World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The class issues in the 2012 US elections

அமெரிக்கத் தேர்தலின் வர்க்கப் பிரச்சினைகள்

jerry White
11 October 2012
Back to screen version

அமெரிக்கத் தேர்தல்களுக்கு இன்னும் நான்கு வாரங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜோசப் பிடேன் மற்றும் போல் ரியான் இடையிலான விவாதம் இன்றிரவு நடைபெறவிருக்கிறது. சென்ற வாரத்தில் நடந்த முதல் விவாதத்தில் ஜனாதிபதி ஒபாமாவின் திறன் சோபிக்காததன் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நம்பிக்கையில் ஜனநாயகக் கட்சி இருக்கிறது.

அந்த முதல் விவாதம் இன்னமும் எதிரொலிக்கிறது, ஒபாமா அந்த இரவு விவாதத்தில் சோபிக்காமல் போனதனால் அல்ல, மாறாக அவரது ஒட்டுமொத்த நிர்வாகத்தின் அரசியல் சாரமும் பல பத்து மில்லியன்கணக்கிலான பார்வையாளர்களின் முன் நடந்த விவாதத்தில் அவரது செயல்பாட்டில்  பொதிந்திருந்தது. பதவியேற்றது முதலாகவே வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களுக்கு சேவை செய்திருக்கும் ஒரு வலது சாரி நிர்வாகத்திற்கு ஒபாமா தலைமை கொடுத்து வந்திருக்கிறார். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி எந்த நிதிப் பிரபுத்துவத்தின் வர்க்க நலன்களுக்கு இத்தனை விசுவாசத்துடன் சேவை  செய்கிறாரோ அதே நிதி பிரபுத்துவத்தின் உருவடிவமாக இருக்கின்ற ரோம்னியை ஒபாமா எவ்வாறு கண்டித்துப் பேச முடியும்?

1930களின் பெரு மந்தநிலைக்குப் பிந்தைய மிக மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், நீண்ட கால வேலைவாய்ப்பின்மை, பசி மற்றும் வறுமையின் அளவுகள் வரலாறு காணாத அளவில் இருக்க, எந்த நிவாரணத்தையும் வழங்குவதற்கு ஒபாமா மறுத்திருக்கிறார். அதற்குப் பதிலாக மில்லியன்கணக்கான மக்கள் நம்பியிருக்கக் கூடிய வேலைத்திட்டங்களை  வெட்டுவதன் மூலமாக வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து மேலதிகமாய் டிரில்லியன் கணக்கிலான தொகையை வெட்டுவதை தேர்தலுக்குப் பின் மேற்கொள்வதற்கான ஒரு இருகட்சி உடன்பாட்டில் அவர்  கையெழுத்திட்டிருக்கிறார்.

ஒபாமாவும் அவரது அரசியல் கையாளுநர்களும் ரோம்னியை இன்னும் நேரடியாகத் தாக்குவதன் மூலமாக தமது இழப்புகளை சரிக்கட்டுவதற்குச் செய்கின்ற எந்தவொரு முயற்சியும் நேர்மையற்ற ஒரு தோரணையாக பார்க்கப்படுவது சரியாகவே இருக்கும். உண்மையான ஒபாமா அக்டோபர் 3 அன்று டென்வரில் காட்சியளித்தார்.

இப்போதைய ஜனாதிபதியின் கருத்துக்கணிப்பு வாக்குகள் சரிவதும் ரோம்னி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உண்மையான சாத்தியக் கூறு உருவாகியிருப்பதும் அமெரிக்க சமூகத்தில் ஒரு பிரிவினரிடையே, ஒபாமாவை உற்சாகத்துடன் ஆதரித்து வந்திருக்கக் கூடிய இடது-தாராளவாத  ஸ்தாபகத்தில், ஒரு பதட்ட உணர்வைக் கொண்டு வந்திருக்கிறது. வழமை போல, இந்த சமூக  அடுக்கின் தொடர்ந்த பிரதிநிதியாகத் திகழ்வது நேஷன் பத்திரிகை தான்.

