WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Stop
the massacre in Gaza!
காசாவில் படுகொலைகளை நிறுத்து!
Bill Van
Auken
20 November 2012
இரண்டாவது
வாரமாக தொடரும் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய
குடிமக்களை —ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என— கொன்றுள்ளது, மற்றும் உடல்
உறுப்புக்களைச் சிதைத்துள்ளது. பெரும்பாலும் பாதுகாப்பற்ற, பெரும் இழப்புக்களில்
உள்ள மக்கட்தொகை இடைவிடாமல், வான், நில மற்றும் கடல்வழித் தாக்குதலுக்கு
உட்பட்டுள்ளது. நிலப்பகுதியின் பெரும்பகுதிகள், ஏற்கனவே சிதைந்த உள்கட்டுமானங்களைக்
கொண்டவை, இப்பொழுது தரைமட்டமாகிக் கொண்டிருக்கும் கட்டிடங்களைத்தான் கொண்டுள்ளது.
தாக்குதல்
இலக்குகளுக்குள் பள்ளிகள், அரசாங்க அலுவலகங்கள், சர்வதேச செய்தி ஊடகத்தின் காசா
நகரக் கட்டிடம், ஒரு காசா மளிகைக் கடைக்காரரின் வீடு ஆகியவை அடங்கும் —கடைசி நபரின்
முழுக்குடும்பமும்— நான்கு குழந்தைகள், 1 வயதில் இருந்து 7 வயதுவரை, நான்கு மகளிர்,
ஒருவருக்கு 83 வயது —ஞாயிறன்று ஒரு ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டது.
இஸ்ரேலிய
அரசாங்கம் 75,000 இருப்புப் படையினர் திரட்டப்படுவதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது;
அதே போல் காசா எல்லையில் டாங்குகளையும் திரட்டி வைத்துள்ளது; இது 2008-09 தரைப்படை
படையெடுப்பு மீண்டும் செய்யப்படுவதற்கான தயாரிப்புகள் ஆகும்; அப்படையெடுப்பு 1,400
காசா மக்களைக் கொன்றது; பெரும்பாலானவர்கள் சாதாரண குடிமக்கள் ஆவர்.
இப்போர்க்
குற்றங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களிடையே கொடூரக் கொலைகளைப் பற்றிச் சிந்திக்க
வைக்கையில், இஸ்ரேலியத் தலைமை, வாஷிங்டனில் ஒபாமா நிர்வாகம் மற்றும் பெருநிறுனச்
செய்தி ஊடகம் அனைத்தும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை “சுய பாதுகாப்பு உரிமை” என்று
நியாயப்படுத்த முற்பட்டுள்ளன.
ஞாயிறன்று
இக்கருத்தை ஜனாதிபதி ஒபாமா தாய்லாந்து பாங்காக்கில் செய்தியாளர் கூட்டத்தில்
வெளியிட்டார்: “தற்போதைய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு குறித்து நாம்
அறிந்து கொள்ள வேண்டும்; இடைவிடாமல் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது செலுத்தப்பட்டன; அவை
இஸ்ரேலியப் பகுதியில் மட்டும் விழவில்லை, அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில்
விழுந்தன. உலகில் எந்த நாடும் தன் மக்கள் மீது எல்லை கடந்து ஏவுகணைகள் பொழிவதைப்
பொறுத்துக் கொள்ளாது. எனவே நாங்கள் இஸ்ரேல், தம் மக்களின் வீடுகள், பணியிடங்கள்
மற்றும் குடிமக்களைக் கொல்லும் திறன் கொண்டுள்ள தாக்குல்களில் இருந்து தன்னைக்
காத்துக் கொள்வதற்கு முழு ஆதரவு தருகிறோம். தன்னைக் காத்துக்கொள்ளும் இஸ்ரேலின்
உரிமைக்குத் தொடர்ந்து நாங்கள் ஆதரவைக் கொடுப்போம்.”
ஒவ்வொரு
முறையும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் இஸ்ரேலிய நட்பு நாடும் செய்து வருவது போல்,
தற்போதும் காசா பற்றிய கருத்துக்கள பொய்கள், இழிந்த தன்மை மற்றும் பாசாங்குத்தனம்
நிறைந்தவை ஆகும்.
