WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
மக்கள் எதிர்ப்பு வளர்கையில் ஐரோப்பா முழுவதும் சிக்கன - செலவுத்
திட்டம்
சுமத்தப்படுகின்றன
By Alex Lantier
29 September 2012
பாரிய மக்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில், நேற்று பிரெஞ்சு, ஸ்பெயின், கிரேக்க
அரசாங்கங்கள் அனைத்தும் பல பில்லியன் யூரோக்கள் கொண்ட சிக்கனத் திட்டங்களை
அறிவித்தன.
பிரான்சின் வரவு-செலவுத் திட்டம், சோசலிஸ்ட் கட்சியின்
(PS)
ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட திட்டம், 1980 களில்
சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் காலத்திய சிக்கன நடவடிக்கைகளையும்
விட மிகவும் கடுமையானதாகும். இதில் 30 பில்லியன் யூரோ (38.6 பில்லியன் அமெரிக்க
டாலர்) பற்றாக்குறை வெட்டுக்களுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. அதில் 20 பில்லியன் வரி
விதிப்பும் செலவுக் குறைப்புக்களில் 10 பில்லியன்களும் அடங்கும்.
ஸ்பெயினின் வரவு-செலவுத் திட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் கன்சர்வேடிவ் மக்கள்
கட்சி
(PP)
தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து இயற்றப்பட்ட நான்காம் பெரும்தொகை சிக்கன
நடவடிக்கையில் 13.4 பில்லியன் யூரோக்களுக்கு வெட்டுக்கள் வர உள்ளன. மிக அதிகமான
வெட்டுக்களை சுமத்தும் அமைச்சரகங்களில் விவசாயம், தொழில்துறை மற்றும் கல்வி ஆகிய
துறைகள் அடங்கும்.
வலதுசாரி புதிய ஜனநாயகம்
(ND),
சமூக ஜனநாயக
PASOK,
ஜனநாயக இடது என்னும்
DIMAR
ஆகியவை அடங்கிய கிரேக்கத்தின் கூட்டணி அரசாங்கம் 11.5 பில்லியன் செலவு வெட்டுக்கள்
செய்யப்படும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வெட்டுக்களுக்கான திட்டங்கள் முதலில்
ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. ஆனால் அரசாங்கம் அவற்றை எப்படி பகிர்வது என்பது பற்றிய
உடன்பாட்டை ஆரம்பத்தில் காணவில்லை.
ஒவ்வொரு நாட்டிலும், புதிய சிக்கன நடவடிக்கைகள் பொதுமக்கள் விருப்பத்தை மீறி
செயல்படுத்தப்படுகின்றன. புதன்கிழமை அன்று கிரேக்கம் முழுவதும் மில்லியன் கணக்கான
மக்கள் பணிகளை நிறுத்தி, நூறாயிரக்கணக்கானவர்கள் ஓர் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில்
தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். செவ்வாய்கிழமை அன்று ஸ்பெயினில் வெட்டுக்களை
எதிர்த்த பல்லாயிரக்கணக்கானவர்கள் மாட்ரிட்டில் பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச்
சென்றபோது, மிருகத்தனமாக கலகப்பிரிவு பொலிஸாரால் தாக்கப்பட்டனர்.
பிரான்சில், வேலை இழப்புக்களும் சிக்கன நடவடிக்கைகளும் மே மாதம் ஹாலண்டை தேர்வு
செய்த வாக்காளர்களை விரோதப்படுத்தி,
அவருக்கு பொதுமக்களிடமிருந்த மதிப்பு விகிதத்தை
43
சதவிகிதமாக குறைத்துவிட்டது.
