WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பாவில் பியட் பாரவூர்தி நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஐவெகோ ஐந்து ஆலைகளை மூட
உள்ளது
By Michael Regens
13 October 2012
பியட் பாரவூர்தி நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஐவெகோவில்
(Iveco)
உள்ள தொழிலாளர்கள் சில மாதங்களாக தங்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தாலியக் கார்த்தயாரிப்பு நிறுவனம் அதன் ஐந்து ஐரோப்பிய ஆலைகளை பாரவூர்தி
பிரிவில் இந்து ஆண்டு இறுதிக்குள் மூட இருக்கிறது.
பியட்டின் நிர்வாகக் குழு ஆலைகள் மூடப்படுவதை நியாயப்படுத்தும் வகையில் தெற்கு
ஐரோப்பாவில் பொருளாதார சுருக்கம் மற்றும் பாரவூர்தி விற்பனைகளில் தீவிரச் சரிவு
ஆகியவற்றை மேற்கோளிட்டுள்ளது.
இந்த ஆலை மூடல்கள்
1,075
ஊழியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஜேர்மனியில் மூடப்பட உள்ள மூன்று ஆலைகள் உல்ம்,
வைஸ்வைல்,
கோர்லிட்ஸ் ஆகிய இடங்களில் உள்ளன.
இதைத்தவிர,
பிரான்ஸில் ஷம்பர்லி,
மற்றும் ஆஸ்திரியாவில் கிராட்ஸ் நகரங்களிலும் ஐவெகோ உற்பத்தி நிலையங்கள் மூடப்படும்.
இந்த மூடல்கள் ஐரோப்பாவில் பியட் மேற்கோள்ளுள்ள தீவிரப்
மறுகட்டமைத்தல் முறையில் ஒரு பகுதியாக உள்ளன.
முன்னதாக நிறுவனம் அதன் இத்தாலியிலுள்ள அவெல்லினோவில் மற்றும் ஸ்பெயினில் உள்ள
பார்சிலோனா பஸ் உற்பத்தி ஆலைகளை முடியது.
இந்த ஆண்டு மே மாதம் பியட்டின் தீயணைப்பு வாகன கிளைநிறுவனம் காமிவா சவோயில்
இருக்கும் அதன்
Saint-Alban-Leysse
ஆலையை
மூடுவதாக அறிவித்தது.
1997ம்
ஆண்டு காமிவா ஆலையை ரெனோல்ட் நிறுவனத்திடம் இருந்து ஐவெகோ வாங்கியது.
இந்த ஆலை மூடல்கள்
“வேதனை
தருபவை,
ஆனால் தேவையானவை”
என்று பியட் குழுவின் நிர்வாகம் அறிவித்தது. அதே நேரத்தில் பியட்
தொழிற்துறையாளர்கள் இந்த ஆண்டு முதல் கால்பகுதியில் கடந்த ஆண்டு இதே
காலாண்டுக்காலத்தைவிட அதன் இலாபங்களை
90%க்கும்
மேலாக,
கிட்டத்தட்ட
207
மில்லியன் யூரோக்கள் என்று அதிகரித்துள்ளது.
.
பல ஐரோப்பிய ஆலைகளிலும் உற்பத்திச் சரிவு என்பது அமெரிக்கச்
சந்தைகளின் மீது பியட் அதிக கவனத்தை காட்டுவதுடன் தொடர்புள்ளது. ஐவெகோ,
அமெரிக்கச் சந்தையில் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் அது அமெரிக்கக்
கார்த்தயாரிப்பு நிறுவனமான கிறைஸ்லருடன் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது.
(அதன்
பெரும் பங்குகள் பியட்டிடம் உள்ளன)
ஐவெகோ சிறியரக பாரவூர்தி விநியோக வலைப்பின்னலில் இடம் பெறும். அதன் பின் பியட்
குறிப்பிட்ட ஐவெகோ பாரவூர்திகளை அப்பெயரில் அமெரிக்காவில் விற்கலாம்.
