World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Socialist Party’s austerity program expose bankruptcy of petty-bourgeois “left”

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் சிக்கன நடவடிக்கைத் திட்டம் குட்டி முதலாளித்துவ “இடதின்” திவால்தன்மையை அம்பலப்படுத்துகிறது

By Kumaran Ira
12 October 2012
Back to screen version

ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS)  அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கைகள், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற அவருடைய தேர்தலுக்கு ஆதரவு கொடுத்த குட்டி முதலாளித்துவ இடது கட்சிகளின் திவால்தன்மையை அம்பலப்படுத்துகின்றன.

நாளேடு Le Monde ல் அக்டோபர் 3ம் திகதி வந்துள்ள தகவல்படி, எலிசே ஜனாதிபதி மாளிகை ஹாலண்டின் ஐந்து ஆண்டு வரைலாலத்தில் 40 பில்லியன் யூரோக்களை, ஆண்டிற்கு 8 பில்லியன் யூரோக்களை (10.3 பில்லியன் அமெரிக்க டாலர்) சமூகநலச் செலவுகளில் இருந்து பெருநிறுவன பங்களிப்பை அகற்றவதின் மூலம் போட்டித்திறன் அதிர்ச்சிக்கு தயாரித்து வருகிறது எனத் தெரியவந்துள்ளது. இதன் நோக்கம் பிரெஞ்சுப் பெருநிறுவனங்களின் போட்டித்தன்மையை தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதின் மூலம், அதாவது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களைக் குறைப்பதின் மூலம், பாதுகாத்தல் என்பதாகும்.

தளர்ச்சியுற்ற தன்மையை ஈடு செய்வதற்காக வரிகள் அதிகரிக்கப்படும். குறைந்த ஊதியத்தைப் போல் 1.6 ல் இருந்து 2.2 மடங்கு அதிகம் சம்பாதிக்கும் தொழிலாளர்களை இது பாதிக்கும் எனக் கூறப்படுகிறதுஉதாரணம் கார்த்தயாரிப்பு இன்னும் பிற தொழில்துறைகளில்.

அரசியல் நடைமுறை முன்னாள் EADS aerospace-defence பெருநிறுவனத்தின் லூயி கலுவா நவம்பர் 5ம் தேதி பிரெஞ்சுப் போட்டித்தன்மை குறித்து வெளியிட இருக்கும் அறிக்கை ஒன்றிற்காக தயாரிப்புக்கள் நடத்துகையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. கலுவா தன் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே போட்டித்திறனில் ஓர் அதிர்ச்சிஎன்ற கலுவா அழைப்புக்கள் எலிசே மாளிகையில் எடுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை. அவர் வட ஐரோப்பியக் கொள்கைகளான வளைந்து கொடுக்கும் தன்மை-பாதுகாப்புஆகியவற்றை நோக்கிய திட்டத்தைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறதுஇது நிறுவனங்களை எளிதில் தொழிலாளர்களை நியமிக்க, நீக்க, அவர்களுடைய ஊதியங்களைக் குறைக்க மற்றும் பணிநேரத்தைக் குறைக்க ஆகியவற்றிற்கு உதவும்.

கிரேக்கத்தின்மீது ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தியுள்ள சிக்கனக் கொள்கைகளையும் PS ஆதரித்துள்ளது; சிக்கனச் சார்பு ஐரோப்பிய வரவு-செலவுத் திட்ட உடன்படிக்கைக்கு நேற்று வாக்களித்தது.

ஹாலண்டின் வலதுசாரிக் கொள்கைகள் மீண்டும் பிரான்சின் குட்டி முதலாளித்துவ இடது கட்சிகளின் திவால்தன்மையை அம்பலப்படுத்துகின்றன. அவை மே மாதம் இவருடைய தேர்தல் வேளையில் அப்பொழுது பதவியில் இருந்த வலதுசாரி நிக்கோலோ சார்கோசிக்கு எதிராக ஆதரவைக் கொடுத்திருந்தன. ஹாலண்ட் சற்றே குறைவான ஆக்கிரோஷக் கொள்கைகளைத் தொடர்வார், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பினால் எளிதில் அழுத்தத்திற்கு உட்படுவார் என்று கூறப்பட்டது.

