WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் : மத்திய
கிழக்கு :
சிரியா
In preparation for wider war, Pentagon deploys task force in Jordan
ஒரு பரந்த போருக்குத் தயாரிப்பு செய்கையில், பென்டகன் ஜோர்டானில் தாக்குதல் படைகளை
நிலைநிறுத்துகிறது
By Bill Van Auken
11 October 2012
சிரியாவில் ஒரு நேரடி அமெரிக்கத் தலையீட்டிற்கு தயாரிப்பிற்காகவும்,
மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்காவும், பென்டகன் இரகசியமாக 150 பேர் கொண்ட
வலுவான பணிப் படைகளை ஜோர்டானில் நிலைநிறுத்தியுள்ளது.
பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா புதன் அன்று அத்தகைய
பணிப்பிரிவு நிலைநிறுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இது முதலில் நியூ
யோர்க் டைம்ஸினால் தகவல் கொடுக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நேட்டோ பாதுகாப்பு
மந்திரிகள் கூட்டம் பிரஸ்ஸல்ஸில் முடிவடைந்தபோது செய்தி ஊடகத்திடம் பேசிய பானெட்டா
:
“நாங்கள்
எங்கள் படைகளின் குழு ஒன்றை ஒரு தலைமையகத்தை நிறுவவும் அமெரிக்காவிற்கும்
ஜோர்டனுக்கும் வலுவான உறவுகளை ஏற்படுத்தவும் அங்கு வைத்துள்ளோம். இதனால் நாங்கள்
சிரியாவில் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அவற்றைக் கவனிக்க முடியும்.”
ஜோர்டனில் உள்ள அமெரிக்க படைப்பிரிவு சிரியாவிற்குள் இரசாயன,
உயிரியல் ஆயுதங்கள் பாவிக்கப்படாமல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியும்
கொடுக்கப்பட்டுள்ளது என்றார் பனேட்டா. ஜனாதிபதி பாரக் ஒபாமா அத்தகைய ஆயுதங்கள்
பயன்படுத்தப்படுவது
“ஒரு
சிவப்புக் கோடு”
ஆகிவிடும், சிரியாவில் நேரடி அமெரிக்கத் தலையீட்டை நோக்கி அமெரிக்க
கொள்கையை மாற்றிவிடும் என்றார்.
ஒரு தசாப்தத்திற்கு முன் ஈராக்கைப் போன்று, சிரியாவில்
“பேரழிவுகரமான
ஆயுதங்களில்”
இருந்து அச்சுறுத்தல்கள் எனப்படும் குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க
ஆக்கிரமிப்புப் போருக்கு போலிக்காரணமாகத் தயாரிக்கப்படுகின்றன.
“ஜோர்டனிய
படைகளால் சிரிய எல்லையில் செயல்படுத்தப்படக்கூடிய சிரியாவிற்கும் ஜோர்டனுக்கும்
இடையே ஒரு இடைத்தடை பகுதியை நிறுவும் கருத்து மற்றும் சிரிய எல்லைக்கு அருகே
அமெரிக்க இராணுவ புறச்சாவடி ஒன்றை நிறுவுவதுடன் இணைப்பது ஆகியவை விவாதிக்கப்பட்டன.
அத்தகைய பகுதியைத் தோற்றுவிப்பது பெரும் அமெரிக்கத் தலையீட்டின்
ஒருங்கிணைப்பினால்தான் இயலும் என்று டைம்ஸ் கட்டுரை கூறியுள்ளது.
டைம்ஸ்
கொடுத்துள்ள தகவல்படி,
“அம்மானுக்கு
அருகே ஒரு புறச்சாவடி என்பது அமெரிக்கக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால் பரந்த பங்கை
வகிக்கும்”
என்றும் அத்தகைய தலையீட்டை பற்றி வாஷிங்டன் தீர்மானிக்கும் என்றும்
தெரிகிறது.
இதற்கிடையில் ஜோர்டனின் இராணுவம் அமெரிக்கர்களின் பிரசன்னம் இல்லை
என்று அறவே மறுத்துள்ளது. அரசாங்கம் நடத்தும் செய்தி நிறுவனமான பெட்ரா நாட்டின்
ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்
“அமெரிக்கா
ஜோர்டனுக்கு சிரிய அகதிகள் பிரச்சினையை கையாளவும், இரசாயன ஆயுதங்கள் தொடர்பான
ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கும் உதவுகிறது என்னும் செய்தித் தகவல்கள் உண்மையல்ல.
ஜோர்டனிய படைகள் எத்தகைய அச்சுறுத்தல்களையும் முகங்கொடுக்கும் திறன் உடையவை”
எனக்கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
இச்செய்தித் தொடர்பாளர் வெளிநாட்டு இராணுவ பிரசன்னம்
“ஒவ்வொரு
ஆண்டும் வழமையாக நடத்தப்படும் இராணுவப் பயிற்சிக்காக”
எனவும்
“இதற்கும்
பிராந்தியப் பிரச்சினைகள், நிகழ்வுகளின் வளர்ச்சி ஆகியவற்றிற்கும் தொடர்பு ஏதும்
இல்லை”
என்றும் கூறினார்.