சமீபத்திய
மின்னல் வேகத் தாக்குதலை இஸ்ரேல் “எப்பொழுதும் பெருகிவரும் ஏவுகணைத் தாக்குதல்களை”
எதிர்கொள்வதற்கு என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும். காசாவில் தற்பொழுது
நடத்தப்படும் படுகொலைகளுக்கு முற்றிலும் ஓராண்டு முந்தைய காலத்தில், ஒரு இஸ்ரேலியர்
கூட பாலஸ்தினியப் பகுதியில் இருந்து தாக்கிய ஏவுகணையால் கொல்லப்படவில்லை. இஸ்ரேலிய
தாக்குதல்களுக்கு முந்தைய தினங்கள் இஸ்ரேலிய செய்தி ஊடகங்கள் ஒரு குறுகிய
காலத்திற்குப்பின், காசாவினுள் இஸ்ரேலிய ஊடுருவல்கள் மற்றும் குழந்தைகள் உட்படப் பல
குடிமக்கள் கொலை செய்யப்பட்ட பின்னர், ராக்கெட் தாக்குதல்கள் குறைந்து விட்டன என்று
குறிப்பிட்டதைத்தான் கண்டன.
இஸ்ரேலியர்களும் ஹமாஸ் தலைமையும் நீண்டக்கால போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில்,
எகிப்து தலையிட்டு நடத்திய விவாதங்களில், ஈடுபட்டிருந்தன. இப்பேச்சுக்களில் முக்கிய
பாலஸ்தீனிய பக்கத்தில் பங்கு பெற்றவர் ஹமாஸ் இராணுவப் பிரிவின் தலைவரான அஹ்மத்
ஜாபரி ஆவார். நவம்பர் 14ம் திகதி, உடன்பாட்டின் வரைவு ஒன்றைப் பெற்ற சில மணி
நேரங்களுக்குள் அவர் ஒரு ஹெல்பைர் ஏவுகணையால் தாக்கப்பட்டார்; இது இஸ்ரேலின் இழிந்த
“இலக்கு வைக்கப்பட்ட கொலைகள்” மீண்டும் தொடங்கியுள்ளன என்பதைக் காட்டியது.
இத்தகைய
நீதிக்குப் புறம்பான மரணதண்டனை வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நோக்கத்தில்
நடத்தப்பட்டது; இதுதான்
Operation Defense Pillar
உடைய
தொடக்கச் செயல் ஆகும்.
இது ஒன்றும்
“சுய
பாதுகாப்பு” நிகழ்வு அல்ல; உலகின் மிக அதிக ஆயுதம் கொண்ட நாடுகளில் ஒன்றின்,
மிக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அப்பட்டமான ஆக்கிரமிப்பாகும்.
ஒவ்வொரு
சூழ்நிலையிலும் இருப்பதுபோல், ஒபாமா ஒடுக்குபவரை ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக
ஆதரிப்பதற்கு விரைகிறார். இஸ்ரேலிய ஆட்சியின் இடைவிடாத சொற்களான “உலகில் எந்த
நாடும்” ராக்கெட் தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ளதாது என்பதை கிளிப் பிள்ளை போல்
மீண்டும் மீண்டும் கூறுகிறார்; ஆனால் காசா மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கும்
நிலைமைகளைப் போல் உலகில் எவர் பொறுத்திருப்பர் என்பதற்கு விடைகூறத் தயாராக இல்லை:
அதாவது 1.7 மில்லியன மக்கள், பெரும்பாலானவர்கள் தங்கள் நாட்டிலேயே வன்முறையில்
தங்கள் வீடுகளில் இருந்தும் நிலங்களில் இருந்து அகற்றப்பட்டு அகதிகள் போல்
இருப்பவர்கள், உலகின் மிகப் பெரிய திறந்த வெளிச் சிறையில் அடங்கியிருப்பவர்கள்,
கூறமுடியாத இடர்கள், பட்டினி இவற்றை ஏற்படுத்தும் முற்றுகைக்கு உட்பட்டு,
இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளின் தொடர்ந்த தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டுள்ளனர்.
இத்தகைய
பாலஸ்தீனிய உயிர்கள் இழப்பைப் பொருட்படுத்தாத் தன்மை, குறிப்பாக அமெரிக்கா மற்றும்
செய்தி ஊடகம் உள்ளநிலை அதிர்ச்சி தருவதாகும்; ஆனால் இப்பொழுதெல்லாம் இது
வியப்பைக்கூடத் தருவதில்லை. இஸ்ரேல் ஒரு தரைப்படைத் தாக்குதலை தொடங்காது,
அது இன்னும் பெரிய ஆபத்தான இஸ்ரேலிய இறப்புக்களை ஏற்படுத்தும், காசா மக்களை
குண்டுகள், ஏவுகணை தாக்குதல்கள் மூலம் நடத்தும் படுகொலைகளைத் தொடர்வதை விட என தான்
நம்புவதாக ஒபாமா கூறினார்.
