சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

US increases support for Syrian opposition as Aleppo burns

அலெப்போ பற்றி எரிகையில் அமெரிக்கா சிரிய எதிர்த்தரப்பிற்கு ஆதரவை அதிகரிக்கிறது

By Niall Green
1 October 2012
use this version to print | Send feedback

எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கும் சிரிய அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான பெரும் மோதல்களுக்கு இடையே சனிக்கிழமை இரவு அலெப்போ நகரில் வரலாற்றுப்புகழ் படைத்த சந்தைப் பகுதியில் ஒரு பெருந்தீ பரவியது.

கிளர்ச்சி குழுக்கள் வெள்ளியன்று அலெப்போவின் மத்திய சந்தைப் பகுதிகளை அல்லது சூக்குகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மோதலை ஆரம்பித்தனர். இப்பகுதிகள் நகரத்தைக் கட்டுப்படுத்த மூலோபாய முறையில் முக்கியம் எனக் கருதப்படுகின்றன. பழைய நகரத்தில் உள்ள பல குறுகிய சந்துகள் நகரத்தின் மையத்தில் சுற்றிவருவதற்கு கிளர்ச்சியாளர்களுக்கு நிறைய மறைப்புக்களைக் கொடுப்பதுடன், அதேபோல் அண்டைப் புறநகர்ப்பகுதிகளை சுற்றிவருவதற்கும் வாய்ப்புக்களைக் கொடுக்கிறது.

எதிர்த்தரப்புச் செய்தித் தொடர்பாளர், சிரிய இராணுவமும் பொலிஸ் குறிபார்த்து சுடுவோரும் அலெப்போ என்னும் புராதனக் கோட்டையில் நிலைகொண்டுள்ளதாக கூறினார். இக்கோட்டை பழைய நகரத்தில் உயர்ந்து நிற்கிறது. கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் அரசாங்கப் படைகள் கனத்த ஆயுதத் தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல்கள் வந்துள்ளன. இரு பகுதியினருமே பல வரலாற்றுப்புகழ் வாய்ந்த இடங்களை அழிக்கும் அச்சுறுத்தும் நெருப்புக்களுக்கு ஒன்றையொன்று குற்றம் சாட்டுகின்றன.

வார இறுதியில் டமாஸ்கஸில் எதிர்த்தரப்புப் படைகள் நடத்திய வேறு தாக்குதல் தலைநகரின் புறப்பகுதிகளில் கிட்டத்தட்ட 64 இறப்புக்களை விளைவித்துள்ளது.

இறுதியான மோதலில் சிரியாவின் இரு முக்கிய நகரங்களுக்குள் கிளர்ச்சியாளர்களின் ஊடுருவல், ஒரு புறத்தில் அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகளுக்கும் மறுபக்கத்தில் ஈரான் ஆதரவிற்கு உட்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கும் இடையிலான பினாமிப் போரின் அண்மைய விரிவாக்கமாகும்.

சிரியாவில் தீவிரமாகியுள்ள போர் வெள்ளியன்று வாஷிங்டன் அறிவிப்பான அது எதிர்த்தரப்பு கிளர்ச்சியாளர்களுக்கு கூடுதலான உதவிகளை அனுப்பும் என்பதுடன் இணைந்து வந்துள்ளது. ஒபாமா நிர்வாகம் கூடுதலாக 45 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய ஆயுதமற்ற உதவியை அசாத் எதிர்ப்புக் குழுக்களுக்குத் தருவதாக அறிவித்துள்ளது; இது நேரடியாக அமெரிக்கா சிரியாவின் எதிர்த்தரப்பிற்குக் கொடுக்கும் உதவியை 170 மில்லியன் டாலர்கள் என உயர்த்தியுள்ளது.

அமெரிக்க வெளிவிகாரத்துறையின் கூற்றின்படி, சமீபத்திய உதவிகளில் 1,100 பிரிவுகளுக்கும் மேலான தொடர்புத்துறைக் கருவிகள் இருக்கும். இதில் துணைக்கோள் பிணைப்புடைய கணினிகள், தொலைபேசிகள், காமெராக்கள் மற்றும் 1,000 கிளர்ச்சியாளர்களுக்கான பயிற்சிஆகியவை அடங்கும். இத்தகைய கருவிகள் அமெரிக்க ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கு தரையில் நடக்கும் செயற்பாடுகளை தங்கள் CIA, துருக்கிய பயிற்சியாளர்களுடன் உரையாடி ஒருங்கிணைக்க உதவும்.

