WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
Protests greet French government debate on pro-austerity European treaty
ஐரோப்பிய உடன்பாட்டின் சிக்கனச் சார்பு குறித்த பிரெஞ்சு அரசாங்கத்தின் விவாதம்
எதிர்ப்புக்களுக்கு உட்படுகிறது
By Antoine Lerougetel
3 October 2012
ஞாயிறன்று ஐரோப்பிய
உறுதிப்பாட்டு உடன்படிக்கை மற்றும் பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி
(PS)
அரசாங்கத்தின்
சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக கிட்டத்தட்ட 50,000 மக்கள் பாரிஸ் தெருக்களில்
அணிவகுத்துச் சென்றனர்.
அதற்கு முந்தைய தினம்
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள், வேலையற்றோர் மற்றும் ஓய்வூதியம்
பெறுவோர் போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினில் வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய
அரசாங்கங்கள் சுமத்தியுள்ள சிக்கன நடவடிகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில்
அணிவகுத்துச் சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள்
சிக்கனக் கொள்கைகளுக்கு அதிகரித்துவரும் மக்கள் எதிர்ப்புக்களுக்கு இடையே
வந்துள்ளன. கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியை மே மாதம் பிரான்சின்
ஜனாதிபதித் தேர்தல்களில் தோற்கடித்தது முதலே ஹாலண்ட் அவருடைய சிக்கனக் கொள்கைகளை
தொடர்கிறார்.
Dernières
Nouvelles d’Alsace
செய்தித்தாள்,
“அவருடைய
வாக்காளர்கள் சிலருக்கும் அவருடைய கட்சி உறுப்பினர்ளுக்கும்கூட ஹாலண்ட் முந்தைய
அரசாங்கத்தின் கொள்கையைத் தொடர்பவர் என்றுதான் பிரதிபலிப்பாகிறார்; மேலும்
‘பெரும்
ஏமாற்றத்தையும்’
தூண்டியுள்ளார்”
என்று
கூறியுள்ளது.
குறிப்பாக இது ஐரோப்பிய
உடன்படிக்கையில் வெளிப்பட்டுள்ளது. ஹாலண்ட்டின் தேர்தல் உறுதிமொழிகளில்
“சிக்கன
நடவடிக்கை ஒன்றும் தவிர்க்கமுடியாத விதி”
அல்ல என்று பிரச்சாரம் செய்த
பின், அரசாங்கங்கள் வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறைகளை வெட்டுவதற்கும், வங்கிகளுக்கு நிதி கொடுப்பதற்கும்
உடன்பாட்டைப் போற்றுகிறார்; அதே நேரத்தில் ஏற்கனவே ஏராளமான ஐரோப்பிய தொழிலாள
வர்க்கத்தினரை திவாலாக்கிக் கொண்டிருக்கும் சிக்கன நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட
உள்ளன.
நேற்று அரசாங்கம்
பாராளுமன்றத்தில் இந்த உடன்பாட்டை சார்க்கோசியின் கன்சர்வேடிவ்
UMP
இன் முழு ஆதரவுடன்
முன்வைத்தது. மேர்க்கோசி திட்டம் என அறியப்பட்டுள்ள இந்த உடன்பாடு கூட்டாக ஜேர்மனிய
சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் சார்க்கோசியால் பெரும்பாலும் இயற்றப்பட்டது.
வெள்ளியன்று ஹாலண்ட்
2013க்கான சிக்கன வரவு-செலவுத்
திட்டம் ஒன்றை 30 பில்லியன் யூரோக்கள் (39 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
பற்றாக்குறையில்,
வெட்டுக்களுடன் அறிவித்தார்.
PS
அரசாங்கம் ஆலை மூடல்கள், பரந்த
பணிநீக்கங்கள் என்று பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள், கார்த்தயாரிப்பு
PSA, ArcelorMittal Steel,
மருந்துகள் தயாரிப்பு நிறுவனம்
Sanofi
ஆகியவை செய்கையில்
வெறுமே பார்த்துக் கொண்டு இருந்தது.
ஞாயிறன்று பல
அணிவகுத்தவர்கள் ஹாலண்டின் நான்கு மாத பதவிக் காலம் குறித்து ஏமாற்றத்தைத்
தெரிவித்து அவர்கள்
“ஏமாற்றப்பட்டுவிட்டதாக”
கூறினர். பலரும் தேர்தலின்
முதல் சுற்றில் Mélenchon
க்கும்,
இரண்டாம் சுற்றில் ஹாலண்டிற்கும் வாக்களித்திருந்தனர்.
