சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China’s new leaders: Profiles of oligarchs

சீனாவின் புதிய தலைவர்கள்: தன்னலக் குழுவினரைப் பற்றிய குறிப்புக்கள்

By John Chan
21 November 2012
use this version to print | Send feedback

கடந்த வியாழன் அன்று வெளிவந்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) நிரந்தர அரசியற் குழுவின் ஏழு உறுப்பினர்களுடைய வாழ்க்கைக் குறிப்புக்கள் ஆட்சியின் முழு இழிந்த, தன்னலக்குழுத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

பதவியிலிருந்து வெளியேறும் ஜனாதிபதி ஹு ஜின்டாவோ தலைமையில் உள்ள இளைஞர் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் (YCL)  முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் ஆல் தலைமை தாங்கப்பட்ட ஷாங்காய் கும்பலுக்கும் இடையே நீடித்த குழுவாத மோதல்களின் விளைவாக இக்குழுவின் கூட்டு இவ்வாறு இருந்தாலும், இதன் உறுப்பினர்கள் சில பொதுவான குணாதிசங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களுக்கு 1949 சீனப் புரட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாததுடன், கடந்த 30 ஆண்டுகளாக முதலாளித்துவத்தை மீள்புனருத்தானம் செய்யும் திட்டத்தைக் கொண்ட அரசு ஏற்படுத்திய சொத்துக்களைக் கொண்டிருக்கும் புதிய உயரடுக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

புதிய பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் இரண்டு முக்கிய பிரிவுகளாலும் ஏற்கப்பட்டுள்ள ஒரு சமரசத்திற்குரிய புள்ளி ஆவார். பதவியேற்கவிருக்கும் பிரதமர் லி கெக்கியாங்தான் இளைஞர் பிரிவுடன் தொடர்பு கொண்டவர். லியு யுன்ஷான் மற்றும் வாங் குஷன் இருவரும் இரு பிரிவினராலும் ஏற்கப்பட்டவர்கள். மற்ற மூன்று நபர்களான ஜாங் டிஜியாங்க், யு ஜெங்ஷாங் மற்றும் ஷாங் காவோலி ஆகியோர் ஷாங்காய் தன்னலக்குழுவுடன் நெருக்கமான தொடர்பு உடையவர்கள் ஆவர்.

ஜி ஜின்பிங் அதிகாரத்தில் உயர்ந்துள்ளதற்குக் காரணம் அவருடைய தந்தை ஜி ஜோங்சன், மாவோவினால் 1962ம் ஆண்டு முதலாளித்துவப் பாதையை நாடுபவர்என்று காரணம் காட்டி வெளியேற்றப்பட்ட ஒரு மூத்த அதிகாரத்துவ தட்டினர் ஆவார். டெங் ஜியோபிங் அதிகாரத்திற்கு 1978ல் வந்தபோது அவரை ஷென்ஜெனில் முதல் சிறப்புப் பொருளாதார வலையங்களை நிறுவ நியமித்தபோது ஜோங்சனின் அரசியல்வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டது. இளம் ஜி 22 ஆண்டுகள் கடலோர மாநிலங்களான புஜியன், ஜெஜியாங் போன்றவற்றில் இருந்தார்; அங்கு அவர் தனியார் நிறுவனங்களை உருவாக்கியதால் நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.

ஜெஜியாங்கில் ஜியின் வரலாறு 2002ல் இருந்து 2007வரை சீனாவின் மிகப் பெரிய மிருதுபானத் தயாரிப்பு நிறுவனங்களான ஹான்ஜோ வாஹாஹா (Hanzhou Wahaha Group) குழுவின் தலைவர் ஜோங் குங்ஹௌவால் புகழப்பட்டது. ஆலைக்கு இடம் தேர்ந்தெடுத்தல் போன்ற நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒப்புதல் கேட்க வேண்டிய தேவையில்லை என இருந்ததுஎன்று ஜோங் ஆர்வத்துடன் கூறினார். ஜோங்கின் செல்வங்கள் விரைவாக வளர்ச்சியுற்றன. இப்பொழுது அவர் உலகின் 34வது பெரும் செல்வந்தராக இருக்கிறார். இவருடைய சொத்துக்களின் மதிப்பு 19.2 பில்லியன் டாலர் ஆகும்.

