WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பயங்கரவாதிகள் வசிப்பிடம் எனக் கூறப்பட்ட இடத்தில் நடத்திய தாக்குதலில் பிரெஞ்சுப்
பொலிசார் ஒருவரைக் கொன்று, 11 பேரைக் கைது செய்தனர்
By Pierre Mabut
12 October 2012
கடந்த
ஞாயிறன்று பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸ் பிரிவு பாரிஸ், கான் மற்றும்
ஸ்ட்ராஸ்பூர்க் ஆகிய நகரங்களில் சில முகவரிகளில் சோதனைகளை நடத்தினர். அவர்கள்
இஸ்லாமிய பயங்கரவாதக் குழு ஒன்றின் தலைவர் எனக் கூறப்பட்ட 33 வயது
Jérémy
Louis Sidney
ஐச்
சுட்டுக் கொன்றனர், மற்றும் 11 பேரைக் கைது செய்தனர்.
சிட்னேயிடம்
ஒரு .357 மாக்னம் கைத்துப்பாக்கி இருந்ததாகக் கூறப்படுகிறது, இதை வைத்துக் கொண்டு
அவர் பொலிசாரை நோக்கிச் சுட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சோதனை,
செப்டம்பர் 19ம் தகிதி பாரிஸில் சார்செல் பகுதியில் ஒரு யூத கோஷர்
மளிகைக் கடை மீது நடந்த தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்டது; அந்தப் பகுதியில் பல
சமூக, மத, இனவழிப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். ஒரு பாதுகாப்பு
கையெறிகுண்டை பயன்படுத்திய இத்தாக்குதல் சேதத்தை ஏற்படுத்தியதுடன் ஒருவரைக் காயமும்
படுத்தியது.
உள்துறை
மந்திரி மானுவல் வால்ஸ் சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய தீவிரவாதக் குழுவின்
உள்ளூரிலேயே வளர்ச்சி பெற்ற போக்கு பற்றி வலியுறுத்தினார்:
“இது
ஒரு வெளிப் பயங்கரவாத இணையத்தில் இருந்து வருவது அல்ல. இது நம் உள்ளூர் சமூகங்களில்
இருக்கும் இணையத்துடன் தொடர்புடையது”
என்றார் அவர்.
“வெளிநாட்டுக்காரர்கள்
அல்ல, இஸ்லாமிற்கு மாற்றப்பட்டுள்ள பிரெஞ்சு மக்கள்தாம்.”
“யூத
சமூகம் மட்டும் அல்ல, பிரான்ஸும்தான் இலக்கு கொள்ளப்பட்டுள்ளது”
என்றார் வால்ஸ்.
Le
Monde
கருத்துப்படி குழுவின் பல
உறுப்பினர்களை கைது செய்யப்படுவதில் இருந்து தப்பினர்; ஏனெனில் ஒரு ஜிஹாட்டிஸ்ட்
குழுவுடன் சேர்வதற்கு சிரியாவிற்குச் சென்றிருந்தனர். கான் இல் கைது
செய்யப்பட்டவர்களில் ஒருவர்,
சலாபிஸ்ட் குழுவான அன்சர் அல்-ஷரியாவின் செய்தித் தொடர்பாளராள
துனிசியக் குடிமகன் ஹசென் பிரிக் பற்றி பேஸ்புக்கில் சாதகமாக கருத்துக்களை
வெளியிட்டிருந்தார்.
அன்சர்
அல்-ஷரியா ஒரு வட ஆபிரிக்க இஸ்லாமியக் குழு; துனிசிய பொலிசார் இதுதான் செப்டம்பர்
14 அன்று துனிசில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதலை நடத்தியது எனச்
சந்தேகப்படுகிறது. இத்தாக்குதலே பெங்காசியில் அமெரிக்க துணைத் தூதரகத்தின் மீது
தாக்குதல் நடந்த மூன்று நாட்களுள் வந்தது; பிந்தையதில் நான்கு அமெரிக்கர்கள்,
அமெரிக்க தூதர் ஜே. கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உட்பட, கொல்லப்பட்டனர்.
விசாரணையின்றி பொலிசார் ஒருவரைக் கொன்றுள்ளது பிரான்சில் இருக்கும் பொலிஸ்
அமைப்பின் பிற்போக்குத் தன்மையை சுட்டிக்காட்டுகிறது; அதேபோல் மத்திய கிழக்கில்
அதன் போர்களில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் கொடுக்கும் ஆயுதமேந்திய குழுக்கள் கொண்டுள்ள
பயங்கரவாத வழிவகைகளையும் சுட்டிக் காட்டுகிறது.
