WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Obama-Romney debate number two: Another stage-managed charade
ஒபாமா-ரோம்னி விவாதம் இரண்டு: மற்றொரு தயாரிக்கப்பட்ட சொல் விளையாட்டு
By Barry Grey
17 October 2012
ஜனாதிபதி
பாரக் ஒபாமாவிற்கும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் மிட்
ரோம்னிக்கும் இடையே தேசிய அளவில் நடந்த இரண்டாம் தொலைக்காட்சி விவாதம் முழு தேர்தல்
முறையைச் சூழ்ந்துள்ள பாசாங்குத்தனம், ஏமாற்றுத்தனம் ஆகியவற்றை
அடிக்கோடிட்டுக்காட்டத்தான் உதவியது.
அமெரிக்காவை
ஆளும் பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் இரு பிரதிநிதிகளும் கிட்டத்தட்ட இரண்டு மணி
நேரம் முற்றிலும் பார்வையாளர்கள் திருப்திக்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியில்
தங்களை பொதுமக்களின் பங்காளிகள் எனக்காட்டிக் கொள்ள முற்பட்டனர். இதைக் காண்பதற்கு
வேதனையாக இருந்ததுடன் விழித்துக் கொண்டிருப்பதும் கடினமாயிற்று.
அமெரிக்க
அரசியலில் நடைமுறையாகிவிட்ட நிலையில், இந்த
“விவாதம்”
உண்மையில் விவாதமும் அல்ல, அதில் பொருள் ஏதும் இல்லை; ஒரு தளர்ச்சி
தரும் வெற்றுச் சடங்காக, உண்மையை மறைத்து மக்களுக்கு மயக்கம் தரும்
வடிவமைப்பைத்தான் கொண்டிருந்தது.
நிகழ்வின்
ஒவ்வொரு கூறுபாடும் நல்ல பின்தயாரிப்பைக் கொண்டிருந்து சரிபார்க்கப்பட்டு இருந்தது.
“நகர
அரங்கு”
என அழைக்கப்படும் பின்னணி
சாதாரண மக்களுடன் உண்மையான பேச்சுக்களுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. ஒபாமா
மற்றும் ரோம்னியுடன் அரங்கில் அமர்ந்திருந்த 82 நபர்களும்,
Gallup
என்னும் கருத்துக் கணிப்பு நடத்தும் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்;
ஹெம்ப்ஸ்டெட், லாங் ஐலண்ட் பகுதியில் வசிக்கும்
“இன்னும்
முடிவெடுக்காத”
வாக்களர்கள் ஆவர். விவாதமும் அங்குதான் நிகழ்ந்தது.
நிகழ்வு
குறித்த காலை ஒத்திகையை தொடர்ந்து இந்த 82 தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள்
கேள்விகளை
CNN
ஐச் சேர்ந்த
நடுவர் காண்டி கிரௌலியிடம் அளித்தனர்; அவர் எந்த வினாக்கள் கேட்கப்படலாம், 82
பேரில் எவர் பேசலாம் என்பதை முடிவெடுத்தார். வினா கேட்டவர்களின் ஒலிபெருக்கிக்
கருவிகள் அவர்கள் வினாக்கள் கேட்டவுடனேயே உடனே அணைக்கப்பட்டுவிட்டன.
இரு
வேட்பாளர்களும் சடங்கு போல் அமெரிக்க
“மத்தியதர
வர்க்கம்”
என்னும் சொற்றொடரைப்
பயன்படுத்தினார்; இவ் வர்க்கமோ மில்லியன் கணக்கானவரர்கள் தொழிலாள வர்க்கத்திற்குள்
தள்ளப்பட்ட நிலையில் மறைந்துவிட்டது; தொழிலாள வர்க்கம் இருப்பதாகவே வேட்பாளர்களில்
இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. பலமுறையும் அவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை
“மத்தியதர
வகுப்பு”
முன்னேற்றத்திற்கு என அறிவித்தனர்; அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியினரும்
குடியரசினரும் தேர்தலுக்குப் பின் மில்லியன் கணக்கான மக்கள் நம்பியிருக்கும்
அடிப்படைச் சமூகநலத் திட்டங்களில் கடுமையான வெட்டுக்களுக்குத் தயாரித்து வரும்
திட்டங்களையும் மறைத்தனர்.
இதன்
பின்னணியில் நிற்பதோ அமெரிக்க சமூகத்தின் பேரழிவு நிலை ஆகும்; இது குறித்து இரு
வேட்பாளர்களும் தீவிரமாகக் கவலைப்படவில்லை. ரோம்னி வறுமையின் வளர்ச்சி மற்றும்
தொடரும் வெகுஜன வேலையின்மை குறித்து,
பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்
கருத்துக்களாகத்தான் குறிப்பிட்டார். ஒபாமா அவற்றை ஒப்புக் கொள்ளக்கூட இல்லை.
இக்காட்சியின் அடிப்படை நோக்கம் ஒன்று இரு கட்சிகளுக்கும் இடையே, இரு
வேட்பாளர்களுக்கும் இடையே அடிப்படைக் கொள்கை வேறுபாடுகள் இருப்பது போன்ற
போலித்தோற்றத்தை ஏற்படுத்துவதுதான். உண்மையில் அத்தகைய வேறுபாடுகள் இல்லை. ஜனநாயக,
குடியரசுக் கட்சிகளுக்கு இடையே உள்ள அரசியல் வேறுபாடுகள் ஆளும் தன்னலக்குழுவிற்குள்
காணப்படும் இரண்டாம் நிலை தந்திரோபாய வேறுபாடுகளைத்தான் பிரதிபலிக்கின்றன.
