் எனக்கூறுகிறது; அதே நேரத்தில் ஒரு பிந்தைய ஓய்வூதிய வயது சிறந்தது எனக் கூறவும் முயல்கிறது. சமூகப் பங்காளிகள் எப்படி 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள் நீடித்து உழைக்க முடியும், உழைக்கும் திறனை அதிகரிக்க முடியும், சமூக முறையின்மீது உள்ள அழுத்தங்களை குறைக்க முடியும் என்பது குறித்து கட்டுப்படுத்தும் உடன்படிக்கைகளை செய்து வருகின்றனர்.

2005ம் ஆண்டில் சோசலிஸ்ட் கட்சி ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்தது; இது டச்சு வாக்காளர்களால் பெரும்பான்மையில் நிராகரிக்கப்பட்டது. ஆனால் அரசியல் பிரச்சினைகளில் மற்ற நிலைப்பாடுகளைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இதன் எதிர்ப்பு தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட முடியாது. யூரோ குறித்த அவநம்பிக்கை நிலைப்பாட்டை ரோமர் ஏற்றுக்கொண்டார், அவருடைய தீரமற்ற பின்பற்றுபவர்களை அதே நேரத்தில் பயமுறுத்தாமல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் கருத்தைக்கூறாமல், யூரோப்பகுதியில் இருந்து விலகுவதை என்பதைக்கூறாமல்என்று Frankfurter Allgemeine Zeigung  விமர்சித்துள்ளது.

ஓராண்டிற்கு முன் ரோமர் ஐரோப்பிய ஒன்றியத்தில் சில பூச்சுச் சீர்திருத்தங்கள் பற்றிய பாராளுமன்ற விவாதம் தேவை என்று கோரினார்; ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து டச்சு அகல்வதற்கோ, ஐரோப்பிய ஒன்றியம் அகற்றப்படுவதற்கோ அல்ல. பல நாட்டு மக்கள் கூறுவதையும், குடிமக்கள் உரைப்பதையும் காதுகொடுத்துக் கேட்கும் ஐரோப்பா நமக்குத் தேவை, மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் ஒரு ஐரோப்பிய வளர்ச்சி தேவை என்றார்.

சோசலிஸ்ட் கட்சி, அரசாங்கத்தில் சேரும் என்றால், அது ஐரோப்பி ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் குறித்த அதன் குறைகூறல்களை ஒதுக்கிவிடும். தன்னுடைய பொறுப்பைஅது எடுத்துக் கொள்ளும் என்று சோசலிஸ்ட் கட்சியின் வலைத் தளம் கூறுகிறது. சோசலிஸ்ட் கட்சி, அரசாங்கத்தில் ஒரு பங்கு என்பதின் சிறப்புப் பொறுப்புக்களை அது  அங்கீகரிக்கிறது; இதில் ஏற்கனவே அதற்கு உள்ளூராட்சி மட்டத்தில் அனுபவம் உண்டு. நிதிய நிர்வாகம் கொள்ளை வடிவமைப்பிற்குள் என்பது மற்ற கட்சிகளுடன் ஏற்படுத்தப்படும் சமரசத்தின் விளைவு ஆகும்; இது எப்பொழுது சமரசம், எப்பொழுது உறுதியாக இருப்பது என்பதை முடிவெடுக்கும்.... நெதர்லாந்தையும் உலகையும் மாற்ற விரும்பும் ஒரு கட்சிக்கு இது எப்பொழுதும் ஒரே மாதிரியாக இராது.

