World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Jerry White addresses Toronto meeting

ஜெர்ரி வைட் டொரோன்டோ கூட்டத்தில் பேசுகிறார்

By our reporter
15 October 2012
Back to screen version

வைட் உரையாற்றுகிறார்

ஞாயிறன்று மாலை கனடாவின் டொரோன்டோவில் நடந்த ஒரு கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் ஜெர்ரி வைட் உரையாற்றினார். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சுமார் முப்பது பேர் இந்த உயிரோட்டமான கூட்டத்தில் பங்குபெற்றனர்.

வைட் தனது பிரச்சாரத்தின் பாகமாக SEP இன் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை கனடா தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு கனடாவுக்கு விஜயம் செய்திருப்பது இது மூன்றாவது முறையாகும். சென்ற கோடைகாலத்தில் கல்விக் கட்டண அதிகரிப்புகளுக்கு எதிரான கியூபெக் மாணவர் போராட்டத்தின் போது SEP (கனடா) ஆல் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த மொன்ட்ரியால் கூட்டம் ஒன்றில் பிரதான உரையை அவர் நிகழ்த்தியிருந்தார். கனடா வாகனத் தொழிலாளர் சங்க அதிகாரத்துவத்தால் பேரம் பேசப்பட்டிருந்த தேசியவாதக் கொள்கைகள் மற்றும் ஒப்பந்த வேலைகளுக்கு எதிராக தொழிலாளர்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதற்கு ஓன்டாரியோவின்ட்சரில் ஃபோர்ட் தொழிலாளர்கள் இடையேயும் வைட் தலையீடு செய்தார்.  

இந்தக் கூட்டத்திற்கு SEP - கனடாவின் தேசியச் செயலரான கீத் ஜோன்ஸ் தலைமை தாங்கினார். ஜோன்ஸ் தனது அறிமுகக் குறிப்புகளில், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீதான தாக்குதலின் சர்வதேசத் தன்மையின் மீது கவனத்தை ஈர்த்தார். ஐரோப்பிய ஆளும் வர்க்கத்திற்கு சமூக-எதிர்ப்புரட்சிக்கான சோதனைச்சாலையாக கிரீஸ் மாறியிருக்கிறது. அமைதிக்காலத்துடன் ஒப்பீடு செய்ய முடியாத அளவில் வாழ்க்கைத் தரங்களின் மீதான ஒரு சரிவை நிதிச் சந்தைகள் திணித்துக் கொண்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார். தொழிலாள வர்க்கத்தின் மீது உலகளாவிய ஒருங்கிணைப்புடன் செய்யப்படுகின்ற ஒரு தாக்குதலுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசரீதியான பதில்தாக்குதலின் அபிவிருத்தியைக் கொண்டு பதிலளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

கனடாவின் தொழிற்சங்கங்கள் சர்வதேசரீதியாக அதன் சகாக்கள் கடைப்பிடித்ததைப் போன்ற அதே தேசியவாதக் கொள்கைகளை எங்ஙனம் கடைப்பிடித்தன என்பதை ஜோன்ஸ் விளக்கினார். இது கனடாவின் வாகனத்துறை மற்றும் இரும்பாலைத் துறைத் தொழிலாளர்களின் மீதும், அத்துடன் கனடா போஸ்ட், ஏர் கனடா மற்றும் கனடா பசிபிக் ரெயில் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் மீதும் ஆழமான ஒப்பந்த வேலைகள் திணிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. கியூபெக் மாணவர் போராட்டம் உச்சத்தில் இருந்தவொரு சமயத்தில், நூறாயிரக்கணக்கிலானோர் வீதிகளில் பேரணி நடத்திக் கொண்டிருந்த வேளையில், அரும்பி வந்த சோசலிச இயக்கத்துக்கான எந்த வகை உதவியையும் வழங்க தொழிற்சங்கங்கள் மறுத்து விட்டன என்பதை அவர் சுட்டிக் காட்டினார். அதேசமயத்தில், வலது நோக்கி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் சமூக ஜனநாயக NDP, இது தங்கள் எல்லைக்கு அப்பாற்பட்ட பிராந்திய விடயம் என்று வாதிட்டு மாணவர்களுக்கு ஆதரவு தர மறுத்து விட்டது.

