சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Mass layoffs mount under Socialist Party government in France

பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கீழ் பரந்த பணிநீக்கங்கள் அதிகரிக்கின்றன

By Pierre Mabut
5 October 2012
use this version to print | Send feedback

ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் கீழ் ஏராளமான வேலைத் தகர்ப்புக்கள் விரைவில் நடந்து கொண்டிருக்கின்றன.

எஃகுத் தயாரிப்பு நிறுவனம் ArcelorMittal அக்டோபர் 1ம்திகதி கிழக்கு பிரான்சில் Moselle  பகுதியில் உள்ள Florange ல் அதன் இரு வெடிப்பு உலைகள் மூடப்பட உள்ளன என்பதை உறுதிபடுத்தி அறிவித்தது. இதில் 2,500 தொழிலாளர் தொகுப்பில் 629 பேருக்கு வேலைகள் போய்விடும். Florange ல் உள்ள உலைகள் 14 மாதங்களாக ஸ்தம்பித்த நிலையில் உள்ளன; வெவ்வேறு அரசாங்கங்களும் ஆர்ஸ்லர் மிட்டல் இப்பிராந்தியத்தில் தொடரும் என்று தொழிலாளர்களை நம்ப வைத்திருந்தன. நிறுவனம் அதன் வெடிப்பு உலைகளை பெல்ஜியத்தில் Liège இலும் மூட இருக்கிறது; அங்கு இதையொட்டி 795 வேலையிழப்புக்கள் ஏற்படும்.

இந்நிறுவனம் பிரான்சில் Fos-sur-Mer என்று மார்சேயிக்கு அருகிலும், டன்கிர்க்கிலுமாக இரண்டு ஆலைகளை இன்னும் கொண்டுள்ளது.

PS  உடைய தொழில்துறை மீட்பு மந்திரி Arnaud Montebourg பெருவணிகத்திற்கு ஆலை தேசியமயமாக்கப்படல் என்பது ஒரு விருப்பத் தேர்வு இல்லை என்று உறுதிபடுத்தினார். ஒவ்வொரு முறையும் நாங்கள் தேசியமயமாக்கியபோது, அரசு நல்ல நிர்வாகியாக விளங்கவில்லை என்று அவர் அறிவித்தார். இது முதலாளித்துவ PS அரசாங்கம் 1980களில் எஃகுத் தொழிலை தேசிய மயமாக்கியதை குறிப்பிடுகிறது; அப்பொழுது PS பல்லாயிரக்கணக்கான பணிநீக்கங்களை செய்து அப்பிராந்தியத்தையே பேரழிவிற்கு உட்படுத்தியது.

இன்று வேலையின்மை விகிதம் Florange பகுதியில் 15% என உள்ளதுஇது தேசிய எண்ணிக்கையான 10% விட அதிகமாகும் முந்தைய PS அரசாங்கத்தின் மரபியம் இப்பிராந்தியத்தில் பாசிச தேசிய முன்னணியின் செல்வாக்கு ஏற்றம் அடைவதற்கு வழிவகுத்துள்ளது.

மாறாக Montebourg, தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மி மிட்டலிடம் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஆலை மூடப்படாது என்னும் உறுதிமொழியைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது; இந்த நேரத்தில் அரசாங்கம் வெடிப்பு உலைகளை வாங்குபவர் ஒருவரைக் காண முயலும். ஆனால் ரோலிங் ஆலைகள் ஆர்ஸ்லர்மிட்டலின் பொறுப்பிலேயே இருக்கும். ஆனால் தற்போதைய மந்த நிலையில் இவ்வாறு எடுத்துக் கொள்ளுவது இயலாது எனக் கருதப்படுகிறது; ஏனெனில் பிரான்சில் 2008 நெருக்கடிக்குப்பின் எஃகுக்குத் தேவை 25% குறைந்துவிட்டது.

தொழில்துறை மீட்பு என்று PS அரசாங்கம் கூறுவது அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் Montebourg அளிக்க இருக்கும் புதிய சட்டத்தின் அடிப்படையில் இருக்கும்; இது உற்பத்திப் பிரிவுகளை மூட விரும்பும் நிறுவனங்கள் வாங்கும் நிறுவனங்களின் நிலைப்பாட்டை ஏற்க வேண்டும் என வலியுறுத்தும். ஆனால் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வேலைகளை PS தொடர்ந்து தாக்குவதற்கு அரசியல் மறைப்பாகத்தான் இருக்கும். இடர் உற்றிருக்கும் தொழில்நிறுவனங்களை புதிதாக வாங்குபவர்கள் ஊதியங்களையும் நலன்களையும் குறைக்கத்தான் முயல்வர்; இது PS ன் தொழில்துறை போட்டித்தன்மை அதிகரிக்கப்பட வேண்டும், குறைவூதிய நாடுகளில் இருப்பது போல் பெருமளவு தொழிலாளர்கள் இங்கும் சுரண்டப்பட வேண்டும் என்ற கருத்தை ஒட்டித்தான் இருக்கும்.

