World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US vice-presidential debate: Demagogy and reaction

அமெரிக்கத் துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம்: ஜனரஞ்சனப் பேச்சும் பிற்போக்கும்

By Patrick Martin
12 October 2012
Back to screen version

நேற்றைய இரவு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதம் போல் அமெரிக்காவில் எந்த உத்தியோகபூர்வ அரசியல் செயற்பாடு பற்றிய மதிப்பீடும், இரு முதலாளித்துவ கட்சிகளாலும் மற்றும் பெருநிறுவனக்கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகத்தினாலும் முன்வைக்கப்படும் அரசியல் பிரச்சினைகள் பற்றிய விவாதத்தின் முழுவடிவமைப்பின் பிற்போக்கான தன்மைக்குள்தான் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்வதுடன் ஆரம்பிக்கவேண்டும்

இலாப முறையின் இரு வலதுசாரிக் காவலர்களான பைடென் மற்றும் ரையன் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த கருத்துப் பறிமாற்றம் அத்தகைய முன்கூட்டியே கூறக்கூடியதும் மற்றும் வெற்றுத்தன்மையைத்தான் கொண்டிருந்ததால் அதை பார்ப்பது வேதனையைத்தான் கொடுத்தது. பைடனுடைய வலிமை வெற்றுத்தனமாக ஜனரஞ்சகவாதத்தை அடித்தளமாக கொண்டிருந்தது; அதே நேரத்தில் ரையன் தன்னுடைய மிகப் பிற்போக்குத்தனக் கருத்துக்களை ஒரு அடுக்கு அரசியல் புத்திஜீவித இரையின் கீழ் மறைப்பதற்கு அரும்பாடு பட்டார்.

முதல் ஜனாதிபதி விவாதத்தின்போது ஜனாதிபதி ஒபாமாவின் சங்கடத்தை அடுத்து, பைடெனுக்கு உண்மையான உள்ளடக்கம் சிறிதும் இல்லாமல் ஜனநாயகக் கட்சியின் பழைய தாராளவாத உயர்கருத்துக்களைத் தூசிதட்டி விளக்கும் பணி கொடுக்கப்பட்டது. தனக்குவலுவான கருத்துக்களான சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப்பாதுகாப்பு வெட்டுக்களுக்கு எதிராக, செல்வந்தர்களுக்கு வரிவிதிப்பு அதிகம், அமெரிக்க மக்கள் மீது வலதுசாரித் தீவிர சமுகக் கருத்துக்களை திணிப்பற்கு எதிராக, ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 முடிவிற்குள் அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல், மத்திய கிழக்கில் புதிய போர்களில் அமெரிக்கா பங்கு பெறுவதற்கு எதிராக அவர் உறுதியாக நின்றார்.

இந்த நிலைப்பாடுகள் மக்களிடையே செல்வாக்கு பெற்றவை என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒபாமாவின் பிரச்சாரம் அமெரிக்க மக்கள் ஒபாமாவின் வெள்ளை மாளிகையும் ஜனநாயகக் கட்சியும் இவை அனைத்தையும் நடைமுறையில் கைவிட்டுவிட்டது என்பதையும் மறந்துவிட்டனர் என்று நினைப்பது போலுள்ளது. ஒபாமா நிர்வாகம் உரிமையுடன் பெறப்பட்ட சமூநலவுச் செலவுகளைக் குறைத்து, தொழிலாள வர்க்கம் 2008 வோல்ஸ்ட்ரீட் சரிவினால் கொண்டு வந்த நிதிய நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்று செயல்பட்டுவருகிறது. 2009-10ல் காங்கிரசை ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்தபோது, அவர்கள் செல்வந்தர்கள் மீது வரிகளை உயர்த்த மறுத்து, தனியார் பங்கு, தனியார் முதலீட்டு நிதிச் செயலர்கள் போன்ற குடியரசு ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரோம்னி போன்றோருக்கு உள்ள சிறப்பு வரி விலக்குகளை அகற்றுவதைக்கூட எதிர்த்துத்தான் நின்றனர்.

வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கையைப் பொறுத்தவரை, ஒபாமா ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்கியுள்ளதுடன், பாக்கிஸ்தான் மற்றும் யேமனில் ஆளில்லா விமான டிரோன் தாக்குதல்களை தீவிரமாக்கியுள்ளதுடன், லிபியாவில் தலையிட்டதுடன் இப்பொழுது ஈரானுடன் மோதலுக்கான தயாரிப்பில் சிரிய அரசாங்கத்தை கவிழ்க்க முற்பட்டுள்ளார். இது மத்திய கிழக்கு முழுவதையும் மற்றும் உலகம் முழுவதையும் ஒரு இராணுவ இரத்தக்களரியில் ஆழ்த்தக்கூடும்.