காசாவில்
நடக்கும் தற்போதைய இரத்தக்களரி, 100 மைல்கள் கூட தொலைவு கூட இல்லாத சிரியாவில்
அமெரிக்க ஆதரவில் நடத்தப்படும் உள்நாட்டுப் போருக்கு இடையே வெளிப்பட்டுள்ளது.
ஆயினும் காசாவில் சிரியாவில் நடக்கும் குடிமக்கள் கொலைகள் பற்றி பரிவுணர்வைக்
காட்டுவது போன்ற செய்தி ஊடகத்தின் போலித்தன்மை இவ்விடயம் குறித்து இல்லை;
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக காலனித்துவவகை தலையீடு வெளிப்பட்டுள்ளது.
மேற்கில் எவரும் குடிமக்களைக் கொல்வதற்காக நெத்தென்யாகுவை அகற்ற வேண்டும் என்று
கோரவில்லை; இங்கும் பறக்கக் கூடாத பகுதியை நிறுவவோ, மனிதாபிமானத் தாழ்வாரங்கள்
இஸ்ரேலில் வேண்டும் என்றோ கூறவில்லை. மாறாக டெல் அவிவிற்கு மிகவும் கொடூரமான
குற்றங்களை செயல்படுத்துவதற்குத் தடையற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
காசாப்
படுகொலை,
அதன் நிலப்பகுதியில் இருந்து திறனற்ற ராக்கெட்டுக்கள்
அனுப்பப்படுவதில் இருந்து வரக்கூடிய ஆபத்தின் உத்துதலால் நிகழவில்லை. மாறாக
இஸ்ரேலின் நோக்கங்கள் இவற்றிற்கு அப்பால் வெளியிலும் அதேபோல் உள்ளும் அதன்
நோக்கங்களோடு காணப்படுகிறது.
காசா மீதான
தாக்குதல் இன்னும் பெரிய போர் ஒன்றிற்கான தயாரிப்பை நோக்கம் கொண்டுள்ளது. அதில்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானைத் தாக்கும். அந்த ஆக்கிரமிப்பு
ஈரானின் அணுச்சக்தி திட்டம் குறித்து பேச்சுக்கள் மூலம் உடன்பாடு வரும் திறனைத்
தகர்க்கும் என்று டெல் அவிவ் காண்கிறது; அதே நேரத்தில் ஈரான் மீதான தாக்குதல்
நடந்தால் காசாவிடம் இருந்து வரும் எதிர்ப்பை நடுநிலைப்படுத்தலாம் என்றும்
கருதுகிறது.
அதே
நேரத்தில் போருக்கான மாற்றம் என்பது இஸ்ரேலேயும் முழு சியோனிச திட்டத்தையும்
சூழ்ந்துள்ள பெருகிய உள் முரண்பாடுகளால் உந்தப்படுகிறது. பலரும் கடைசிப் போரைப்
போல் இப்போரும் ஒரு இஸ்ரேலிய தேர்லுக்கு முன் தொடக்கப்பட்டுள்ளது என்று
குறிப்பிட்டுள்ளனர்; தேர்தல் வாக்கெடுப்பு ஜனவரியில் நடக்க உள்ளது.
இராணுவ
வாதம்,
ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வெகுஜன ஆதரவை ஈர்க்கும்
ஒரு வழிவகை என்பது உண்மைதான். ஆனால் இஸ்ரேலைப் பொறுத்தவரை, இது உள்நாட்டில்
இருக்கும் சமூக மோதல்களில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதில் அடிப்படையான பங்கை
வகிக்கிறது.
இன்று
இஸ்ரேல் உலகிலேயே பெரும் சமுக சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாகும். ஒரு சமீபத்திய
அறிக்கை இஸ்ரேலியர்களில் முழுமையாக மூன்றில் ஒரு பகுதியினர்—மற்றும் நாட்டின்
குழந்தைகளில் 40%—
வறுமையில் விழும் ஆபத்தில் உள்ளனர் என்றும் அதே நேரத்தில் ஒரு சிறு
பல மில்லியன்-பில்லியன் உடைய உயரடுக்கு செல்வத்தில் மிகப் பெரிய பங்கை ஏகபோக
உரிமையாகக் கொண்டுள்ளது என்றும் கண்டறிந்துள்ளது.
