WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
Petraeus resignation fuels political warfare over Benghazi attack
பெட்ரீயஸ் இராஜிநாமா பெங்காசித் தாக்குதல் குறித்த அரசியல்
மோதலுக்கு எரியூட்டுகிறது
By Barry
Grey
19 November 2012
மத்திய
உளவுத்துறை அமைப்பின் இயக்குனராக ஓய்வு பெற்ற நான்கு நட்சத்திர ஜெனரல் டேவிட்
பெட்ரீயஸ் இராஜிநாமா செய்துள்ளது செப்டம்பர் 11 ம் திகதி லிபியாவில், பெங்காசி
நகரில்
CIA
நிலையத்தின்
மீதும் அமெரிக்க துணைத் தூதரகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த இரு
கட்சி அரசியல் மோதலை மீண்டும் எரியூட்டியுள்ளது. இத்தாக்குதலில் அமெரிக்கத் தூதர்
ஜே.கிறிஸ்தோபர் ஸ்டீவன்ஸ் மற்றும் மூன்று அமெரிக்கர்கள் இறந்தனர்.
முதலில்
ஈராக்கிலும் பின்னர் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க மற்றும் கூட்டுப் படைகளின் மீது
தலைமைப்பொறுப்பை கொண்டிருந்த பெட்ரீயஸ்,
ஓர் இருப்பு (reserve)
இராணுவ அதிகாரியும்
இவரைப் பற்றிய பெருமை பாராட்டும் வாழ்க்கை நூலை எழுதியவருமான பௌலா பிராட்வெல்லூடன்
திருமணத்திற்குப் புறத்தே கொண்டிருந்த உறவை ஒட்டி நவம்பர் 9ம் திகதி தன்
இராஜிநாமாவை அறிவித்தார்.
CIA
யில்
இருந்து தான் விலகுவது முற்றிலும் சொந்த விவகாரத்துடன் தொடர்புபட்டது, அதில்
அரசியல் அல்லது உளவுத்துறை விடயங்கள் ஏதும் இல்லை என்று தளபதி வலியுறுத்தினார்.
இந்த விளக்கம் செய்தி ஊடகத்தாலும் அரசியல் நடைமுறையினாலும் பெரிதும் பிரச்சாரம்
செய்யப்படுகிறது.
இந்த கூற்று,
பெட்ரீயஸின் பதவி
மற்றும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள அரச நிறுவனங்களான
FBI, CIA
ஆகியவற்றாலும் மற்றும் அவருடைய திடீர் இராஜிநாமா ஏற்படுத்தியுள்ள அரசியல்
கூக்குரலினாலும் தவறாகிப்போகிறது.
கடந்த
வாரம்,பெட்ரீயஸைச் சூழ்ந்திருந்த அவதூறு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உயர் தளபதியாக
இருக்கும் ஜெனரல் ஜோன் அலெனுக்கும் பரவியது. பென்டகனுக்கு
FBI
ஆயிரக்கணக்கான
மின்னஞ்சல்களை அனுப்பியபின் இது நடந்துள்ளது. அவற்றில் அலெனுக்கும், புளோரிடா
தம்பாவில் உள்ள ஜில் கெல்லி என்ற பெண்ணுக்கும் இடையே நடந்த “முறையற்ற
தகவல்தொடர்புகள்” எனக் கூறப்படுபவை இருந்தன.
FBIக்கு
ஜில் கெல்லி அனுப்பிய புகாரை ஒட்டி
FBI
விசாரணையை
ஆரம்பித்தது. இது பௌலா பிராட்வெல், பின்னர் பெட்ரீயஸ் பற்றியும் விசாரிக்க
வழிவகுத்தது.
தம்பாவில்
ஒரு பிரபல அறுவை சிகிச்சை டாக்டரைத் திருமணம் செய்துள்ள கெல்லி செய்தி ஊடகத்தில்
ஒரு “சமூகத்தில் உயர்ந்தவர்” என்று விவரிக்கப்படுகிறார். இவர் பெட்ரீயஸ் மற்றும்
அலென் இருவருடைய நண்பரும் ஆவார்.