விவாதத்தின் முதல் நிமிடங்களில் பைடென் அமெரிக்காவின் முயற்சியால் ஈரான் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத்தடை ஈரானியப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தி மக்களிடைய பரந்த துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றிப் பெருமை பேசினார். அசாத் ஆட்சியை அகற்ற விரும்பும் சிரியப் பிரிவினருக்கு உதவும் அமெரிக்கப் பங்கு பற்றியும் பெருமை பேசிக் கொண்டார். பலமுறையும் நிர்வாகத்தின் செயற்பாட்டைக் காக்கும் வகையில் வெளியுறவுக் கொள்கையில் தளபதிகள் தடுப்பதிகாரச் சக்தி பெற்றிருக்க வேண்டும் என்னும் ரையனின் முன்கருத்தை ஏற்று பென்டகனின் உயர்மட்டத்தின் முழு ஆதரவையும் கொண்டுள்ளது என்றார்.

அமெரிக்க இராணுவ உளவுத்துறை அமைப்புடன் நெருக்கமான உறவுகளைக் கொண்ட ABC News வெளியுறவு நிருபர், விவாதத்தின் நடுவர் மார்த்தா ராடாட்ஸ் கேட்ட வினாக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிநாட்டில் மேற்கொண்டிருக்கும் செயற்பாடுகளின் நியாயத்தன்மை குறித்தும் மற்றும் உள்நாட்டில் இலாபமுறைக்குச் சவால் எதுவும் இல்லை என்பதையும் அடிப்படைக் கருத்தாகக் கொண்டிருந்தன.

வெளியுறவு, இராணுவக் கொள்கைகளைப் பற்றிய பல வினாக்களில்  ஒவ்வொன்றும் உட்குறிப்பாக அமெரிக்கா அது விரும்பும் எந்த நாட்டின்மீதும் படையெடுத்து, குண்டுவீசி வெற்றி கொள்ளலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தது. வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதம் அத்தகைய இராணுவ நடவடிக்கைகளின் அவசரத்தைக் காட்டியதே தவிர அவை சட்டப்பூர்வமாக அல்லது அறநெறிப்படி நியாயப்படுத்தப்பட முடியுமா என்பதை பற்றியதாக இல்லை.

அதே போல், பொருளாதாரம், சுகாதாரப் பாதுகாப்பு, வரிகள், கருக்கலைப்பு போன்ற சமூகப் பிரச்சினைகள் போன்ற உள்நாட்டுக் கொள்கைகளுடன் தொடர்பு  விவாதத்தின் சில பகுதிகள் ஒரு சிறிய சிறுபான்மை கிட்டத்தட்ட அனைத்தையும் கட்டுப்படுத்தியிருத்தல், பெரிய பெரும்பான்மை வாழ்வதற்கே திணறுதல் என்ற தற்பொழுது சமூகத்தில் இருக்கும் செல்வப் பகிர்வை இயல்பான நடைமுறை என்று ஏற்றுக் கொண்ட தன்மையைத்தான் பெற்றிருந்தன.

90 நிமிட விவாதம் முழுவதும், தொழிலாள வர்க்கத்தின் நிலைமகள் குறித்து ஒரு வினாவோ, விடையோகூட வரவில்லை. ஊதியங்கள், ஓய்வூதியங்கள், பிற நலன்களில் வெட்டுக்கள் குறித்தோ, வறுமை, வீடின்மை, பட்டினி ஆகியவற்றின் அதிகரிப்பு குறித்தோ, வீடுகளில் இருந்து முன்கூட்டி வெளியேற்றப்படல், வீடுகளை ஏலத்திற்கு விடுதல் அதிகரித்தல் குறித்தோ, கல்வி போன்ற பொதுப்பணிகளில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்தோ, சமூக உள்கட்டுமானத்தின் சரிவு குறித்தோ எந்தப் பேச்சும் இல்லை.

விவாதத்தின் உள்நாட்டு விடயங்கள் பற்றியது அநேகமாக இரண்டு தலைப்புக்களைப் பற்றித்தான் முற்றிலும் இருந்தது. அதாவது பைடென் முன்வைத்த ரையன் எதிர்த்த மிகப் பெரிய செல்வந்தர்கள் மீது வரிவிதிப்பில் சிறிது அதிகம் வேண்டுமா மற்றும் இரு வேட்பாளர்களும் கொள்கையளவில் ஒப்புக் கொண்ட சமூகநலத் திட்டங்களான Medicare, Medicaid மற்றும் சமூகப்பாதுகாப்பு போன்றவற்றில் எப்படி வெட்டுக்கள் இருக்க வேண்டும் என்பவை பற்றியதாக இருந்தது. ஆனால் இதை அடுத்து ஒபாமா அல்லது ரோம்னி தலைமையின்கீழ் வரும் அடுத்த நிர்வாகத்தில் எது வரவுள்ளது என்பது பற்றி அமெரிக்க மக்களிடையே எச்சரிக்கை உணர்வு வராத வகையில் குறிப்பான விடைகளைத் தவிர்த்தனர்.