சமூக இழப்பு
மற்றும் சமத்துவமின்மை ஆகியவை வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற ஊக்கம்
கொடுத்துள்ளன; நெத்தென்யாகுவின் அரசாங்கம் வலதுசாரித்தன, பிற்போக்குத்தன பொருளாதார,
சமூகக கொள்கைகளைச் சுமத்துகிறது. சமூக அமைதியின்மையை அடக்குவதற்கு இராணுவ வாதம்
மற்றும் போரில் ஈடுபடுதல் என்பது பெருகிய முறையில் பாசிச மற்றும் வெறுக்கத்தக்க
தன்மையைத்தான் எடுக்கிறது. இவ்வகையில் இஸ்ரேலின் முன்னாள் பிரதம மந்திரி ஏரியல்
ஷரோனுடைய மகனான கில்ட ஷரோன் ஜெருசெலம் போஸ்ட் கட்டுரை ஒன்றில் வாதிடுகிறார்:
“காசாவின் முழுப் பகுதிகளையும் நாம் தரைமட்டமாக்க வேண்டும். காசா முழுவதையும்
தரைமட்டம் ஆக்க வேண்டும். அமெரிக்கர்கள் ஹிரோஷிமாவுடன் நிறுத்தவில்லை; அவர்கள்
நாகசாகியையும் தாக்கினர். காசாவிற்கு மின் வசதி கூடாது, எரிபொருள் கூடாது; எந்த
வாகனமும் அங்கு நகரக்கூடாது, ஒன்றும் இருக்கக் கூடாது.”
இத்தகைய
சீற்றப்பேச்சுக்கள் தனித்தன்மை உடையவை அல்ல. “காசாவைத் தாக்கி அதை மத்தியகால
நிலைக்கு தள்ள வேண்டும். சாலைகள், குடிநீர் உட்பட அதன் உள்கட்டுமானம் அனைத்தையும்
அழிக்க வேண்டும்” என்று இஸ்ரேலின் உள்துறை மந்திரி எலி யிஷய் செய்தி ஊடகத்திடம்
கூறினார்
கிட்டத்தட்ட
ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இனவழித் தூய்மைப்படுத்தலால் அகற்றப்பட்ட பின், நாஜி
அடக்குமுறைக்கு எதிராக யூதர்களுக்கான அடைக்கலப்பகுதி என்று சியோனிஸ்ட்டுக்கள்
இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்டதை நியாயப்படுத்தினர். இன்று இந்நாட்டில் ஹிட்லர்,
கோயெபெல்ஸ் பேச்சுகளின் எதிரொலியைத்தான் கேட்கிறோம்.
இத்தகைய
பாசிசக் கொள்கைகள் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக
இயக்கப்படும் என்பது மட்டும் இல்லாமல், பெருகிய முறையில் தொழிலாள வர்க்கம்,
ஒடுக்கப்படும் மக்கள் என இஸ்ரேலுக்குள் இருப்பவர்களுக்கு எதிராகவும் இயக்கப்படும்.
ஏற்கனவே இது ஆபிரிக்க புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான இனவழித் தாக்குதல்களில்
தொடங்கிவிட்டது.
வாஷிங்டனின்
ஆதரவில் இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனயர்களை சமீபத்தில் படுகொலை செய்துள்ளது குறித்த
சர்வதேச அருவெறுப்பு ஐயத்திற்கு இடமின்றி இஸ்ரேலுக்குள் இருக்கும் நனவான
தொழிலாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரின் கணிசமான அடுக்குகளினாலும் பகிர்ந்து
கொள்ளப்படுகிறது.
இறுதிப்
பகுப்பாய்வில், மத்திய கிழக்கில் இரத்தக்களரி நெருக்கடியில் இருந்து வெளியேறும் ஒரே
முற்போக்கான வழி அரேபிய மற்றும் யூதர்கள் என்று வேறுபாடு இல்லாமல் தொழிலாள வர்க்கம்
ஐக்கியப்பட்டு ஜியோனிசம், ஏகாதிபத்தியம் மற்றும் அரபு முதலாளித்துவ ஆட்சிகளுக்கு
எதிரான மத்திய கிழக்கில் ஒரு சோசலிச கூட்டமைப்புக்கான பொதுப் போராட்டத்தில்
ஐக்கியப்பட்டு போராடுவதின் மூலம்தான் இயலும். |