World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama’s trip intensifies US push into South East Asia

ஒபாமாவின் பயணம் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க உந்துதலை தீவிரமாக்குகிறது

By Peter Symonds
20 November 2012
Back to screen version

தனது இரண்டாம் பதவிக்காலத்தை பெற்ற இரு வாரங்களுக்குள்ளேயே, ஜனாதிபதி ஒபாமாவின் முதல் வெளிநாட்டுப் பயணம் தென்கிழக்கு ஆசியாவிற்கு தன்னுடைய நிர்வாகத்தின் ஆசியாவில் முன்னிலை என்னும் திட்டத்தை அவர் ஆக்கிரோஷமாக தொடரும் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மூன்று நாட்களில் ஒபாமா தாய்லாந்து, பர்மா (மயனமர்) மற்றும் கம்போடியாவிற்கு பயணத்திருந்தார்; கடைசி இடத்தில் அவர் கிழக்கு ஆசிய அரங்கு என்று -தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)- ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வார்.

பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி பர்மாவிற்கு செல்வதும், அமெரிக்க ஜனாதிபதி முதல் தடவையாக கம்போடியாவிற்குச் செல்வதும் ஒபாமாவின் பயணத்திலுள்ள அரசியல், மூலோபாய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆசியான் உச்சிமாநாட்டை ஒட்டி பயண நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தென் கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா குவிப்புக் காட்டுவது, சீனாவின் நிலைமையை ஆசியா முழுவதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட பரந்த தந்திரோபாய தாக்குலின் ஒரு பகுதியாகும்.

இந்நாடுகள் அனைத்தும், குறிப்பாக பர்மாவும் கம்போடியாவும், சீனாவுடன் நெருக்கமான பொருளாதார, இராணுவத் தொடர்புகளைக் கொண்டவை. ஒபாமாவின் வருகை இந்நாடுகளை ஈர்த்தல், அழுத்தம் கொடுத்தல், மிரட்டல் எனச் செய்து அவற்றை பெய்ஜிங்கில் இருந்து ஒதுக்கி, வாஷிங்டனுடன்குறிப்பாக இராணுவத் துறையில் நெருக்கமாக ஈடுபட வைத்தல் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேற்று பர்மாவிற்கு ஒபாமாவின் 6 மணி நேர வருகை, நாட்டின் இராணுவ ஆதிக்கம் கொண்ட அரசாங்கம் அமெரிக்காவை நோக்கி இன்னும் தப்படிகள் எடுக்க வைக்க ஊக்கம் கொடுக்கும் நோக்கத்துடன் பட்டியிலிடப்பட்டிருந்தது இவை அனைத்தும் அவநம்பிக்கைத்தன்மை நிறைந்த ஜனநாயகம் என்னும் பதாகையின்கீழ். அவர் வேண்டுமென்றே இராணுவத்தின் புதிய காட்சிக் கூடம் போன்ற நய்பிய்டா தலைநகரத்திற்குச் செல்லவில்லை; மாறாக ஜனாதிபதி தீன் சீன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்சான் சுயூ கீயை முன்னாள் தலைநகரான ரங்கூனில் (யாங்கோன்) சந்தித்தார்.

ஒபாமா பர்மாவிற்குச் செல்லக்கூடாது என பல மனித உரிமைகள் அமைப்புக்கள் கூறியவற்றை அவர் உதறித்தள்ளினார்; அந்த அமைப்புக்கள் எப்படி அரசியல் கைதிகள் தொடர்ந்து காவலில் உள்ளனர் என்பதையும் பர்மாவின் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையையும் சுட்டிக் காட்டியிருந்தன. தன்னுடைய பயணம் ஒன்றும் பர்மிய ஆட்சிக்கு ஒரு ஒப்புதல் அல்ல என்றும், ஜனநாயகம் குறித்த அதன் முன்னேற்றத்தை ஒப்புக் கொள்வதுதான் என்றும் அவர் அறவித்தார். பர்மா உகந்த இடத்திற்கு வந்துவிட்டது, அவர்கள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு உள்ளார்கள் என்ற போலித் தோற்றத்தை எவரும் கொள்ள வேண்டாம் என்று அவர் செய்தி ஊடகங்களிடம் கூறினார்.

உண்மையில் கடந்த ஆண்டில் ஒரு தீண்டத்தகாத அரசு என்பதில் இருந்து வெளிப்பட்டு வரும் ஜனநாயகம் என்று பர்மா மாறியுள்ளது ஆட்சியின் மிகக் குறைந்த சீர்திருத்தங்களுடன் கூட எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. சூ கியி மற்றும் அவருடைய NLD எனப்படும் தேசிய ஜனநாயக லீக் ஐ தேர்தலில் பங்கு பெற அனுமதித்தும், பர்மிய இராணுவம் பாராளுமன்றத்தின் மீது முழுக்கட்டுப்பாட்டையும் உறுதியாகக் கொண்டுள்ளது, அதேபோல் அரச கருவிகள் ஒவ்வொன்றின்மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. அமெரிக்கா காணவிரும்பும் படிகள் என்பது இராணுவப் பிணைப்புக்கள், அமெரிக்கப் பெருநிறுவனங்களுக்கான முதலீட்டு வாய்ப்புக்கள்தான்.