நடப்பு ஜனாதிபதியை மீண்டும் தேர்ந்தெடுங்கள் என்ற அதன் தலையங்கத்தில் நேஷன் ஒபாமாவை ஆதரிப்பதற்கு ஒரு உதவாத மற்றும் மொத்தமும் ஏற்றுக் கொள்ளவியலாத ஒரு வாதத்தை எடுத்து வைக்கிறது. அது உலுக்கும் ஒப்புதல்களின் ஒரு வரிசையுடன் தொடங்குகிறது:

ஜனாதிபதி தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார் அத்துடன்மலைக்க வைக்கும் வறுமை குறித்த எந்த விவாதத்தையும் விலக்கியிருக்கிறார்.

குவாண்டோனோமோவை மூடுவது, இராணுவத் தீர்ப்பாயங்களுக்கு முடிவு கட்டுவது மற்றும் பயங்கரவாத சந்தேகத்தில் சிக்கிய நபர்களுக்கு சட்ட வழிமுறைகளை மீண்டும் கொண்டு வருவது ஆகிய விடயங்களிலான தனது வாக்குறுதியில் இருந்து அவர் தப்பித்து ஓடியிருக்கிறார்.

அவர்ஆளில்லா விமானப் போர் ஒன்றைத் தொடங்கி வைத்து அது ஆயிரக்கணக்கிலான அப்பாவி மக்களின் உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருப்பதோடு இஸ்லாமிய உலகம் முழுவதிலும் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு திரட்சிக்கு எரியூட்டியுள்ளது.”

ஒபாமாவின் கீழ் இப்போது, “மேலதிகமான அதிகாரம் ஒரு ஜனாதிபதியால் வெள்ளை மாளிகையில் குவிக்கப்பட்டிருக்கிறது, அமெரிக்க குடிமக்களையும் கூட நீதிமுறைக்கு அப்பாற்பட்ட வகையில் கொலை செய்வதற்கான உரிமையை இப்போது அவர் தன்னகத்தே கொண்டிருக்கிறார்.”

ஆனால் இவையெல்லாம் ஒபாமாவுக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணங்களில்லை!

நேஷன் எழுதுகிறது: “ஒபாமாவின் முதல் பதவிக்காலத்தில் என்ன ஏமாற்றங்கள் நமக்கிருந்தாலும் சரி நிறைய ஏமாற்றங்கள் இருக்கின்றன - ரோம்னி/ரியான் வேட்புகளை வெகுஜன மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதில் முற்போக்குவாதிகளுக்கு ஒரு ஆழமான ஆர்வம் இருக்கிறது.”  குடியரசுக்  கட்சியினர் வெற்றி பெற்றால், அதுமுற்போக்கு விழுமியங்களுக்கும் மற்றும் இயக்கங்களுக்கும் ஒரு பெரும் அடியாக இருக்கும், அத்துடன் பெண் உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர்ந்தவர்களது உரிமைகள் மற்றும் LGBT சமூகத்தின் உரிமைகள் முதல் சமூகக் காப்பீடுத் திட்டங்கள் மற்றும்  முற்போக்கான வரி அமைப்பு ஆகியவற்றைக் காப்பது ஆகியவை வரை பல்தரப்பட்ட பிரச்சினைகளிலும் நம்மை தற்காத்துக் கொள்ளப் போராடுவதற்குத் தள்ளி விடும்.”

மக்களின் ஜனநாயக அல்லது சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான மற்றும் போர் வேட்கை கொண்ட ஒரு ஜனாதிபதியை ஏன் ஒருவர் நம்ப வேண்டும், அதை நேஷன் கூறவில்லை.

முடிவில், அத்தலையங்கம் அறிவிக்கிறது: “ஒபாமா பதவியில் இருந்த நான்காண்டு காலத்தில் முற்போக்குவாதிகள் உண்மையாக முன்னேறிச் சென்றிருக்கின்றனர். அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அவரது முதல் பதவிக் காலத்தில் பெற்ற படிப்பினைகள் மற்றும் போராட்டங்களின் மீது எம்மை கட்டியெழுப்ப முடியும்.”

ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஆதாயம் பெற்ற இந்தமுற்போக்குவாதிகள் யார்? தனது வாழ்க்கை நிலைமைகளில் வரலாறு காணாத ஒரு சரிவைச் சந்தித்து நிற்கும் தொழிலாள வர்க்கமாக நிச்சயம் அது இருக்க முடியாது.