NPA  உடைய ஜனாதிபதி வேட்பாளர் Philippe Poutou , ஹாலண்டிற்கு வாக்களிப்பது, நிக்கோலோ சார்க்கோசியை அகற்றுவதற்கு ஒரு கருவிஎன்று மே 6 தேர்தல் இரண்டாம் சுற்றின்போது கூறினார். இவருடைய கொள்கை ஒன்றும் குறிப்பிடத்தக்க வகையில் சார்க்கோசியுடையதில் இருந்து வேறுபடவில்லை என பெரும்பாலான மக்கள் உணர்கையில், ஹாலண்டின் செல்வாக்கு பெரிதும் சரிந்துள்ளது; மக்களில் 56% அவரைச் சாதகமாகக் காணவில்லை என்று சமீபத்திய IFOA கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஆயினும்கூட அவர் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறார்.

இது NPA ஐ ஹாலண்ட் குறித்து வெற்றுத்தன விமர்சனங்களை வெளியிட ஊக்கம் கொடுத்துள்ள அதே வேளையில் PS அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனப் போராட்டத்தைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வைத்துள்ளது. சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கள் அனைத்தும் அரசியல் ரீதியாக தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு தாழ்த்தப்பட வேண்டும் என்று அவை வலியுறுத்துகின்றன. அதுவோ ஹாலண்ட் மற்றும் வணிக நிறுவனங்களுடன் பேச்சுக்களை நடத்துகிறது, ஹாலண்டின் சிக்கனச் செயற்பட்டியலுக்கு ஆதரவைக் கொடுக்கிறது.

அக்டோபர் 5ம் திகதி, “போட்டித்திறன்: ஒரு சமூக விரோத அதிர்ச்சியை நோக்கிஎன்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் அது எழுதியது: தன்னுடைய 2014 செயற்பட்டியலை ஹாலண்ட் அறிவித்துள்ளார்; இதன் பொருள் சுகாதாரப் பாதுகாப்பு செலவுகள் குறைக்கப்படுவது அதிகரித்தல், மற்றும் தொழிலாளர் சந்தையை நவீனப்படுத்துதல்என்பதாகும். இத்தொடர்ச்சியான நடவடிக்கைகள் முதலாளிகள் விரும்பும் அதிர்ச்சியைதோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது.

ஹாலண்ட் குறித்து இத்தகைய விமர்சனங்களை வெளியிடுகையில், NPA அரசாங்கத்தின் இடது பிரிவு ஒன்றிற்குத்தான் ஆதரவைக் கொடுக்கிறது; அது இத்தகைய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதில் உள்ள உட்குறிப்புக்கள் குறித்து கவலை கொண்டுள்ளது. போர்த்துக்கல்லில் இதேபோன்ற வெட்டுக்களால் சீற்றமுற்ற தொழிலாளர்களின் பெருந்திரட்டு போர்த்துக்கலின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தை அச்சுறுத்தி தற்காலிகமாக அதன் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க வைத்தது.

அக்டோபர் 8ம்திகதி Le Monde சில முக்கிய அரசாங்க மந்திரிகள், பெருநிறுவன பங்களிப்புக்களை குறைப்பதன் மூலம் போட்டித்திறன் அதிர்ச்சிபெருமளவில் கொடுக்கப்படுவது குறித்தும், அதற்கு ஈடாக தொழிலாளர்கள் பங்களிப்பு அதிகரிப்பு அல்லது விற்பனை வரி அதிகரிப்பு ஆகியவை கொண்டுவரப்படுவதற்கும்தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதற்காககுறைகூறியுள்ளனர்.