சுருக்கமாகவும் மறைமுகமாகவும் என்றாலும் வால்ஸ் மத்திய கிழக்கில் பிரெஞ்சு ஆதரவுடைய
போர்களுக்கு மக்கள் எதிர்ப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டினார்; இதுதான் இந்த
நபர்களின் ஜிஹாட்டிஸ்ட் குழுக்களிடம் கொண்டிருப்பதாகக் கூறப்படும் உந்துதல்
திறனுக்குக் காரணம் ஆகும். பயங்கரவாத அச்சுறுத்தல்
“கற்பனை
மற்றும் வெறுப்பு”
ஆகியவற்றால் ஊக்கம்
பெறுகிறது, அதே நேரத்தில்
“புவி-அரசியல்
பின்னணியும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்”
என்றார் அவர்.
“பயங்கரவாத
அச்சுறுத்தலுக்கு”
முகங் கொடுக்கும் பொறுப்பை ஏற்பதற்காகத் தான் செல்லவிருந்த கட்டார்
பயணத்தை இரத்து செய்துள்ளதாக வால்ஸ் தெரிவித்தார். தற்பொழுது கட்டார் சிரியாவின்
பயங்கரவாதச் செயல்களின் பின் உள்ளது; இதற்கு பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவும்
உள்ளது: இவை அந்நாட்டில் அமெரிக்காவின் பினாமிப் போரை விரிவுபடுத்துகின்றன, சிரிய
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை தூக்கிவீசுவதற்கு முனைகின்றன.
தாக்குதலுக்கு மறுநாள், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் ஒரு புதிய பயங்கரவாதத்திற்கு
எதிரான சட்டம் மிகக் குறுகிய காலத்தில் தேசிய சட்டமன்றத்தில் அளிக்கப்படும்
என்றார்: இது
“இருக்கும்
கருவிகளை வலுப்படுத்தும், அதையொட்டி அவை இந்த இழிசெயசலுக்கு எதிராக இன்னும்
திறமையுடன் செயல்படும்.”
நவ-பாசிச
தேசிய முன்னணி
(FN) கைதுகளை
எதிர்கொண்ட விதம் உடனடியாக இன்னும் அதிக வெறுப்பை அடக்கப்பட்ட புறநகர் இளைஞர்கள்
மற்றும் இஸ்லாமின்மீது தூண்டிவிடும் வகையில் இருந்தது; இது வால்ஸ் வழிவகை போல்தான்
இருந்தது. FN
உடைய தலைவர்
Marine Le Pen
ம் இஸ்லாமைத் தாக்கும்
வகையில், “இஸ்லாமிற்கு
வெளிநாட்டுப் பணம் நிதியளிக்கிறது. பிரெஞ்சு இஸ்லாம் என்று ஒன்றும் இல்லை.”
என்றார்.
உண்மையில்
பிரெஞ்சு மக்கள் தொகையில் 10% என்று, அதாவது
6
மில்லியன்
மக்கள் முஸ்லிம் மத நம்பிக்கை அல்லது பண்பாட்டுப் பின்னணியைக் கொண்டவர்கள் ஆவர்.
கைது
செய்யப்பட்ட இளைஞர்கள் முன்னாள் சிறுகுற்றவாளிகள், போதைப் பொருள் கடத்தலில்
ஈடுபடுபவர்கள், சிறையிலோ, சிறையை விட்டு நீங்கியபின்னரோ சலாபிஸ்ட் மத போதகர்களால்
தீவிரவாத இஸ்லாமிற்கு மாற்றப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. வறுமையை அதிகமாக்கி,
பொதுக் கல்வி மீது தாக்குதல்களையும் விரிவுபடுத்தும் தொடர்ச்சியான சிக்கன
நடவடிக்கைகளில் தற்பொழுது ஈடுபட்டிருந்தாலும்கூட, ஹாலண்ட் பாசாங்குத்தனமாக
தொடர்ந்தார்:
“குடியரசின்
பொதுக் கல்வி முறை மூலம், அனைத்து வறுமைக்கும் எதிரான உறுதியான முயற்சிகள்
மூலம்தான் பிரெஞ்சு மக்களை நாம் ஒன்றாகக் கொண்டுவரமுடியும்.”
வியாழன்
காலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமலேயே ஐந்து இளைஞர்கள், நான்கு நாள்
காவலுக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்;
“மிக
ஆபத்தான தன்மையுடைய பயங்கரவாதக் குழுவைத்”
தோற்றுவிக்கக்கூடும் என்ற சந்தேகம் அவர்கள் மீது கொள்ளப்பட்டது.