ஒபாமாவின் பயணம் இந்த புவி-அரசியல் உறவுகளுடைய மாற்றத்திற்கு அடிப்படையான ஜனநாயக மறைப்பைக் கொடுத்துள்ளது. ஆட்சிக்கு ஒப்புதல் கொடுத்த சூ கியியை ஒபாமா சந்தித்தது சீர்திருத்தம் என்னும் போலிச் சொற்களைத் தக்க வைப்பதற்கு முக்கியமாகும். ரங்கூன் பல்கலைக்கழகத்திலும் அவர் உரையாற்றி, ஜனநாயகத்தை நோக்கிய தப்படிகள் என்பவற்றைப் பாராட்டி, மற்ற நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க ஊக்கம் கொடுத்தார். குறிப்பாக சீனாவின் நட்பு நாடாகிய வட கொரியாவை அவர் இதையொட்டி பெயரிட்டார்.

தீன் சீன் உடனான விவாதங்களில் ஒபாமா, பர்மாவுடன் மீண்டும் பழைய உறவுகளைக் கொள்ள விரும்பும் அமெரிக்காவின் அடிப்படை நோக்கத்தை சுட்டிக்காட்டினார். நாடு இன்னும் மேற்கத்தைய முதலீட்டிற்கு திறக்கப்பட அவர் அழைப்புக் கொடுத்து, அது நம்ப முடியாத அளவிற்கு வளர்ச்சி வாய்ப்புக்களை கொடுக்கும் என்றும் அறிவித்தார். ஏற்கனவே அமெரிக்க, பர்மா மீதான பல பொருளாதாரத் தடைகளை அகற்றிவிட்டது; USAID பர்மாவிற்கு மீண்டும் வரும் என்றும் ஒபாமா அறிவித்தார். கோக்கோ கோலா மற்றும் விசா உட்பட முக்கிய அமெரிக்க பெருநிறுவனங்கள் நாட்டின் குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு, மூலப் பொருட்களை பயன்படுத்த தயாராக உள்ளன என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதக் கடைசியில், ஓர் உயர்மட்ட அமெரிக்க இராணுவ, சிவிலிய தூதுக் குழு பர்மிய அமைப்புக்களுடன் தலைநகர் நய்பியிடாவில் பேச்சுக்களை நடத்தியது. பெயரளவிற்கு ஒரு மனித உரிமைகள் உரையாடல் எனப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ உறவுகளை புதுப்பிப்பதுதான். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் கோல்ட் கோப்ரா போர் விளையாட்டுக்களை காண அதன் இராணுவ பார்வையாளர்கள் அழைக்கப்படுவர் என்று பரந்த முறையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் பிற ஆசிய நாடுகள் கலந்து கொள்கின்றன.

பர்மாவுடன் பென்டகன் கொண்டுள்ள ஈடுபாடு, பிராந்தியம் முழுவதும் அமெரிக்க உடன்பாடுகளையும் இராணுவப் பங்காளித்தனத்தையும் வலுப்படுத்தும் பரந்த மூலோபாயத்தின் ஒரு கூறுபாடு ஆகும். வாடிக்கையாக சீனாவைக் கட்டுப்படுத்த அல்லது சூழ்ந்து கொள்ள முயல்கிறது என்னும் கூற்றை மறுத்தாலும், ஒபாமா நிர்வாகம் அதைத்தான் செய்ய முயல்கிறது. இதில் தென்கிழக்கு ஆசியா ஒரு முக்கிய அங்கமாகும். சீனா நம்பியிருக்கும் எரிசக்தி, மூலப் பொருட்கள் இறக்குமதிகள் மத்திய கிழக்கு, ஆபிரிக்காவில் இருந்து அதற்கு வருவதற்கான முக்கிய கடல்பாதைகள் இங்கு உள்ளன.

பெய்ஜிங், பர்மாவை ஒரு மாற்றீட்டுப் பாதையாகப் பயன்படுத்த முற்படும் வகையில், பர்மாவின் இந்திய பெருங்கடலோரப் பகுதியில் துறைமுக வசதிகளைக் கட்டமைத்து, தென் சீனாவிற்கு தரைவழி போக்குவரத்துப் பிணைப்புக்கள், குழாய்கள் ஆகியவற்றையும் போட்டுள்ளது. பர்மாவுடன் அமெரிக்கா வளர்க்க இருக்கும் உறவுகள் இத்திட்டங்களை வெட்டிவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. கடந்த சனியன்று சிங்கப்பூரில் நிகழ்த்திய முக்கிய உரை ஒன்றில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன், சீனாவிற்காக என்று இல்லாமல் இந்தியா, வங்கதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றிற்கு இடையே போக்குவரத்துப் பாதையாக பர்மா செயல்படலாம் என வாஷிங்டன் ஊக்கம் கொடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமாவின் தென்கிழக்கு ஆசியப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் பலவும் கிளின்டனாலும் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டாவினாலும் செயல்படுத்தப்பட்டு விட்டன. இந்த உயர் அதிகாரிகள் ஜனாதிபதியுடன் வருகின்றனர் என்பது வெள்ளை மாளிகை தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உயர்த்திக் காட்டுகிறது.

