WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
Barcelona workers and youth discuss austerity
பார்சிலோனா தொழிலாளர்களும் இளைஞர்களும் சிக்கன நடவடிக்கை பற்றி கலந்துரையாடுகின்றனர்
By a WSWS reporting team
3 October 2012
ஸ்பெயின் ஒரு முன்னோடியில்லாத இரட்டை இலக்க மந்த நிலையை அனுபவித்து
வருகிறது. பிரதமர் மரியானோ ரஜோயின் வலதுசாரி மக்கள் கட்சி (PP)
அரசாங்கம்,
வங்கிகளின் 100 பில்லியன் யூரோக்கள் பிணை எடுப்பைப் பெற்றுள்ளது,
விரைவில் கூடுதல் நிதியை கேட்கக்கூடும்.
ஸ்பெயின் பொதுப் பற்றாக்குறையை கடந்த ஆண்டில் இருந்து மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 8.5% என்பதில் இருந்து இந்த ஆண்டு 6.4% என்றும் 2013ல் 4.5%
எனக் குறைப்பதாகவும் உறுதியளித்துள்ளது. கடந்த வாரம் ரஜோய் மற்றொரு சிக்கன
நடவடிக்கைத் தொகுப்பை அளித்தார்; இது மொத்தச் செலவுகளை 40 பில்லியன் யூரோக்கள்
குறைக்கும், பொது ஊழியர்களின் ஊதியங்களை தேக்க நிலையில் வைக்கும், வேலையின்மை
நலன்களைக் குறைத்துவிடும். அதே நேரத்தில் அரசாங்கம் தொழிலாளர்துறைச் சட்டங்களை
சீர்திருத்துகிறது; இது தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது; இதையொட்டி
நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தல், ஊதியத்தை குறைத்தல், கூட்டுப்
பேரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஆகியவை எளிதாகும்.
நாட்டின் பொதுக்கடன் முதல் தடவையாக 800 பில்லியன் யூரோக்களை கடந்து
விட்டது—இது
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 75.9 சதவிகிதம் ஆகும். கடன்களில் முக்கால் பகுதி
தேசிய அரசாங்கத்திற்கும் கால் பகுதி வட்டார ஆட்சிகளுடையதும் ஆகும். மிகவும்
கடன்பட்டுள்ள வட்டாரம் கட்டலோனியா (5.8 பில்லியன் யூரோக்கள்) ஆகும்.
மாட்ரிட்டில் உள்ள
PP
அரசாங்கத்துடன் கடும் பூசல் இருந்தபோதிலும், கட்டலோன் அரசாங்கம்
தொழிலாள வர்க்கம் பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தையே
கொண்டுள்ளது. இந்த வட்டாரம் வெட்டுக்களுக்கு ஒரு சோதனைக்கூடம் போல்
பயன்படுத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக இதன் மீது கல்வித்துறை, சுகாதாரப்
பாதுகாப்பு மற்றும் பொதுத்துறை ஊதியங்கள் ஆகியவற்றில் மிகப் பெரிய குறைப்புக்கள்
சுமத்தப்பட்டுள்ளன; இவை சமூகநலச் செலவுக் குறைப்புக்களைவிடக் கூடுதலானவை ஆகும்.
வட்டார ஆட்சிகள் சுமத்தும் சிக்கன நடவடிக்கைகள் ஏற்கனவே 25 சதவிகித
வேலையின்மை மற்றும் இளைஞர்கள் மத்தியில் 50% வேலையின்மை இருக்கும் நாட்டில் வறுமையை
தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. சமூக சமத்துவமின்மை மிக உயர்ந்த அளவிற்குச்
சென்று கொண்டிருக்கிறது.
சமூக நெருக்கடி அநேகமாக ஒவ்வொரு நாளும் ஸ்பெயின் முழுவதும்
தொழிலாளர்களின் எதிர்ப்புக்களைத் தூண்டிவருகிறது; இவற்றைப் பொலிசார் பெருகிய
வன்முறை மூலம் எதிர்கொள்கின்றனர்.
கட்டலோன் அரசாங்கம் சுதந்திரத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது; சமூக நல
வெட்டுக்கள் திரும்பப் பெற வேண்டும் என்பதற்கு அல்ல; அதன் நிதிய நெருக்கடியை
ஸ்பெயினின் வறிய பகுதிகளில் தள்ள வேண்டும் என்பதற்காக. கடந்த வாரம்
சுதந்திரத்திற்காக அரசியல் கட்சிகள் மீது செலுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட
ஆர்ப்பாட்டம் ஒன்றரை மில்லியன் கட்டலோனியர்களின் ஆதரவை
—மக்களில்
கால் பகுதியினரின்—
ஈர்த்தது.
பார்சிலோனாவில் இருந்து தகவல் கொடுக்கும்
World Socialist Web Site
குழு ஒன்று இப்பிரச்சினைகள் குறித்து தொழிலாளர்களிடமும் இளைஞர்களிடமும் உரையாடியது.
மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் ஒரு வாக்கெடுப்பில் சுதந்திரத்திற்கு வாக்களிப்பர்
என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகையில், குறிப்பிடத் தக்க வகையில் ஆர்வத்தைக்
கொடுத்தது, நாம் பேட்டி கண்டவர்களிடையே (அவர்கள் குறிப்பிட்ட முறையில்
தேர்ந்தெடுக்கப்படவில்லை) சுதந்திரத்திற்கான அழைப்புக்கள்
“உண்மையான
பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்புபவை”
என்ற உணர்வை அவர்கள் கொண்டிருந்ததை காணமுடிந்தது.
பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பயிலும் மாணவர் டோஞ்ச்
முக்கூட்டின் (ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய
வங்கி) தாக்குதல்களுக்கு விடை
“முதலாளித்துவத்துடன்
முறித்துக் கொள்ள வேண்டும்”
என்று கூறினார்.
முழுப் பொது நல அமைப்பு முறையையும் அழித்துக் கொண்டிருக்கும் அதே
அரசியல் வாதிகளிடம் நம்முடைய உதவிக்கு வருமாறு நாம் கேட்க முடியாது. நாம்தான்
நிலைமையை சீராக்க வேண்டும். உள்ளூரளவில், கிடைக்கோட்டளவில் அமைக்கப்படும் மற்றங்களை
தளமாகக் கொண்ட இயக்கத்திற்கு நான் ஆதரவு தருவேன்—அது
பாராளுமன்ற முறை, பிரதிநிதித்துவ முறையை முறிக்கும் முயற்சியில் ஈடுபட்டால்.
“தொடர்ச்சியான
வளர்ச்சி மற்றும் சுரண்டல் இவற்றைத் தளமாகக் கொண்ட இயல்பான முரண்பாடு உடையவற்றை
நாம் சீர்திருத்த முடியாது; அது மூலதனத்தையும் பணத்தையும் மக்களின் வாழ்விற்கு
மேலாக இருத்துகிறது.”
தொழிலாளர்களும் இளைஞர்களும் முதலாளித்துவத்துடன் முறித்துக் கொள்ள
ஒரே வழி புரட்சிகர சோசலிச கட்சி மூலம்தான் என்று வரலாறு காட்டுகிறது என்பதைச்
சுட்டிக் காட்டியபோது, டோஞ்ச் இதற்கு உடன்படாமல் பெருங்குழப்ப போலித் தோற்றங்களை
வெளிப்படுத்தினார்:
“பாராளுமன்ற
முறை, பெரும்பான்மைகள் இவற்றின் தர்க்கத்தில் நுழைவது என்பது இதே பிரச்சினையில்
பொறியில் அகப்பட்டுக் கொள்வதுபோல்தான்”
என்றார் அவர்.
போல்ஷிவிக்குகள் மூலதன முறையை காத்தனரா எனக் கேட்கப்பட்தற்கு டோஞ்ச்
சிரித்துக் கொண்டு விடையிறுத்தார்:
“எனக்கு
ரஷியப் புரட்சி பற்றி அதிகம் தெரியாது. எப்படியும் உள்ளூரளவில் அமைத்து, சுய
நிர்வாகத்தை நம் சொந்த வசிக்கும் இடத்திற்குள் காக்க நாம் முயலவேண்டும் என்று நான்
நினைக்கிறேன்.”
WSWS
நிருபர்கள் மே 15, 2011ல் தொடங்கிய 15-M
அல்லது
Indiganados
இயக்கம்
தோல்வி அடைந்ததைச் சுட்டிக் காட்டினர். மே 15,2011ல் தொடங்கி அவர்கள் ஸ்பெயினில்
ஒரு முற்போக்குத்தன மாற்றம் வேண்டும் என்று கூறியது மக்கள் ஆதரவை ஈர்த்தது. ஆனால்
அத்தகைய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு இயக்கத்தில் வழி இல்லை; ஏனெனில் அது
“அரசியலை”
தடை செய்தது; இது உண்மையில் சோசலிச அரசியலையும் ஒதுக்கி, தொழிலாள
வர்க்கத்தை முதலாளித்துவ தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஆயுதம் களைய வைக்கிறது.
இதன் விளைவு முக்கூட்டு இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச்
சுமத்த முடிகிறது. தொழிலாளர்கள் தங்கள் சொந்த சுயாதீன வர்க்க முன்னோக்கு இல்லாத
நிலையில், ஆற்றல் அற்றவர்களாய் உள்ளனர் என்றார் ஒரு நிருபர்.
இதற்கு விடையிறுக்கையில் டோஞ்ச் கூறினார்:
“இண்டிக்னாடோஸ்கள்
எல்லாவித மக்களையும் ஈர்த்தனர்; பெரும் முதலாளித்துவ எதிர்ப்புக்காரர்களிடம்
இருந்து, பெரும் சீர்திருத்தங்கள் தேவை எனக் கோரியவர்கள் வரை, தங்கள்
பயிற்சிக்கட்டணத்தைக் கொடுக்க முடியாத மாணவர்களிடம் இருந்து வரிகளை கொடுத்து
அலுத்துப் போய்விட்ட வணிகர்கள் வரை. அனைவரையும் ஒன்றுபடுத்தியது கோபம்தான்.
இண்டிக்னாடோஸ்கள் பற்றிய நல்ல பொருள் அது எங்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவந்ததுதான்.”
கட்டலோன் சுதந்திரம் பற்றி டோஞ்ச் தேசியவாதிகள்
“மக்களுடைய
உணர்வுகளைப் பயன்படுத்துகின்றனர்; மக்கள் ஒரு சுதந்திர நாட்டில் தாங்கள் சிறந்து
வாழ்வோம் என்று நினைக்கின்றனர். சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் ஒதுக்குகின்றனர்;
ஏனெனில் இதில் அவர்கள் வெளியில் இருந்து வரும் விரோதியை தாங்களே தங்கள்மீது
சுமத்திக் கொண்டுள்ளனர்.
“சுதந்திரம்
பற்றிய வாதம் எப்பொழுதும் போல் ஒரே கதைதான். சிலர் முதலில் சுதந்திரம், பின்னர்
சிறந்த சமூகத்திற்குப் போராட்டம் என்பர். இதே கதைதான் 1936லும் இருந்தது—முதலில்
பாஸிஸ்ட்டுக்களை எதிர்த்துப் போராடுக, பின்னர் புரட்சி என. நமக்கு இப்பொழுது ஓர்
உலகப் பார்வை தேவை.”
மெய்யியல் பயிலும் ரிச்சார்டும் கூறினார்:
“நான்
ஒரு செவிலி. கடந்த ஆண்டில் பணிபுரிந்ததில் பாதிதான் உழைக்கிறேன். அவர்கள் எங்களுடைய
கிறிஸ்துமஸ் போனஸை அகற்றவிட்டனர்; அது கிட்டத்தட்ட என் ஊதியத்தில் 10% இருந்தது.
அதையும் தவிர அவர்கள் இன்னும் 5% குறைத்துவிட்டனர்.”
வெட்டுக்களின் விளைவுகளைப் பற்றி அவர் விளக்கினார்;
“அவர்கள்
நோய்க்கால விடுப்பிற்கு பணம் கொடுப்பது இல்லை; இதன் பொருள் நீங்கள் கூடுதலாக உழைக்க
வேண்டும் என்பதாகும். நோயாளிகள் நீண்ட பட்டியலில் காத்திருக்கின்றனர்.
தொழிற்சங்கங்கள் மருத்துவமனையுடன் உடன்பாடுகளைக் காண முயல்கின்றன; ஆனால் இவை
பயனற்றவை; வெட்டுக்கள் எப்படியும் சுமத்தப்படுகின்றன.”
கட்டலோன் சுதந்திரம் பற்றிக் கேட்கப்பட்டதற்கு கிறிஸ்டியான்
கூறினார்:
“இது
ஒரு அரசியல் உத்தி, கட்டலோன் வலதினால் மேற்கொள்ளப்படுவது; இதற்கும் பொது
மக்களுக்கும் தொடர்பு இல்லை.”
ரிச்சார்ட் அவருடைய கருத்துக்களுடன் உடன்பட்டார்.