Nantes
இல் இருந்து
வந்திருந்த ஜோர்டி
Liberation இடம் கூறினார்.
“ஹாலண்ட்,
மேர்க்கோசி உடன்படிக்கை பற்றி
மறு பேச்சுக்கள் நடத்துவதாக உறுதியளித்திருந்தார்; ஆனால் ஒரு கால்புள்ளி கூட
மாற்றப்படவில்லை.”
மற்றவர்கள் கூறியது:
“இந்த
உடன்படிக்கை மக்களைத் திவாலாக்கும்...பிரான்ஸும் ஸ்பெயின், கிரேக்கம் சென்றுள்ள
வழியில்தான் முடியும்.”
பாரிஸ் உயர்நிலைப்பள்ளி
ஒன்றில் பிரெஞ்சு ஆசிரியராக உள்ள கிறிஸ்டின்,
ஒரு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் வங்கிகளின் ஆணைகளை எதிர்ப்பதற்கு அழுத்தம்
கொடுக்கப்படலாம் என்று கூறிய
Mélenchon
சொற்கள் குறித்துப் பெருகிய ஏமாற்றத்தை
தெரிவித்தார். உள்ளூர் தேர்தல்களில் குடியேறியுள்ளவர்கள் வாக்களிக்கும் உரிமை போல்
முன்வைக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று அவர் வருத்தம்
தெரிவித்தார். “ஹாலண்ட்
தான் மாறுபட்ட வகையில் ஆளப்போவதாக உறுதியளித்தார்... உண்மையைச் சொல்லவேண்டுமானால்,
அவர் பதவியில் நுழைந்தபோது வலுவற்று இருப்பார் என்றே நினைத்தேன், ஆனால் இந்த அளவு
வலுவற்று இருப்பார் என எதிர்பார்க்கவில்லை.”
உண்மையில் ஹாலண்ட்
ஆளும் வர்க்கத்தின் ஆணைகளைச் செயல்படுத்துவதில் இரக்கமற்றுச் செயல்பட்டு வருகிறார்.
அவர்
“வலுவற்றவர்”
போல் தோன்றுகிறார் என்றால்,
அதற்குக் காரணம் பிரான்சின் குட்டி முதலாளித்துவ
“இடது
சக்திகள்”—ஆர்ப்பாட்டத்திற்கு
குரல் கொடுத்தவை—ஹாலண்ட்
தொழிலாளர்களுக்கு உதவ முயல்கிறார் என்ற போலித்தோற்றத்தை வளர்த்திருந்தனர். பின்
ஹாலண்ட் “வலுவற்றவர்”
போல் தோன்றுகிறார் என்றால் அவர்
தொழிலாளர் வர்க்கத்திற்கு உதவும் கொள்கைகள் என்பதற்குப் பதிலாக தாக்கும் கொள்கைகளை
ஏற்றுள்ளார்—இது
நிதிய மூலதனத்தின் நலன்களுடன் இணைந்துள்ளது ஆகும்.
பாரிஸ் எதிர்ப்பு
Jean-Luc Mélenchon —இடது கட்சி
(PSல்
இருந்து பிரிந்த ஒரு பிரிவு), ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி
PCF
ஆகியவற்றின் இடது முன்னணிக் கூட்டு
நிறுத்திய ஜனாதிபதி வேட்பாளர்—60
போலி இடது கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் ஆதரவைப் பெற்றிருந்தவரால்—அழைப்பு
விடுக்கப்பட்டு இருந்தது. இவற்றுள் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி
NPA, ATTAC
என்னும் உலகமய எதிர்ப்புக் கட்சி,
PCF
மேலாதிக்கத்திற்கு உட்பட்ட
CGT
பொதுத் தொழிலாளர்
கூட்டமைப்பு ஆகியவையும் அடங்கும்.
இந்த அமைப்புக்களின்
எதிர்ப்பிற்கு அழைப்பு விடும் தீர்மானம் ஆழ்ந்த இழிவுத்தன்மையை கொண்டதாகும். இவை
PS
க்கு ஆதரவு கொடுக்கின்றன, மே
மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் ஹாலண்டிற்கு நிபந்தனையற்ற வாக்கு அளிக்குமாறு
கோரின—ஆனால்
ஹாலண்டின் முன்னுரிமை சமுகச் செலவுகளில் சிக்கனம், பிற்போக்குத்தன ஐரோப்பிய
சட்டத்தை இயற்றுதல் என்பதை இவை நன்கு அறிந்திருந்தன. இந்த எதிர்ப்பை,
பெருகும்
மக்கள் சீற்றத்தைத் தணிக்கும் பாதுகப்பு வால்வ்போல் அவை கூட்டியுள்ளன; தன் சிக்கன
செயற்பட்டியலை ஹாலண்ட் அரசாங்கம் செயல்படுத்துகையில் இவை முற்றிலும் அவற்றிற்கு
ஆதரவு கொடுக்கும் உண்மையை மறைக்கும் வகையில்.
