சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France ratifies European Stability and Growth Pact

ஐரோப்பிய உறுதிப்பாடு, வளர்ச்சி உடன்படிக்கைக்கு பிரான்ஸ் ஒப்புதல் கொடுக்கிறது

By Antoine Lerougetel
17 October 2012
use this version to print | Send feedback

அக்டோபர் 9ம் திகதி செவ்வாயன்று, பிரெஞ்சு தேசிய பாராளுமன்றம் ஐரோப்பிய உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சி உடன்பாட்டிற்கு (Stability and Growth Pact -SGP)  ஒப்புதல் கொடுத்தது; ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS)  மற்றும் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் எதிர்த்தரப்பு கன்சர்வேடிவ் UMP (Union for a Popular Movement) இரண்டுமே கூட்டாக இதற்கு வாக்களித்தன.

அடுத்த நாள் செனட் மன்றமும் இசைவு கொடுத்து வாக்களித்தது; இதையொட்டி உடன்பாட்டில் இசைவு தரும் 17 யூரோப் பகுதி நாடுகளில் பிரான்ஸ் 9வது நாடாயிற்று. 12 யூரோப் பகுதி நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தால் இந்த உடன்படிக்கை ஜனவரி முதல் தேதியை ஒட்டி நடைமுறைக்கு வரும்.

நிதிய உடன்பாடு என்றும் அறியப்பட்டுள்ள SPG நாட்டின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி GDPஇல் 3%க்கு மிகாமல் இருக்க வேண்டும் என வற்புறுத்துகிறது. இதில் தவறு ஏற்பட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% அபராதம் கொடுக்க நேரிடும். தேசியக் கடனும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60%க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் இது வரம்பு கட்டியுள்ளது. ஐரோப்பா முழுவதும் உள்ள சிக்கன நடவடிக்கை உந்துதலின் ஒரு பகுதிதான் இது; இது வங்கிகள் சார்பாக செயல்படுத்தப்படுகிறது; இது கிரேக்கத்தின் பொருளாதாரத்தை 20% குறைத்து, ஐரோப்பா முழுவதும் சமூக நிலைமைகளை பாதித்துள்ளது, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து மிகப் பெரிய எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ளது.

568 பிரதிநிதிகிளில் 477 பேர் உடன்பாட்டிற்காக வாக்களித்தனர்; 70 பேர் எதிர்த்தனர்; 21 பேர் வாக்குப் போடவில்லை. பெரும்பான்மையில் 285 சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், 17 பசுமைக் கட்சியினர் மற்றும் 167 UMP பிரதிநிதிகள் இருந்தனர். இது இயற்றப்படுவதில் முக்கிய பங்கு கொண்ட முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மற்றும் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்கெல் பெயரை இணைத்து மேர்க்கோசி என அழைக்கப்படும் இத்திட்டம் ஒரு காற்புள்ளி கூற மாற்றப்படாமல் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.

இது PS  ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் பிரச்சாரகால மோசடிப் பிரச்சாரமான அவர் நிதிய உடன்பாடு குறித்து மறுபேச்சுக்கள் நடத்துவார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. தற்போதைய PS அரசாங்கம் மற்றும் இதற்கு முன்பிருந்த UMP க்கும் அடிப்படைத் தொடர்ச்சி உள்ளதையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

முதலாளித்துவ இடதுபிரதிநிதிகள் ஒப்புதலுக்கு எதிராக வாக்களித்தவர்களில், 20 PS பிரதிநிதிகள், 17 பசுமை வாதிகளில் 12 பேர், இடது முன்னணிக் கூட்டணியில் இருந்து 10 பிரதிநிதிகள் என இருந்தனர்; கடைசிப் பிரிவில் முன்னாள் PS மந்திரி Jean-Luc Mélenchon உடைய இடது கட்சி (PG) இருந்தது;  மற்றும் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி PCF ம் இருந்தது. செனட்டில் பெரும்பாலான பசுமை வாதிகள் எதிர்த்து வாக்களிக்கவில்லை.

பிரெஞ்சு சட்டத்தில் இந்த உடன்படிக்கை இணைக்கப்படுவதற்கு மற்றொரு நேரடிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்; அதில் தங்க விதி என அழைக்கப்படும், வரவு-செலவுத் திட்டம் கடுமையான விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதும் இணைக்கப்படும். இது பிரதிநிதிகளால் அக்டோபர் 11ல் இயற்றப்பட்டது; அப்பொழுது PS குழுவில் 3பேர்தான் எதிர்த்து வாக்களித்தனர், 11 பசுமைவாதிகள் ஆதரவாக வாக்களித்தனர் செனட் இதன்மீது அக்டோபர் 29 அன்று வாக்களிக்கும்.

இந்த வாக்குகள், ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கம் சமூகச் சிக்கன நடவடிக்கைகளுக்கு காட்டும் எதிர்ப்பு குறித்த முழு அவமதிப்பையும் காட்டியுள்ளன. சமீபத்திய வாரங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுப்ட்டுள்ளனர், ஐரோப்பா முழுவதும் எதிர்ப்பு அணிகளை நடத்தியுள்ளனர்; கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றிலும் இவை நடந்துள்ளன.

அடுத்த ஆண்டிற்குள் பற்றாக்குறையை 30 பில்லியன் யூரோக்களுக்கும் மேல் குறைக்கத் திட்மிட்டுள்ள பிரெஞ்சு அரசாங்கம், இப்பொழுது முதலாளிகளிடமிருந்து ஆண்டு சமூகப் பாதுகாப்பு அளிப்புக்களில் இருந்து 40 பில்லியன் யூரோக்களை ஹாலண்ட் ஆட்சி வரைக்காலத்திற்குள் குறைக்கத் திட்டம் கொண்டுள்ளது. இச்செலவை வரிசெலுத்துபவர்களிடம் இது அகற்றவிடும்; அதையொட்டி வாங்கும் வரி பாதிப்பிற்கு உட்படும்: அவற்றினால் தொழிலாளர் செலவுகள் குறையும், பெருநிறுவன இலாபங்கள் ஏற்றம் அடையும்.

முற்றிலும் மாற்றப்பட முடியாத ஐரோப்பிய நிதிய உடன்பாட்டிற்குக் PS முழுமையாக கொடுத்துள்ள ஆதரவு பிரான்சின் குட்டி முதலாளித்துவ போலி இடது கட்சிகளின் திவால்தன்மையைத்தான் அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது.

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் ஹாலண்ட், சார்க்கோசியை விட தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் அழுத்தங்களுக்கு அதிகமாக வளைந்து கொடுப்பார் என்ற அடிப்படையில், போலி இடது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, PG, PCF, தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் சோசலிஸ்ட் கட்சி வாக்களித்தது.

உண்மையில் இது முதலாளித்துவத்தினரின் கருவியாகும். Medef  என்னும் முக்கிய பிரெஞ்சு முதலாளிகள் சங்கம் இந்த இசைவை யூரோவின் வருங்காலம், ஐரோப்பாவின் உறுதிப்பாட்டிற்குத் தவிர்க்க முடியாததுஎன்று பாராட்டியுள்ளது. பற்றாக்குறைகளுக்கு எதிரான ஒரே பாதை சீர்திருத்தங்களும் பொதுச் செலவுகளைக் குறைப்பதும்தான் என்று கூறவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.

அக்டோபர் 14ம் திகதி மெடப் உடைய தலைவர் Laurence Parisot, Le Figaro விடம் ஒர் போட்டித்திறன் அதிர்ச்சி” —அதாவது ஊதியங்கள், தொழிலாளர்கள் செலவுகளில் குறைந்தபட்டசம் 30 பில்லியன் யூரோக்கள் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள்கட்டாயம் தேவை என்று கூறினார். புயல் எச்சரிக்கையில் இருந்து கடுமையான புயல் என்னும் எச்சரிக்கையை நாம் பெற்றுள்ளோம்என்று கூறிய அவர், சில முதலாளிகள் பாதிப் பீதியில் உள்ளனர்... திவால்களின் விகிதம் கோடையில் விரைவாயிற்று, எந்தத் துறையும் ஆண்டு இறுதிவரை அவநம்பிக்கை நிறைந்த கணிப்புக்களை தவிர வேறு எதையும் கூறவில்லை என்று சேர்த்துக் கொண்டார்.

இதை எதிர்கொள்ளும் வகையில் அரசாங்கம் தொடங்கும் புறாக்கள்எனப்படும் புதிய நிறுவனங்கள் மீது திட்டமிடப்பட்டுள்ள வரிகளைக் குறைத்துள்ளது. தேசிய சட்டமன்றத்தில் PS  உடைய மன்றத் தலைவரான Claude Bartolone ஞாயிறன்று கூறினார்: சிக்கனம், சிக்கனம், வேலையின்மை என்று எப்பொழுதும் கூறும் கண்டமாக ஐரோப்பா விளங்காது. அதே நேரத்தில் பிரான்ஸும் கவனத்துடன் இருந்து நாட்டைக் கடனில் இருந்து தப்ப வைக்க விரும்பவேண்டும்.

Mélenchon உடன்பாடு இசைவு வாக்கு முடிந்தபின் ஓர் இடது மாற்றீடு சோசலிஸ்ட், பசுமைவாதிகள், இடது முன்னணி ஆகியவை கூட்டாக உடன்பாட்டிற்கு எதிராக வாக்களித்ததில் வெளிப்பட்டுள்ளது. இங்குதான் இடதின் வருங்காலம் உள்ளது...

PS அரசாங்கத்திற்கு எதிரான வாக்கிற்கு PG ஒருபோதும் ஆதரவளிக்காது எனக் உறுதிகூறியுள்ளதால் மற்றும் Mélenchon ஐரோப்பிய ஒன்றியத்தையும் யூரோவையும் காக்க விரும்புவதால், இது ஒரு வெற்றுத்தன இரைச்சலாகும்.