தொழிற்சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் அடையாள அரசியலில் இருந்தும் ஜனநாயகக் கட்சியுடன் பிணைக்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் இருந்தும் ஆதாயம் பெறக் கூடிய தொழில்முறை ஊழியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு சமூக சூழலைத் தான்  “முற்போக்குவாதிகள் என்ற பொத்தாம் பொதுவான ஒரு வகைப்பாடு விவரிக்கிறது. இந்த உயர், நடுத்தர அடுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் தமது பங்கு வரிசைகளின் மதிப்பும் தனது வருவாயும் உயர்ந்து  சென்றுள்ளதைக் கண்டிருக்கிறது, குடியரசுக் கட்சியினர் தேர்வானால் அதை இழந்து விடுவோம்  என்று அஞ்சுகிறது.

தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு உண்மையான அரசியல் மாற்று அபிவிருத்தி செய்யப்படுவதை  தடுப்பதற்கு தேர்தல் மாறித் தேர்தல் பயன்படுத்தப்பட்டு வருகின்றஇரண்டில் குறைந்த தீமை என்ற வாதத்தின் முட்டுச் சந்தினை நேஷன் பத்திரிகை தன்னையுமறியாமல் வெளிப்படுத்தி விடுகிறது. இந்த திவாலான முன்னோக்கு ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப்  பாதுகாப்பதென்பதற்கு எல்லாம் வெகு அப்பாற்பட்டு, இன்னும் ஆழமான அரசியல்  பிற்போக்குத்தனத்திற்கு தான் கதவைத் திறந்து விட்டிருக்கிறது, முதலாளித்துவ வேட்பாளர்கள்  அடுத்தடுத்த தேர்தல்களில் முந்தைய தேர்தலைக் காட்டிலும் மேலதிகமாய் வலது நோக்கிய  நிலைப்பாடுகளைக் கொண்டு வருகின்றனர்.

இத்தகைய அரசியல், நவம்பர் 6 அன்று நடைபெறுகின்ற தேர்தலில் யார் வென்றாலும் நடக்கப் போவதற்கு - ஏகாதிபத்தியப் போரின் அதிகரிப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான போர் ஆகியவை - தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாகத் தயாரிப்பற்ற நிலையில் விட்டு விடுகிறது.

இங்கு தான் 2012 தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சிப் பிரச்சாரத்தின் மகத்தான முக்கியத்துவம் தங்கியிருக்கிறது. நாங்கள் அரசியல் பிரச்சினைகளை வரையறுப்பதோடு வரவிருக்கும் சமூகப் போராட்டங்களுக்கு அரசியல் தலைமையையும் முன்னோக்கையும் வழங்குவதற்குப் போராடி வருகிறோம். உலகப் பொருளாதார நெருக்கடியாலும் அதற்கான விலையை தொழிலாள வர்க்கத்தை செலுத்தச் செய்ய முதலாளிகள் கொண்டிருக்கிற தீர்மானத்தினாலும் உலகமெங்கும் - தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் சீனா தொடங்கி அமெரிக்காவில் சிக்காகோ ஆசிரியர்கள் போராட்டங்கள் மற்றும் டெட்ராயிட் நகரத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள்  வரை - தொழிலாள வர்க்கம் போராட்டத்துக்குள் உந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் மற்றும் மத்திய மேற்கில்சோசலிசமும் 2012  தேர்தல்களும் என்ற தலைப்பில் தொடர்ச்சியான பிராந்திய மாநாடுகளை நடத்திக்  கொண்டிருக்கின்றன. இந்த மாநாடுகள் நமது தேர்தல் பிரச்சாரத்தின் அரசியல் அனுபவங்கள் குறித்த  ஒரு வரவுசெலவு அறிக்கையைத் தயாரிக்கும் என்பதோடு தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன  சோசலிசக் கட்சியைக் கட்டுவதற்கான வழிகாட்டலை வழங்கும். அவற்றில் பங்கேற்பதற்கும் SEP  மற்றும் IYSSE இல் இணைவதற்கு பதிவு செய்வதற்கும் தொழிலாளர்களையும், மாணவர்களையும், இளைஞர்களையும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் அத்தனை வாசகர்களையும் நாங்கள்  அழைக்கிறோம்.