வைட் குறிப்பிடுகையில், அமெரிக்கா முழுவதிலும் மற்றும் ஐரோப்பா மற்றும் ஆசியாவெங்கிலுமான அவரது பிரச்சாரப் பயணத்தின் முழுவதிலுமே அவர் சந்தித்த தொழிலாளர்கள் ஒரே நிலைமைகளுக்கே முகம் கொடுத்திருந்தனர். ஏனென்றால் எல்லா அரசாங்கங்களுமே தொழிற்சங்கங்களின் ஆதரவுடனும் அரசு ஸ்தாபகத்திற்கு முட்டுக் கொடுக்கும் சேவை புரிந்து வருகின்ற இடது அமைப்புகளிடையேயான அவற்றின் கூட்டாளிகளது ஆதரவுடனும் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களை மேலே மேலே திணித்து வந்திருக்கின்றன.

அமெரிக்காவில் 2012 தேர்தலில் பெருவணிகக் கட்சிகள் இரண்டில் எது வெற்றி பெற்றாலும், வருகின்ற நிர்வாகம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளை அழிப்பதை தொடரும் என்பதோடு அதிகப்படுத்தும் என்று வைட் விளக்கினார்.

இரண்டு கட்சிகளுமே, அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான ஒரு புதிய போர் மிரட்டல் உள்ளிட்ட, புதிய குற்றங்களுக்கு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றின் போர்-ஆதரவு மற்றும் பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் குறித்து தேர்தல் பிரச்சாரங்களில் அதிகம் பேசவில்லை என்றார் அவர்.  

உலகப் பொருளாதார நெருக்கடி தொழிலாள வர்க்கத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய பேரழிவான தாக்கத்தை அதன்பின் வைட் திறனாய்வு செய்தார். ஏற்கனவே கிரீஸிலும், போர்ச்சுகலிலும் மற்றும் ஸ்பெயினிலும் நிதி உயரடுக்கின் கொள்கைகள் பாரிய வேலைவாய்ப்பின்மையையும், வறுமையையும் பட்டினியையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனஎன்று வைட் கூறினார். அதேசமயத்தில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உலகெங்கும் வேட்டையாடும் ஏகாதிபத்திய நலன்கள் மத்திய கிழக்கில் இன்னுமொரு பிராந்தியப் போருக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. அது ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஒரு பிரளய மோதலாக துரிதமாக மாற்றம் பெறக் கூடியதாகும்.

ஒரு புரொஜெக்டரின் துணைகொண்டு வைட், மொன்ட்ரியால், ஏதென்ஸ் மற்றும் மாட்ரிட்டில் போராட்டத்தில் இறங்கியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் படங்களையும் அதேபோல் இந்த நாடுகளில் தொழிலாள வர்க்கக் குடும்பங்கள் சில கீழே கொட்டப்படும் உணவுகளில் இருந்து எடுத்து சுத்தம் செய்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் படங்களையும் காண்பித்தார்.

இந்த நிலைமைகள் எல்லாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே பாரிய எதிர்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று வைட் கூறினார். அமெரிக்காவில், சமீபத்தில் சிக்காகோ ஆசிரியர் வேலைநிறுத்தத்தில் கண்டது போல, தொழிலாளர்கள் கலகங்களில் பிரவேசித்துக் கொண்டும் இருக்கின்றனர்.

ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் தந்திரோபாய வித்தியாசங்கள் என்னவாயிருப்பினும் சரி, மக்களுக்கு சமூக உரிமைகள் என்று இருக்கின்றன என்கிற கருத்தை இருகட்சிகளுமே முற்றுமுழுதாய் மறுதலித்திருக்கின்றன. ஒரு தனியார் நிதிதிரட்டல் கூட்டத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளரான மிட் ரோம்னி வெளியிட்ட கருத்துகளில் இது தெளிவாக வெளிப்பட்டது. உணவு, இருப்பிடம், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை சமூக அத்தியாவசியங்களுக்கு எவரொருவருக்கும் உரிமை உண்டு என்பதான கருத்தை அக்கூட்டத்தில் அவர் கண்டித்தார்.

