சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

French government accused of ordering Libyan leader Gaddafi’s assassination

லிபியத் தலைவர் கடாபி படுகொலைக்கு உத்தரவிட்டதாக பிரெஞ்சு அரசாங்கம் குற்றம் சாட்டப்படுகிறது

By Antoine Lerougetel
10 October 2012
use this version to print | Send feedback

லிபியத் தேசிய மாற்றுக்காலக்குழு (Libyan National Transitional Council NCT) உடைய முன்னாள் தலைவர்கள், கடந்த ஆண்டு லிபியாவில் கேர்னல் முயம்மர் கடாபி ஆட்சிக்கு எதிராக நேட்டோவின் பினாமியாகப் போர் புரிந்தவர்கள் அப்பொழுது பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்த நிக்கோலோ சார்க்கோசி, லிபியத் தலைவர் அக்டோபர் 20, 2011ல் படுகொலைக்கு உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரான்சின் செய்தித்தளம் Mediapart ல் அக்டோபர் 2 அன்று கொடுத்த பேட்டி ஒன்றில், NTC யின் வெளியுறவு உளவுத்துறைப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் ரமி எல் ஒபெய்டி (Rami El Obeidi) பிரெஞ்சு வெளிநாட்டு முகவர்கள் நேரடியாக கடாபியை படுகொலை செய்தனர் என்று உறுதியாகக் கூறினார். இதற்குக் காரணம் லிபியாமீது நேட்டோ ஆதரவுடன் பிரான்ஸ் போர் தொடக்குவதற்கு முன் கடாபி சார்க்கோசிக்கு 2007ம் ஆண்டு அவருடைய ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த இரகசிய நன்கொடைகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என்று அவர் விடுத்த அச்சுறுத்தல்கள்தான் காரணம் என்றார்.

ஒபெய்டி மேலும் கூறினார்: சார்க்கோசிக்கு 2006-07 ல் நன்கொடை கொடுத்தது பற்றிய வெளிப்பாட்டின் அச்சுறுத்தல் எலிசேயில் கடாபியை விரைவில் கொல்ல வேண்டும் என்று நினைத்தவர்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இத்தகவல் வெளிவந்தவுடன், அக்டோபர் 1ம் திகதி Le Monde உடைய செய்தியாளர் Barbouch Rachid ஒரு வலைத் தள குறிப்பில் பிரான்சின் வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித்தொடர்பாளர், புதிய PS சோசலிஸ்ட் அரசாங்கத்தைச் சேர்ந்தவர் ஒபெய்டியின் குற்றச்சாட்டுக்களையும் அது தொடர்பான தகவல்களையும் உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை என்றார். ஆயினும்கூட பிரெஞ்சு அதிகாரிகளும் செய்தி ஊடகமும் நிகழ்வைப் பெரிதும் மறைத்துவிட்டன. அக்டோபர் 2ம் தேதி Le Parisien குறிப்பிட்டது: இந்த வார இறுதியில் பிரெஞ்சு அதிகாரிகள் இவ்வெளிப்பாடுகள் குறித்து கருத்துக்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.

செப்டம்பர் 29ம் திகதி இத்தாலிய நாளேடு Corriere della Sera ஒபெய்டியின் கருத்துக்களை உறுதி செய்து எழுதியது: மாற்றுக்கால அரசாங்கத்தின் முன்னாள் பிரதமர் மஹ்முத் ஜிப்ரில்...மீண்டும் ஒரு வெளிநாட்டு இரகசியப் பிரிவு உத்தரவிட்ட சதித்திட்டம் பற்றிய நிகழ்வைக் கூறியுள்ளார். புரட்சிப் பிரிவில் ஊடுருவியிருந்த அயல்நாட்டு முகவர்தான் கடாபியைக் கொன்றது என அவர் எகிப்திய தொலைக்காட்சியிடம் செப்டம்பர் 27 அன்று குறிப்பிட்டார்.

இந்த ஏடு திரிப்போலியில் இருந்த மேலை தூதர்கள் ஒரு வெளிநாட்டு முகவர் தொடர்பு இருந்தது என்றால், அது அநேகமாக பிரான்ஸ் நாட்டவர்தான் உறுதியாக என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

அக்டோபர் 1ம் திகதி பிரித்தானிய டெய்லி மெயில்  ஒருவெளிநாட்டு முகவர் குறித்து எழுதியது. அவர் கடந்த ஆண்டு ஒரு வன்முறைக் கும்பலில் ஊடுருவி, கைப்பற்றப்பட்ட லிபிய சர்வாதிகாரியை தலையில் சுட்டுக் கொன்றார்.