இரு பிரச்சினைகளும் ஒன்றுடன் ஒன்று நேரடியாகப் பிணைந்தவை. ஜனநாயகக் கட்சி பெயரளவு வரி அதிகரிப்பை செலவந்தர்கள் மீது சுமத்த வேண்டும் என்று கூறுவது, நியாயமானதுமற்றும் சமமான தியாகம் ஆகியவற்றிற்கு மூடிமறைப்பை கொடுப்பது என்பது, உண்மையில் பல மில்லியன் கணக்கான மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு, வயதான காலம், இயலாத நிலை ஆகியவற்றில் பொருளாதார வகையில் தப்பிப் பிழைப்பற்கு உள்ள வழிகளை மூடி பேரழிவுத் தாக்குதல்களைக் கொடுத்தல் என்றுதான் இருந்தது.

விவாதத்தில் சற்றே வெளிப்படையாக தெரிந்த கணங்களில் ஒன்று ராடாட்ஸ் பைடெனை நேரடியாக அவர் Medicare பெறுவதற்கான தகுதிக்கான வயதை 65ல் இருந்து 67 க்கு உயர்த்துவதற்கு ஆதரவு கொடுப்பாரா எனக் கேட்டபோது வந்தது. இந்த நடவடிக்கை மிகவும் கடுமையான நிதியச் சுமையை ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்குக் கொடுக்கும்.

1983ம் ஆண்டு ரேகன் நிர்வாகத்திற்கும் காங்கிரசில் இருந்த ஜனநாயக கட்சியினர்களுக்கும் இதேபோன்ற சமூகப் பாதுகாப்பிற்கு தகுதி பெறும் ஓய்வூதிய வயது அதிகரிப்பு பற்றிய சட்டம் இயற்றப்படமுன் நிகழ்ந்த பேச்சுக்கள் குறித்த பழங்கதையை விடையாக பைடென் கொடுத்தார். இதன் உட்குறிப்பு Medicare இற்கு பைடென் அதேபோன்ற ஆதரவைத் தருவார் என்பதாகும்.

இரு கட்சிகளும் வலதுசாரித்தன்மையில் ஒருமித்து நின்ற நிலையைக் காட்டிய மற்றொரு கணம் பைடென் ஆண்டு ஒன்றிற்கு ஒரு மில்லியன் டாலர்கள் அல்லது அதற்கு அதிகமான வருமானம் கொண்டவர்கள் மீது அதிக வரி விதிப்பது பற்றிக் குறிப்பிட்டபோதுதான். இது நிர்வாகத்தின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து கணிசமான பின்வாங்குதலை குறிக்கிறது. அப்பொழுது வரிகள் ஆண்டு ஒன்றிற்கு $250,000 ஈட்டுபவர்கள் மீது விதிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.

விவாதத்தின் அரசியலளவில் நேர்மையற்ற, பிற்போக்குத்தன தளத்தின் தன்மை ராடாட்ஸிடம் இருந்து கடைசி நேரத்தில் வந்த ஒரு கேள்வியாகும். இது மதத்திற்கும் அரசகொள்கைக்கும் இடையே உள்ள உறவு பற்றியதாகும். இரு வேட்பாளர்களும் கத்தோலிக்கர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர் அவர்களுடைய மத நம்பிக்கை எப்படி கருக்கலைப்புப் பிரச்சினை குறித்த அவர்கள் கண்ணோட்டத்தைப் பாதித்தது என்று கேட்டார்.

இருவரும் எதிர்பார்த்தபடிதான் விடையிறுத்தனர். கருக்கலைப்பு உரிமைகளுக்குத் தன் வலுவான எதிர்ப்பை ரையன் அறிவித்தார்; பிடென் Roe v. Wade வழக்கிற்கு ஆதரவைக் கொடுத்தார். ஆனால் இருவருமே 1960ல் ஒரு கத்தோலிக்க ஜனாதிபதி வேட்பாளராக இருந்த ஜோன் எப். கென்னெடி திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பிரிக்கும் சுவர் உள்ளது என்ற மரபில் அவர் உறுதியாக உள்ளதையும், எந்தத் திருச்சபை அதிகாரிக்கும் அரசாங்க கொள்கையை நிர்ணயிக்கும் உரிமை கிடையாது எனக்கூறியதை குறிப்பிடவில்லை.