ப்ளூம்பேர்க் ஜூன் மாதம் நடத்திய விசாரணை ஒன்று ஜியின் விரிவான குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 367 மில்லியன் டாலர் சொத்துக்களை சேகரித்துள்ளனர் எனக் காட்டுகிறது. இதில் அரசாங்கத்திற்கு சொந்தமான அபூர்வ நில நிறுவனத்தில் பங்குகளும் அடங்கும். பல நேரமும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உறவினர்களின் பெயர்கள் அல்லது தவறான அடையாளங்களைக் கூடப் பயன்படுத்தி தங்கள் சொத்துக்களை மறைக்கின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி குடும்பச்சொத்துக்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரிதும் உயரும்.

பதவியேற்கவிருக்கும் பிரதமர் லி கெக்கியாங் 1980களின் ஆரம்ப ஆண்டுகளில் பீக்கிங் பல்கலைக்கழக மாணவராக இருந்தவர்; அப்பொழுது பல்கலைக்கழக வளாகங்கள் மேற்கத்தைய முதலாளித்துவக் கருத்துக்களை தீவிரமாக வளர்க்க அனுமதிக்கப்பட்டிருந்தன. இளைஞர் கம்யூனிஸ்ட் கழக பிரிவின் முன்னோடிக்குத் தலைமை தாங்கிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹு யாவோகாங், பின்னர் 1986ம் ஆண்டு முதலாளித்துவ தாராளமயமாக்குதலுக்கு ஊக்கம் கொடுப்பதற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஏப்ரல் 1989 இல் ஏற்பட்ட ஹுவின் மரணம் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புக்களை அரசியல் சீர்திருத்தங்களுக்காக தூண்டியது. இது எதிர்பாராமல் தொழிலாள வர்க்கத்தை இதில் தலையிடச் செய்து அதன் வர்க்கக் கோரிக்கைகளையும் எழுப்பச் செய்தது. இதை எதிர்கொள்ளும் வகையில் ஆட்சி தியானென்மன் சதுக்கத்திலும் தேசிய அளவிலும் இயக்கத்தை நசுக்க இராணுவத்தைப் பயன்படுத்தியது. எதிர்ப்புக்களில் பங்குபற்றிய அவருடைய வகுப்புத் தோழர்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டபோது, லி இதில் பங்குபற்றாததுடன், பின்னர்  இளைஞர் கம்யூனிஸ்ட் கழக தலைமைக்கு உயர்த்தப்பட்டார்.

லி சீனா 2030 என்ற அறிக்கைக்குப் பின்புலத்தில் இருந்தார். இந்த ஆண்டு உலக வங்கியுடன் இணைந்து இது எழுதப்பட்டுள்ளது. இது சீனப் பொருளாதாரத்தை உலக மூலதனத்திற்கு இன்னும் திறந்துவிடுவது குறித்த வரைவுத் திட்டம் ஆகும். இதில் இன்னும் எஞ்சியிருக்கும் பெரும்பாலான அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுதல் அடங்கியுள்ளதுடன் இந்த நிகழ்வுப்போக்கு மில்லியன் கணக்கான வேலைகளை இல்லாதொழிக்கக்கூடும். தொழிலாள வர்க்கத்தின் மீதான இத்தகைய சமூகத் தாக்குதலை செயல்படுத்தும் பொறுப்பை லி ஏற்பார்.

சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான சுகாதாரப் பாதுகாப்புப் பேரழிவுகளுக்கு லிதான் தலைமை வகித்தார். ஹெனன் மாநிலத்தில் அவர் ஆளுனராகவும் கட்சியின் செயலாளராகவும் 1990 களில்  இருந்தபோது HIV/AIDS தொற்று பரவியது. முற்றிலும் கட்டுப்பாடு அற்ற செயலில், மருந்துநிறுவனங்கள் பெரும் துன்பத்தில் இருந்து வறிய விவசாயிகளிடம் இருந்து குருதி திசுக்களை வாங்கின. பாதுகாப்பு இல்லாத செயல்கள் “AIDs கிராமங்கள் என்ற பிரிவுகள் தோன்றவும் மற்றும் ஆயிரக்கணக்கான இறப்புக்களையும் ஏற்படுத்தின.

