சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Tensions at ASEAN summit over South China Sea

ஆசியான் உச்சிமாநாட்டில் தென்சீனக்கடல் குறித்து அழுத்தங்கள்

By Peter Symonds
 21 November 2012
use this version to print | Send feedback

சீனாவிற்கும் அதன் தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கும் இடையே உள்ள தென்சீனக் கடல் பகுதி மோதல்கள் இந்த வாரம் கம்போடியாவில் ஆசியான் (ASEAN -தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு) ஏற்பாடு செய்துள்ள உச்சி மாநாடுகளில் முக்கிய பகுதியைப் பிடித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்னோ அக்வினோ, உச்சிமாட்டினை நடாத்தும் நாடான கம்போடியா ஞாயிறன்று விடுத்த அறிக்கை ஒன்றை எதிர்த்துள்ளதை அடுத்து அழுத்தங்கள் கிளர்ந்தெழுந்துள்ளன. அந்த அறிக்கையில் ஆசியான் நாடுகள் தென்சீனக்கடல் மோதல்களை இப்பொழுது முதல் சர்வதேச விவகாரம் ஆக்க வேண்டாம் என்ற ஒரு உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை சீனாவின் வலியுறுத்தலான கடற்பகுதி மோதல்கள் இருதரப்புப் பேச்சுக்களின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்ற வழிவகையை ஒட்டி உள்ளது. கம்போடியா பெய்ஜிங்குடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது.

ஆசியான் தலைவர்கள் ஜப்பானியப் பிரதம மந்திரி யோஷிஹிடோ நோடாவுடன் திங்களன்று நடத்திய கூட்டம் ஒன்றில், அக்வினோ ஒரு உடன்பாடு அடையப்பட்டுள்ளது என்று கூறப்பட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அறிவித்தார்: பதிவுச் சான்றிற்காக, இது எமது விளக்கமில்லை. ஆசியான் வழி ஒன்றுதான் எங்களுக்கு ஒரே வழி இல்லை. இறைமை பெற்ற நாடு என்னும் முறையில் எங்கள் தேசிய நலன்களைக் பாதுகாக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவுடன், பிலிப்பைன் அரசாங்கம அது இப்பொழுது மேற்கு பிலிப்பைன் கடல் என்று அழைக்கும் பகுதியில் அதன் பிராந்திய  உரிமைகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது இந்த ஆண்டு சீனாவுடனான ஆபத்தான மோதலில் பிரச்சனைக்குட்பட்ட ஸ்கார்பாரோ கடல்படுகை குறித்து விளைவித்தது.

விவாதத்தை மட்டுப்படுத்தும் கம்போடியாவில் முயற்சிகளை சவால்விடும் வகையில் நோடாவும் குறுக்கிட்டார். ஒரு ஜப்பானிய அறிக்கை கூறுகிறது: பிரதம மந்திரி நோடா தென்சீனக் கடல் பிரச்சினையை எழுப்பி, இது சர்வதேச சமூகத்திற்குப் பொதுவான அக்கறை என்று குறிப்பிட்டு, ஆசிய-பசிபிக்கின் அமைதி மற்றும் உறுதிப்பாட்டில் நேரடிப் பாதிப்பைக் கொடுக்கும் என்ற தன் கவலையை தெரிவித்தார்.

இம்மோதல்களில் முதல் தடவையாக ஜப்பான் ஈடுபடுவது, சீனாவின் முயற்சிகளான தென்சீனக் கடல் நாடுகளுடன் பிரச்சினையை மட்டுப்படுத்துவது என்ற நிலைப்பாட்டில் குறுக்கிடுகிறது. நோடாவின் குறுக்கீடு அவருடைய உள்நாட்டுப பார்வையாளர்களுக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. அடுத்த மாதம் தேர்தல் வருகையில், ஆளும் நோடாவின் ஜப்பானிய ஜனநாயகக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் தேசிய உணர்வைத் தூண்டி, கிழக்கு சீனக்கடலில் சென்காகு (டயவோயு) தீவுகள் குறித்த ஜப்பனின் சொந்தமோதலிலும் கவனத்தைக் காட்டுகின்றன.