இந்நிகழ்வுகள்,
ஐரோப்பாவில் உள்ள முதலாளித்துவ இடது கட்சிகளை, ஐரோப்பிய ஒன்றியம் (EU)
அல்லது ஐரோப்பிய முதலாளித்துவத்தை ஆதரிப்பதின் மூலம் சமூகநலச் சிக்கன நடவடிக்கைகளை
எதிர்க்க இயலாது என்பதை நிரூபித்துள்ளன. ஒரு சில மாதங்களிலேயே உத்தியோகபூர்வ
கட்சிகள் கொடுத்த உறுதிமொழிகள் பயனற்றவை என நிரூபிக்கப்பட்டுவிட்டது.
“சிக்கன
நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாத விதி அல்ல”
என்று ஹாலண்ட் இழிந்த முறையில் உறுதியளித்தார். கிரேக்க கூட்டணி அரசாங்கம்,
சிக்கன எதிர்ப்பு அரங்கில் வாக்குகளைப் பெற்ற முதலாளித்துவ இடது கட்சியான
சிரிசாவின் மறைமுகமான ஆதரவைப் பெற்றது. சிரிசா ஒரு
“பொறுப்பான”
எதிர்க்கட்சியாக செயல்படும் என பின்னர் அறிவித்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு
தனது ஆதரவை தொடர்வதோடு, வேலைநிறுத்தங்களுக்கும் அழைப்பு விடாது எனக் கூறியது.
முந்தைய சமூக ஜனநாயக ஸ்பெயின் சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE)
அரசாங்கத்தின் சிக்கன கொள்கைகளுக்கான பரந்த எதிர்ப்பின் அடிப்படையில்தான்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்பெயினின் மக்கள் கட்சியை பொறுத்தவரை அதன் போலி நிலைப்பாடான,
ஐரோப்பிய ஒன்றியம் அதன் வங்கிளுக்காக வழங்கும் பிணையெடுப்பிற்கு ஈடாக கிரேக்க வகை
சிக்கன நடவடிக்கையை தொடராது என்ற கூறிய அதன் போலி நடிப்பு விரைவில்
வெளிப்பட்டுவிட்டது.
மக்கள் கட்சி ஓய்வூதியங்கள் மற்றும் சமூகநலச் செலவுகளில் ஏற்படுத்தும் வெட்டுக்கள்
மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான அதன் தாக்குதல்கள் ஆகியவை பாசிச பிராங்கோவின்
சர்வாதிகார ஆட்சி வீழ்ந்ததற்குப்பின் மிகக் கடுமையான நடவடிக்கைகளாகும். தேசிய
அரசின் செலவுகளை 16.5 பில்லியன் யூரோக்கள், 27 பில்லியன் யூரோக்கள் மற்றும் 65
பில்லியன் யூரோக்கள் என்று முறையே ஜனவரி, ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்தில்
குறைத்தும் பின்னர் பிராந்திய அரசாங்கச் செலவுகளிலும் ஏற்பட்ட ஆழ்ந்த
வெட்டுக்களுடன் இணைந்து ஸ்பெயினின் பொருளாதாரத்தை மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன.
ஸ்பெயினின் தொழிலாளர்களில் கால் பகுதியும், ஸ்பெயினின் இளைஞர்களில் 52.9 வீதமும்
வேலையின்றி உள்ளனர். வங்கிப் பிணையெடுப்புக்களுக்கு உத்தரவாதங்கள் இருந்தும்,
பொருளாதாரம் சுருக்கமடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம்,
ஸ்பெயினின் பொருளாதாரத்தில் 1.2 வீத சுருக்கம் வரும் என எதிர்பார்க்கிறது. ஆனால்
அரசாங்கத்தின் வெட்டுக்கள் 0.5 சுருக்கம் வரும் என்ற வெளிப்படையான மிகைநம்பிக்கையை
அடிப்படையைக் கொண்டுள்ளன.