எஞ்சிய ஏழு
பேர்
“ஒரு
பயங்கரவாதத் திட்டத்தை ஒட்டி மதம் தொடர்பாக படுகொலை செய்ய முயன்றது,”
என்ற குற்றச்சாட்டைக் கொண்டுள்ளனர்.
பாரிசின்
அரசாங்க வக்கீல் பிரான்சுவா மோலன்,
“1995க்குப்
பின் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிக ஆபத்தான பயங்கரவாதக் குழுவாகும் இது”
என்றார்;
அக்காலக்கட்டத்தில்தான் அல்ஜீரிய ஆயுதமேந்திய அடிப்படை இஸ்லாமியவாதக் குழு
GIA
பிரான்ஸ் மீது தாக்குதல்களை நடத்தியது.
சிட்னேயின்
DNA
யில் இருந்த குறிப்புக்கள்
யூத மளிகைக்கடை மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதலில் இருந்தன என்று
அரசாங்க வக்கீல் கூறியுள்ளார். பாரிஸின் கிழக்குப் பகுதியான டோர்சியில் (Seine-et-Marne)
யில் ஒரு வீட்டில்
நடத்தப்பட்ட சோதனையில் மற்றொரு சந்தேகத்திற்குரியவர்
Jérémy Bailly
கைதுசெய்யப்பட்டார்.
இவர்
வெளிநாட்டில் பயிற்சி முகாம்களில் பங்கு பெறப் பயணித்ததாக சந்தேகிக்கப்பட்டபின் சில
காலமாக கண்காணிப்பில் உள்ளார். இஸ்லாமிய பிரச்சாரக் கருத்துக்களை கொண்ட நூல்
மற்றும் பாரிஸ் பகுதியில் உள்ள யூதர்கள் சங்கங்களின் பட்டியல் ஒன்றையும் பொலிசார்
கைப்பற்றியுள்ளனர்.
Torcy
இல் வெடிபொருட்களுக்கு
தேவையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன; இதைத்தவிர
“நான்கு
உபதேச நூல்களும்”
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; இவை மனிதர்கள் இறுதியில் அடையும் மரணம்
பற்றிக் குறிப்பவை. கிட்டத்தட்ட 27,000 யூரோக்களும் (35.000அமெரிக்க டாலர்)
கைப்பற்றப்பட்டன.
லூயி
சிட்னேயின் பங்கு ஜிஹாட்டிஸ்டுகளை சிரியாவில் அமெரிக்கா நடத்தும் உள்ளநாட்டு
போருக்காக சேர்ப்பது என்று மோலன்ஸ் கூறினார். இது சாதாரணமாக ஒரு கேள்வியை
முன்வைக்கிறது: கட்டார் மற்றும் சௌதி அரேபியா நிதி கொடுத்து, அமெரிக்க ஆதரவளிக்கும்
சிரிய பயங்கரவாதக் குழுக்களுக்கு பிரெஞ்சு அரசாங்கம் ஏன் ஆதரவு கொடுக்கிறது—அதே
நேரத்தில் இதே போன்றவற்றில் இருக்கும் தன் சொந்த குடிமக்களையே கைது செய்கிறது,
சுட்டுக் கொல்லவும் செய்கிறது? ஏனெனில் இதற்கு இக்குழு சிரியாவில் பயங்கரவாத
வழிவகைகளை வளர்க்கிறது, அப்பிராந்தியத்தில் தன் நலன்களை வளர்க்கும் குழுக்கள் இவை
என்பதை பிரான்ஸ் நன்கு அறியும்.
சாதாரணமாக
இது,
பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள் மத்திய கிழக்கில் கொண்டுள்ள
கொள்கையின் குற்றத் தன்மையைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
FN
உடைய பிரச்சாரத்தை
எதிரொலிக்கும் இன்னும் ஆழ்ந்த பிற்போக்குத்தன கருத்து என்னும் வகையில், வால்ஸ்
மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய தலையீடுகளை விரிவாக்குவதற்கு விரோதத்தன்மை காட்டும்
எத்தகைய இஸ்லாமிய மத கருத்துக்களின் ஆர்ப்பாட்டத்தையும் தாக்கப் போவதாக
கூறியுள்ளார். “நான்,
ஒருபொழுதும் முற்றிலும் மறைக்கும் அங்கியை அணிந்த மகளிரை அனுமதிக்க மாட்டேன்;
மக்கள் தெருக்களில் பிரார்த்தனை செய்வது; அல்லது நம் மதிப்புக்களைப் பகிர்ந்து
கொள்ளும் நட்பு நாடுகளுக்கு எதிரான விரோதப் போக்கு உடைய கோஷங்களை நம் தெருக்களில்
அனுமதிக்க மாட்டேன்.” |