சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israeli forces break Gaza ceasefire as Netanyahu outlines his political calculations

நெத்தனியாகு தன் அரசியல் கணக்கீடுகளைக் கோடிட்டுக்காட்டுகையில் இஸ்ரேலியப்படைகள் காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறிக்கின்றன

By Jean Shaoul and Chris Marsden
24 November 2012
use this version to print | Send feedback

இஸ்ரேலியப் டைகள் எல்லையில் ஒரு பாலஸ்தீனியரைக் கொன்றதால் காசா மீதான இஸ்ரேலின் எட்டு நாள் மின்னல் வேக தாக்குதலை முடிவிற்குக் கொண்டுவந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்கனவே வலுவிழந்துபோயுள்ளது.

தெற்கு காசாவில் கான் யூனிஸிற்கு அண்மையிலுள்ள எல்லையில் ஒரு ஹமாஸ் கொடியை நாட்ட முயன்றபோது 23 வயதான அன்வர் குடைக் தலையில் சுடப்பட்டார். கிட்டத்தட்ட 20 மற்ற பாலஸ்தீனியர்கள் காயமுற்றனர். 300 ஆர்ப்பாட்டக்காரர்கள் “வன்முறைச் செயலில்” ஈடுபட்டதற்கு பதிலளித்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

மோதலை நிறுத்திக்கொள்ள உடன்பாடு செய்துகொள்ளுமாறு இஸ்ரேல் மீது  அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஏனெனில் அதன் தரைப்படைப் படையெடுப்பு அச்சுறுத்தல் பிராந்தியத்தில் அதன் பரந்த நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று வாஷிங்டன் கவலைப்பட்டது. குறிப்பாக சிரியாவிற்கு எதிரான பிரச்சாரத்திலும், ஈரானுக்கு எதிரான போர் குறித்த திட்டங்களிலும். ஆயினும்கூட பிரதம மந்திரி பென்யமின் நெத்தனியாகு, “போர்நிறுத்தம் தொடராது என்ற சாத்தியப்பாட்டிற்கு நாங்கள் ஏற்கெனவே தயாராக உள்ளோம், தேவையானால் எப்படி நடந்து கொள்வது என்பதை நாங்கள் அறிவோம்.” என்று அச்சுறுத்தியுள்ளார்.


Gaza
காசா மீது இஸ்ரேலியர் குண்டுபோட்டதின் விளைவு

ஆயிரக்கணக்கான துருப்புக்களை காசாவிற்குள் அனுப்பாததற்காக தீவிர வலதுசாரி சக்திகளிடம் இருந்து நெத்தனியாகு தாக்குதலில் உள்ளார். இதையொட்டி அவர் “Operation Pillar of Defence” மற்றும் அதை நிறுத்துவதின் அடித்தளத்தில் உள்ள அரசியல் கணிப்பீடுகளை விளக்கும் கட்டாயத்திற்கு உள்ளானார்.

இராணுவச் சொற்றொடர்களில், நெத்தனியாகு இஸ்ரேல் காசாவின் உள்கட்டுமானத்தை அழிவிற்கு உட்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது, ஹமாஸின் ஈரானியத் தயாரிப்பு தொலைதூர Fajr-5 ஏவுகணைகளில் 90%உம்,  மற்றும் டெல் அவிவ், ஜெருசலகத்தை அடையும் திறனுடைய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட M-75 ஏவுகணைகளும், அவர்கள் நிலத்தடியில் இருக்கும் ஏவுகணைகளை ஏவும் அமைப்புக்களும் அழிக்கப்பட்டுவிட்டன என்றார். இச்செயற்பாடு இஸ்ரேலின் Iron Dome ஏவுகணை-எதிர்ப்புத் திட்டச் சோதனை ஆகும். அரசாங்கம் இதனால் வெற்றிகரமாக குறைந்த பட்சம் நீண்டதூர ஏவுகணைகளில் 85%ஐ இடைமறித்துவிட்டது என்று கூறியது.

இஸ்ரேலுடன் எவ்விதத்திலும் உடன்பாட்டை அடையும் அதன் உறுதிப்பாடு குறித்து ஹமாஸும் சோதனைக்கு உட்பட்டது. ஏற்கனவே இது இஸ்லாமிய எதிர்த்தரப்பு சக்திகள் சிரியாவின் பஷர் அல்-அசாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளுக்கு நடைமுறை ஆதரவை அறிவித்திருந்தது. அப்பொழுது அது தன் வெளிநாட்டு தலைமையகத்தை டமாஸ்கஸில் இருந்து கட்டாரில் உள்ள டோகாவிற்கு மாற்றியிருந்தது. நெத்தனியாகு அவருடைய சமீபத்திய தாக்குதலைத் தொடக்கியபோது இஸ்ரேலுடன் இரகசிய சமாதானப் பேச்சுக்களில் ஈடுட்டிருந்தது.

