சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

South Africa’s strike wave hits whole mining sector, spreads to transport

தென்னாபிரிக்க வேலைநிறுத்த அலை சுரங்கத் தொழில்துறை முழுவதையும் தாக்குகிறது, போக்குவரத்து துறைக்கும் பரவுகிறது

By Chris Marsden
28 September 2012
use this version to print | Send feedback

லோன்மின் மாரிக்கானா பிளாட்டினம் சுரங்கத்தில் ஆரம்பித்த வேலைநிறுத்த அலை இப்பொழுது தென் ஆபிரிக்காவின் பிளாட்டினம், தங்கம் மற்றும் நிலங்கரிச் சுரங்கத் தொழில்களையும் சூழ்ந்து, போக்குவரத்து இன்னும் பிற துறைகளுக்கும் பரவியுள்ளது.

தென்னாபிரிக்கா நெடுகிலும் மொத்தத்தில் 100,000 தொழிலாளர்கள் இப்பொழுது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 16ம் திகதி பொலிசார் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மாரிக்கானா தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 34 பேரைக் கொன்றனர், 78 பேரைக் காயப்படுத்தினர். தொழிலாளர்கள் 22 சதவிகித ஊதிய உயர்வைப் பெற்றபின்தான் கடுமையான போராட்டம் நிறுத்தப்பட்டது. அவர்களுடைய உறுதியான நிலைப்பாடு இன்னும் பலரை முதலாளிகளுக்கு எதிராகப் போராடி நிற்பதற்குத் தைரியத்தைக் கொடுத்துள்ளது.

SGB Securities தங்கம் குறித்த பகுப்பாய்வாளர் டேவிட் டேவிஸ் தொழிலாளர்கள் இப்பொழுது லோன்மின் உடன்பாட்டின் அடிப்படையில் ஊதிய உயர்வைக் கோருகின்றனர் என்று எச்சரித்துள்ளார்.

சட்டவிரோத வேலைநிறுத்தங்கள் என்னும் தொற்று தொழில்துறையைச் சூழ்ந்து கொள்ளக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

Anglo American Platinum அல்லது Amplats, உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளர், அந்நிறுவனத்தில் 21,000 தொழிலாளரிகள் திடீர் வேலைநிறுத்தத்தில் உள்ளதாகவும், மாரிக்கானாவில் கொடுக்கப்பட்டதற்கு சமமான ஊதியத்தைக் கோரியுள்ளனர் என்றும் பணிநீக்க அச்சுறுத்தல்களை பொருட்படுத்தவில்லை என்றும் கூறினார்.

மாரிக்கான தொழிலாளர்களைப் போலவே ஆம்ப்ளாட்ஸ் சுரங்கத் தொழிலாளர்கள் NUM  எனப்படும் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் இன்னும் பிற தொழிற்சங்கங்களை முதலாளிகளின் கைக்கூலி அமைப்புக்கள் எனக்கருதி அவற்றை முற்றிலும் நிராகரித்துள்ளனர். அவர்கள் பிரிந்து சென்றுள்ள AMCU அமைப்பை நாடவில்லை; மாறாக தங்கள் அடிமட்டத் தொழிலாளர்களிடம் இருந்தே தலைமையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இது ஒன்றும் ஆங்கிலோ கோல்ட் நிறுவனத்தை வேலைநிறுத்தங்கள் வெளிப்படையாக ஒருங்கிணைக்கப்பட்டவை என்று கூறுவதை நிறுத்திவிடவில்லை.

NUM செய்தித் தொடர்பாளர் லெசிபா செஷோகா, அவர்களிடம் இருந்து நமக்கு ஒன்றும் கிடைக்காது... நம் பெரிய கவலை தொழில்துறை முழுவதும் பரவலான கோரிக்கைகள் இருந்தால், அது கூட்டுப் பேரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.

கோல்ட்பீல்ட்ஸ், ஆங்கிலோகோல்ட் இன்னும் பல சுரங்க நிறுவனங்களில் திடீர் வேலைநிறுத்த நடவடிக்கைகள் ஏற்பட்டுவிட்டன. தொழிலாளர்கள் மீண்டும் 22% ஊதிய உயர்வைக் கோரிய வகையில் தென்னாபிரிக்காவில் தங்கச் சுரங்கங்களில் முழுமையாக 39% திறன் பாதிக்கப்பட்டுவிட்டது.

ஆல்கிலோகோல்ட் அசன்டி, மூன்றாம் மிகப் பெரிய தங்க உற்பத்தி நிறுவனம் அதன் தென்னாபிரிக்க செயற்பாடுகள் அனைத்தையும் இந்த வாரம் நிறுத்தி வைத்துள்ளது. அதன் 35,000 தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் செப்டம்பர் 20ம் திகதி கோபனோங்கில் தொடங்கிய திடீர் வேலைநிறுத்தத்தில் சேர்ந்துள்ளனர்.