பிலிப்பைன் ஜனாதிபதி அக்வினோ பின்னர் சீனாவுடன் கடற்பகுதிப் மோதல்களில் தொடர்புடைய வியட்நாம், மலேசியா, ப்ரூனே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நான்கு நாடுகளுக்கும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதாகக் கூறினார். எங்கள் நிலைப்பாடு எப்பொழுதுமே ஒரு பலதரப்புப் பிரச்சினைக்கு இருதரப்பு அடிப்படையில் தீர்வு இல்லை என்பதுதான் என்று அவர் அறிவித்தார்.

ஜூலை மாதம் கம்போடியாவிற்கும் பிலிப்பைன்ஸிற்கும் தென்சீனக்கடல் குறித்து ஒரு ஆசியான் கூட்டத்தில் எழுந்த தீவிர வேறுபாடுகள், முதல் தடவையாக இந்த அமைப்பு இறுதி அறிக்கை ஒன்றை வெளியிட முடியாமல் செய்துவிட்டது.

நேற்று ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆசியான் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பங்கு பெற்றார். இது அவர் தாய்லாந்து, பர்மா மற்றும் கம்போடியா என்ற மூன்று நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அமெரிக்க துணைத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸின் கருத்துப்படி ஒபாமாவின் தகவல் அழுத்தங்களில் குறைப்பு தேவை... குறிப்பாக உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களான சீனாவும் ஜப்பானும் இம்மோதல்கள் சிலவற்றில் தொடர்பு கொண்டிருக்கையில் மோசமடையும் சாத்தியமான அபாயம் பற்றி கவலை எதுவும் இல்லை, என்பதே எனக் கூறினார்.

ஒரு நிதான ஒலிக் குரல் கொடுப்பவர் என்று ஒபாமா காட்டிக் கொள்ளுவது முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். சீனா தொடர்புடைய அனைத்து பிராந்திய மோதல்களையும் எரியூட்டுவதில் ஒபாமா நிர்வாகம் தன் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கு ஆதரவைக் கொடுப்பதின் மூலம், கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதில் நேரடிப் பொறுப்பைக்கொண்டுள்ளது. அமெரிக்க வெளிவிவகாரச் செயலர்  ஹில்லாரி கிளின்டன் 2010ல் ஒரு ஆசியான் உச்சிமாநாட்டில் அமெரிக்காவிற்கு தென்சீனக்கடல் மூலம் சுதந்திரமாக கடலில் செல்லும் உரிமையை அடைவதில் ஒரு தேசிய அக்கறை உள்ளது என்று கூறி, பிரச்சினை குறித்து பேச்சுக்களில் மத்தியஸ்தம் செய்யத்தயார் என்றும் கூறினார்.

பின்னர், நீர்நிலைப் பிரச்சினைகளில் அமெரிக்கா நடுநிலை வகிக்கும் என்று அறிவித்தும், அமெரிக்க அதிகாரிகள் பகிரங்கமாக வாஷிங்டன் ஜப்பானுக்கு சீனாவுடன் சென்காகு (டயவோயு) தீவுகள் குறித்து மோதல் வந்தால், ஜப்பானுக்கு ஆதரவளிக்கும் என்றும் கூறினர். இந்த கடற்பகுதி மோதல்களை ஒபாமா நிர்வாகம் சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே பிளவை ஏறபடுத்தும் வசதியான கருவியாகப் பயன்படுத்தி, பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்தும் வகையில் பெய்ஜிங் மீது அழுத்தம் கொடுத்துள்ளது.

தென் கிழக்கு ஆசியாவின் கடல் பாதைகள் மீதான கட்டுப்பாடு என்பது ஒபாமா நிர்வாகத்தின் பரந்த ஆசியாவில் முன்னிலை என்பதின் முக்கியக் கூறுபாடு ஆகும். இது அமெரிக்க உடன்பாடுகளை வலுப்படுத்தி, ஆசியா முழுவதும் இராணுவ கூட்டுக்களையும் வலுப்படுத்தி சீனாவைக் கட்டுப்படுத்தும் ஒரு இராஜதந்திர மற்றும் மூலோபாயத் தாக்குல் ஆகும்.