டெல் அவிவோ அல்லது வாஷிங்டனோ ஹமாஸை அகற்ற ஆதரவு கொடுக்கவில்லை. அது ஒரு அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தி சிரியா, ஈரானுக்கு எதிரான ஒரு சாத்தியமான நண்பனை அகற்றியிருக்கும். குறிப்பாக அதன் தாய் அமைப்பான எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவத்தின் பங்கைக் காணும்போது. நெத்தனியாகுநாம் மற்ற போர்முனைகளிலும் உள்ளோம். முழுச் சித்திரத்தையும் கருத்திற் கொள்ள வேண்டும் என்றார்.

அதிகமாக மறைக்கப்படாத குடியரசுக் கட்சிப் போட்டியாளர் மிட் ரோம்னிக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கொடுத்திருந்போதிலும்கூட ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து தான் பெற்ற முழு ஆதரவை குறித்து குறிப்பாக நெத்தனியாகு வலியுறுத்திப் பேசினார். “ஆதரவளித்தது, அது பிரயோசனமாகவும், சுமுகமாகவும் இருந்தது”: எகிப்தின் ஆதரவும் அப்படித்தான் என்றார் அவர்.

எகிப்திய ஜனாதிபதி முகம்மது முர்சியும் அவருடைய முஸ்லிம் சகோதரத்துவ ஆட்சியும் போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி பேச்சுக்கள் நடத்தி, அது தொடரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எகிப்து அதன் எல்லையில் பாதுகாப்பை அதிகரித்து காசாவை ஆயுதங்கள் எதுவும் அடையாமல் உறுதி செய்ய வேண்டும் என்று நெத்தனியாகு உடன்பாடு ஒன்றை  நாடிப் பெற்றார்.

இஸ்ரேலுடனான ஒத்துழைப்பை சினாய் தீபகற்பத்தில் எகிப்து முடுக்கிவிட வேண்டும், போராளிகள் எனக்கூறப்படுபவர்களைக் கைது செய்யவேண்டும், காசாப் பகுதிகளுக்குச் செல்லும் சுரங்கப் பாதைகளை மூடவேண்டும். போர்நிறுத்தத்தை அது ஏற்கனவே செயல்படுத்தத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. புதன் அன்று எகிப்தியப் பாதுகாப்புப் படைகளால் மூன்று ராக்கெட்டுக்கள் காசாவிற்கு அருகில் ஷேக் ஜிவயட்டில் கைப்பற்றப்பட்டன.

பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமை குறித்த முஸ்லீம் சகோதரத்துவத்தின்  இழிந்த அறிக்கைகள் இருந்தாலும், அது முதலில் சிரியாவிலும் இப்பொழுது காசாவிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன்தான் ஒத்துழைக்கிறது.. காசா மீது இஸ்ரேல் தாக்கத் தொடங்கிய உடன், முரசி சமாதானத்தைச் செயல்படுத்துவதற்காக கெய்ரோவில் ஒரு இராஜதந்திர தாக்குலைத் ஆரம்பித்தார். இதற்காக துருக்கி, ஜேர்மனி, கட்டார் ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளைத் தருவித்தார்; அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டனுடனும் பேசினார். அவருடைய நோக்கம் எகிப்து, இஸ்ரேல் மற்றும் பிராந்தியம் முழுவதிலும் போருக்கான பரந்த மக்கள் எதிர்ப்பின் சாத்தியமான வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதாகும்.

முசிரியும் சகோதரத்துவமும் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஹொஸ்னி முபாரக் போலவே அமெரிக்காவிடம் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களுடைய சர்வதேசத் தொடர்பு வாஷிங்டனுக்கும் டெல் அவிவிற்கும் கூடுதல் நன்மை ஆகும். என்னஹ்டா இயக்கம் அல்லது மறுமலர்ச்சிக் கட்சி என்றும் மற்றொரு சகோதரத்துவத்தின் அமைப்பு இப்பொழுது துனிசியாவில் பென் அலிக்குப் பின் ஆட்சி நடத்துகிறது. சகோதரத்துவம் அமைத்துள்ள நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி, இப்பொழுது அமெரிக்கா இருத்தியுள்ள லிபிய ஆட்சியில் இரண்டாம் கட்சியாகும். சிரியாவிலும் சகோதரத்துவம் பொதுவாக அமெரிக்காவின் நம்பகமான கையாள் என்று அசாத்தின் எதிர்ப்பு இயக்கத்திற்குள் கருதப்படுகிறது. எனவே வாஷிங்டன் மற்றும் கெய்ரோவுடனான தன் உறவைஇஸ்ரேல் கொள்கைக்கும் பிராந்திய உறுதிக்கும் பெரிய வெற்றி.” என்று கூறியதில் வியப்பு ஏதும் இல்லை.