பார்சிலோனா மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தொழிலாளியாக இருக்கும்
ஜோர்டான் கூறினார்:
“அவர்கள்
வரிகளை அதிகப்படுத்தி எங்கள் வாழ்க்கைத் தரங்களை அழிக்கின்றனர்; இதுவரை நாங்கள்
ஈட்டிய உரிமைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் அழிக்கின்றனர். எல்லா அரசியல் வாதிகளும்
கொள்ளையர்கள்தான். அவர்கள் சுகாதாரப் பாதுகாப்புத் தொழிலாளர்களை குறைக்கின்றனர்,
மருத்துவமனைகளை தனியார்மயம் ஆக்குகின்றனர்.
“பணிச்சுமை
குறைக்கப்பட்டது; தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்ட முறையில் விரைவான பணிநீக்கத்தை
கொண்டுவருகின்றனர்; எங்களில் பலர் வெளியேற்றப்படுகின்றனர். இந்த மாதம் எங்களில் 40
பேரைப் பணிநீக்கம் செய்துள்ளனர். அடுத்த மாதம் இன்னும் அதிகமானவர்கள் அகற்றப்படுவர்
எனக் கூறுகின்றனர்.
“தொழிற்சங்கங்கள்
முற்றிலும் ஏதும் செய்யவில்லை. இப்பொழுது அவர்கள் மௌனமாக இருப்பதை நீங்கள்
பார்க்கவில்லையா? அரசாங்கம் குறுக்கே வருகிறது, அவர்களுக்குக் கொஞ்சம் பணம்
கொடுக்கிறது, அவர்கள் இப்பொழுது மௌனமாக உள்ளனர். இது பழைய கதைதான்.”
அவருடைய சக ஊழியரான சேர்ஜியோ கூறினார்:
“நாங்கள்
அச்சப்படுகிறோம். அடமான கடன் கொடுக்க வேண்டும், எங்கள் குழந்தைகளை காப்பாற்ற
வேண்டும். சுதந்திரம் என்பது உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பும்
பேச்சுத்தான்.”
ஜோர்டான் மேலும் கூறினார்.
“CiU
[கட்டலோன்
அரசாங்கத்தின் பிராந்திய ஆளும் பிரிவு] நெருக்கடிக்குக் கொடுக்கும் விடை இது. இங்கு
கட்டலோனியாவில்தான் பெரும்பாலான கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகள் உள்ளனர், அதிக
வெட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பிராந்தியத் தலைவர் மாஸ் சுதந்திரம் வேண்டும் என்று
கூறிவிடுவது ஒன்றும் நாம் அனைவரும் அவருக்கு ஆதரவு என்ற பொருளைத்தராது. இது
பொருளாதார நெருக்கடியில் இருந்து பெரும் திசைதிருப்புதல் ஆகும்.”
மருத்துவமனைக்கு வெளியே ஓய்வூதியம் பெறும் மரியா எங்களிடம்
கூறினார்:
“ஓய்வூதியம்
பெறுபவர்கள் வெட்டுக்கள் எங்களுக்கு வராது என நினைக்கின்றனர், ஆனால் நான் அவ்வாறு
நினைக்கவில்லை. இளைஞர்கள்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வரை இந்த
நெருக்கடியில் நான் சமாளித்து நிற்பதற்குக் காரணம் என் சேமிப்புக்கள், செலவுகளைக்
குறைத்தல் ஆகியவற்றால்தான். மற்றவர்கள் அவ்வளவு அதிருஷ்டம் கொண்டிருக்கவில்லை.
அவர்கள் ஒருவேளை ஓய்வூதியங்களைக் குறைக்கலாம் அல்லது அகற்றலாம், அல்லது தனிப்பட்ட
ஓய்வூதியங்கள் அகற்றப்படலாம். இரண்டில் ஒன்று அகற்றப்படும். அதற்குள் நான் மறு
உலகில் இருப்பேன் என நம்புகிறேன்.”
ஒரு டாக்சி சாரதியான பிலர் விளக்கினார்:
“இந்த
நெருக்கடியின் பொருள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் சம்பாதித்ததில் பாதிதான்
சம்பாதிக்கிறேன் என்பதாகும். சுகாதாரப் பிரிவு வெட்டுக்கள் குறிப்பாக எங்களைப்
போன்ற வயதானவர்களை பாதிக்கிறது, ஏனெனில் நாங்கள் அதிகம் டாக்டரை
நாடவேண்டியுள்ளது.... இப்பொழுது மருத்துக்கும் பணம் கொடுக்க நேரிடுகிறது. அவர்கள்
வங்கிகளுக்கு குறைவாகவும் எங்களுக்கு அதிகமாகவும் பணம் கொடுக்க வேண்டும். |