முன்பு இரகசியமாக ஜோர்டனில் அமெரிக்க பிரசன்னம் இருந்தது பற்றிய
கருத்துக்கள் கடந்த மே மாதத்தில் தொடங்கின. அப்பொழுது பென்டகன் சிறப்புப் படைப்
பிரிவுகள் உட்பட அமெரிக்கத் துருப்புக்களை நாட்டிற்குள் அனுப்பி
Operation Eager Lion
என்று
அழைக்கப்பட்ட கூட்டுப் பயிற்சிகளுக்கு அனுப்பிவைத்தது. அதன்பின் கிட்டத்தட்ட 100
இராணுவத் துருப்பினர் பின்தங்கி அதன் பின் சில டஜன்கணக்கானவர்கள் அமெரிக்காவில்
இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். டைம்ஸ் கருத்துப்படி இந்தபணிப்பிரிவு ஒரு
“மூத்த
அமெரிக்க அதிகாரியின்”
கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது.
பணிப் பிரிவின் தலைமையிடம் ஜோர்டனிய இராணுவத் தளத்தில் உள்ளது. இது
ஜோர்டனின் தலைநகரான அம்மானிற்கு வடக்கேயுள்ள கைவிடப்பட்ட கற்சுரங்கத்தில்
கட்டப்பட்டுள்ளது. சிரிய எல்லையில் இருந்து 35 மைலுக்குள் இருக்கும் இது சிரிய
உள்நாட்டுப்போரில் அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டின் மிக அருகே உள்ள இடம் ஆகும்.
இப்போரில் வாஷிங்டன் இஸ்லாமிய மற்றும் குறுங்குழுவாத கிளர்ச்சியாளர்களின் கூட்டு
ஒன்றிற்கு ஆதரவு கொடுத்து, அது பினாமிப் போரை ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை
அகற்றுவதற்கும் அவருக்குப் பதிலாக இன்னும் வளைந்து கொடுக்கும் கைப்பாவை அரசை
நிறுவுவதற்கும் நடத்துகிறது.
ஜோர்டானில் ஏற்பட்டுள்ள இராணுவ நிலைநிறுத்தல்
CIA
இதே போல் கட்டுப்பாட்டுத் தளத்தை அமெரிக்க
Incirlik Air Force Base
என்று துருக்கியில் நிறுவியதற்கு இணையானது ஆகும். அங்கு அப்பிரிவு சிரிய
கிளர்ச்சியாளர்கள் எனப்படுவோருக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் என்று துருக்கி,
சவுதி அரேபியா, கட்டார் இன்னும் பிற பாரசீக வளைகுடா சுன்னி முடியரசுகள் வழங்குவதை
ஒருங்கிணைக்கிறது.
நியூ யோர் டைம்ஸின்
கட்டுரை ஜோர்டனில் உள்ள அமெரிக்க இராணுவப் பிரிவின் முக்கிய அக்கறை அண்டை நாடான
சிரியாவில் இருந்து வெள்ளமென வந்துள்ள 18,000 அகதிகளைப் பற்றியது எனக் கூறுகின்றது.
“அமெரிக்கப்
பணிக்குழுவின் உறுப்பினர்கள் அவர்கள் நேரத்தில் பெருப்பகுதியை ஜோர்டானிய
இராணுவத்துடன் எப்படி டன் கணக்கான உணவு, குடிநீர், எல்லைகளில் கழிவறைகள் ஆகியவை
நிறுவப்பட வேண்டும், போன்ற தேவைகள் குறித்தும் மற்றும் ஜோர்டனின் இராணுவம் எப்படி
அகதிகளைக் கையாளவது என்ற பயிற்சி போன்றவற்றில் ஆராய்வதில் செலவழிக்கின்றனர்.”
என்று டைம்ஸ் கூறியுள்ளது.
அமெரிக்க இராணுவம் எப்படி பிரத்தியேகமாக அகதிகள் உதவிக்கு தகுந்தது
என்பதற்கான விளக்கத்தை கட்டுரை கொடுக்கவில்லை. இந்த இராணுவமே ஈராக், ஆப்கானிய
போர்களில் மில்லியன் கணக்கான அகதிகளை தோற்றுவித்துள்ளது.
ஜோர்டன் சிரியாவில் இருந்து வரும் அகதிகளை நடத்தும் முறை மிகவும்
மிருகத்தனமானது.
இதனால் கலகங்கள் விளைந்துள்ளன. ஒரு பாலைவனத்தின் நடுவே நிறுவப்பட்டுள்ள ஜாடரி அகதி
முகாமில் எதிர்ப்புக்கள் பலமான ஆயுதம்தரித்த பொலிசாரால் அடக்கப்பட்டுள்ளன.