முதல்
வினாவும் அதற்கு வேட்பாளர்ளுடைய விடையிறுப்பும் மாலைநேரத்தின் உணர்விற்கு
வழிவகுத்தன. ஒரு 20 வயது கல்லூரி மாணவர் தான் பட்டப்படிப்பு முடித்தவுடன் வேலை
கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது என்றும், தான் தன்னைக்
காக்க இயலும் என்பதை உத்தரவாதம் செய்யும் வகையில் வேட்பாளர்கள் என்ன கூறுவர்
என்றும் கேட்டார்.
“மீண்டும்
நல்ல வேலைகளைத் தோற்றுவிப்பது என்றால் என்ன”
என்பது பற்றித்
தனக்குத் தெரியும் என்று கூறிய ரோம்னி குறிப்பாக எத்தகைய திட்டங்களையும் கூறவில்லை.
“உங்கள்
வருங்காலம் சிறப்பாக உள்ளது”
என்று ஒபாமா தன் விடையைத் தொடக்கினார். அதன் பின் அவர் ஜெனரல்
மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் பிணைஎடுப்பு பற்றிப் பீற்றிக் கொண்டு, தான் 1
மில்லியன் வேலைகளைக் காப்பாற்றியுள்ளதாகவும் கூறினார்; ஆனால் அவர் தொழிலாளர்கள்
மீது சுமத்திய ஊதிய, மற்ற மிருக்கத்தனமான வெட்டுக்களைப் பற்றி ஏதும்
குறிப்பிடவில்லை.
இருவரில்
ஒருவர்கூட இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் பேரழிவு தரும் நிலைமையை
தீர்ப்பதற்கான கொள்கைகள் எதையும் அளிக்க முடியவில்லை.
6
மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருக்கும் மக்களில் 40% த்தினர் நிலை
குறித்துப் பேசுமாறு கிரௌலி அவர்களைக் கேட்டுக் கொண்டபோது, கடந்த பெப்ருவரி மாதம்
இரு கட்சி ஆதரவில் இயற்றப்பட்ட சட்டவரைவு குறித்து இருவருமே மௌனம் சாதித்தனர்;
இச்சட்டம் வேலையின்மை நலன்கள் காலத்தைக் குறைத்துவிட்டது; அதேபோல் இருவரும்
வேலையின்மை நலன்களை ஜனவரி 1ல் இருந்து முற்றிலும் அகற்றப்போவது குறித்த திட்டங்கள்
பற்றியும் மௌனமாக இருந்தனர்.
இதைத்
தொடர்ந்த விவாதம்—செய்தி
ஊடகத்தால் வருங்காலம் பற்றிய வேறுபாடுகள் அதிகம் கொண்ட
“பார்வையின்”
மோதல்கள் என்று
கூறப்பட்டவை—முக்கியமாக
இரு வேட்பாளர்களும் கொண்ட அடிப்படை உடன்பாட்டைத்தான் காட்டியது; குடியேறுவோர் மீதான
தாக்குதல், பொது நிலங்களை எரிசக்தி நிறுவனங்களுக்கு திறந்துவிடுதல், பெருநிறுவன
வரிவிதிப்புக் குறைப்புக்கள், வெளிநாட்டில் போர்,
“பொதுக்
கல்வியில் சீர்திருத்தம்”
(அதாவது தனியார்மயம்), இன்னும் பிற பிரச்சினைகள்.
இதில் மிக
குறிப்பிட்டத்தக் கணம் இறுதியில் வந்தது; ஒபாமா தன்னுடைய அமெரிக்காவிற்கான
“பார்வையை”
சுருக்கிக்
கூறுகையில், வேலைகளைத் தோற்றுவிக்கும் அரசாங்கத் திட்டம் ஏதும் இல்லை என்று கூறி
முதலாளித்துவத்திற்குத் தன் வாடிக்கையான புகழாரத்தையும் சூட்டினார்.
“தடையற்ற
முயல்வோர் முறை உலகம் இதுவரை அறிந்துள்ளவற்றிலேயே மிகப் பெரிய வளம் கொடுக்கும்
கருவி என நான் நம்புகிறேன்”
என்றார்.
இந்த
அனைத்து சமூக துன்பங்களுக்கும் சிகிச்சை,
பெருநிறுவனங்கள் பணம் சம்பாதிக்க மிகவும் கவர்ச்சியான இடத்தில்
அமெரிக்காவை வைக்க வேண்டும் என ரோம்னி பலமுறை வலியுறுத்துவதைத்தான் இது
எதிரொலித்தது.
ஒரு
குறிப்பிட்தக்க அறிவிப்பு கூட வரவில்லை, ஒரு நேர்மையான, சுயமான சிந்தனையும்
வெளிப்படவில்லை. இத்தகைய திரித்தல், ஏமாற்றுத்தனத்தில் கைதேர்ந்த செயற்பாடு போல்
வேறு எதுவும் இருக்கவும் முடியாது. |