இப்பொழுது ஸ்பெயின் வேலையின்மை நலன்களுக்கு அல்லது தேசிய அமைச்சரகங்களின்
வரவு-செலவு திட்டங்களுக்கோ செலவழிக்கும் நிதியை விடக் கூடுதலாக கடனுக்கான
வட்டிகளுக்குத்தான் செலவழிக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடி 2008ல் தொடங்கியதில்
இருந்து, இதன் பொதுக்கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
(GDP)
35.5%ல் இருந்து 75.9% உயர்ந்து இருமடங்கிற்கும் மேலாகிவிட்டது. கடனுக்காக அது
கொடுக்கும் அதன் வட்டி விகிதம் வங்கிகள், நிதிய நிறுவனங்கள் ஸ்பெயினின்
பத்திரங்களுக்கு எதிராக நடத்தும் ஊகங்களின் விளைவாக அதிகரித்துவிட்டது.
ஸ்பெயினின் நிலச்சொத்துக்கள் பிரிவு தொடர்ந்து அவற்றின் இருப்புநிலைக்
குறிப்புக்களில் மதிப்புக்களின் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் ஸ்பெயினின் வங்கிகள்
மேலும் ஒரு 60 பில்லியன் பிணையெடுப்பை நாடுகின்றன.
இத்தகைய கொள்கைகளின் விளைவு கிரேக்கத்தில் மிகத் தெளிவாகக் காணப்படலாம். முன்பு இது
4.7%தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த இதன் பொருளாதாரம் இந்த ஆண்டு 7%
சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிரேக்கக் கடன் நெருக்கடி 2009ல் தொடங்கியதில்
இருந்து அதன் பொருளாதாரம் கிட்டத்தட்ட கால் பகுதி சுருக்கம் அடைந்துவிட்டது.
தொடர்ச்சியான இச்சரிவினால் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கிரேக்கத்தின் வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறை 20 பில்லியனை அடைந்துவிடும் என எதிர்பார்க்கின்றனர் என்று
Der Spiegel
இதழ் தகவல் கொடுத்துள்ளது. அதன் பின் ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தில் ஏதென்ஸ்
தற்பொழுது முன்வைத்துள்ள 11.5 பில்லியன் யூரோக்களையும் விட அதிகமான வெட்டுக்களை
கோரும். ஜூலை மாதம் கூறப்பட்டபடி, இவற்றில் தொழிலாளர் துறை அமைச்சரகத்தில்
(முக்கியமாக ஓய்வூதியங்கள் பற்றி) வெட்டுக்கள் 5 பில்லியன் யூரோக்கள் மற்றும்
கிரேக்கத்தின் பேரழிவிற்கு உட்பட்டுள்ள பொது மருத்துவமனைகள் மீதான தாக்குதலும்
அடங்கும்.
அமெரிக்காவில் 802 பில்லியன்
டாலருக்கும்,
பிரித்தானியாவில் 82 பில்லியன் பவுண்டுகளுக்கும் ஜேர்மனியில் 136 பில்லியன்
யூரோக்களுக்கும் ஒத்த்தாக இருக்கும் இத்தகைய பெரும் வெட்டுக்கள் ஒரு சமூகத்தை
இன்னும் சேதப்படுத்தும். இங்கு ஏற்கெனவே வேலையைத் தக்க வைத்துள்ள தொழிலாளர்களோ
தங்கள் ஊதியங்களில் 30-50% வெட்டுக்களைக் கண்டுள்ளனர்.
வெட்டுக்கள் குறித்த பேரம்பேசல்கள் கிரேக்கத்தின் அரசியல் உயரடுக்கிற்குள் மோதல்கள்
ஆழ்ந்துபோயிருக்கும் நிலையில் நடக்கின்றது. இடது ஜனநாயக
DIMAR
உடையக்கூடும் என்ற ஊகம் உள்ளது. ஏனெனில் அதன் 17 பாராளுமன்ற உறுப்பினர்களில்
குறைந்தப்பட்சம் 3 பேராவது வெட்டுக்களுக்கு எதிராகத் தாங்கள் வாக்களிப்பதாக
அறிவித்துள்ளனர்.