ரோம்னியின் அப்பட்டமான இந்த வர்க்க வஞ்சத்திற்கு ஒபாமா பிரச்சாரத்தின் பதிலிறுப்பு என்பது தந்திரோபாய அடிப்படையிலானதாக இருந்தது என்று வைட் சுட்டிக் காட்டினார். உண்மையில், தொழிலாள வர்க்கத்திற்கு எந்த சமூக உரிமைகளும் கிடையாது என்கிற ரோம்னியின் வாதத்தின் மைய அடிக்கோளை ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக் கொண்டனர்.

FDR [பிராங்ளின் டெலனோ ரூஸ்வெல்ட்] நிர்வாகத்தின் சீர்திருத்தக் கொள்கைகளும் (தொழிலாள வர்க்கத்தின் பரந்த சமூகப் போராட்டங்களுக்கான பதிலிறுப்பாக இவை மேற்கொள்ளப்பட்டன, அதனையடுத்து வந்த மெடிக்கேர் மெடிக்-எய்ட் போன்ற திட்டங்களும் இப்போது மறுக்கப்படுகின்றன என்று வைட் கூட்டத்தில் கூறினார்.

உண்மையில், கடந்த 30 ஆண்டுகளில்செல்வத்தின் மறுவிநியோகம் பெரும் செல்வந்தர்களை நோக்கி மேல்நோக்கி நகர்ந்து சென்றிருக்கின்றது.1950களில் அமெரிக்காவில் சமூக செல்வத்தில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு உழைப்பவர்களுக்குச் சென்ற(அதில் பெரும் பகுதி ஊதியங்களின் வடிவில்)அதே நேரத்தில் செல்வச் செழிப்பு தரும் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிகப்பட்சமாய் 90 சதவீத வரி விகிதம் வரை இருந்த நிலையைக் காட்டிய ஒரு வரைபடத்தை அவர் காட்டினார். ஆனால் இன்றோ தேசிய செல்வத்தில் சுமார் பாதி தான் ஊதியங்களுக்குச் செல்கிறது, அதே சமயத்தில் மிக அதிகப்பட்சமான வரி விகிதம் சுமார் 32 சதவீதம் வரை தான்.

சமூக சமத்துவத்திற்கான, அதாவது சோசலிசத்திற்கான, ஒரு வேலைத்திட்டத்தைக் கொண்டு சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் பிரம்மாண்டமான வலிமையை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே, உலகெங்கும் ஆளும் உயரடுக்கினருக்கு எதிராக உலகெங்கும் ஏற்கனவே கலகம் செய்து கொண்டிருக்கக் கூடிய தொழிலாளர்களை, ஒரு சிலரின் இலாபங்களை அநேக மக்களின் தேவைகளுக்கு மேலாக அமர்த்துகிற ஒரு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஒரு முடிவு கட்டுவதற்கான முன்னோக்கைக் கொண்டு முறைப்படி ஆயுதபாணியாக்க முடியும்.

அறிக்கைகளுக்குப் பின் ஒரு நீண்ட மற்றும் உயிரோட்டமான விவாதம் சூழ்ந்தது. வளரும் நாடுகளிலான தேசிய ஜனநாயக இயக்கங்களின் விடயத்தில் SEP இன் நிலைப்பாடுகள் குறித்தும், இன மற்றும் மதப் பிரிவினைகளின் பாத்திரம் குறித்தும், வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின் தன்மை குறித்தும், அத்துடன் முதலாளித்துவம் தனது சொந்த முரண்பாடுகளின் கீழ் தன்னைத் தானே அழித்துக் கொண்டு விடுமா என்பது குறித்தும் தொழிலாளர்களும் இளைஞர்களும் கேள்விகள் எழுப்பினர். கலந்து கொண்டவர்களில் பலரும் கூட்டம் முடிவடைந்ததற்குப் பின்னரும் நெடுநேரம் இருந்தனர், கலந்துரையாடினர், தொடர்பு விபரங்களை பரிமாறிக் கொண்டனர், கட்சியின் புத்தக வரிசையில் இருந்து புத்தகங்கள் வாங்கினர்.