PS அரசாங்கம் அதற்கு முன்பு இருந்த ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி அரசாங்கத்தின் தொழில் துறை கொள்கைகளின் அடிப்படைகளைத்தான் தொடர்கிறது. அவர் Arcelor Mittal உடைய Gandrange எஃகு ஆலை திறக்கப்பட்டிருக்கும் என்று உறுதியளித்திருந்தார்; ஆனால் Moselle யில் 1,000 பணிநீக்கங்களுடன்தான் அது மூடப்பட்டது.

ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் ஏற்கனவே PSA Peugeot-Citroën கார்த் தயாரிப்பு ஆலை, பாரிசுக்கு அருகே உள்ள ஒல்நேயில் மூடப்படுவதற்கும் தேசிய அளவில் 8,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கும் பச்சை விளக்கை க்காட்டிவிட்டார். இது ஜெனரல் மோட்டார்ஸையும் அழைப்பு விடுவது போல் ஆகும்; அது ஊதியங்களையும் வேலைகளையும் அமெரிக்காவில் ஐக்கிய கார்த்தொழிலாளர் சங்கத்தின் ஆதரவுடன் மிகப் பெரிய அளவில் குறைத்துவிட்டது.

பிரான்சின் சொந்த கார்த்தயாரிப்புக்களின் விற்பனை செப்டம்பரில் 18% சரிந்தது. ஆண்டிற்குக் கணிக்கப்பட்டுள்ள சரிவு 12% என உள்ளது. PSA உடைய விற்பனை 5% குறைந்தது, Renault ன் விற்பனை 33.4% குறைந்தது; இரண்டு கார்த்தயாரிப்பாளர்கள் தற்பொழுது பிரெஞ்சுச் சந்தையில் 53.3% உரிமையைத்தான் கொண்டுள்ளன.

செப்டம்பர் 27ம் திகதி, International Automobile Show பாரிசில் தொடங்கிய தினத்தில், Renault ன் தலைவர் Carlos Ghosn தொழிலாளர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று கோரினார். ரெனோல்ட் தப்பிப் பிழைக்க வேண்டும் என்றால் பிரான்சின் போட்டித்தன்மையில் முன்னேற்றம் என்பது ஒரு பிரச்சினையாகும். என்றார் அவர். ரெனோல்ட்டின் Sevelnord ஆலை என்று பிரான்சின் வடக்கே இருப்பது ஊதியத் தேக்கத்தையும், மோசமான பணிநிலைமைகளையும் ஏற்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

PSA உடைய தலைமை நிர்வாக அதிகாரி Varin இடம் இருந்து Les Echo  என்னும் வணிகச் செய்தித்தாளில் மற்றொரு தீவிர எச்சரிக்கை வந்துள்ளது; அவர் ஒல்நே ஆலை மூடப்பட்டபின், மற்ற கார்த் தயாரிப்பாளர்களும் ஐரோப்பாவில் ஆலைகளை மூடவேண்டி இருக்கும் என்றார்.

பியட்டின் தலைமை நிர்வாக அதிகாரி Sergio Marchionne ஐரோப்பிய கார்த்தயாரிப்புத் திறன் குறைக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Automobile Show திறப்பதற்கு முன் Montebourg தென் கொரிய கார்த்தயாரிப்பு நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் கியாவிற்கு எதிரான தேசிய வாத வசைமாரிகளை அறிவித்து, அவை சமூக அளவில் கணக்கற்று வாகனங்களை இங்கே கொட்டுகின்றன என்று குற்றம் சாட்டினார். பிரெஞ்சு அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் கொரிய கார்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஊடுருவுதலை நிறுத்த விரும்புகிறது; ஆனால் அந்நிறுவனங்களின் உற்பத்தி பெரும்பாலும் கிழக்கு ஐரோப்பாவில்தான் நடைபெறுகிறது; அதே போன்ற பணிநிலைமைகள் பிரான்சிலும் ஏற்கப்பட வேண்டும் என்று Montebourg விரும்புகிறார்.

கடந்த திங்களன்று ஆங்கிலக்கால்வாய் கடப்புக்களைச் செய்யும் மிகப் பெரிய நிறுவனமான Brittany Ferries பத்து நாட்கள் பணி மூடலை நிறுத்தியது; இதில் 1,300 தொழிலாளர்கள் தொடர்பு கொண்டிருந்தனர். CGT என்னும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பும் CFDT என்னும் பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்புச் சங்கமும் குறைந்த செலவு நடவடிக்கைகளை ஏற்பத்தைக் கட்டாயப்படுத்தும் வகையில் வாக்கெடுப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

நிறுவனத்தின் எட்டு படகுகளும் துறைமுகத்தில் பணி இல்லாத காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் திட்டமான தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதற்கு எதிரான ஒரு நாள் வேலைநிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தன; நிறுவனம் அதற்கு விடையிறுக்கும் வகையில் வேலைகளை நிறுத்தியது. தொலைபேசி வாக்களிப்பில் 900 தொழிலாளர்கள்தான் பங்குபெற்றாலும், 56.68 சதவிகிதத்தினர் மீண்டும் பணிக்குத் திரும்புதல் என்னும் கருத்திற்கு ஆதரவளித்தனர். Le Monde நிர்வாகம் படகுப் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதை தொழிற்சங்கங்கள் போட்டித்தன்மைக்கு திரும்புவதற்கான திட்டத்தில் கையெழுத்திடுவதுடன் பிணைத்துள்ளது என்று கூறியுள்ளது.

