WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
No
debt reduction for Greece
கிரேக்கத்தின் கடனில் குறைப்பு ஏதும் இல்லை
By
Peter Schwarz
28 November 2012
செவ்வாய்
அதிகாலையில் இறுதியாக யூரோப்பகுதி நிதி மந்திரிகள் கோடையிலேயே கொடுக்கப்பட வேண்டிய
கடன்களின் தொகுப்பை கிரேக்கத்திற்குக் கொடுக்க ஒப்புக் கொண்டனர்.
ஆனால் மற்ற அமைப்புக்களும்,
சர்வதேச நாணய நிதியமும்
(IMF)
இந்தப் பெரிதும் கடன்பட்டுள்ள நாட்டின் கடனைக் குறைக்குமாறு கோரிய
அழைப்புக்களை நிராகரித்து விட்டனர்.
இது,
யூரோப் பகுதி நிதி மந்திரிகள் கிரேக்கத்தை பொறுத்தவரை நடவடிக்கைகளை
எப்படித் தொர்வது என்று உடன்படுவதற்கு ஈடுபட்டதில் மூன்றாவது முயற்சியாகும்.
முந்தைய இரண்டு வாரங்களில்,
பல மணி நேரக் கூட்டங்கள்,
இரவு வெகு நேரம் வரை நடந்தவை,
யூரோப் பகுதி நாடுகளிடையே மற்றும் யூரோப் பகுதி
IMF
இவற்றிற்கு இடையே கடுமையான வேறுபாடுகளின் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தன.
குறிப்பாக
ஜேர்மனிய அரசாங்கம் கிரேக்கம் மிக அதிக அழுத்தத்தில் சிக்கன நடவடிக்கைகளை தொடர
வலியுறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது:
இவை ஏற்கனவே கொடூரமான சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை
ஏற்படுத்தியுள்ளன.
பேர்லின் ஜேர்மனிய வரவு-செலவுத்
திட்டத்தில் கூடுதல் சுமையை ஏற்றக்கூடிய எந்த நடவடிக்கைகளையும் உறுதியாக
நிராகரித்துவிட்டது.
தன்னுடைய
பங்கிற்கு
IMF,
குறைந்தப்பட்சம் கிரேக்கக் கடனில் ஒரு பகுதியாவது தள்ளுபடி
செய்யப்பட வேண்டும் எனக் கோரியது:
அதே நேரத்தில் அந்த நாடு அனைத்து சிக்கன நடவடிக்கைகளையும்
செயல்படுத்த வேண்டும் என்றாலும்,
அப்படியும் அது தன் மொத்தக் கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
120%த்திற்கு
மிகாமல் வைத்திருப்பது
2020ல்
கூட இயலாது என்றும் கூறியது.
கிரேக்கத்தின் கடன்களில் பெரும்பாலானவை இப்பொழுது மற்ற ஐரோப்பிய
அரசாங்கங்கள்,
அரச வங்கிகள்,
மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி
(ECB)
ஆகியவற்றால் வைத்திருக்கப்பட்டுள்ளதால் அத்தகைய மறுகட்டமைப்பு
என்பது பொது நிதிக்குக் கணிசமான இழப்புக்கள் என்ற பொருளைத் தரும்.
ஒரு “கடனின்
அளவு குறைப்பு” பற்றிய கோரிக்கையுடன்
IMF
தலைவர் கிறிஸ்டின் லகார்ட்,
கிரேக்கம் திவாலானால் பெரும் இழப்புக்களை அடையக்கூடிய சர்வதேச நிதிய
நிறுவனங்களின் சார்பில் பேசினார்.
அவை அனைத்தும் ஐரோப்பிய நாடுகள் கிரேக்கத்தின் கடன்
குறைக்கப்படுவதற்கு அளிப்புக்கள் தர வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
இறுதியில்
யூரோப் பகுதி நிதி மந்திரிகளும்
IMF
அதிகாரிகளும் இரு பக்கத்தாரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும்
வழிவகைக்கு ஒப்புக் கொண்டனர்—கிரேக்க மக்களின் இழப்பில்.
காலந்தாழ்த்தப்பட்டுவிட்ட உதவிப் பொதியின் பகுதி இப்பொழுது டிசம்பர்
13
அன்று தேசிய அரசாங்கங்களாலும்,
பாராளுமன்றங்களாலும் ஒப்புக்கொண்டபின்,
அளிக்கப்படும்.
ஆனால்,
இந்த நிதி படிப்படியாகத்தான் கொடுக்கப்படும்;
ஐரோப்பிய ஒன்றியம்,
IMF, ECB
என்னும் முக்கூட்டு கோரும் வெட்டுக்களை ஏதென்ஸ் செயல்படுத்துவதைப்
பொறுத்தது.
டிசம்பர்
மாதம்
10.6
பில்லியன
யூரோக்கள் கடனைத் திருப்புவதற்காகவும்
23.8
பில்லியன் கிரேக்க வங்கிகள் மறுமூலதனம் பெறுவதற்கும் கொடுக்கப்படும்.
மார்ச்
2013
ஐ ஒட்டி,
இன்னும
9.3
பில்லியன் யூரோக்கள் முன்று கட்டங்களில் கொடுக்கப்படும்.
நாட்டின்
கடனை
2013ல்
இருக்கக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
190%ல்
இருந்து
2020க்குள்
124%
என்று
குறைப்பதற்கு,
2022ல்
110%
என்று
குறைப்பதற்கு நிதி மந்திரிகள் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக் கொண்டனர்.
ஆனால் பல நிதிய வல்லுனர்கள் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு
பொருந்தாதவை என்று கருதுகின்றனர்.
அனைத்துத்
தரப்பினரும் கிரேக்கத்திற்கு இன்னும் கூடுதல் நிதிகள் கொடுக்கப்படக்கூடாது என்பதில்
உடன்பட்டுள்ளனர்;
ஆனால்
ECB
மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் இதுவரை அவை கிரேக்கத்தைக்
“காப்பாற்றியதில்” இருந்து பெற்ற பில்லியன்களில் ஒரு பகுதியை இழக்க வேண்டும்
என்றும் ஒப்புக் கொண்டுள்ளன.
* 2010ல்
53
பில்லியன்
யூரோக்கள் முதல் உதவிப் பொதிக்கு கிரேக்க அரசாங்கம் கொடுக்க வேண்டிய வட்டி
1.5%ல்
இருந்து
0.9%
என்று
Euribor
விகிதத்தைவிட
(ஐரோப்பிய
வங்கிகள் ஒன்றுக்கொன்று கொடுக்கும் விகிதம்)
சற்று கூடுதலாக இருக்கும்.
வங்கிகளும் அரசாங்கங்களும் தொடர்ந்து கிரேக்கத்திற்கு
கொடுக்கப்படும் உதவித் தொகையில் இருந்து நிதியை எடுத்துக் கொள்ளும்;
ஆனால் அவை முன்பை விட சில பில்லியன்கள் குறைவாக இருக்கும்.
நாடு முக்கிய வரவு-செலவுத்
திட்ட உபரியை
4.5%
என்று காட்டும் போது
(அதாவது
வட்டி கொடுத்தலை கணக்கில் கொள்ளாமல் வருவாய்கள்,
செலவுகளைவிட
4.5%
அதிகம்)
Euriborவிகிதம்,
0.5%
என்று குறைக்கப்படும்.
*
இந்த ஆண்டு மார்ச்சில் உடன்பட்டு ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு
அமைப்பு
(EFSF)
ல் இருந்து
நிதியளிக்கப்பட்ட இரண்டாம் உதவித் தொகையின் ஆயுட்காலம்,15ல்
இருந்து
30
ஆண்டுகள்
விரிவாக்கப்படும்.
கிரேக்க அரசாங்கம் முதல் பத்து ஆண்டுகள் இதற்கு வட்டி ஏதும் கொடுக்க
வேண்டியதில்லை.
EFSF
தலைவர்
Klaus
Regling
கொடுத்துள்ள புள்ளி விவரங்களின்படி இது பத்து ஆண்டுகளில
44
பில்லியன் யூரோக்கள் நிவாரணத்தைக் கொடுக்கிறது.
*
ஐரோப்பிய மத்திய வங்கி கிரேக்கப் பத்திரங்களை இரண்டாம் சந்தைகளில் விற்றால் அது
பெற்றிருக்கும் இலாபங்களை தள்ளுபடி செய்து அவற்றை கிரேக்க வரவு-செலவுத்
திட்டத்திற்குக் கொடுக்கும்.
இது கிட்டத்தட்ட
11
பில்லியன் யூரோக்கள் என்ற நிதியைப் பிரதிபலிக்கிறது.
*
நிதி
மந்திரிகள் கிரேக்கத்தின் மொத்தக் கடன் தெளிவாகக் குறைவது என்பது கடனை மீண்டும்
வாங்குவதின் மூலம் சாதிக்கப்படும் என்று நம்புகின்றனர்;
தற்பொழுது இது வெளிச் சந்தையில்
20
முதல்
30
சதவிகிதம் அதன் முகமதிப்பில் இருந்து உள்ளது.
அவை கிரேக்க அரசாங்கத்திற்கு
10
பில்லியன் யூரோக்கள் கிடைக்க வேண்டும் என விரும்புவது தெளிவு;
இதையொட்டி அந்த அரசாங்கம் பத்திரங்களை அவற்றின் துவக்க மதிப்பான
35%
க்கு வாங்க
முடியும்;
இதன் பொருள் அப்படியும் கணிமான இலாபம் அதன் தற்போதைய
உரிமையாளர்களுக்குக் கிடைக்கும் என்பதுதான்.
இப்படி
மறுபடியும் கடனை வாங்குவது வெற்றி அளிக்குமோ என்பது குறித்துச் சந்தேகங்கள் உள்ளன;
ஏனெனில் ஊக வணிகர்கள் உடனடியாக கிரேக்க அரசாங்கம் விற்கத்
தொடங்கியவுடன் விகிதங்களை அதிகரிப்பர்.
IMF
வைத்திருக்கும் அனைத்துக் கடன்களையும் கிரேக்கம் உண்மையில் அதன்
கடன்களை இவ்வகையில் அடைக்கும் என்பது தெளிவாகும் வரை வைத்திருக்க லகார்ட்
விரும்புகிறார்.
கிரேக்க
மக்களைப் பொறுத்தவரை,
இதன் பொருள் சிக்கன நடவடிக்கைகள் இன்னும் குறைந்தப்பட்சம10
ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதுதான்.
EFSF
ல் இருந்து பாயும் பணம் அனைத்தும்,
அல்லது வட்டிவிகிதக் குறைப்பின் விளைவாக வருபவை அனைத்தும்
கிரேக்கத்திற்குக் கடன் கொடுத்தவர்களுக்கு ஆதாயத்தை அளிக்கும்.
இதேதான் அரச பணிகள்,
சேவைத்துறை ஆகியவற்றை தனியார்மயமாக்கியதால் வரும் இலாபங்களுக்கும்
பொருந்தும்.
கிரேக்க அரசாங்கம் தனியார்மயமாக்கப்பட்டதால் வரும் இலாபங்கள்
அனைத்தும் ஒரு நிதியில் போட்டு வைக்கப்பட்டு பிரத்தியேகமாக கடனைத்
திருப்பப்பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.
கிரேக்க
மக்கள் செவ்வாயன்று நிதிமந்திரிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட பில்லியன்களில் ஒரு
சென்டைக் கூடக் கண்ணால் காணமாட்டார்கள்;
இது சமூக திட்டங்கள்,
நலன்களில் வெட்டுக்கள் தொடரும்,
பொதுத்துறை ஊழியர்கள் பணிநீக்கத்தின் மூலம்,
பள்ளிகள் மருத்துவமனைகள் மூடப்படுவதில்,
அரசாங்க நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்படுவதில்,
அடையப்பட வேண்டும் என்ற நிபந்தனையில் கிடைப்பவை.
ஜேர்மனியில்
Handelsblatt
கிரேக்கம்
“மீண்டும் காப்பாற்றப்பட்டுவிட்டது,
ஆனால் தற்காலிகமாகத்தான்” என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
வணிகச் செய்தித்தாள் தொடர்ந்து எழுதியது:
“கிரேக்கப்
பிரச்சினை விரைவில் ஐரோப்பிய அரசியல் செயற்பட்டியலுக்கு வரும்,
குறைந்தப்பட்சம் ஜேர்மனியக் கூட்டாட்சித் தேர்தல்கள்
இலையுதிர்காலத்தில் முடிந்தபின்.”
தொழிலாள
வர்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மூன்றாம் உலக நாடுகளின் அளவிற்குக் குறைக்கப்படும்
வரை,
சுரண்டலின் தன்மை சீனா,
வியட்நாம் மற்றும் பங்களாதேசத்துடன் இணையாகப் போகும் வரை நிதியச்
சந்தைகள் அமைதியாக இருக்கப்போவதில்லை.
இது கிரேக்கத்திற்கு மட்டுமின்றி ஐரோப்பா முழுவதற்கும் படரும். |