ஆசியான் தலைவர்களுடன் ஒபாமா தன் தனிப்பட்ட பேச்சுக்களையும் நடத்தி, மீண்டும் தென் சீனக் கடலில் ஒரு பிராந்திய நெறிமுறை விரைவில் முடிவாக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் பெய்ஜிங் இன்னமும் இருதரப்பு ஏற்பாடுகளுக்குத்தான் அழுத்தம் கொடுக்கிறது. சீன மற்றும் ஆசியான் தலைவர்களை ஞாயிறன்று நடத்தை நெறிமுறை குறித்து இன்னும் பேச்சுவார்த்தைகள் வேண்டும் என்று உடன்பட்டாலும், சீனாவின் வெளியறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த நிகழ்போக்கு சற்று காலமெடுக்கும் என்று அறிவித்தார்.

இந்த பிராந்திய மோதல்கள் மட்டுமே வாஷிங்டனால் தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் செலவாக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தப் பயன்படுத்தப்படவில்லை. உச்சிமாநாட்டில் கம்போடியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து உள்ளடங்கிய கீழ் மெகோங் முன்னெடுப்பு இல் (Lower Mekong Initiative) ஈடுபட்டுள்ள நாடுகளின் தலைவர்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க நேரம் ஒதுக்கினார். 2010ல் ஆரம்பிக்கப்பட்ட லோயர் மெகோங் முன்னெடுப்பு இக்குழுவிற்கும் சீனாவிற்கும் இடையே நீர்ப்பயன்பாடு, மேலை மெகோங் ஆற்றில் அணை கட்டுதல் குறித்த கருத்து வேறுபாடுகளை தமக்குசாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கருவியாகும்.

அமெரிக்க-சீனப் போட்டி வணிகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளிலும் மேல்வந்துள்ளது.

உச்சிமாநாட்டைப் பயன்படுத்தி ஒபாமா பசுபிக்கிற்கு இடையிலான கூட்டுழைப்பு (TPP) எனப்படும் வாஷிங்டன் விரும்பும் பிராந்திய வணிகக் குழுவை வளர்க்க முற்பட்டார். இது அமெரிக்க பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய நிறுவனங்களுடன் சார்புடையது. TTP யின் நாடுகளுக்கிடையிலான காப்புவரிக் குறைப்புக்கள் இன்னும் பிற பாதுகாப்பு முறைகளில் தனது முன்கவனத்தை காட்டுகின்றது. குறிப்பாக இது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களை இலக்கு கொண்டுள்ளது. TTP பெரும்பாலான ஆசிய நாடுகளை அடக்கியிருக்கவில்லை என்றாலும், அமெரிக்கா அதன் முக்கிய நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா போன்றவற்றை இதில் சேருமாறு வலியுறுத்துகிறது. வாஷிங்டனின் நோக்கம் சீனாவை ஒதுக்குவது அல்லது அங்குள்ள புதிய பொருளாதாரப் பகுதிகளை அமெரிக்க முதலீட்டாளர்களுக்குத் திறக்குமாறு கட்டாயப்படுத்துவது என்று உள்ளது.

தற்பொழுது TPP சிங்கப்பூர், ப்ரூனே, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நான்கு ஆசியான் நாடுகளைத்தான் கொண்டுள்ளது. US-ASEAN Expanded Economic Engagement (அமெரிக்க ஆசியான் விரிவாக்கப்பட்ட பொருளாதார ஈடுபாடு) என்ற புதிய முயற்சியை ஒபாமா கோடிட்டுக் காட்டினார். இதனால் வணிகம் மற்றும் முதலீட்டு உறவுகள் அனைத்து 10 ஆசியன் நாடுகளுடனும் விரிவடையும் என்பதுடன், அவற்றை TTP யில் சேர ஊக்குவிக்கப்படும்.

அமெரிக்காவின் முன்மொழிவு உச்சிமாநாட்டிற்கு இணையாக விவாதிக்கப்படும் பல போட்டி வணிகத் திட்டங்களில் ஒன்றாகும். இவற்றில் ஆசியான் நாடுகளுக்கும் அதன் தற்போதைய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் (FTA) பங்காளிகளான ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, தென் கொரியா, நியூசிலாந்து ஆகியவற்றிற்கும் இடையேயான RECEP என்னும் பரந்த பிராந்திய பொருளாதார கூட்டுழைப்பு என்ற ஒரு முன்மொழிவும் அடங்கும். குறிப்பாக அமெரிக்கா இதில் இருந்து விலக்கிவைக்கப்படும்.