போக்குவரத்து மற்றும் கடற்பிரிவுப் பொருளாதாரத் துறையில் இளநிலை மந்திரி Frédéric Cuvillier “இந்த முயற்சியை பாராட்டி நபர்களுடன் ஆலோசனை நடத்துவதின் விளைவுகளை இது ஏற்கிறது, அதையொட்டி பணிக்கு சீக்கிரம் திரும்பும் நிலைமைகள் உருவாக்கப்படும் என்றார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ இடது சக்திகளான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி NPA போன்றவற்றின் ஒத்துழைப்பு முதலாளிகளின் இந்த செலவுக் குறைப்புத் திட்டங்களுக்கு முக்கியமானதாகும். தேர்தலின்போது ஹாலண்டுக்கு ஆதரவு கொடுத்த நிலையில், அவர்கள் இப்பொழுது வெட்டுக்களுக்கு எதிராக பரந்த தொழில்துறை போராட்டம் நடத்த தொழிலாளர்களை அணிதிரட்டும் முயற்சியை எதிர்க்கின்றனர்; PS அரசாங்கத்திற்கு சிறு எதிர்ப்புக்கள் அல்லது சட்டபூர்வ நடவடிக்கை மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்னும் மூலோபாயத்திற்கு வாதிடுகின்றன. இந்த மூலோபாயம் பயனற்றது, அரசியலளவில் திவாலானது; இது தொழிற்சங்கங்களும் NPA யும் ஹாலண்டிற்குக் கொடுத்த ஆதரவைத்தான் பிரதிபலிக்கிறது.

முதலாளிகள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தெற்கு பிரான்சில் Aube பிராந்தியத்தில் உள்ள Sodimédical ஆலையில் பணிபுரியும் 52 பெண் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் 30 மாதப் போராட்டத்திற்குப் பின் தங்கள் வேலைகளைத் தக்க வைப்பதற்கான சட்டபூர்வ போராட்டத்தில் தோல்வி அடைந்தனர். 

தொழிற்சங்கங்களும் இடது குழுக்களும் புதிதாக வரவுள்ள PS அரசாங்கம் இலாபத்தில் இருக்கும் நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய சட்டம் ஒன்றின் மூலம் குறுக்கிடும் என்ற போலித்தோற்றங்களை வளர்த்தன. பங்குச் சந்தைப் பணிநீக்கம் என்ற சொற்றொடரை அவர்கள் நிறுவனங்கள் தொழிலாளர்களை இலாபத்தை உயர்த்துவதற்காகப் பணிநீக்கம் செய்வதைக் குறிக்கப் பயன்படுத்தினர். ஆனால் அக்டோபர் 1ம்திகதி நீதிமன்றங்கள் நிர்வாகங்களின் சார்பில் தீர்ப்பு அளித்தன.

இந்நிறுவனம் இலாபத்தில் இயங்கும் Lohmann and Rauscher நிறுவனத்தின் ஒரு பகுதி ஆகும்; இது மருத்துவப் பயன்பாடுகளுக்கான துணிகளில் சிறப்புக் கவனம் காட்டுகிறது. உற்பத்தித் தேவைகளை இது பிரான்சில் இருந்து சீன ஆலைக்கு மாற்றியது; Aube ஆலையை மூடியது.

நீதிமன்றங்கள் ஆரம்பத்தில் நிறுவனத்தை அக்டோபர் 2011ல் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மகளிர் ஊதியங்களைக் கொடுக்குமாறும் அவர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்குமாறும் உத்தரவிட்டன. ஆலையின் மகளிர் குழுவின் துணைச் செயலர் Catherine Berlin பெண்களின் சீற்றத்தை சுருக்கிக் கூறினார்: நீதி மந்திரி, தொழில்துறை மீட்பு மந்திரி, பிரான்சுவா ஹாலண்ட் அனைவரும் எங்களிடம் கோடையில் அவர்கள் அந்த முடிவு செயல்படுத்தப்பட ஆதரவளிப்பதாகக் கூறினர். ஆனால் எங்களுக்கு ஒன்றும் கிடைக்கில்லை. வலது சாரியின் [ஜனாதிபதி சார்க்கோசியின்] கீழ் நாங்கள் கஷ்டப்பட்டோம். இடதின்கீழும் [அதாவது PS] இது மோசமாகிவிட்டது; ஏனெனில் வேலைகளை இழந்து விட்டோம்.நாங்கள் வெறுப்பில் உள்ளோம், அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்ற உணர்வில் உள்ளோம்.