பியட்டின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ஜியோ மார்ஷியோன ஐரோப்பியக்
கார்த் தொழிற்துறையில் அமெரிக்கத் தரங்களைச் சுமத்துவதில் முக்கிய பங்கைக்
கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு,
பியட் இத்தாலியில் சிசிலியில் உள்ள அதன் ஆலையை மூடி,
மற்ற ஆலைகளிலும் கணிசமான ஊதிய வெட்டுக்களைச் சுமத்தியதுடன்,
நேபிள்ஸ்க்கு அருகே இருக்கும் பொமிக்லியானோ ஆலையில் விடுமுறைகளையும் குறைத்து,
குழுவின் ஆலைகள் முழுவதிலும் குறுகியகால வேலைநேரங்களை விரிவாக்கியுள்ளது.
இப்பொழுது பியட் பாவூர்தி பிரிவில் மிகஅதிமாக வேலைகள் குறைக்கப்பட
உள்ளது.
மே மாதத்தில் ஐவெகோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பிரெடோ அல்டவில்லா ஜேர்மனியில்
உல்ம் நகரிலுள்ள உற்பத்தி நிலையங்கள் பலவற்றை ஸ்பெயினுக்கு மாற்ற இருப்பதாகவும்
அதையொட்டி
670
வேலைகள்
இல்லாதுபோகும் என்றும் அறிவித்தார்.
இந்த மறுகட்டுமானத் திட்டத்தில்,
பியட்டின் நிர்வாகம் மிகவும் நெருக்கமாக
IG Metall
தொழிற்சங்கம் மற்றும் அத்துடன் இணைந்துள்ள தொழிற்சாலை தொழிலாளர்குழுக்களுடன்-works
councils-
இணைந்து செயல்படுகிறது.
தொழிற்சங்கங்கள் பெருகிய முறையில் தொழிலாளர்கள்மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தத்
தயாராக உள்ள நிலைமையை நிர்வாகம் சாதகமாக பயன்படுத்துகிறது.
இதைத் தொடர்ந்து ஒரு கடமையுணர்வைக் காட்டும் வகையில்
IG Metall
அதிகாரிகள்
அவற்றைக் குறைகூறுவர்.
ஆனால் நிறுவன நிர்வாகம் பற்றிய அவற்றின் குறைகூறல்கள்
“சமூக
கூட்டாளித்தனத்தின் விதிகளை”
நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டும்,
தொழிற்சங்க அமைப்புடனான உறவை சீர்குலைக்கக்கூடாது என கோருவதுடன் நின்றுவிடும்.
அதே நேரத்தில் தொழிற்சங்கம் ஓர் ஆலைக்கு எதிராக மற்றொரு ஆலையைத் தூண்டிவிட்டு,
ஊதியங்கள்,
பணி நிலைமைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்வதற்கான கொள்கையை தொடரும்.
மே
7ம்
திகதி உல்ம் நகர
உற்பத்தி ஆலையின் ஒரு பகுதி மூடப்பட்டு அப்பணிகள் மற்ற ஆலைகளில்
செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது,
IG Metall,
மற்றும்
உல்ம்
தொழிற்சாலை தொழிலாளர்குழு இரண்டும் டூரினில் இருக்கும் நிறுவனத்தின் உயர்மட்ட
நிர்வாகத்தை ஆலையை முற்றிலும் மூடாமல் விட்டுவைத்ததற்கு பாராட்டின.
தொழிற்சங்கத்தின் கூற்றுப்படி,
670
பணியிழந்த தொழிலாளிகள்
“சமூகரீதியாக
ஏற்கப்பட்டது”
என்றும் இப்பணிநீக்கம் ஒரு
“திருப்திகரமான
உடன்பாட்டைப்”
பிரதிபலித்தது என்றும் கூறின.