கிரேக்கத்தின்
SDOE
எனப்படும் நிதிய குற்றங்கள் பிரிவு சமீபத்தில் முப்பது அரசியல்வாதிகளுடைய பட்டியலை
வெளியிட்டது. இதில் முன்னாள் மந்திரிகளும்
ND, PASOK, SYRIZA
ஆகியவற்றின் உயர்மட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இவர்கள் வரி ஏமாற்று
அல்லது வேறுவகை மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிரான்சின் தேசிய வரவு-செலவு திட்டமான 376 பில்லியன் யூரோக்களிலிருந்து சிக்கனப்
பொதி வெட்டுக்களில் பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தின் மீதும்,
வேலைக்கு இருத்துவதன் மீதும் சுமத்தப்படும் 10 பில்லியன் யூரோ வெட்டுக்கள் மற்றும்
சில அமைச்சரகங்களின் வரவு-செலவு திட்டங்களில் நேரடியாக 5% வெட்டுக்களும் மற்றும்
சுகாதார பாதுகாப்புச் செலவுகளில் 2.7 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களும் இருக்கும்.
பாதுகாப்பு, நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரகங்கள் குறிப்பிடத்தக்க
வகையில் தாக்குதலுக்குள்ளாகி முறையே 7,234, 2,353 மற்றும் 1,276 வேலைகள் இழப்புகளை
காணும்.
20
பில்லியன் யூரோ வரிவிதிப்பு அதிகரிப்புக்களைப் பொறுத்தவரை, இதில் பாதி சில
பெருநிறுவன வரிகளிலிருந்து தவறும் ஓட்டைகளை மூடுவதன் மூலமும் மற்றும் தனிப்பட்ட
இல்லங்கள் மீதான வரிகளைப் மேல் உயர்த்துவதின் மூலமும் மறுபாதி பெறப்படும்.
PS
அரசாங்கமும் செய்தி ஊடகமும் தனிப்பட்ட நபர்கள் மீதான வரிவிதிப்பு அதிகரிப்பில்
கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் பாதிக்கப்படுபவர்கள்
“வசதியான
இல்லத்தினர்”
என்ற கருத்தை பறையறிவிக்கின்றனர். ஆனால் இது சோசலிஸ்ட் கட்சிக் கொள்கைகளின்
தொழிலாளவர்க்க விரோதத் தன்மையை மூடிமறைக்கும் முயற்சியாகும். உயர்மட்ட வருமான
வரிகளுக்கான குறியீடு 45% ஆக உயர்த்தப்பட உள்ளது. வருட வருமானம் 1 மில்லியனுக்கும்
மேலாக இருப்பவர்களுக்கு 75% வரிவிதிப்பு இருக்கும்.
இந்நடவடிக்கைகளை கவனமாக ஆராய்வதற்கு, கார்ல் மார்க்ஸ் பிரான்சில் வர்க்கப்
போராட்டம் என்ற நூலில் பிரான்சின் நிதிய விவகாரங்களை
“அப்பட்டமான
மோசடி”
என
விவரித்த பிரான்சின் வருமானவரிக் கொள்கைப் பிரிவில் நுழைய வேண்டும்.
2010ல் உயர்மட்ட 1 மற்றும் 10 சதவிகித பிரெஞ்சு மக்கள் முறையே 181 பில்லியன்
யூரோக்களையும் மற்றும் 515 பில்லியன் யூரோக்களையும் கொண்டிருந்தனர். ஆயினும்கூட
உயர்மட்ட வரிப்பிரிவில் அதிகரிப்பும், ஒரு மில்லியன் யூரோவிற்கும் மேலான வருமானத்தை
பெறுவோருக்குமான வரிவிதிப்பு என்பது நாடு முழுவதும் 530 மில்லியன் யூரோக்களைத்தான்
அரசாங்கத்திற்கு கொடுக்கும். 6 பில்லியன் யூரோக்கள் மொத்தம் என்று வசதியுடையவர்கள்
மீது வரிகளை அதிகரிப்பதின் மூலம் பெறப்படுவதில் சில பெருநிறுவன வரி ஓட்டைகள்
மூடப்படுவதும் அடங்கும். இது அவர்களுடைய வருமானத்தில் கணிசமான பகுதியாக இராது.
