WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Conflicts come to the
surface at IMF-World Bank meeting
சர்வதேச நாணய நிதியம்-உலக
வங்கி சந்திப்பில் மோதல்கள் மேற்பரப்புக்கு வருகின்றன
Nick Beams
17 October 2012
2008
செப்டம்பருக்கும் உலக நிதி நெருக்கடி உருவானதற்கும் பிந்தைய காலத்தில்,
முக்கிய
முதலாளித்துவ சக்திகளின் சர்வதேச அளவிலான கூட்டங்கள் குறைந்தபட்சம் மேற்பரப்பிலாவது
ஒரு ஒற்றுமை மட்டத்தைக் கொண்டதாகக் காட்சியளித்தது.
ஒரு நிலைமுறிவைத்
தடுக்க ஏராளமான பணம் நிதி அமைப்புமுறைக்குள் பாய்ச்சப்பட வேண்டும் என்பதில்
அனைவரும் உடன்பட்டிருந்தனர்.
இந்த
நெருக்கடியைத் தூண்டிய ஊக நடவடிக்கைகளின் சொந்தக்காரர்களான வங்கிகள் மற்றும் நிதி
நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை.
உண்மையில்
பிணையெடுப்புத் தொகையில் இருக்கும் டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்டு
அவர்களுக்கு வெகுமதியளிக்கப்படும்.
ஒரு
உலகளாவிய பேரழிவைத் தடுக்க வேண்டுமென்றால் இத்தகையதொரு நடவடிக்கை அவசியம் என்பதான
கருத்துகளும் இதனுடன் சேர்ந்து வெளியாயின.
அரசாங்கத் தலைவர்கள்
எல்லாம் 1930களின்
படிப்பினைகளில் இருந்து கற்றுக் கொண்டு விட்டிருந்தனர் என உறுதிபடத்
தெரிவிக்கப்பட்டது.
அந்த சகாப்தத்தின்
மோதல்களுக்குத் திரும்பச் செல்லும் நிலை நேராது என்றும் பெருமந்த நிலை காலத்தின்
அனுபவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
கூறப்பட்டது.
ஆனால் இன்று
கிடைக்கும் சித்திரம் மாறுபட்டதாய் இருக்கிறது.
உலகப் பொருளாதாரம்
இன்னும் ஆழமாய் மந்தநிலைக்குள் சென்று கொண்டிருக்கிறது,
சர்வதேச நிதிச்
சந்தைகளை முட்டுக் கொடுப்பதற்கு உலகெங்கிலுமான மத்திய வங்கிகள் மேலும் மேலும்
உறுதியளித்துச் செல்வதன் காரணமாக ஒரு புதிய நெருக்கடிக்கான நிலைமைகள்
உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அடிப்படையான
மோதல்களும் குரோதங்களும் நான்கு வருடங்களுக்கு முன்பாக ஓரளவுக்கு மறைந்து கிடந்தவை
இப்போது பகிரங்கமாகியுள்ளன.
சென்ற வாரத்தில்
டோக்கியோவில் நடந்த சர்வதேச நாணய நிதியம்-உலக
வங்கி இடையிலான வருடாந்திர சந்திப்பில் இவை காணக் கிடைத்தன.
1944 இன் பிரெட்டன்
வுட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டது முதலான காலத்தில்
நிகழ்ந்த மிகவும் உளைச்சலான சந்திப்புகளில் ஒன்றாக இது இருந்தது என்பதில்
சந்தேகமில்லை.
கிழக்கு
சீனக் கடல் சென்காகு/டயாயு
தீவுகள் பிரச்சினையினால் தூண்டப்பட்டு ஜப்பானுடன் குரோதம் பெருகியிருப்பதன்
அடையாளமாக சீன வங்கி அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்து
வாரத்தின் பிற்பகுதி செல்லவிருக்கும் தொனியைக் கோடுகாட்டினர்.