தொழிற்சங்க அதிகாரிகள் இழிந்த முறையில் வேறு இடத்திற்கு உற்பத்தியை மாற்றுவது
என்பது
“அனைத்து
ஆலைளிலும் இருக்கும் ஊழியர்களின் நலன்களைக் கருத்திற்கு கொண்டு எடுக்கப்படும்
தீர்வை”
ஒட்டி அமைந்தது என அறிவித்தனர்.
சில காலத்திற்குப் பின் இதன் உண்மை அர்த்தம் வெளிப்பட்டது.
பல ஆலைகளிலும் தொழிலாளர்கள் தங்கள் எதிர்கால வேலைகளைப் பற்றிக் கவலைப்படுகையில்,
IG Metall
மற்றும் உல்ம்மில் இருக்கும் தொழிற்சாலை தொழிலாளர்குழுவினர் வேலைவெட்டுக்கள்
குறித்துத் தனித்தனிப் பேச்சுக்களை நடத்தினர்.
ஜூலை
5ம்
திகதி உள்ளூர்
IG Metall
அதிகாரிகள்
“உல்ம்மில்
நிம்மதிப் பெருமூச்சு”
என்னும் தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் நிர்வாகம் ஆலையில் நேரடி
பணிநீக்கங்களைத் தவிர்க்க முற்பட்டது எனக் கூறியது.
இதைத் தொடர்ந்த வாரங்களில்
IG Metall
மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்குழுக்கள் பணிநீக்கங்கள் ஏற்பாடு செய்வதில் முக்கிய
பங்கைக் கொண்டன.
உல்ம்மில் இது
“வயதான
தொழிலாளர்கள் வெளியேறுவதற்கு மாதிரிகள்”,
“சுயவிருப்புடனான
பணிநீக்க உடன்பாடுகள்”
என்பவற்றின் மூலம் அடையப்பட்டன.
இத்தகைய உடன்பாடுகளின்
“சுயவிருப்புத்
தன்மை”
உள்ளூர்
IG Metall
பிரதிநிதி அஹ்மெட் கராடிமியரால் வெளிப்படுத்தப்பட்டது. உலக சோசலிச வலைத்
தளத்திடம்
அவர் அத்தகைய பணிநீக்க உடன்பாடுகள்
“ஏட்டளவில்தான்
மறுக்கப்பட முடியும்”
என்று ஒப்புக் கொண்டார்.
செப்டம்பர் இறுதியில்
380
தொழிலாளர்கள் உல்ம்மில் தங்கள் வேலைகளை இழந்தனர்.
அதுவரை தொழிலாளர்களின் பிரதிநிதிகள் எனக் கூறப்படுபவர்கள் தங்களால் இயன்றதைச்
செய்து எதிர்ப்புக்களை தடுக்கவும்,
தொழில்நுறைநடவடிக்கைள் வராமலும்,
உற்பத்தி தொடர்வதற்கானவற்றைச் செய்வதிலும் ஈடுபட்டனர் பணிக்குழு உறுப்பினர் ஜோர்ஜ்
ஹெப் இக்கொள்கையை நியாயப்படுத்தும் வகையில் ஊழியர்கள்
“தாங்கள்
வேலை செய்யத்தயார்”
என்பதைக் காட்ட விரும்புகின்றனர் என அறிவித்தார்.
இதேபோல்
IG Metall
வைஸ்வைல் ஆலையில் வேலைகளைக் காப்பாற்ற கொள்கையளவு முறையை நிராகரித்தது.
நகரத்தில் இருந்த
500
வேலைகளில்
180
உள்ளூர்
ஐவெகோ ஆலையில் உள்ளன. இன்னும் பல தொழிலாளர்கள் ஆலை தொடர்ந்து செயல்படுவதைத்தான்
நம்பியுள்ளனர்.
செப்டம்பர்
12ம்
திகதி
IG Metall
மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்
குழுக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தன.
பணிநீக்கங்கள்
“வேலை
செய்யும் நிறுவனத்தின் மூலம்”
ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும்,
அதன் பணி தொழிலாளர்களுக்கு ஒரு வகை வேலையை மூன்று ஆண்டு காலத்திற்கு கொடுத்தல் என
இருக்க வேண்டும் என்றது.