நிர்வாகத்தின் முக்கிய அச்சம் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் பொலிசாரான தொழிற்சங்கங்களை ஒதுக்கி வைக்கின்றனர் என்பதுதான். உண்மையான கவலை கூட்டுப் பேர முறை முறிந்துவிட்டது போல் தோன்றுவதுதான்: இதுதான் 1980களின் நடுப்பகுதியில் இருந்து திறமையாக செயல்பட்டுவருவது.என்று ஆங்கிலோகோல்டின் செய்தித் தொடர்பாளர் ஒருவரான அலன் பைன் பைனான்சியில் டைம்ஸிடம் கூறினார். நமக்கு எதிரே உள்ள சவால் முறை தப்பிக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துவதுதான்.

கோல் ஆப் ஆபிரிக்காவும் Mooiplaats ல் நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், மாரிக்கானவிற்குப் பின் நிலக்கரித் துறையைப் பாதித்துள்ள முதல் தொழில்துறை நடவடிக்கை என்று அறிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் போக்குவரத்துத் துறையில் 12% ஊதிய உயர்வைக் கோரி 22,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளது, உத்தியோகபூர்வமாக நான்கு தொழிற்சங்கங்கள் தென்னாபிரிக்க போக்குவரத்து மற்றும் அத்துடனை இணைந்த தொழிலாளர்கள் சங்கம்,  தென்னாபிரிக்கத் தொழில்நேர்த்தி உடைய போக்கு வரத்து மற்றும் அத்துடன் இணைந்துள்ள தொழிலளார் சங்கம், மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம்--கட்டுப்பாட்டின்கீழ் அவர்கள் இருந்தும்கூட ஏற்பட்டுள்ளது, பெருகிய முறையில் சீற்றத்தைக் கொடுத்துள்ளது.

மோதல்கள் தற்காலிக தொழிலாளர்கள் பலரை மருத்துவ மனைக்கு அனுப்பிய நிலையில், பல வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, எரிக்கப்பட்டுள்ளன; அவசரக்காலப் பணிகள் அதிக எச்சரிக்கை நிலையில் இருத்தப்பட்டுள்ளன.

ஆங்கிலோகோல்ட் அசந்தியின் தலைமை நிர்வாகி, மார்க் குடிபானி, அதிக ஊதியங்களைக் கோருவது நாட்டிற்கு ஒரு இடராகும் என்று எச்சரித்தார்.

முதலாளிகள் இப்பொழுது பெருகிய முறையில் மிரட்டும் அச்சுறுத்தல்களைச் செய்கின்றனர்; வெள்ளிக்கிழமை அன்று ஆம்பிளாட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது, பணிநீக்கம் செய்வதாக அச்சுறுத்தியுள்ளது. கோல்ட்பீல்ட்ஸ் அதன் பீட்ரிக்ஸ் சுரங்கத்தில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக இரண்டாம் நீதிமன்றத் தடை உத்தரவை வாங்கியுள்ளது; இதன் பொருள் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது முதலாளிகளுக்கு ஒரு விருப்பத் தேர்வு என்பதாகும்.

ஆனால் சுரங்கத் தொழிலாளர்கள் பிற தொழிலாளர்களுக்கு முக்கிய அச்சுறுத்தல் அரசாங்கம் மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் மூலம்தான் வருகிறது.

தொழில்துறை மந்திரி மில்ட்ரெட் ஒலிபன்ட் சமீபத்திய முறையற்ற [சட்டவிரோத] வேலைநிறுத்தங்கள் நியாயப்படுத்தப்பட முடியாதவை, மேலும் சட்டமற்ற நிலைக்கு எந்தக் காரணமும் இல்லை என்று அறிவித்தார்.

நியூயோர்க்கில் ஜனாதிபதி ஜாகப் ஜுமா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் புதன் கிழமை அன்று சட்டவிரோதவேலைநிறுத்தங்கள் என்னும் அலை சமத்துவமற்ற தன்மைகளால் ஏற்படவில்லை என்றும், இந்தக் குறிப்பிட்ட மாரிக்கானா வேலைநிறுத்தத்தின் விளைவு என்றும், அங்கும் அது முடிவெடுக்கப்பட்ட வகையினால் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளது என்றும், தொழிற்சங்கங்கள் இது தொடர்பாக முன்னணியில் உள்ளனர், ஏனெனில் சூழ்நிலையின் காரணமாக அவர்கள் முன்னிலையில் இருந்தது இல்லை என்றார்.

இது பிற சுரங்கத் தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஊக்கம் அளித்துள்ளது என்றார் அவர்.

தொழிற்சங்கங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது முழு முதலாளித்துவத்திற்கும் ஒரு பெரிய அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

AFP யில் எழுதியுள்ள அலெக்சாந்தர் கூறுவதாவது: தென்னாபிரிக்க சுரங்க்களை அதிர்விற்கு உட்படுத்தியுள்ள வன்முறை நிறைந்த நெருக்கடி மரபார்ந்த தொழிற்சங்கங்களின்மீது தொழிலாளர்கள் கொண்டிருக்கும் அவநம்பிக்கையைக் காட்டுகிறது; அவைதான் இதுவரை நாட்டின் ஆழ்ந்த சமத்துவமின்மை இருந்தும் சமூக அமைதிக்குப் பாதுகாவலர்களாக இருந்து வந்துள்ளனர்.