கடந்த வாரம் கட்சியின் 18வது மாநாட்டிற்கு முன்னதாக ஜாங் டெஜியாங், போ ஜிலைக்குப் பதிலாக அங்கு அனுப்பப்பட்டார். பிந்தையவர் சோங்கவிங் பிராந்திய கட்சி செயலர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். மாநாட்டில் ஜாங் நிருபர்களிடம் பின்வருமாறு கூறினார்:சோங்க்விங் மாதிரி என்பது இல்லை. உலகச் சரிவு ஆழ்ந்திருக்கும் நிலைமையில் போவின் மாதிரிகுறைந்தபட்ச சமூகநலத் திட்டங்களுக்கு செலவு செய்தலுக்கு ஏற்றுமதி மூலமான முறை பயனற்றுப் போயிற்று. சோங்க்விங் மாநிலப் பொறுப்பை அவர் எடுத்துக் கொண்டபோது, அம்மாநிலத்தில் மொத்தம் 80 பில்லியன் டாலர்கள் என மிகஅதிக கடன்கள் இருந்தன. சோங்க்விங்கில் சீர்திதிருத்தம், திறந்துவிடல்என்னும் சந்தைச் சார்புக் கொள்கையில் மாற்றம் இருக்காது என்று வலியுறுத்தினார். ஏனெனில் முக்கிய பணி செல்வத்தை பகிர்ந்து கொள்ளுதல் என்பது இல்லை, மாறாக பொருளாதாரத்தை வளர்த்தல் என்பதாகும்.

1990களில் மற்றும் 2000 ஆரம்ப ஆண்டுகளிலும் ஜெஜிலாங் மாநிலப் பொறுப்பை கொண்டிருந்தபோது, அவருடைய விரும்பியதை செய்யவிடு உடைய பொருளாதாரக் கொள்கை மற்றும் இரும்புக்கரம் கொண்டு தொழிலாளர்களை அடக்குவது ஆகியவற்றிற்கு ஜாங் நன்கு அறியப்பட்டிருந்தார். குவாங்டோங்கில் அவர் 2002ம் ஆண்டு ஏற்பட்ட SARS எனப்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் நோய் வெடித்ததை மூடி மறைத்தார். இது உலகத் தொற்றாக மாறியது. பல வெகுஜன கிராமப்புற எதிர்ப்புக்களை அவர் வன்முறையை பயன்படுத்தி அடக்கினார். இவற்றுள் ஷாங்வெல்லில் 2005ம் ஆண்டு 20 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதும் அடங்கும்.

ஷென்ஜென் விமான நிறுவனத்தை சூறையாடியதில் ஜாங் தொடர்பு கொண்டார் எனக் கூறப்படுகிறது. அதிகம் அறியப்படாத ஒரு வணிகரை அவர் சீனாவின் மிகப் பெரிய விமான நிறுவனத்தின் பொறுப்பை 2005ல் ஏற்க வைத்தார். 2009 ஐ ஒட்டி, ஷென்ஜென் விமான நிறுவனம் திவாலாகி, கிட்டத்தட்ட 16 பில்லியன் டாலர் கடனை கொண்டிருந்தது. அதே நேரத்தில் மிகப் பெரிய நிதிகள் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.

யு ஜெங்ஷெங் கட்சி மாநாட்டில் நிருபர்களிடம் அவருடைய சொத்துக்கள் குறித்த விவரங்களைப் பகிரங்கமாக்குவதில் பிரச்சினை இல்லை, “ஏனெனில் என்னிடம் அதிக சொத்துக்கள் இல்லை என்றார். உண்மையில் சொத்துக்கள், வணிகங்கள் தொடர்பான ஊழல்களுக்கு அவர் மிக இழிந்த பெயர் பெற்றுள்ளார்.