செய்தித்தாள்களிடம் பேசிய
“செயற்பாடு
குறித்து நன்கு அறிந்துள்ள அமெரிக்க அதிகாரிகள்”,
இப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவவாதம் புதிதாக வெடிப்பதற்கான தயாரிப்புக்களுக்கு
ஒரு மனிதாபிமான மறைப்பு வழங்க முற்பட்டுள்ளனர்.
ஜோர்டானுள் அகதிகள் வருவதைப் பற்றி வாஷிங்டனும் பென்டகனும் கவலை
கொண்டால், இது ஒருபுறம் அவை தலையீட்டிற்குப் போலிக்காரணமாகப் பயன்படுத்தலாம்,
மறுபுறம் அதில் ஜோர்டனின் முடியாட்சிக்கு இருக்கும் அரசியல் நெருக்கடியை
தீவிரப்படுத்தும் சாத்தியப்பாட்டை கொண்டிருக்கலாம். இதுவோ இப்பிராந்தியத்தில்
அமெரிக்காவின் மிக அடிமைத்தன தன்மையைக் காட்டும் முக்கிய வாடிக்கை நாடுகளில்
ஒன்றாகும்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், கட்சி சார்பற்ற
அமெரிக்கக் காங்கிரசின் ஆய்வுப் பிரிவான
CRS
எனப்படும் காங்கிரஸின் ஆய்வுப் பிரிவு ஒப்புக் கொண்டதாவது:
“தொடர்ச்சியான
முடியாட்சியால் மன்னர் இரண்டாம் அப்துல்லா சமீபத்திய ஆண்டுகளில் பெருகிவிட்ட
பகிரங்கமானதும் தைரியமானதுமான எதிர்ப்பை முகங்கொடுக்கிறார். நாட்டிலோ அதிக
வேலையின்மை, அதிக குறைந்தப்பட்ச வேலைநிலை, பெரும் நிதியப் பற்றாக்குறை ஆகியவை
உள்ளன. தலைநகரான அம்மானில் மட்டும் இல்லாமல் பல கிராமப்புற, பழங்குடி தெற்குப்
பகுதிகளிலும் ஜோர்டனில் சிறு எதிர்ப்புக்கள் வாடிக்கையாக நடக்கின்றன. இவை ஒரு
காலத்தில் அரசாங்கத்திற்கு பெரும் ஆதரவு கொடுக்கும் பகுதிகள் எனக் கருதப்பட்டன.
பொருளாதார துன்பங்கள் பாரியளவினதாக இருப்பதும், அதிக அளவு ஊழல் மற்றும் அரசியல்
சுதந்திரத்திற்கு தொடரும் கட்டுப்பாடுகள் ஆகியவையும் அமைதியின்மையை
ஏற்படுத்தியுள்ளன.”
கடந்த வெள்ளியன்று அம்மானில் பல ஆயிரக்கணக்கானவர்கள் பங்கு பெற்ற
ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. எதிர்ப்பாளர்கள்,
“மக்கள்
இந்த ஆட்சி அகல வேண்டும் என விரும்புகின்றனர்”
எனக் கோஷமிட்டு,
“அனைத்துத்
தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கங்களும் வீழ்க”,
“ஒரு
மனிதாபிமானமற்ற வாழ்வைவிட மரணத்தை விரும்புகிறோம்”
என்ற கோஷ அட்டைகளை எதிர்ப்பாளர்கள் ஏந்தியிருந்தனர்.
ஜோர்டனிய ஆட்சி எழுச்சி பெறும் உள்நாட்டு எதிர்ப்பை
முகங்கொடுக்கையில், அமெரிக்கா அந்நாடு நம்பியிருக்கும் உதவியை அதிகரித்துள்ளது.
CRS
அறிக்கையின்படி தற்போதைய நிதியாண்டில் வாஷிங்டன் ஜோர்டனுக்கு $360 மில்லியனைப்
பொருளாதார உதவி நிதிகளாகவும், $300 மில்லியனுக்கும் மேல் இராணுவ உதவியாகவும்
கொடுத்துள்ளது 1951ல் இருந்து அமெரிக்கா கிட்டத்தட்ட $13.1 பில்லியனை இந்நாட்டை
ஆளும் ஹஷேமைட் முடியாட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்த செலவழித்துள்ளது.
ஜோர்டனில் ஒரு இரகசிய இராணுவத் தளம் பற்றிய வெளிப்பாடுகள் மத்திய
கிழக்கில் ஒரு புதிய, இன்னும் பேரழிவு தரும் போரை நடத்த அமெரிக்கத் தயாரிப்புக்கள்
எவ்வளவு முன்னேற்ற நிலையில் உள்ளன என்பதற்கான மற்றொரு அடையாளம் ஆகும். |