இரண்டு
நாட்கள் விவாதம் கடந்த நிலையில்,
சிக்கன நடவடிக்கை
வேலைத்திட்டங்களின் வேகம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான
கிறிஸ்டின் லகார்டிற்கும் ஜேர்மன் நிதி அமைச்சரான வொல்ஃபாங் சொய்பிள க்கும் இடையில்
ஒரு பேதம் வெடித்தது.
ஐரோப்பாவிலான ஒரு
பொறிவு தங்களது நிதி அமைப்புமுறைகளைப் பாதிக்கும் என்கிற அமெரிக்கா மற்றும்
பிரிட்டனின் அச்சங்களைப் பிரதிபலித்த லகார்ட்,
கிரீஸ் மற்றும் மற்ற
நாடுகள் தத்தமது கடன்களைத் திரும்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம்
அளிக்கப்பட வேண்டுமெனக் கோரினார்.
இது ஜேர்மனியின்
கோபத்தைக் கிளறியது.
இதற்கான விலையைத்
தங்கள் வங்கிகள் செலுத்த நேர்ந்து யூரோமண்டல நெருக்கடிக்குள் இன்னும் ஆழமாய்
இழுக்கப்பட நேரும் என்பது அதன் கவலையாக இருந்தது.
அந்தப்
பிரச்சினையை ஓரளவு சமாளித்து ஓரங்கட்டுவதற்குள் அமெரிக்காவும் பிரேசிலும்
“பணப் புழக்க
அதிகரிப்பு”
கொள்கை தொடர்பாக மோதலில்
இறங்கின.
அமெரிக்க டாலரின் மதிப்பைக்
குறைத்து அதன் மூலம்
“நாணயமதிப்புப் போர்”
ஒன்றுக்கு
ஊக்குவித்திருக்கும் அமெரிக்கர்களின் பணவியல் கொள்கையை
”சுயநலமானது”
என்று பிரேசிலின்
நிதி அமைச்சர் கிடோ மண்டேகா கண்டனம் செய்தார்.
இந்த
பிளவுகளுக்குக் கீழமைந்த காரணம் சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரத்தின்
நிலை
(World
Economic Outlook)
என்கிற மதிப்பீட்டில் இடம்பெற்றிருக்கும் உலகளாவிய வளர்ச்சி மதிப்பீடுகளில்
வெளிப்படுகிறது.
2013 ஆம் ஆண்டுக்கான
உலக வளர்ச்சி மதிப்பீடு
3.6 சதவீதமாகக்
குறைக்கப்பட்டிருக்கிறது,
இது மூன்று
மாதங்களுக்கு முன்னர் தான்
3.9
சதவீதமாக
மதிப்பிடப்பட்டிருந்த ஒன்றாகும்.
ஒட்டுமொத்த
எண்ணிக்கையைக் காட்டிலும் முக்கியமானதாக இருப்பது பெரும் பொருளாதார நாடுகளுக்கான
மதிப்பீடுகள்.
முன்னேறிய
பொருளாதாரங்களுக்கான தனது முந்தைய வளர்ச்சி மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம்
1.5 சதவீதத்திற்குக்
குறைத்திருக்கிறது.
இது சென்ற ஏப்ரலில்
2.0 சதவீதமாக
மதிப்பிடப்பட்டிருந்ததில் இருந்து சரிந்திருக்கிறது.
யூரோ மண்டலத்தின்
2012 ஆம் ஆண்டிற்கான
வளர்ச்சி 0.4
சதவீதம் குறுக்கமாக
மதிப்பிடப்பட்டிருக்கிறது,
இது அடுத்த ஆண்டில்
0.2 சதவீதமாக
வளர்ச்சியடைய எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவின் மிக
வலிமையான பொருளாதாரமாக கருதப்படும் ஜேர்மன் பொருளாதாரமே கூட இந்த ஆண்டில் வெறும்
0.9 சதவீதம் தான்
வளர்ச்சி காண எதிர்பார்க்கப்படுகிறது,
2013 ஆண்டுக்கும்
இதே அளவு தான் மதிப்பிடப்பட்டுள்ளது.