மற்ற கட்சிகளுடன் ஒரு கூட்டணி அமைக்கும் விருப்பத்தையும்  சோசலிஸ்ட் கட்சி  மிகவும் தெளிவாக ஆக்கியுள்ளது. ஆர்ன்ஹெமில் அதன் பிரச்சாரத்தைத் தொடங்குகையில் ரோமெர் 2,500 ஆதரவாளர்களுக்கு முன் சமூக உடன்பாடு ஒரேமாதிரி நினைக்கும் அரசியல் கட்சிகள், தொண்டர்கள், ஊழியர்கள் மற்றும் சமூக அமைப்புக்களிடையே தேவை. நம்முடைய இலக்குகளான வறுமை குறைக்கப்பட வேண்டும், சமூக வேறுபாடுகள் குறைக்கப்பட வேண்டும், ஒருவருக்கு ஒருவர் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். நம்பிக்கை காட்ட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளும் அனைவருக்கும் எங்களுடன் இணைந்து செயல்படுங்கள் என்று நான் அறைகூவுவேன்செப்டம்பர் 12க்குப் பின் அதைக் கட்டமைப்பேன். என்றார்.

சமூக ஜனநாயக வாதிகள் மற்றும் பசுமைவாதிகளுடன், Rutte இன் சிக்கனத் திட்டத்தை சுதந்திரக் கட்சி தன் ஆதரவை விலக்கிக் கொண்டபின், ஆதரித்தவற்றுடன் ஒரு கூட்டுப் பட்டியலை தயாரிக்கும் அளவிற்கு சோசலிஸ்ட் கட்சி சென்றுள்ளது.

சோசலிஸ்ட் கட்சியின் அரசாங்கக் கருவிக்கு விசுவாசம் என்பது குறித்து எவருக்கேனும் சந்தேகம் இருக்குமானால், அத்தகைய குழப்பத்தை அகற்ற கட்சியின் வேலைத்திட்டத்தை பார்த்தாலே போதுமானது. சோசலிஸ்ட் கட்சி அரச கருவி பெரிதும் உயர்த்தப்பட வேண்டும் என முறையீடு செய்கிறது. தெருக்களில் அதிக பொலிஸ் என்பது பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பிற்கு வகை செய்யும்என்று அது கூறுகிறது. பொலிசார் முக்கியமாக தெருக்களில் இருக்க வேண்டும், மேசைக்குப்பின் அமரக்கூடாது.

நீதித்துறை இன்னும் திறமையுடன் உழைக்க வேண்டும் என்றும் சோசலிஸ்ட் கட்சி விரும்புகிறது. இதற்காக குற்றம் சார்ந்தநிதிய ஊகக்காரர்களை தொடர வேண்டியதில்லை, ஆனால் பொதுச் சட்டம் மற்றும் ஒழுங்கை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஆற்றல் மிகுந்த நீதிபதிகள், அபராதங்கள் சுமத்தப்படுவதை விரைவில் செய்தல் ஆகியவை நீதித்துறை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

இத்தகைய சொல்லாட்சிதான் பிரித்தானிய குட்டி முதலாளித்துவத்தாலும் 2012 கோடைகாலத்தில் இங்கிலாந்தில் இளைஞர் கலவரங்களுக்குப்பின் வசதி படைத்த பிரிவுகளாலும் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய அடுக்குகள் தங்கள் சொத்து, சொந்த நிதி ஆகியவற்றின் பாதுகாப்புக் குறித்து அச்சம் கொண்டுள்ளன. இவை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பல ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சீற்றம் வெடிப்பதை எதிர்கொள்ள அரசின் வலுவான தலையீடு தேவை என்று கோருகின்றன.

சோசலிஸ்ட் கட்சி  இப்பொழுது இத்தகைய உணர்வுகளின் குரலாக ஒலிப்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; ஏனெனில் அக்கட்சியின் தளம் பெரிய நகரங்களில் என்பதற்கு மாறாக நெதர்லாந்தின் தென் மாநிலத்தில் உள்ளது. இது பிராந்திய வாதம், தேசியவாதம் ஆகியவற்றைத் தழுவி நின்று உலக நெருக்கடியின் வேர்க்காரணங்களை மறைப்பதுடன், சமூகச் சரிவு வரக்கூடும் என்ற அச்சத்தில் உள்ள குட்டிமுதலாளித்துவத்தின் அடுக்குகளை சமூகத்தின் மிகவும் பாதுகாப்பற்ற பிரிவுகளுக்கு எதிராக இயக்குகிறது.