இதற்குக் காணம் ஓரளவிற்கு சிக்கல் வாய்ந்த வரிவிலக்கு முறைதான். இதை ஹாலண்டின்
நடவடிக்கைகள் தீவிரமாக மாற்றவில்லை. இந்த விதிவிலக்குகள் தன்னுடைய $ 24 பில்லியன்
சொத்துக்களுடன் இன்னும் பல நூற்றுக்கணக்கான மில்லியன்களை சம்பாதித்த பில்லியனர்
Liliane Bettencourt
ஐ
2010ல் உண்மையான வரியாக 9% தான் கொடுக்க வைத்தது.
இது
ஓரளவிற்கு பெரும்பாலான ஆளும் வர்க்கத்தின் வருமானம் சாதாரண ஊதியங்களில்
இருந்தல்லாது முதலீட்டு இருப்புக்களின் மீதான வட்டி வருமானத்திலிருந்து வருவதால்
ஹாலண்டின்
“75%
வரி”
என்பது
நிதியப் பிரபுத்துவத்தின் பெரும்பாலான உறுப்பினர்களை தீவிரமாகப் பாதிக்காது
என்பதாகும்.
ஆயினும்கூட, சிக்கன வரவு-செலவுத் திட்டம் செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளால்
கண்டிக்கப்பட்டுள்ளன.
Figaro
Magazine அதன்
முக்கிய கட்டுரைக்கு
“எல்லாம்
போதும்”
என்ற தலைப்பைக் கொடுத்துள்ளது.
PS
க்கு ஆதரவு தரும் முதலாளித்துவத்தின் பிரிவுகள் சில தற்போதைய சிக்கன வரவு-செலவுத்
திட்டம் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஆழ்ந்த தாக்குதல்களின் முதல் கட்டம்தான்
இப்பொழுது
PS
அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது என வாதிட்டுள்ளன. இனி வருபவற்றுள் தொழிற்சந்தை
“சீர்திருத்தங்கள்”
உள்ளன; அவற்றில் தொழிலாளர்களை குறுகிய நேரத்திற்கு வேலைக்கு எடுத்தல், 30 முதல் 50
பில்லியன் வரை சமூகப் பாதுகாப்பு செலவுகளில் பெருநிறுவங்களுக்கு குறைப்புக்கள்
ஆகியவற்றுடன், தொழிலாளிகளை வேலையில் வைத்தல், பணிநீக்கம் செய்தல் ஆகியவற்றில்
முதலாளிகளுக்கு அதிக உரிமைகளும் அடங்கும்.
Le Monde
இல்
ஒரு தலையங்கம் நம் நாட்டிற்கு
“உண்மையான
போட்டித்தன்மை உடைய அதிர்ச்சியின்”
தேவை குறித்து வலியுறுத்தியுள்ளது. அது கூறுகிறது:
“2013
வரவு-செலவுத் திட்டம் உண்மையில் அதற்கு பங்களிக்கவில்லை. உறுதியளிக்கப்பட்ட
தொழிலாளர் சந்தையிலும் மற்றும் சமூகச் செலவு நிதிகளில் வெட்டுக்கள் ஆகியவை இதில்
முக்கியமானவை ஆகும். பிரான்சிற்கு தேவையான அதிர்ச்சி வைத்தியத்தை கொடுக்க இன்றைய
வரவு-செலவு திட்ட அதிர்ச்சியுடன் ஒரு சக்திவாய்ந்த போட்டித்தன்மை அதிர்ச்சி இணைந்து
விரைவில் பிரான்சிற்கு கொடுக்கப்பட்டால்தான் அர்த்தமுள்ளதாக இருக்கும்
என்பதைக்காட்டுகிறது”.
|