எகிப்து மட்டுமே, பெரும்பாலான அனைத்து அரபு ஆட்சிகளின் அதிர்ச்சியான எடுத்துக்காட்டாகும். அவற்றில் ஒன்றுகூட பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் சிறு முயற்சியும் எடுக்கவில்லை; இஸ்ரேலுடைய ஆதரவாளர்களுக்கு எண்ணெய், வணிகப் புறக்கணிப்பு என்றுகூடச் செய்யவில்லை; ஆனால் சிரியா என்று வரும்போதுபறக்கக்கூடாது பகுதி”, “மனிதாபிமான உதவிப்பாதை என்பவை அதற்கு ரொட்டியும் வெண்ணையும் போல் உள்ள கருத்துக்கள் ஆகும். மீண்டும் பாலஸ்தீனியர்கள் பிராந்திய சதுரங்க விளையாட்டில் தியாகம் செய்யப்படும் காலாட்கள் போல்தான் உள்ளனர்.

பாலஸ்தீனத்தில் உள்ள போட்டி முதலாளித்துவப் பிரிவுகள் அரசியல்ரீதியாக திவால்தன்மை உடையவை என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. பாலஸ்தீனிய அதிகாரத்தின் “தலைவரான” மஹ்முத் அப்பாஸ் மற்றும் அவருடைய ஃபத்தா -Fatah- பிரிவு இஸ்ரேலுக்கு எதிர்ப்புக் காட்டாததற்காக சமரசத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் வாஷிங்டனுடைய கைக்கூலிகள், இஸ்ரேலின் பொலிசார் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

இரண்டு நாட்கள் இஸ்ரேல் இடைவிடாமல் காசாமீது குண்டுத் தாக்குதல் நடத்தியபின்தான் அப்பாஸ் தாக்குதல் பற்றி ஒரு காலம் கடந்த, அரை மனதுடனான உரையை நிகழ்த்தினார்.

சீற்றமுற்ற பாலஸ்தீனியர்கள் மேற்குகரையில் தெருக்களில் குழுமி காசாவிற்கு ஆதரவு தெரிவித்து ஒஸ்லோ சமாதான உடன்படிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும், இஸ்ரேலுடனான பேச்சுக்கள் என்னும் மோசடி நிறுத்தப்பட வேண்டும் என்று கோஷமிட்டபோது, ஃபத்தா பாலஸ்தீனியப் பாதுகாப்புப் படைகளை எதிர்ப்பாளர்கள் சோதனைச் சாவடிகளை மீறி இஸ்ரேலுக்குள் செல்லாமல் தடுக்க உத்தரவிட்டு அவர்களைக் கைது செய்யுமாறும் உத்தரவிட்டது. இஸ்ரேலியப் படையினர் அதைத்தொடர்ந்து செயல்பட்டு  தோட்டாக்களால் சுட்டதுடன், ரப்பர் பூச்சு உடைய எஃகு தோட்டாக்களைப் பயன்படுத்தினர், கண்ணீர்க்குண்டுகள் பிரயோகிக்கப்பட்டன. இவற்றில் குறைந்தப்பட்சம் இரண்டு பாலஸ்தீனியர்களாவது கொல்லப்பட்டனர்.

இதில் இன்னும் அதிக முக்கியத்துவம் உடையது பல ஆண்டுகள் அது தன்னை ஃபத்தாவின் ஒத்துழைப்பிற்கு போராளித்தன எதிர்ப்பு என்று காட்டிக் கொண்டபின் அடுத்த நடவடிக்கையான டெல் அவிவுடன் புதிய உறவுகளை அமைப்பதற்கு ஹமாஸ் தயார் என்பதுதான்.