அது மேலும் கூறியது: இந்நிகழ்வு குறித்த மற்றும் ஒரு தீய திருப்பமாக, ஒரு 22 வயது நபர், கடாபியைத் தாக்கிய குழுவில் இருந்தவர், பின்னர் துப்பாக்கியை ஏந்தி அடிக்கடிமிரட்டி அவரைக் கொன்றதாகக் கூறப்படுபவர் கடந்த திங்களன்று பாரிஸில் இறந்துவிட்டார். ஊடகத் தகவல்கள் அந்த நபரை ஒம்ரன் பென் சாபன், 22 வயது முன்னாள் எழுச்சிப் போராளி, அக்டோபர் 1ல் மாலையில் இறந்தவர் என அடையாளம் கூறுகின்றன. கடாபி கொலை பற்றிய பல புகைப்படங்கள், வீடியோக்களில் அவர் இருந்தார்.

கிடைக்கும் தகவல்கள் அவர் பிரெஞ்சு அரசுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார், அவர்தான் ஒபெய்டி குறிப்பிட்ட முகவராக இருந்திருக்கலாம் எனக் காட்டுகின்றது. பிரெஞ்சு அதிகாரிகள் பென் சாபனை, கடாபி ஆதரவாளர்கள் அவரைக் கைப்பற்றிச் சித்திரவதை செய்தபின், தப்பிக்க முற்பட்டபோது இருமுறை சுட்டனர். அதன் பின் அவர் ஒரு பிரெஞ்சு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்; செப்டம்பர் மாதம் அங்கு அவர் இறந்தார்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசத்தான் கடாபியின் துணைக்கோள் தொலைப்பேசி எண்ணை பிரெஞ்சு இரகசியப் பிரிவிற்கும் இராணுவத்திற்கும் அக்டோபர் முதல் வாரத்தில் கொடுத்தார் என்று ஒபெய்டி கூறினார். அதன்பின், பிரெஞ்சு Direction générale de la sécurité extérieure [பிரெஞ்சு வெளியுறவு உளவுத்துறை வெளிப்பாதுகாப்பு தலைமை இயக்ககம்]  படுகொலையை நிறைவேற்றியது.

பிரித்தானிய டெய்லி டெலகிராப்  கருத்துப்படி, ஒபெய்டி மேலும் கூறியதாவது: இந்தத் தகவல் பறிமாற்றத்திற்காக அசாத் பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து ஒரு கருணைக் காலத்தையும் ஆட்சிமீது குறைந்த அரசியல் அழுத்தத்தையும் பெற்றார்; நிகழ்வுகள் இப்படித்தான் நடைபெற்றன.

கடாபியின் மரணத்தில் பிரான்சின் பங்கு பற்றிய தன்னுடைய உளவுத்துறையின் அறிக்கை தணிக்கை செய்யப்பட்டது என்றார் ஒபெய்டி; இதற்குக் காரணம் “NTC  உடைய கொள்கையை கட்டார் எமிருடன் இணைந்து திரு சார்க்கோசி கட்டுப்பாட்டில் கொண்டிருந்ததுதான்.

கடாபி கொலை பற்றி பிரெஞ்சு உறவுத்துறையின் ஈடுபாடு வெளிப்பட்டுக் குற்றச்சாட்டுக்கள் வெளிவருவது இது முதல் தடவையல்ல. அக்டோபர் 26, 2011ல் கடாபி படுகொலை செய்யப்பட்ட 5 நாட்களுக்குப் பின்னர், அங்கத வாராந்திர ஏடான Le Canard Enchaînéஅக்டோபர் 19, புதன் அன்று, பிற்பகல், பென்டகன் கேர்னல் ஒருவர் பிரான்சில் உள்ள உளவுத்துறையின் அவருடைய தொடர்பாளர் ஒருவருக்குத் தொலைபேசியில் உரையாடினார்... அமெரிக்கர், லிபியத் தலைவர், அமெரிக்க பிரடேட்டர் ட்ரோன்களால் பின்பற்றப்படுபவர் சிர்ட்டேக்கு அருகில் பொறியில் அகப்பட்டுள்ளார் என்றும் இப்பொழுது காணமற்போகக்கூடும் என்றும் அறிவித்தார்.

Le Canard Enchaîné குறிப்பிட்டுள்ள நிகழ்வுத் தொகுப்பின்படி அமெரிக்க அதிகாரி கடாபி ஒருவேளை தப்பியோடினால், அவர் உண்மையில் ஒரு அணுகுண்டாக மாறக்கூடும் என்று சேர்த்துக் கொண்டார்.

வெள்ளை மாளிகை, கடாபிக்கு சர்வதேச அரங்கம் கொடுப்பதை நாம் தவிர்க்க வேண்டும்; அத்தகைய அரங்கு அவருக்கு ஒரு விசாரணையைக் கூடக் கொடுத்துவிடும்என்று கூறியதாக Canard எழுதியுள்ளது. அது மேலும் கூறியதாவது: எலிசேயில் அவர்களுக்கு அக்டோபர் நடுப்பகுதியில் இருந்தே கடாபியும் அவருடைய மகன் ஒருவரும் சிர்ட்டேயில் ஒரு பொறியில் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரியும்.... தன்னுடைய சிப்பு இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் Benoît Puga வை சார்க்கோசி முன்னாள் சர்வாதிகாரியை வேட்டையாடுவதை மேற்பார்வையிடுமாறு பணித்தார்....DGSE, DRM (இராணுவ உளவுத்துறை) இரண்டிலும் லிபியத் தலைவர் உயிரை அழிப்பதைப் பற்றிப் பேச ஒன்றும் வெட்கப்பட்டுவிடவில்லை.