தாய்லாந்திற்கு ஒபாமாவின் வருகை பெரும்பாலும் சடங்கு தன்மை வாய்ந்ததாகும். வாட் போ அரசுத் துறவியர் கூடத்திற்கு வருகை, மன்னர் பூமிபோல் அடுல்யதேஜுடன் சந்திப்பு, பிரதம மந்திரி யிங்லக ஷினவட்ராவுடன் விருந்து ஆகியவை இதில் அடங்கும். ஆனால் ஒபாமா வருகைக்கு முன்னர், பானெட்டா உயர்மட்ட தாய் அதிகாரிகளை கடந்த வியாழன் அன்று சந்தித்து தாய்லாந்துடன் ஒரு புதிய இராணுவ உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

இரு நாடுகளும் நீண்ட கால உடன்படிக்கையைக் கொண்டிருக்கையில், சமீபத்திய உடன்பாடு சீனாவில் இருந்து தாய்லாந்தை ஒதுக்கும் முயற்சி ஆகும். தாய் இராணுவத்தை இன்னும் வளர்க்க, ஏற்கனவே சிறப்பாக உள்ள திறனகளை வளர்க்க, அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது; இதையொட்டி இப்பிராந்தியத்தில் அது கூடுதலான பாதுகாப்புப் பொறுப்புக்களை கொள்ள முடியும். என்று பானெட்டா கூறினார்.

இதன்பின் பானெட்டா கம்போடியவிற்குச் சென்றார்; அங்கு அவர் அமெரிக்க தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் அதிகமாகக் கலந்து கொள்ளும் என்றும் கூறினார். அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் மறு சமச்சீர் செய்யப்படுவது தக்க வைக்கக் கூடியதுதான், நீண்டகாலத்திற்கு அது தொடரும் என்றார், அமெரிக்க மறு சமச்சீர் என்பது இதுவரை பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை தென்சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான அவற்றின் உரிமைகளை வலியுறுத்த ஊக்கம் கொடுத்துள்ளது. இது அழுத்தங்களில் ஆபத்தான ஏற்றத்தைக் கொடுத்துள்ளது.

சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்ட கம்போடியாவில், பென்டகன் ஏற்கனவே பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது; இங்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என்றாலும்கூட அமெரிக்கச் சிறப்புப் படைகள் பிரிவினால் அளிக்கப்படுகிறது. பயிற்சி அதிக ஆரவாரமின்றி நடந்தாலும், இது வாஷிங்டனை கம்போடிய ஜனாதிபதி ஹுன் சென்னின் மகன்களுடன் உறவுகளை நிறுவ உதவியுள்ளதுஅவர்களில் இருவர் அமெரிக்காவில் இராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டனர்.

ஒபாமாவின் பர்மா பயணத்தில் செய்தி ஊடகங்களின் கவனம் இருந்தாலும், கம்போடியாவிற்கு அவர் பயணித்தது, ஹுன் சென் ஆட்சி பெய்ஜிங்கில் இருந்து இதேபோல் நகர்வதற்கான அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டது. ஒபாமா நேற்று கம்போடிய ஜனாதிபதியை சந்தித்தார்; இதில் அழுத்தம் நிறைந்த விவாதங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது; மனித உரிமைகள் குறித்து இது குவிப்புக் காட்டியது. ஹுன் சுன்னிடம் இவர் பர்மாவை பின்பற்றுமாறு வெளிப்படையாகக் கூறினார், பர்மாவில் வியத்தகு மாற்றம் தொடங்கிவிட்டது என்றும் கூறினார்.

ஒபாமா கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கு பெறவும் பிற ஆசியத் தலைவர்களையும் இன்று சந்திக்க உள்ளார். தென் சீனக் கடல் குறித்துத் தீவிரமான அழுத்தங்கள் எழுந்துவிட்டன; சீனா நிகழ்ச்சி நிரலில் இருந்து பிரச்சினைகளை ஒதுக்க முற்படுகிறது; பிலிப்பைன்ஸ், வியட்நாம் இரண்டும் ஜப்பானுடன் சேர்ந்து சீனாவிற்கும் ஆசியான் க்கும் முறையான விவாதம் தேவை என அழுத்தம் கொடுக்கின்றன. இந்த வேறுபாடுகளை அமெரிக்கா வேண்டுமென்றே அதிகரிக்கிறது; இதுதான் ஒபாமாவின் முன்னிலையில் உள்ள ஆபத்தான மோதல் போருக்கு வழிவகுக்கும் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.