அவருடைய பெயரைக் குறிப்பிடாமல், சீனாவின் முக்கிய நிதிய ஏடான கைஜின், 2011ல் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் தொடர்புடைய ஊழல் இணைய தளத்தின் மூலம் ஒரு வணிகப் பெண்மணி 20 நிறுவனங்களைக் கட்டமைத்துள்ளார் எனத் தகவல் கொடுத்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அப்பெண்மணி நுழைந்தது யுவினாலாகும். அவர் ஹுபெய் மாநிலத்தின் கட்சிச் செயலராக 2001ல் இருந்தபோது இது நடந்தது. இதே ஏடு 2007ல் இரண்டு பெய்ஜிங் தளமுடைய தனியார் நிறுவனங்கள் ஷாங்டோங் மாநிலத்தின் மிகப் பெரிய அரசுக்கு சொந்தமான ஜாங்டோங் லுனெங் குழுவின் மின் நிறுவனத்தின் 91.6% பங்குகளை வாங்கினர் என்று குறிப்பிட்டது. அதன் மதிப்புக்கள் 73.8 பில்லியன் யுவான் ஆக இருந்தது. பங்குகள் 3.75 பில்லியன் யுவனுக்கே வாங்கப்பட்டன. இந்த சந்தேகத்திற்குரிய செயலின் முக்கிய நபர்களில் ஒருவர் யு தான்.

2007ல் ஷாங்காய் கட்சிச் செயலராக யு நியமிக்கப்பட்டபின், அவருடைய நிர்வாகம் ஷாங்காய் உலக எக்ஸ்போ, டிஸ்னிலாந்து, பெய்ஜிங் ஷாங்காய் விரைவு வேக இரயில்வே ஆகிய திட்டங்களுக்காக கணக்கிலடங்கா வசிக்கும் இல்லங்களைத் தரைமட்டமாக்கியது. இது அந்நிறுவனங்களுக்கும் பெருவணிகங்களுக்கும் பெரும் இலாபங்களைக் கொடுத்தன.

லியு யுன்ஷான் 2002ம் ஆண்டில் இருந்து பிரச்சாரத் துறையில் பெரும் வெறுப்பிற்குட்பட்ட தலைவராக இருந்து வருபவர். சீனாவின் இணைய தள பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 600 மில்லியன் என்று வளர்ந்தபோது தணிக்கை முறையைக் கடுமைப்படுத்தி ஜனாதிபதி ஹுவின் திட்டமான இணக்கமான சமுதாயத்தை கட்டமைப்பு என்பதை அவர் செயல்படுத்தினார். இணையத்தை தடை செய்வதற்கு இணக்கப்படுத்துதல்என்ற புதிய வார்த்தை பிரயோகம் கண்டுபிடிக்கப்பட்டது.

2003ம் ஆண்டு, லியு அரசாங்கத்தின் சொந்த செய்தித்தாளான பெய்ஜிங் நியூஸை சீனாவின் முதல் கூட்டுப் பங்கு நிறுவனமாக முதலாவதாக மாற்ற வாதாடினார். இது செய்தி ஊடக மறுகட்டமைப்பு அலைக்குத் தலைமை தாங்கிய செயல் ஆகும். 2009ல் அவர் சீனவின்சர்வதேசக் கருத்து வளர்க்கும் ஆக்கிரோஷத் தேசியவாத பிரச்சாரத்தை தொடக்கி, CNN மாதிரியிலான 24 மணி நேர ஆங்கிலச் செய்தி ஒளிபரப்பப்படுவதையும் சைனா டெய்லி  பத்திரிகையின் அமெரிக்க பதிப்பையும் தொடக்கினார்.

39 வயதான லியுவினுடைய மகன் லியு லெபல், சமீபகாலம் வரை CITCI தனியார் பங்கு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தலைவராகவும் இருந்தவர். அவர் தன்னுடைய தந்தையின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பெரும் சொத்துக்களை குவித்தார்.

துணைப் பிரதமர் வாங்க் க்விஷாங் முக்கியத்துவத்தில் உயர்ந்தது அவர் முன்னாள் அரசியற்குழு உறுப்பினர் யாவோ யில்லிங் உடைய மருமகன் என்பதால்தான். 1989ம் ஆண்டு தியானன்மன் சதுக்க எழுச்சியின் நடுவே பிரதமர் லி பெங் அமைதியின்மையை அடக்க இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதற்கு யாவோ ஆதரவு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, வாங்க் சீனா ஒரு மாபெரும் குறைவூதியத் தொழிலாளர் அரங்கு எனத் திறந்துவிடப்பட்ட நிகழ்வை விரைவுபடுத்தியதில் தொடர்பு கொண்டிருந்தார்; இதில் 1990களின் தனியார்மயங்கள், பல மில்லியன் வேலைகளை அழித்ததும் அடங்கும்.