அந்த நேரத்தில் சார்க்கோசி அரசாங்கம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது; பிரான்சின் அரசியல் உயரடுக்கும் செய்தி ஊடகமும் மௌனம் சாதித்தது. ஹாலண்ட்டின் அரசாங்கமும் இந்த மூடிமறைத்தலை தொடர்கிறது.

ஆயினும்கூட, இந்த வெளிப்பாடுகள் சட்டத்திற்கு புறம்பாக கடாபி கொலை செய்யப்பட்டதில் உள்ள குற்றத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகன்றன; அவர் அனைத்து முக்கிய நேட்டோ சக்திகளின் அரச தலைவர்களுடனும் லிபியப் போருக்கு முன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார்; இன்னும் பரந்த அளவில் போர்க்காலத்தில் கூட எனலாம். ஜனநாயகத்தின் பெயரில் இழிந்த முறையில் நடத்தப்பட்ட அப்போர் நேட்டோ சிறப்புப் படைகள் மற்றும் வான் சக்தியால் நடந்தது; இதுதான் திரிப்போலியையும் சிர்ட்டேயையும் பெரும் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தி, வலதுசாரிப் போராளிகள் கூட்டம் ஒன்றை அதிகாரத்தில் இருத்தி, கடாபி படுகொலையில் உச்சக்கட்டத்தையும் கண்டது.

செய்தி ஊடகத் தகவல்கள் மற்றும் முதலாளித்துவ, முன்னாள் இடதுதீவிரவாதிகளின் கருத்துக்களும் குறைந்த அளவில் உள்ளன. இச்சக்திகளே போருக்கு ஆதரவு கொடுத்த வகையில் உட்குறிப்பான அரசியல் தொடர்பைக் கொண்டவை. PS சார்க்கோசியின் நவகாலனித்துவ வகைப் போர் லிபியாவில் 2011ல் நடப்பதற்கு இசைவு கொடுத்தது; அதேபோல்தான் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, Jean-Luc Mélenchon உடைய இடது முன்னணி மற்றும் பசுமைக் கட்சியும்  கொடுத்தன.

சார்க்கோசியின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி Gérard Longuet தற்பொழுது ஒரு பாதுகாப்பான நிலைப்பாட்டை Le Parisien  ல் கொடுத்துள்ளார். கடாபி ஒரு பிரெஞ்சு ஒற்றரால் கொல்லப்பட்டாரா? இது முற்றிலும் நம்பகத்தன்மை உடையது அல்ல. முற்றிலும் நம்ப இயலாத கருத்து ஆகும். அப்படி ஒரு பிரச்சினை எழுந்ததே இல்லை.

உண்மையில் இக்குற்றச் சாட்டுக்கள் முற்றிலும் நம்பகத்தன்மை உடையவை; அதிலும் குறிப்பாக பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்து ஆழ்ந்த மௌனம் இது பற்றி இருக்கும்போது. பிரெஞ்சு சிறப்புப் படைகள் பரந்த அளவில் நிலைப்பாடு கொண்டிருந்தன, போரின்போது லிபியாவிற்குள் தொடர்புகளைக் கொண்டிருந்தன என்பது பரந்த அளவில் தெரிந்தது என்பது மட்டும் இல்லாமல், கொலையையும் அவர்கள் செய்திருக்கக்கூடும் என்று அறியப்பட்டது; கடாபிக்கும் மேற்கு வங்கிகளில் நிறைய நிதி இருப்புக்கள் இருந்தன. போரின் தொடக்கத்தில் இந்த வங்கிகள் கடாபி அவற்றில் முதலீடு செய்திருந்த $100 முதல் $160 பில்லியனை முடக்கிவிட்டன.

லிபிய அதிகாரிகள் அவருடைய பணத்தில் ஒரு பகுதியை பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களுக்கு நன்கொடை அளிப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தன. பிரெஞ்சு கன்சர்வேடிவ், முதலாளித்துவ இடதுகட்சிகள் ஆபிரிக்க சர்வாதிகாரிகள் முன்னாள் பிரெஞ்சுக் காலனிகளின் ஆட்சியாளர்கள், காபோன் போன்றவர்கள்--இடமிருந்து நன்கொடைகள் பெற்றன என்பது பற்றிப் பல வெளிப்பாடுகள் வந்துள்ளன; இது பிரெஞ்சாபிரிக்க வகை நவகாலனித்துவ நிலைப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

கட்டுரையாளர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்

Gabonese President Omar Bongo (1935-2009)