ஹாலண்டின் வெட்டுக்களை ஒட்டி வரும் சமூக விளைவுகள் குறித்துப் பேசுகையில், NPA வெட்டுக்கள் மற்றும் PS அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் அரசியல் போராட்டம் எதையும் நடத்த முற்படவில்லை. மாறாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பேச்சு வார்த்தைகள் குறித்த நிலைப்பாட்டிற்குத்தான் ஏற்றம் கொடுக்க முற்பட்டுள்ளது; அவை ஹாலண்டுடன் வெட்டுகளுக்கு ஒத்துழைக்கின்றன. இவ்வகையில் NPA தொழிலாள வர்க்க எதிர்ப்பை இறுக்கமாக கட்டிவிட முயல்கிறது; முதலாளித்துவ ஒழுங்கின் எல்லைகளுக்குள் அதைக் கட்டிப்போடத்தான் விரும்புகிறது.

அரசாங்கம்-வணிகம்-தொழிற்சங்கம் என்னும் முக்கூட்டுக் கூட்டங்களைப் பற்றிப் பேசுகையில், ஹாலண்டுடன் இவற்றில் தொழிற்சங்கங்கள் வெட்டுக்களை பற்றிப் பேச்சுக்களை நடத்துவது பற்றி, NPA எழுதுகிறது: இத்தகைய கூட்டங்களில் பங்கு பெறுதல் என்பது சமூகப் பிற்போக்குத்தன வடிவமைப்பிற்குள் உழைத்தலை ஏற்றல் என்ற பொருளாகும். இது இப்பேச்சுக்கள் நடைபெறாமல் போவதை நியாயப்படுத்த அனைத்தையும் செய்யும், இந்த விவாதங்களில் தொழிற்சங்கங்கள் பங்கு பெறுவது தடைக்கு உட்படுத்தப்படும்.

முடிவுரையாக இது கூறுவதாவது இன்னும் பரந்த முறையில், வரவிருக்கும் போராட்டங்களில் பணயத்தில் இருப்பது தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் செயலர்கள் தொழிற்சங்க இயக்கத்தை பேச்சுக்கள் என்னும் கொள்கையில் இருந்து முறித்துக் கொள்ள கட்டாயப்படுத்த முடியுமா, அதை இந்த சமூக எதிர்ப்பு அரசாங்கத்திற்கு எதிராக இருத்த முடியுமா என்பதுதான்.

எத்தகைய திவால் தன்மையுடைய திட்டம். இதை முன்வைக்கும்போதே,  NPA  க்கு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பொருள்பட எதிர்ப்பை அமைக்கும் திறன் தங்களிடம் இல்லை என்பதை நன்கு அறியும்.

தொழிற்சங்கங்கள் பெருநிறுவனங்களின் போட்டித்திறனை அதிகரிப்பதற்கு சமூகநல வெட்டுக்களை விரைவுபடுத்துவதற்குத்தான் ஹாலண்டிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. சமீபத்தில் பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) தலைவர் பிரான்சுவா செரெக் கூறினார்: நம் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது; ஏனெனில் உலகளாவியதன்மையின் சவால்களுக்கு பிரான்ஸ் நல்ல முறையில் தன்னைச் சரி செய்து கொள்ளவில்லை... நாம் விரைவில் தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேச்சுக்களை நடத்த வேண்டும்.ஊதிய வெட்டுக்களுக்கான ஆதரவையும் அவர் அடையாளம் காட்டும் வகையில், தொழிலாளர்பிரிவுச் செலவுகளும் போட்டித்தன்மை இழப்பில் ஒரு காரணிதான்.

பிரான்ஸில் கடந்த மூன்று தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய வெட்டுக்கள், கல்வித்துறைச் சீர்திருத்தங்கள், மற்றும் ஆலைகள் மூடப்படுவது குறித்து தொடர்ச்சியாக அரசாங்கங்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது; அரசாங்கங்கள் வெவ்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும்.