2008 உலக நிதிய நெருக்கடியின்போது, வாங்க் இன்னும் அமெரிக்க அரசாங்கக் கடன் பத்திரங்களை வாங்குவதற்கு ஆதரித்தார். அவை வால் ஸ்ட்ரீட் பிணையெடுப்புக்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. புஷ் நிர்வாகத்தின் நிதி மந்திரி ஹென்றி பௌல்சன், கோல்ட்மன் சாஷ்ஸ் உடைய முன்னாள் தலைமை நிர்வாகியாகவும் இருந்தவர், டைம் ஏட்டில் வாங்கை 2009ல் பாராட்டினார்.சந்தைகள், உலகப் பொருளாதாரம் பற்றிய அறிதலுக்கு சீனத் தலைவர்கள் இவரைத்தான் தகவல் கொடுப்பதற்கு எதிர்பார்க்கின்றனர். இதன் விளைவாக சீன நம் மூலதனச் சந்தைகளை செயல்படுத்தும் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுக்கிறது. இதனால்  சீனாவை உலகில் இருந்து தனிமைப்படுத்தும் பொருளாதாரச் சீர்திருத்தம் அகற்றப்பட வேண்டும் என்று வாதிடுபவர்களுக்கு இணங்கவில்லை.

முன்னாள் டியன்ஜிங் கட்சிச் செயலர் ஜாங் காவோலி ஷாங்காய் பிரிவின் உபகுழுவான எண்ணெய் கும்பலில் இருந்து வருபவராவர். அது முன்பு போவிற்கு நெருக்கமாக இருந்தது. இப்பிரிவு உலகம் முழுவதும் எண்ணெய், எரிபொருளுக்கு தேடும் எண்ணெய் பெருநிறுவனங்களின் நலன்களை பிரதிபலிக்கிறது. இதனால் சீனாவிற்கும் மற்ற சக்திகளுக்கும், குறிப்பாக அமெரிக்காவிற்கும், பூகோள-அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

ஜியாங் ஜெமின் குடும்பம் ஹாங் கொங்கின் மிகப்பெரிய பில்லியனரான லி கா ஷெங் குடும்பத்துடன் சிறப்பு உறவை நிறுவ ஜாங் உதவினார் என்ற வதந்திகள் உள்ளன. 2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஜாங் அப்பொழுது கட்சியின் செயலராக ஷென்ஜென்னில் இருந்தார். லி அவருடைய மகனின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலம் சைனா நெட்காம் என்று ஜியங்கின் மூத்த மகன் நடத்தும் நிறுவனத்திற்குக் 50 பில்லியன் யுவனை (அமெரிக்க 8 பில்லியன் டாலர்) கொடுத்தார். இதற்கு ஈடாக அவருக்கு அதிகம் விரும்பப்பட்ட பெய்ஜிங்கில் நிலங்கள் கிடைத்தன. ஜாங்கின் மகள் ஹாங்காங்கின் கண்ணாடிச் சீமான் லி ஜியன்யி உடைய மகனைத் திருமணம் செய்துள்ளார். அவர் சீனாவின் நிலப்பகுதியில் மிகப் பெரிய கண்ணாடி உற்பத்தி வணிகங்களில் ஒன்றிற்கு உரிமையாளர் ஆவார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாம்தலைமுறை சீனாவின் புதிய முதலாளித்துவத்தின் பல அடுக்குகளைப் பிரதிபலிக்கிறது. இதில் மேலை நிதிய மூலதனத்திற்கு பணிபுரியும் தரகுமுதலாளித்துவ பிரிவுகள் மற்றும் சீனாவிற்கு உலக அரங்கில் கூடுதல் பங்கை நாடும் தேசியவாதப் போக்குகளும் இடம் பெற்றுள்ளன. தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எத்தகைய சவால் வந்தாலும், இவர்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, முதலாளித்துவ ஒழுங்கையும் தங்கள் அதிகாரம், செல்வம் ஆகியவற்றை பாதுகாக்கவும் பொலிஸ்-அரச அடக்குமுறைக்கு ஒன்றுபட்டு ஆதரவு கொடுப்பர்.