லெபனானில் உள்ள ஷியாக்களின் இஸ்லாமியக் கட்சியான ஹெஸ்பொல்லா, ஹமாஸுடன் சேர்ந்து முன்பு இஸ்ரேலுக்குஎதிர்ப்பு வலையத்தின் ஒரு பகுதியாக தன்னைக் காட்டிக் கொண்டது. அந்த வலையம் ஈரான் மற்றும் சிரியாவிற்கு நீண்டது. அது இஸ்ரேலின் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போரில் உடந்தையாக இருந்தது. ஹெஸ்பொல்லாவின் தலைவரான ஹசன் நசரல்லா இஸ்ரேலைக் கண்டித்து ஒரு பெயரளவு அறிக்கையை வெளியிட்டார். ஆனால் இஸ்ரேலுக்கு எதிரான இரண்டாம் போர்முனையை திறக்க மறுத்துவிட்டார். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒரு வெகுஜன எதிர்ப்பிற்குக்கூட அழைப்பு விடவில்லை. ஹெஸ்பொல்லா தலையிடுமா என்று கேட்கப்பட்டதற்கு ஒரு மூத்த அதிகாரியான ஷேக் ஹசான் எசெட்டின் டெய்லி ஸ்டாரிடம் கூறினார்: “இது ஒரு முதிர்ச்சிபெறாத விஷயம். பாலஸ்தீனிய மக்கள் இதுவரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் திறனைத்தான் வெளிப்படுத்தியுள்ளனர்.”

நெத்தனியாகுவின் அரசியல் கணக்கீடுகள் அத்தகைய அரபு முதலாளித்துவ சக்திகள் இஸ்ரேலுக்கான எதிர்ப்பை கண்காணிப்பதிலும், வாஷிங்டனின் ஏகாதிபத்திய நோக்கங்களான மத்திய கிழக்கின் எரிசக்தி வளங்கள் குறித்த ஆதரவினாலும் உறுதிப்படுத்தி காட்டுகின்றன. உள்நாட்டில் அவர் நாட்டின் உத்தியோகபூர்வஇடது பெயரளவிற்கு மட்டுமே இராணுவ வாதத்திற்குக் காட்டும் எதிர்ப்பையும் நம்புகிறார். இக்குறைகூறல்களின் பாசாங்குத்தனம் ஒரு கொடூர வெளிப்பாட்டை நவம்பர் 23 தலையங்கத்தில் ஹாரெட் பத்திரிகையில் வந்துள்ளது; “நெத்தனியாகுவிற்கு பாராட்டுக்கள் என்ற தலைப்பில் அதுஇந்த அரசாங்கத்திற்கும் அதன் தலைவருக்கும் அவர்கள் காட்டும் பொறுமைக்காக நம் பாராட்டுக்கள் என்று கூறியுள்ளது.

நெத்தனியாகுஅவர் தன்னுடைய பார்வையை மீண்டும் அவருடைய முக்கி மூலோபாய சவாலான ஈரானுக்கு திருப்புகையில் காசாவிற்கு எதிரான அவருடைய தாக்குதலில் சற்றே வசதியைப் பெறுகிறார்.” என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது. ஆனால்இஸ்லாமிய குழுவான ஹமாஸ் போன்றவை ஏற்படுத்தும் பிரச்சினைகளைவிட ஈரான் முன்வைப்பது முற்றிலும் வேறுபட்டவிதமாக உள்ளது”, “தொலைவில் உள்ள ஈரான் மீதான தாக்குதல் குறித்த கருத்து வேறுபாடுகள் எப்பொழுதும்போல் தீவிரமாகத்தான் உள்ளன.” என்றும் எழுதியுள்ளது.

இறுதியில், நெத்தனியாகுவின் அனைத்துத் திட்டங்களும், தந்திர உத்திகளும் அரபு அண்டை நாட்டினரைப் போலவே, இஸ்ரேலும் ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடி தோற்றுவித்துள்ள பெருகிய சமூக அழுத்தங்களினால் ஆழ்ந்துபோயுள்ளது என்பதை கவனிக்கவில்லை.

கடந்த ஆண்டு நூறாயிரக்கணக்கானவர்கள் சமத்துவமற்ற நிலை, வறுமை குறித்த எதிர்ப்புக்களில் பங்கு கொண்டபோது, அத்தகைய வெகுஜன உணர்வுகள், இராணுவவாதத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புடன் இஸ்ரேலிய அரசியல் அமைப்புமுறைக்குள் அரசியல் வெளிப்பாட்டைக் காணவில்லை. எவ்வாறாயினும், இந்நிலைமைகள் அரபு, யூதத் தொழிலாளர்கள் சோசலிச, சர்வதேச அடிப்படையில் ஐக்கியப்பட்ட இயக்கத்தை கட்டமைக்கும் சாத்தியங்களை தோற்றுவித்துள்ளன.