நெருக்கடி
முதல்முதலில் வெடித்தபோது,
முன்னேறிய
பொருளாதாரங்கள் மந்தநிலைக்குள் செல்லாவிடினும் கூட குறைந்தபட்சம் கணிசமானதொரு
சரிவையேனும் சந்திக்கும் என்று உணரப்பட்டது.
ஆனாலும் சீனா,
இந்தியா மற்றும் பிற
எழுந்துவரும் சந்தைகளில் இருந்து உலகப் பொருளாதாரம் உத்வேகத்தைக் காணும் என்பதாக
நிதி மற்றும் பிற ஊடகங்களில் திரும்பத் திரும்ப சுழற்சி செய்யப்பட்டது.
இந்த நாடுகளின்
பொருளாதாரங்கள் முன்னேறிய பொருளாதாரங்களின் மீது தங்கியிருக்கும் நிலை குறைகின்ற
“விடுபடும்”
நிகழ்முறையானது இந்த
நாடுகளை உலக முதலாளித்துவத்தின் புதிய வளர்ச்சி மையங்களாக ஆக்கும் எனக் கூறப்பட்டது.
நெருக்கடியின் வரலாற்று சம்பந்தங்களை மறைப்பதற்கென உருவாக்கப்பட்ட இந்தக்
கற்பனையானது நன்றாகவும் உண்மையாகவும் நொருக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்திய
ஆண்டுகளில் இந்திய மற்றும் சீனப் பொருளாதாரங்களிலான துரித வளர்ச்சி என்பது
ஒருபோதும் சுயாதீனமான நிகழ்வுப்போக்காக இருந்ததில்லை.
மலிவு உழைப்புக்கான
ஆதாரவளங்களை முடிவற்றுத் தேடிய,
நாடு கடந்த
நிறுவனங்கள் அதன்பொருட்டு தமது வர்த்தக செயல்பாடுகளை அவுட்சோர்ஸ் செய்வதெற்கென
செய்த முதலீட்டின் விளைவே இந்த வளர்ச்சி.
உலகளாவிய
வளர்ச்சிக்கான ஒரு புதிய களத்தை அமைத்துக் கொடுப்பதற்கெல்லாம் வெகு தொலைவில்,
“வளரும்”
பொருளாதாரங்கள்
என்று அழைக்கப்பட்ட இந்தப் பொருளாதாரங்கள் பெரும் பொருளாதார நாடுகளையே சந்தைகளில்
தொடர்ந்து சார்ந்திருந்தன.
சீன
அரசாங்கத்தின் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் பெரும் கட்டுமானத் திட்டங்கள்
மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியாதாரம் வழங்கிய அரசு வங்கிகள் பாரிய
கடன் தொகைகளை வழங்கியதும் சீன முதலீட்டு எழுச்சிக்கு எண்ணெய் வார்த்ததின் காரணமாக
ஒரு குறுகிய காலத்திற்கு
”விடுபடுவது”
குறித்த இந்தக் கதை
எல்லாம் தாக்குப் பிடித்தது.
அதுவும் இப்போது ஒரு
முடிவுக்கு வந்திருக்கிறது.
சீனப் பொருளாதாரம்
ஒரு மந்தநிலைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது.
சீனாவின் மிகப்
பெரிய சந்தையான ஐரோப்பாவிலான நெருக்கடியினால் ஏற்றுமதிகள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டிருக்கின்றன.
2008-2009 ஆம்
ஆண்டின் அளவுக்கு அல்லது அதற்கும் அதிகமாய் ஒரு தீவிரமான நிலைக்கு முகம்
கொடுப்பதாய் சீன நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.
உலகின்
பன்னிரண்டாவது பெரிய பொருளாதாரமான ஆஸ்திரேலியப் பொருளாதாரம்,
இந்த நிகழ்முறைக்கு
ஒருவகையான அளவுமானியாக செயல்பட்டிருக்கிறது.