இவை வெற்றுக் குண்டுகள் ஆகும்; சலுகை பெற்றுள்ள அதிகாரத்துவம் கூறுபவை; பாராளுமன்றத்தில் தணிக்கை செய்யப்பட்டுப் பின் கசிய விடப்பட்டுள்ள Perruchot அறிக்கையின்படி இவற்றின் வரவு-செலவுத் திட்டத்தில் 90% பெருவணிகம் மற்றும் அரசாங்கத்தின் நிதிய நன்கொடைகளில் இருந்து வருகிறது. உறுப்பினர்களின் கட்டணங்கள் இவற்றின் வரவு-செலவுத் திட்டத்தில் 3 முதல் 4 சதவிகிதம் என்றுதான் உள்ளது. இத்தகைய அமைப்புக்கள் PS அரசாங்கத்திற்கும் பெருவணிகத்திற்கும் எதிராக, ஒரு விரோதப்போக்குடைய, சுயாதீன மூலோபாயத்தை தொடரும் திறன் அற்றவை.

இச்சூழலில் NPA, தொழிற்சங்கத்திற்கு ஒரு தீவிர கொள்கையை தொடருமாறு முறையிட்டிருப்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அரசியல் பொறியாகும். இது தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கொள்கைகளில் தவறான நம்பிக்கையை வைக்க ஊக்கம் அளிக்கிறது. NPA  இன் அரசியல் ஏமாற்றுத்தனம் அது எவற்றிற்கு வாதிடுகிறதோ, அந்தச் சமூக அடுக்குகளின் நலன்களைத்தான் பிரதிபலிக்கிறது. அதாவது மத்தியதர வர்க்கத்தின் வசதியான பிரிவுகள் உடையதை; அவற்றின் பெரும் பகுதிகள்தான் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் அரசியல் அளவில் ஒருங்கிணைந்துள்ளன.

ஹாலண்ட் பற்றி எத்தகைய இழிவான குறைகூறல்களை அவை செய்தாலும், இந்த வசதியான அடுக்குகள் ஹாலண்டின் வெட்டுக்களால் தீவிரப் பாதிப்பைக் கொண்டவை அல்ல. இவை மீண்டும் மீண்டும் ஒரு திவால்தன்மை உடைய மூலோபாயத்தை முன்வைக்கலாம்; சிக்கனத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டங்களில் தோல்வியில் இருந்து எந்த அரசியல் முடிவுகளையும் எடுக்காதவை; ஏனெனில் அவை தொழிலாள வர்க்கத்திடம் முற்றிலும் விரோதப் போக்கு காட்டும், பிரிக்கப்பட்டுள்ள ஒரு சமூக அடுக்கைத்தான் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.

இது, உலக சோசலிச வலைத் தளம் 2009ம் ஆண்டு இந்த அமைப்பு துவக்கப்படும்போது கூறிய விமர்சனங்களைத்தான் சரியெனக் காட்டுகிறது. இதன் குட்டி முதலாளித்துவ அரசியல், ட்ரொட்ஸ்கிசத்துடன் எத்தொடர்பையும் நிராகரிக்கும் இயல்பு ஆகியவை வெளிப்படையாக இது முதலாளித்துவ பிற்போக்குத்தன்மையின் பணியில் வெளிப்படையாக நுழையத்தயாரிப்புக்கள் கொண்டுள்ளது எனச் சுட்டிக்காட்டியது.

ஹாலண்ட் நிர்வாகத்துடன் போராடக்கூடிய ஒரே இயலும் தன்மையுடைய வழி, தொழிலாள வர்க்கத்தை PS அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் இவற்றிற்கு எதிரான அரசியல் போராட்டத்திற்குத் அணிதிரட்டுவதுதான்; இது தொழிற்சங்கங்களில் இருந்தும், NPA  போல் அதைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்தும் சுயாதீனமான ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும்.