அவர்களின் பிரதான
அச்சம்,
தொழிலாள வர்க்கம்
கட்டுப்பாடற்று, PS
அரசாங்கம்,
வங்கிகள் மற்றும் ஐரோப்பிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக புரட்சிகர தாக்கங்களை
கொண்ட வேறு அரசியல் போராட்டங்களை தொடக்கிவிடும் என்பதுதான்.
அணிவகுப்பிற்கு ஏற்பாடு
செய்தவர்கள் இந்த அணிவகுப்பு ஐரோப்பிய உடன்பாடு குறித்த விவாதங்களில் செல்வாக்கைக்
கொள்ளும் என்று கூறுகின்றனர்; நேற்று பாராளுமன்றத்தில் இந்த விவாதம் தொடங்கியது.
Mélenchon “ஆர்ப்பாட்டத்திற்குப்
பின் நாம் நிகழ்வுகளை தெளிவாகக் காண்போம்”
என்றார்; ஆனால்
PS
ன்
“எதிர்ப்பாளர்”
என்று
தன்னை அறிவித்துக் கொள்ளக் குறிப்பாக மறுத்துவிட்டார்.
இது,
Mélenchon உடைய நேர்மையற்ற
செயற்பாட்டில் மற்றும் ஒன்றாகும்.
PS
க்குப் பெரும்பான்மை உள்ளது,
UMP
உடைய ஆதரவும் உள்ளது, என்பதை அறிந்த
நிலையில் இடது முன்னணியின் 10 பிரதிநிதிகள், பாராளுமன்றத்தின் ஏனைய சிறு கட்சிகளான
பசுமை வாதிகள், சில பிளவுற்றுள்ள
PS
ஆதரவாளர்கள் உடைய நிலைப்பாட்டினால்
எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. அதிகப்பட்சம் அவை
PS
உடன்பாட்டில் என்ன
மாற்றங்கள் தேவை என முடிவெடுக்கிறதோ அந்த மாறுதல்களுக்கு அரசியல் ஆதரவைக்
கொடுக்கும்.
உண்மையில்
பசுமைவாதிகளின் கூட்டமைப்புக்குழு செப்டம்பர் மாதம் உடன்பாட்டிற்கு எதிர்ப்புத்
தெரிவித்து வாக்களித்தும்கூட, தலைமை வரவு-செலவுத்
திட்டத்திற்கு ஆதரவாகத்தான் வாக்களிக்க உறுதி கொடுத்துள்ளது. பசுமைக் கட்சியின்
தலைவர் Cécile Duflot
வியாழன் அன்று உடன்படிக்கை
“கடனைக்
குறைக்க ஒரு விருப்பத் தேர்வு வகை, அதுவும் ஏற்க இயலாத நிலைமையில் தேவையானது”
என்று
அறிவித்தார்.
பிற்போக்குத்தன மற்றும்
கற்பனாவாத கருத்தான ஐரோப்பிய ஒன்றியம்—அது
வலது முதலாளித்துவ அரசாங்கங்கள் அல்லது முதலாளித்துவ
“இடதுகளினால்”
உருவாக்கப்பட்டாலும்—ஒரு
“சமூக
ஐரோப்பாவை”,
“சிக்கன
ஐரோப்பாவிற்கு எதிராக”
கட்டமைக்க முடியும்
என்பதைத்தான் Mélenchon முன்வைக்கிறார்.
பாரிஸ் அணிவகுப்பு
இக்கருத்தை ஆதரிக்கும் மற்றொரு முக்கிய அமைப்பில் இருந்தும் வாழ்த்துக்களைப்
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது: கிரேக்கத்தின் குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சியான சிரிசாவின் தலைவரான
அலெக்சிஸ் சிப்ரஸ் எப்பொழுதும்
Mélenchon
ஐப் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டு கிரேக்கத் தேர்தல்களின்போது சிப்ரஸ் பலமுறையும்
சர்வதேச செய்தி ஊடகத்திடம்,
தான் கிரேக்கம் அதன் கடன்களை
வங்கிகளுக்கு மீண்டும் கொடுக்க ஏற்பாடு செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். |