நேரடி அமெரிக்க உதவி வாஷிங்டன் சிரிய எதிர்த்தரப்பிற்குக் கொடுக்கும் மொத்த ஆதரவில் ஒரு பகுதிதான். துருக்கிக்குள் இருக்கும் CIA நடவடிக்கைகள் மூலம் ஒபாமா நிர்வாகம் சவுதிஅரேபியா, கட்டார், ஜோர்டான், லெபனான் மற்றும் துருக்கி ஆகியவை பல அசாத் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் குழுவிற்கு வழங்கும் நிதிய, இராணுவ உதவிகளை ஒபாமா நிர்வாகம் மேற்பார்வையிடுகிறது.

அசாத் ஆட்சியை தனிமைப்படுத்தும் தன் இராஜதந்திரமுறை தாக்குதலையும் வாஷிங்டன் அதிகரித்துள்ளது. வெள்ளியன்று நியூயோர்க்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் நௌரி அல்-மாலிகியின் ஈராக்கிய அரசாங்கம் சிரியாவிற்கு ஈராக் வழியே செல்லும் ஈரானிய விமானங்களை அவ்வப்பொழுது சோதனை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதுவரை மாலிகியின் ஆட்சி அதன் அமெரிக்க எஜமானர்களின் ஆணைகளையும் ஈராக் அதன் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் சிரியாவுடன் பெருகும் பொருளாதார, அரசியல் பிணைப்புக்களையும் சமப்படுத்திக் கொண்டுவர முயன்றுள்ளது. சிரியாவிற்கு எதிரான அமெரிக்க பினாமிப்போர் ஈராக்கிய வான்வழியிலும் விரிவாக்கப்பட்டுள்ளது என்பது இப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் அச்சுறுத்தும் தன்மையையும் பொறுப்பற்ற முறையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஈரானிய பொதுவிமானத்தையும் அதன் பொருட்களையும் ஈராக்கிய வான்படையினர் பென்டகன் கட்டுப்பாட்டின்கீழ் கைப்பற்றியிருப்பது இரு நாடுகளுக்கும் இடையே போர் அறிவிப்பிற்கு ஒப்பாகும்.

தன்னுடைய இராஜதந்திர போர்முரசுகொட்டலை வாஷிங்டன் அதிகரித்துள்ள நிலையில், சிரியாவிற்குள் மோதல்கள் சமீபத்திய நாட்களில் தீவிரமாகியுள்ளதுடன், நூற்றுக்கணக்கான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சிரியாவின் மிகப் பெரிய நகரமும் முக்கிய வணிக மையமும் ஆன அலெப்போவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் சேதங்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.

மத்தியக் கிழக்கில் அலெப்போ பெரும் கலாச்சார மையங்களில் ஒன்றாகும். அங்குள்ள கட்டிடங்கள் பலவும் தொல்லியல் சொத்துக்களும் தொல்சீர் இஸ்லாமியக்காலம், ரோமாபுரிப் பேரரசு இன்னும் முந்தைய நாகரிக காலங்களை சேர்ந்தவை. இப்பொழுது துப்பாக்கிச் சீற்றங்களுக்கு இடையே தத்தளிக்கும் மத்திய அலெப்போ சூக்குகள், இப்பிராந்தியத்தில் மத்தியகால கட்டிடக் கலை நுட்பத்தில் நன்கு பராமரிக்கப்பட்ட சிறந்த மாதிரிகளில் ஒன்றாகும். தெருக்களும் கடைகளும், பழைய அலெப்போவின் பொதுச் சதுக்கங்களும் யுனெஸ்கோவினால் உலக மரபியல் அந்தஸ்து கொடுக்கப்பட்டவை ஆகும்.

இந்தச் செழிப்பான மரபியம், மனிதகுலத்தின் கலாச்சார உறைவிடம் இப்பொழுது அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகளின் குற்றம் சார்ந்த கொள்கைகளால் ஆபத்திற்கு உட்பட்டுள்ளது. இவை அசாத்தின் ஆட்சியை உறுதிகுலைத்து அகற்றவதற்காக ஒரு குறுங்குழுவாத இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றன.

அலெப்போவிலும் சிரியா நெடுகிலும் ஆயிரக்கணக்கான குடிமக்கள் எதிர்த்தரப்பிற்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே நடக்கும் பல மாதப் போர்களில் இறந்துவிட்டனர். நூறாயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டுப் பாதுகாப்பிற்காக வெளியேறியுள்ளனர். சிரிய மோதல்கள் அதிகரித்தளவில் குறுங்குழுவாத தன்மையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா, துருக்கி மற்றும் வளைகுடா முடியாட்சிகள் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக சுன்னி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றன.