2010-2011 சமயத்தில்,
சீனப்
“பொருளாதார எழுச்சி”யின்
விளைவாக ஆஸ்திரேலியாவின் பிரதான ஏற்றுமதியான இரும்புத் தாதுவின் விலைகள்
உயர்ந்தமையானது,
ஆஸ்திரேலியா உலகச்
சரிவில் இருந்து விதிவிலக்கு காணுகின்றதான நிலைமைகளை உருவாக்கியிருப்பதாய்
போற்றப்பட்டது.
ஆனால் கடந்த சில
மாதங்களில் நிலைமை மிகத் தலைகீழாய் மாறியிருக்கிறது.
அரசாங்க நிதிநிலைமை
1930களின் அளவுக்கான
ஒரு தீவிர சூழ்நிலைக்கு முகம் கொடுக்கிறது என்று குறைந்தபட்சம் ஒரு பெரும்
பொருளாதார நிபுணரேனும் எச்சரிக்கிறார்.
உலகப்
பொருளாதாரமானது மந்தநிலைக்குள் நகர்கின்ற சமயத்தில்,
அமெரிக்க மத்திய
வங்கி (ஃபெடரல்
ரிசர்வ்),
ஐரோப்பிய மத்திய வங்கி
மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பான் போன்ற உலகின் முக்கிய மத்திய வங்கிகளின் நடவடிக்கைகள்
ஒரு புதிய நிதி நெருக்கடியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
இவை மிக
மலிந்த பணத்தை இறைப்பதானது,
உண்மையான
பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு எதனையும் செய்யாத அதேநேரத்தில்,
சந்தைகளில் நிதிச்
சொத்துகளுக்கான ஒரு குமிழிக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.
வேறு வார்த்தைகளில்
சொல்வதானால், 2008
உருக்குலைவுக்கு
இட்டுச் சென்ற நிலைமைகள் இப்போது மீண்டும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆயினும்,
இதன் பாதிப்புகள்
அதனை விடவும் இன்னும் தீவிரமானவையாக இருக்கும்,
ஏனென்றால் இப்போது
மத்திய வங்கிகளே பிரதானமாகக் களத்தில் இயங்குபவையாகவும் உள்ளன.
பத்திரச்
சந்தைகளிலான ஒரு பொறிவும் வட்டி விகிதங்களிலான ஒரு அதிகரிப்பும் இவற்றை பாரிய மூலதன
இழப்புகளைக் காணச் செய்து,
அரசாங்க நிதிகளின்
உசித நிலையை கேள்விக்குரியதாக்கும்.
நெருக்கடிக்குள் நுழைந்து நான்காண்டுகளாகி விட்டிருக்கும் நிலையில்,
அதன் மீதான ஒரு வரவு-செலவுக்
கணக்கை வரைவது அவசியமாகும்.
சர்வதேச நாணய
நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் இடையிலான சந்திப்புக் கூட்டம் மிகத் தெளிவாகக்
காட்டுவதைப் போல,
உலக உயரடுக்கினரிடம்
தீர்வு கிடையாது என்பது மட்டுமல்ல,
அவர்கள் இன்னும்
பெரிய பேரழிவுகளுக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.
வங்கிகள்,
நிதி நிறுவனங்கள்
மற்றும் முக்கிய பெரு நிறுவனங்களைக் கையகம் செய்து அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின்
கீழ்ப்பட்ட பொது உரிமைத்துவத்திற்குள் கொண்டு வருவதில் தொடங்குகின்ற ஒரு சோசலிச
வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த தொழிலாளர்’
அரசாங்கங்களை
ஸ்தாபிப்பதற்காய் சர்வதேசரீதியில் ஒருமைப்பட்ட ஒரு அரசியல் போராட்டம் என்ற தனது
சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தைக் கொண்டு தொழிலாள வர்க்கம் தலையீடு செய்ய
வேண்டும். |