ஜேர்மனியில் ஆழ்ந்து போகும் பொருளாதார நெருக்கடிச் சூழலில் இது நீண்டகால
வேலையின்மைக்கு மாற்றம் என்பதற்கே வழிவகுக்கும்.
ஐவெகோ நிர்வாகக்குழு இத்திட்டத்தை நிராகரித்து ஒரு வியப்பான
மாற்றத்திற்கு ஏற்பாடு செய்தது.
செப்டம்பர்
28ம்
திகதி பல பாரவூர்திகளும் வாகனங்களும் வைஸ்வைலில் இருக்கும் உற்பத்தி சாதனங்களை
ஆலையில் இருந்து அகற்றுவதற்காக கொண்டுசெல்லப்பட்டன.
IG Metall
மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்குழுக்களும் உடனடியாகத் தொழிலாளர்களின் அழுத்தத்திற்கு
உட்பட்டனர்.
அவர்கள் ஆலை வாயிற்கதவுகளை தடைக்கு உட்படுத்தி பாரவூர்திகளும் வாகனங்களும்
பின்வாங்கும் கட்டாயத்திற்கு உட்பட்டன.
இந்நிகழ்வு தொழிலாளர்கள் தங்கள் வேலைகளைக் பாதுகாக்க தீவிர
போராட்டத்தை நடத்தத் தயார் என்பதை வெளிப்படுத்தியும்கூட,
தொழிற்சங்கம் உடனடியாக நிறுவனத்துடன் ஒரு விரைவான உடன்பாட்டை
அடையவேண்டும் என்பதற்காக நடுவர் நீதிமன்றத்தை நாடியது.
உள்ளுர்
IG Metall
தலைவர் உலக சோசலிச வலைத்
தளத்திடம் தானும் வைஸ்வைல் தொழிற்சாலை தொழிலாளர்
குழுவின் தலைவரும் ஏற்கனவே ஒரு நடுவர் பற்றி ஒப்புக் கொண்டுவிட்டதாகவும்,
“உடன்பாட்டிற்கு
இசைவு தரும் வழிவகை”
என்பதற்கும் ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.
நடுவராக நியமிக்கப்பட்டவர் ஜோஹாயிம் கீன்ஸ்ல என்பவராவார். இவர் அதுவரை உள்ளூர்
பொறியியல் தொழில்வழங்குனர் அமைப்பின் நிர்வாக இயக்குனர் பதவியை வகித்தவர்.
அவருடைய பரிவுணர்வு எப்பக்கம் இருக்கும் என்பதைப் பற்றிச் சந்தேகம் ஏதும்
தேவையில்லை.
வைஸ்வைல்,
உல்ம் மற்றும் பிற ஆலைகளில் இருக்கும் ஐவெகோ தொழிலாளர்கள் ஜேர்மனி மற்றும் சர்வதேச
அளவில் இருக்கும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினையான, வேலைகளைக் பாதுகாக்க
முற்படும் எந்தத் தீவிரப் போராட்டமும் தொழிற்சங்கமும் நிர்வாகம் கூட்டுழைப்புவாத
ஒத்துழைப்பினூடாக நசுக்குவதையே எதிர்கொள்கின்றனர்.
நிர்வாகத்தைப் பற்றி எப்பொழுதாவது தொழிற்சங்கம் குறைகூறுதல் என்பது
வெறும் பூச்சுமறைப்புத்தான்.
தொழிற்சாலை தொழிலாளர்
குழுக்களும் தொழிற்சங்க அதிகாரிகளும் நிர்வாகத்தின் நிலைப்பாட்டில்தான் உள்ளர்.
ஜேர்மனியில் ஐவெகோ நிர்வாகக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து தொழிற்சங்க அதிகாரிகள்
அமர்ந்திருப்பதுடன்,
அவர்களுடைய ஊதியங்களைத் தவிர கணிசமான ஆதாயங்களை பெற்று வருகின்றனர். |