டேனியல் சில்கே, மாரிக்கான தென்னாபிரிக்க தொழிலாளர் உறவுகளில் ஒரு சகாப்தத்திற்கான திறனைக் கொண்டுள்ளது; இதில் வன்முறை வேலைநிறுத்த நடவடிக்கை  நிர்வாகத்தின் கரங்களை வலுவிழக்கச் செய்கிறது; இது COSATU மற்றும் அத்துடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள் உபதேசிக்கும் வரலாற்றுத்தன்மை நிறைந்த கூட்டுப் பேரத்திற்கு முற்றிலும் எதிரானது என்று கூறியதாக அவர் மேற்கோளிட்டுள்ளார்.

இங்கு முக்கிய பிரச்சினை தொழிற்சங்க இயக்கம், COSATU வே இன்னும் போராளித்தன தொழிலாளர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலுமா என்பதுதான்; அவர்களோ மாரிக்கானவின் விளைவை ஒட்டி நிர்வாகத்தை குருதி கொட்டுதலுக்கு உட்படுத்தலாம் என நினைக்கின்றனர் என்றார் சில்கே.

எழுச்சி பெற்று வரும் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன அரசியல் மற்றும் சமூக இயக்கம், அதன் முக்கிய நட்பு அமைப்பான தென்னாபிரிக்க வணிகத் தொழிற்சங்கங்கங்களின் கூட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. ANC  ஐ நெருக்கடியில் தள்ளியுள்ளது; ஜுமாவிற்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும், இடையே உள்ள பிரிவுகளின் பூசல்களை விரிவாக்கியுள்ளது; ANC இன் இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவருக்கும் இடையே உள்ள மோதல்கள் மிக வெளிப்படையான வெளிப்பாடுகள்தான்.

புதன் அன்று, மலேமா போலோக்வனே பிராந்திய நீதிமன்றத்தில் பணத்தை மாற்றுதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்காக தோன்றியிருந்தார். ஓர் ஊழல் மிகுந்த டெண்டர் (ஒப்பந்த முறை) முயல்வோரான இவர், ஜுமாமீதே குற்றச்சாட்டைக் கொண்டுவரக்கூடிய சிலருடன் ஒப்பிடும்போது அதிக அனுபவம் இல்லாதவர்தான்.

தன்னுடைய கரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக மலேமா தன்னைச் சுரங்கத் தொழிலாளர்களின் நண்பர் என்று கூறிக்கொண்டு தொழில்துறை தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவருடைய நோக்கம் ANC க்குள் தன் பிரிவு மேலாதிக்கத்தை அடைய வேண்டும் என்பதுதான்; தென்னாபிரிக்க முதலாளித்துவம், சர்வதேச நிறுவனங்கள், வங்கிகளுக்கு முக்கிய அரசியல் பாதுகாப்புத்தரும் அமைப்பு என்பதைச் சவால் விடுவது அல்ல.

நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்திற்காக அவர் ஆயிரம் பேரைத்தான் திரட்ட முடிந்தது; ஆனால் முன்னாள் ANC இளைஞர் பிரிவு (ANCYL) தலைமைச் செயலர் சிண்டிசோ மகக்வா என்று இப்பொழுது Friends of the Youth League  வின் தலைவர், லிம்போபோவில் அவருடைய அதிகாரத்தளத்தில் இருப்பவர் உட்பட ANC  யிலுள்ளஆதரவாளர்கள் பலரைத் திரட்ட முடிந்தது.

நீதிமன்றத்திற்கு வெளியே மலேமா ANC  தலைவர்கள் கெகலேமா மோட்லன்தே மற்றும் பிகைல் எம்பலூலா ஆகியோரைப் பாராட்டுவதைக் குறிப்பாகக் கொண்டார்; அவர்களை இவர் ஜுமாவின் தலைமைக்கு சவால் விடுபவர்கள் என ஆதரிக்கிறார்.

 ஜாகப் ஜுமா ANC  உடைய தலைவராக மீண்டும் வராமல் நாம் உறுதியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்... அதற்கு அடுத்த நாளே நாம் அவரை ஜனாதிபதிப் பதவியில் இருந்து அகற்ற வேண்டும்; அதற்கு மறுநாள் அவர் மீது குற்றவிசாரணையை நடத்த வேண்டும். என்று அவர் வலியுறுத்தினார்.

இதை எதிர்கொள்ளும் வகையில் COSATU  தலைவர் சிடுமோ டலாமினி வியாழன் அன்று தொழிற்சங்கங்கள் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் மாங்குவாங் ANCகாங்கிரசில் உறுதியான தலைமையை விரும்புகின்றனர் என்றார். COSATU வின் வருடாந்த காங்கிசை முடித்து வைக்கையில், இந்நாடு பிளவை விரும்பவில்லை; தலைமையில் பிளவுகளை விரும்பவில்லை, இதற்கு தலைமையில் உறுதித்தன்மை தேவை என்றார்.