அலெப்போவில் தற்போதைய தாக்குதலை நடத்தும் முக்கிய ஆயுத எதிர்ப்புக் குழுக்களில் ஒன்று டவிட்  (Tawhid) படையணி ஆகும். ஈராக் குறுங்குழுவாத போரில் ஈடுபட்டிருந்த 28 வயது  சிரியரான அபு கலிட் தலைமையில் வழிநடத்தப்படும் சுன்னித் தீவிரவாதிகளின் டவிட் இராணுவக்குழு சுதந்திர சிரிய இராணுவம் என்னும் எதிர்த்தரப்புடன் இறுக்கமற்ற பிணைப்புகளை கொண்டுள்ள பெரிய இராணுவக் குழுக்களுள் ஒன்றாகும்.

மார்ச் மாதம் McClatchy செய்தித் தாட்களுடன் பேசிய, அப்பொழுது ஜோர்டானை தளம் கொண்டிருந்த கலிட், தன்னுடைய அமைப்பு சுன்னி வளைகுடா ஷேக் நாடுகள் மற்றும் ஐரோப்பிய சக்திகள் கொடுக்கும் நிதியைக் கொண்டு சிரியாவில் போரை நடத்துகிறது என்பதை ஒப்புக் கொண்டார். எவர் ஒத்துழைப்புக் கொடுத்தாலும் நாங்கள் ஏற்கிறோம், அமெரிக்காவாக இருந்தாலும் சரி என்று கலிட் McClatchy செய்தியாளர் ஒருவரிடம் கூறினார். எங்கள் இலக்கு இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இன்னும் ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டாலும் என்று எதிர்த்தரப்புத் தலைவர் சேர்த்துக் கொண்டார்.

வாஷிங்டன் மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகள் உடைய ஆதரவை அவர்கள் பெற்றிருந்தாலும், எதிர்த்தரப்பு ஆயுதமேந்திய குழுக்கள் அலெப்போவில் அல்லது சிரியத் தலைநகரான டமாஸ்கஸிலோ தொழிலாள வர்க்கத்திடமும் மற்றும் சிறு வணிகர்களிடமும் கணிசமான ஆதரவைப் பெறுவதில் தோல்வி அடைந்துள்ளனர்.

அலெப்போவிற்குள் இருக்கும் எதிர்த்தரப்பு நடவடிக்கையாளர்களுடைய சார்பினர் கிட்டத்தட்ட 6,000 கிளர்ச்சி இராணுவக்குழுவினர் நகரத்திற்குள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். நகரத்தில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 2 மில்லியனுக்கும் மேலாகும். லிபிய இஸ்லாமிய போராளிகள் குழு மற்றும் அல் குவைதாவுடன் பிணைப்புக் கொண்டவர்கள் இக்கிளர்ச்சியாளர்களில் பலர், CIA  உடைய வழிகாட்டுதலுடன் அருகில் இருக்கும் துருக்கிய எல்லை வழியே வந்தவர்களாகும்.

ஒரு குறுங்குழுவாத இரத்தக்களரி என்னும் தீய கனாவிற்குள் நாட்டை இன்னும் ஆழ்த்தியுள்ள சிரியாவில் நடக்கும் பினாமிப் போர் மத்திய கிழக்கு முழுவதையும் ஸ்திரமற்றதாக்கியுள்ளது. சிரியாவில் இதேபோன்ற பயங்கரவாதக் குழுக்கள் பயன்படுத்துவது குறித்து ஒரு விவாதத்தை ஏற்படுத்திய இஸ்லாமிய இராணுவக்குழுவால் லிபியாவில் அமெரிக்க அதிகாரிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இருந்த சற்று அமைதிக்கு பின்னர், இப்பொழுது அசாத் ஆட்சிக்கு எதிராக நடத்தும் செயற்பாடுகளை அமெரிக்கா முற்றிலும் மீண்டும் ஆரம்பித்துவிட்டதுபோல் தோன்றுகிறது.

நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களுக்கு பின்தான் போர் விரிவடைவது என்பது தீவிரமடையும். இது பிராந்தியப்போர் ஒன்றிற்கு எரியூட்டும் அச்சுறுத்தலையும், மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதற்கும் இன்னும் பெரிய பேரழிவுகளைக் கொண்டு வரும் சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது.