WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
Mass
protest against Mursi set for Egypt’s Tahrir Square
முர்சிக்கு
எதிரான வெகுஜன எதிர்ப்பு எகிப்தின் தஹ்ரிர் சதுக்கத்தில் நடக்கவுள்ளது
By Chris
Marsden
27 November 2012
ஜனாதிபதி
மகம்மது முர்சியின் தனக்கு தானே கிட்டத்தட்ட சர்வாதிகார அதிகாரங்களை வழங்கும்
நடவடிக்கையால் தூண்டுதல் பெற்ற ஒரு வெகுஜன எதிர்ப்பு இன்று எகிப்தில் நடத்தப்படும்.
எகிப்தின் கல்வி அமைச்சரகம் மாணவர்கள் இன்று வகுப்பிற்கு வருவதில் இருந்து விலக்கு
அளித்துள்ளது; இதற்குக் காரணம் எகிப்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை
நடத்துவதும் மற்றும் எதிர் ஆர்ப்பாட்டங்களை முஸ்லிம் சகோதரத்துவம் நடத்துவதும்,
வியாழன் அன்று ஆணையை வெளியிட்டதில் இருந்து வன்முறை மோதல்கள் வெகுஜன
எதிர்ப்புக்களில் வாடிக்கையாகிவிட்டன என்ற அச்சம்தான்.
முர்சியின்
எதிர்ப்பாளர்கள் கெய்ரோவில் தஹ்ரிர் சதுக்கத்திற்கு அணிவகுத்துச் செல்லத் தயாராக
உள்ளனர்; அங்கு வெள்ளி முதல் எதிர்ப்புக்கள் நடைபெற்றுள்ளன.
முஸ்லிம்
சகோதரத்துவத்தின் ஆதரவாளர்கள் தஹ்ரிருக்கு அருகே உள்ள அப்தீன் சதுக்கத்திற்கு
அணிவகுத்துச் செல்ல உள்ளனர்; ஆனால் இந்த இடம் ஞாயிறன்று நஹ்டெட் மிஸிர் சதுக்கம்
என்று கெய்ரோ பல்கலைக்கழகத்திற்கு அருகே மாற்றப்பட்டுவிட்டது; இது ஒரு நேரடி
மோதலைத் தவிர்க்கும் முயற்சியாகும். திங்கள் இரவு எகிப்தின் முக்கிய இஸ்லாமியவாதக்
கட்சியான முஸ்லிம் சகோதரத்துவம் ஆர்ப்பாட்டத்தை முற்றிலும் கைவிட்டது; தான்
“மோதல்களைத் தவிர்க்க விரும்புவதாகவும்”, “பொது அழுத்தங்களை” குறைக்க
விரும்புவதாகவும் கூறியது. சமீபத்தில் அவர் இன்னும் அதிகாரத்தைக்
கவர்ந்திருந்தாலும்கூட,
எகிப்திய முதலாளித்துவத்திற்குள் இருக்கும் தன் போட்டியாளர்களுடன் ஓர் உடன்பாட்டை
அடைய முர்சி விரும்புகிறார். இந்த ஆணைக்கு அமெரிக்க ஆதரவு இருக்கிறது; முர்சியும்
முஸ்லிம் சகோதரத்துவமும் காசா மீதான மிருகத்தனத் தாக்குதலின்போது தங்கள் நம்பகத்
தன்மையை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு காட்டினர்; அதேபோல் சிரியாவிற்கு எதிரான
போரிலும் ஈரானுக்கு எதிரான திட்டங்களிலும் வாஷிங்டனுக்கு ஆதரவைக் கொடுக்கின்றனர்.
முர்சியின்
உத்தரவு அவருடைய முடிவுகளைப் பற்றிய நீதிமன்ற மறு ஆய்வை அகற்றுகிறது; இது அடுத்த
ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்கள் வரை நீடிக்கும்; இஸ்லாமிய ஆதிக்கத்திற்கு
உட்பட்டுள்ள சட்டமன்றத்தை சட்டச் சவால்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த நடவடிக்கை
இராணுவம் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளில் இவருக்கு எதிராக உள்ளவர்களின்
நடவடிக்கையை முன்கூட்டியே தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்டது; ஒரு புதிய அரசியலமைப்பை
எழுதி முடிக்கும் பொறுப்பைக் கொண்டிருந்த குழுவிடம் இருந்து இஸ்லாமியவாதிகள் அல்லாத
எதிர்க்கட்சிகள் பெரும்பாலானவை விலகியபின் இந்நடவடிக்கை வந்துள்ளது.
எகிப்தின்
பங்குச் சந்தை ஞாயிறன்று 10% சரிவுற்றதின் மூலம் இவர் மேற்கொண்ட சமரச முயற்சி
தூண்டுதல் பெற்றது; உத்தரவு வெளியிடப்பட்டபின் அதுதான் சந்தை திறந்த நாள் ஆகும்;
இதையொட்டி கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் இழக்கப்பட்டது. உடனே தானியங்கிச்
சரிசெய்யும் பாதுகாப்புக்கள்தான் இன்னும் பெரிய சரிவைத் தடுத்தன.
ஆபத்தில்
இருப்பது ஒரு அமெரிக்க $4.8 பில்லியன் கடன், சர்வதேச நாணய நிதியித்தின் மூலம்
தொடக்க உடன்பாட்டில் வர இருப்பதும் ஆகும். முதலீட்டாளர்கள்,
டிசம்பர் 14 இயற்றப்பட திட்டமிட்டிருந்த இக்கடன் புதுப்பிக்கப்படும்
அரசியல் கொந்தளிப்பால் வெளியேறுவதால் செயற்பட்டியல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆனால்
முர்சியின் பெரும் கவலை,
ஏற்கனவே பதட்டமான நிலைமை ஒரு புதுப்பிக்கப்படும் எழுச்சியாக
பெப்ருவரி 2011ல் ஹொஸ்னி முபாரக் வீழ்ச்சிக்கு வகுத்த அளவிற்குச் சென்றுவிடக்கூடாது
என்பதுதான்.
எதிர்ப்புக்களில் 500 பேருக்கும் மேலானவர்கள் காயமுற்றுள்ளனர்; இதில் ஏப்ரல் 6
இயக்கத்தின் கபேர் சலாவும் அடங்குவார்; இவர் நவம்பர் 18 அன்று அடைந்த காயங்களினால்
ஞாயிறன்று இறந்துபோனார். சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சியின் தலைமையகம், நைல்
டெல்டா நகரான டமன்ஹவரில், பெற்ற தாக்குதலில் அவர் காயமுற்றார்; அதில் இன்னும்
60பேரும் காயமுற்றனர்.
வாரக்கடைசியில் பாதுகாப்புப் படைகள் கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தைச் சூழ்ந்த
தெருக்களிலும் மற்றும் பாராளுமன்றத்திற்கு முன் “விலகு!” “விலகு!” என்று
கோஷமிட்டிருந்த முர்சி எதிர்பாளர்கள்மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்; இது
முபாரக்கை எதிர்த்தபோது வந்த கோஷங்களின் எதிரொலி ஆகும். ஆர்ப்பாட்டக்காரர்கள்
கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.
நேற்று
தலைமை நீதிக்குழுவின் மூத்த நீதிபதிகளை முர்சி சந்தித்து இரு பக்கங்களும் சமரசக்
குரல் கொடுக்கும் வகையில் சரிசெய்துபோக முயன்றார். குழுவோ, முர்சியின் ஆணை “இறைமைச்
செயல்களுக்குத்தான்” பொருந்தும் என்று கூறியது; இச்சொல்லாட்சி அதை இரத்து செய்கிறது
என்பதை விட ஆணையைத் திருத்தும் முயற்சியையே குறிப்பிடுகிறது. தன்னுடைய பங்கிற்கு
முர்சியின் அலுவலகம் ஆணையின் தற்காலிகத் தன்மையை வலியுறுத்தியது. எகிப்தின்
நீதித்துறை மந்திரி செய்தி ஊடகத்திடம் ஒரு தீர்வு “விரைவில் வரும்” என்றார்.
முக்கிய
முதலாளித்துவக் கட்சிகள் பகிரங்கமாகக் காட்டிக் கொள்ளும் தோற்றம் ஆக்கிரோஷம்
நிறைந்தது போல் உள்ளது; ஆனால் அவர்களுடன் இதையொட்டி உடன்பாடு இல்லாமல் போய்விடும்
என்ற பொருளைத்தராது. ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளின் அடித்தளத்தில்
இருக்கும் அச்சம் அவர்களுடைய மோதல் வெளிப்படையாக தொழிலாள வர்க்கத்தின்
போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதுதான்; அதை அவர்கள் கட்டுப்படுத்த முடியாமற்
போய்விடும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்கள் கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்றுள்ளன;
முபாரக்கின் வீழ்ச்சிக்குப்பின் மிகப் பெரிய தொழில்துறை அலை போன்ற நடவடிக்கையாகும்
இது. இவற்றில் நாட்டின் 100,000 மருத்துவர்களுடைய நடவடிக்கையும் அடங்கும்; அவர்கள்
மொத்தமாக இராஜிநாமா செய்வதாக அச்சுறுத்தியுள்ளனர். உண்மையில், முர்சியின் முக்கிய
நோக்கம், தனக்கு சர்வாதிகார அதிகாரங்களை பெருக்குவதில் இருந்து வெளிப்பட்டுவரும்
சமூக இயக்த்தைச் சந்திப்பதுதான்.
சனிக்கிழமையன்று அரசியலமைப்புக் கட்சியின் மகம்மது எல்பரடேய், முர்சியை “புதிய
பாரோ” என்று கூறியவர், “ஒரு சர்வாதிகாரி மிகவும் அடக்குமுறையான, கொடூரமான
நடவடிக்கைகளைச் சுமத்தி, பின் நாம் வேறுபாடுகளைக் களைவோம் என்று கூறுகையில்,
உரையாடலுக்கு இடமில்லை” என்றார்.
புதிய தேசிய
முன்னணி என்று சனிக்கிழமை அமைக்கப்பட்டதற்கு எல்பரடேய் தலைமை தாங்குகிறார்; இதில்
அவருடைய அரசியலமைப்புக் கட்சி, எகிப்தின் மக்கள் நீரோட்டம், சமூக ஜனநாயகக் கட்சி,
சோசலிச மக்கள் உடன்பாட்டுக் கட்சி, நாசரின் கட்சிகளுடைய கூட்டணி, சுதந்திர
எகிப்துக் கட்சி, வப்ட் கட்சி, சுதந்திர எகிப்தியர்கள் கட்சி, விவசாயிகள்
பொதுக்குழு, சுதந்திர விவசாயிகள் குழு இன்னும் பல அமைப்புக்கள் அடங்குகின்றன.
முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் அப்தென்-மொனீம் அப்துல் போடௌவின் வலுவான எகிப்தியக்
கட்சியின் பிரதிநிதிகள் அதில் பங்கு கொள்ளலாமா என விவாதிப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் முன்னாள் அரபு லீக்கின் தலைவர் அமர் மௌசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
அமர் ஹம்சவி, முன்னாள் அரசியல் அமைப்பு மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் வகித்
அப்தெல் மெக்விட் மற்றும் முர்சியின் சமீபத்திய ஆலோசகராக இருந்து பதவியை இராஜிநாமா
செய்துள்ள சமிர் மோர்கோஸ் ஆகியோர் உள்ளனர்.
பேச்சுவார்த்தைகள் இயலாதவை என்ற பொதுக் கருத்துக்கள் கூறப்பட்டாலும், தேசிய
முன்னணியும் அதன் உடனிருக்கும் கட்சிகளும் முர்சி மற்றும் முஸ்லிம்
சகோதரத்துவத்தைப் போலவே தங்கள் கன்னைப் போராட்டத்தை வரம்பிற்குள் வைக்க
முயல்கின்றன. இதை ஒட்டி, தேசிய முன்னணி முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைமையகம்
தாக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து, புரட்சி அமைதியாக இருக்க வேண்டும்
என்று வலியுறுத்தினார். “அதிக அளவு கோபம், குழப்பம், ஆகியவை உள்ளன. பல இடங்களிலும்
வன்முறை பெருகியுள்ளது; அரச அதிகாரம் மெதுவாகக் கரையத் தொடங்கிவிட்டது” என்று
எல்பரடேய் எச்சரித்தார்.
எதிர்க்கட்சிகளின் பங்குபற்றி அவர் மேலும் உரைத்தார்: “நாட்டை ஒரு வன்முறை
வட்டத்திற்குள் தள்ளாமல் சுமுகமான முறையில் மாற்றத்திற்கு உட்படுத்த முடியும் என்று
நாங்கள் நம்புகிறோம்.”
ஆனால்
அவருடைய அச்சுறுத்தும் சொற்கள் நிறைந்த கருத்துக்கள் எகிப்திய இராணுவத்தைப் பற்றி
இருந்தன; “அவர்களும் மற்றவர்ளைப் போலவே கவலைப்படுகிறார்கள் என்பதில் நான் உறுதியாக
இருக்கிறேன். சட்டம், ஒழுங்கைமீட்பதற்கு இராணுவம் தலையிடுவதை நாம் புறக்கணிக்க
முடியாது.” என்றார் அவர்.
எல்பரடேயின்
ஒழுங்கு பற்றிய குறிப்பு எதிர்க்கட்சி கொள்ள இருக்கும் பங்குபற்றிய ஒரு
எச்சரிக்கையாகும். முர்சி எகிப்திய பொருளாதாரத்தில் பெரும் பங்கைக் கொண்ட
முதலாளித்துவ தட்டுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்; ஆனால் எகிப்திய இராணுவமோ
பொருளாதாரத்தில் 40% கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. எல்பரடேய் மற்றும் தாராளவாத,
மதச்சார்பற்ற கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவப் பிரிவுகள் ஏற்கனவே
இஸ்லாமியவாதிகளால் நெருக்குண்டதாக உணர்கின்றன. கீழிருந்து சவால் வருவது குறித்து
அவர்கள் அச்சுறுத்தல் என்று உணர்ந்தால், அவர்கள் இராணுவ ஆட்சிக் குழுவுடன் உடன்பாடு
காண்பதற்கு மிகவும் தயாராகவே இருப்பர்.
முபாரக்கிற்கு எதிரான இயக்கத்தின்போது அவர்கள் செய்தது போல், தாராளவாதிகள்
இராணுவத்தை தேசிய நலனை உறுதி செய்யும் அமைப்பு எனத் தொடர்ந்து சித்தரிக்கின்றனர்;
இராணுவம் சீர்திருத்தப்பட வேண்டும், முபாரக் சகாப்தக் குழுவின் செல்வாக்கில்
இருந்து விடுவிக்கப்பட்டால் போதும் என்று கூறுகின்றனர். ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு
மந்திரியும் முன்னாள் இடைக்கால ஆட்சியாளருமான ஹுசைன் தந்தவியையும் இராணுவத் தலைவர்
சமி அனனும் கட்டாயமாக ஒய்வு பெற வேண்டும் என்று எடுத்த முடிவிற்கு எல்பர்டேய் ஆதரவு
கொடுத்தார்; இது இராணுவ ஆட்சி கிட்டத்தட்ட முடிவதற்கு ஒப்பாகும் என்று
சித்தரிக்கப்பட்டது. 2011 கடைசியில் அவர் இராணுவம் “நாட்டைக் காப்பதில் குவிப்புக்
காட்ட வேண்டும்” என்று வலியுறுத்தினார். அத்தகைய அறிக்கைகளின் முழுப் பொருள்
இப்பொழுது பெருகிய அமைதியின்மை நேரத்தில் நன்கு காணப்படலாம்.
வார
இறுதியில் ஒரு “இராணுவ அதிகாரிகள்” குழு,
எதிர்ப்பு ஆதரவு/முர்சி எதிர்ப்பு வகையிலான துண்டுப் பிரசுரங்களை
“சட்டபூர்வமானது உங்கள் பக்கம் உள்ளது. நாங்கள் தாய்நாட்டை எங்கள் உயிர்களைக்
கொடுத்தும் பாதுகாப்போம்” என எழுதப்பட்டவற்றை வழங்கியதாக அறிக்கைகள் வந்தன.
லண்டனைத்
தளமாகக் கொண்ட
Al-Quds
Al-Arabia
இத்துண்டுப்
பிரசுரங்கள், “நாங்கள் தேசத் துரோகிகிள் அல்ல என்று அல்லாவின் முன் ஆணையிடுகிறோம்,
எவருடைய செயற்பட்டியல்களுக்கும் ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை... எகிப்து உங்கள்
கையில்தான் இப்பொழுது உள்ளது... சட்டபூர்வ தன்மைக்கு எதிரான எழுச்சி அல்லது
நிலைப்பாட்டை நாங்கள் மேற்கொள்ளவில்லை. தாயகத்தை எங்கள் உயிர்கள் மூலம் காப்பதாக
உறுதிமொழி கொடுத்துள்ளோம். இப்பொழுது சட்டபூர்வ தன்மை உங்கள் பக்கம்தான் உள்ளது”
எனக் கூறின எனத் தெரிவித்துள்ளது.
இதே
இராணுவம்தான் முர்சியின் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு
நவம்பர் 18 அன்று நில எதிர்ப்பாளர்களை கொல்லுவதில் தீவிரமாக இருந்தது. ஒரு நான்கு
மணிநேரக் கடினத்துப்பாக்கிப் போரை எதிர்ப்பாளர்களுடன் இராணுவம் தெற்கு கெய்ரோவில்
நடத்தி, மூவரைக் கொன்றது; இது குர்சாயத் தீவில் இராணுவத்திற்கு சொந்தமான ஒரு நிலப்
பகுதி குறித்தது ஆகும்; உள்ளூர் மக்கள் முபாரக்கின் வீழ்ச்சிக்கும் பின்
அந்நிலைத்தை எடுத்திருந்தனர். பிரதர்ஹுட்டின சமீபத்திய நடவடிக்கைகளுக்கு
எதிராகவும், முதலாளித்துவத்தின் மூலோபாய நலன்களை அச்சுறுத்தும் எந்த இயக்கத்தையும்
இராணுவம் இரக்கமின்றி நடத்தும். |