பெட்ரீயஸின்
இராஜிநாமாவை பெங்காசி நிகழ்வுகள் குறித்து ஒபாமா நிர்வாகம் மூடி மறைக்கிறது என்னும்
தங்கள் தேர்தலுக்கு முந்தைய குற்றச்சாட்டுக்களைப் புதுப்பிக்கும் வாய்ப்பாக
காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சியினர் பயன்படுத்தியுள்ளனர்.
அவர்கள்
தங்கள் சீற்றத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கத் தூதராக உள்ள சூசன் ரைஸ் மீது
குவிப்புக் காட்டுகின்றனர். செப்டம்பர் 16ம் திகதி ரைஸ் பல நிகழ்ச்சிகளில் தோன்றி
பெங்காசித் தூதரகம் மற்றும் அதன் “இணைப்பு” எனப்படுவதன் மீதான தாக்குதல்களை
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்ட முஸ்லிம் விரோத
வீடியோவிற்கு எதிரான தன்னியல்பான எதிர்ப்பின் வளர்ச்சி என்று விவரித்திருந்தார்.
இந்த நிகழ்வை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்றோ அல் குவேடாவுடன் தொடர்பு கொண்ட
அமைப்புக்கள் ஒருவேளை செய்திருக்கலாம் என்றோ அவர் கூறவில்லை.
சில
நாட்களுக்குப் பின்,
CIA
மற்றும்
நிர்வாகம் தங்கள் விளக்கத்தைத் திருத்திக் கொண்டு நிகழ்வை ஒரு பயங்கரவாதத்
தாக்குதல் என்றும் ஒருவேளை அல் குவைதா உடன் இணைந்த அமைப்புக்களாலோ, அதன்மீது ஆதரவு
கொண்டவர்களாலேயோ நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறின.
தன்னுடைய
இராஜிநாமாவிற்குச் சற்று முன் லிபியாவிற்கு ஒரு உண்மை அறியும் பயணத்தை மேற்கொண்டு
திருப்பிய பெட்ரீயஸ் முதலில் மன்றப் பிரதிநிதிகள் மற்றும் செனட் உறுப்பினர்களின்
குழுக்களுக்கு முன் மூடிய கதவுகளுக்குப் பின் நடக்கும் கூட்டத்தில் சாட்சியம்
அளிப்பதாக முதலில் இருந்தது. அவருடைய இராஜிநாமா அறிவிக்கப்பட்டபின் அவர் கொடுக்க
வேண்டிய சாட்சியம் இரத்து செய்யப்பட்டது. ஆனால் ஜனநாயக, குடியரசு இரு கட்சிகளின்
உறுப்பினர்களின் அழுத்தத்தினால் பெட்ரியஸ் இரு குழுக்கள் முன்பும் வெள்ளியன்று
சாட்சியம் அளித்தார்.
இரகசியத்
தன்மை எனக்கூறுப்பட்டாலும்கூட, விசாரணைக்கு பின் காங்கிரஸ் உறுப்பினர்களும் இரு
கட்சியின் செனட் உறுப்பினர்களும் செய்தி ஊடகத்தில் பெட்ரீயஸ் சாட்சியம் பற்றிய
தங்கள் எதிர்ப்புக் கருத்துக்களைக்கூறினர். ஆனால் அனைவரும் பெட்ரீயஸ் தன்
இராஜிநாமாவிற்கும் பெங்காசித் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியதை ஒப்புக்
கொண்டனர்.
தானும்
CIA
வும் முன்னதாக பெங்காசி
மீதான தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல், இஸ்லாமிய மெக்ரெப்பில் உள்ள அல்
குவைதா மற்றும் உள்ளூர் அல்குவைதா சார்புடைய ஆயுதக்குழுவான அன்சர் அல்-ஷரியா ஆகியவை
தொடர்பு கொண்டவை என்ற முடிவிற்கு வந்ததாக பெட்ரீயஸ் உறுதிப்படுத்தினார் என்று
குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தினர். ஒபாமா நிர்வாகம் தமது பகிரங்க அறிக்கையில்
CIA
இன்
மதிப்பீட்டை அரசியல் மற்றும் தேர்தல் காரணங்களுக்காக திருத்தியதாக அவர்கள்
கருதினர்.
ஞாயிறன்று
“செய்தியாளர்களை சந்திக்கவும்” நிகழ்ச்சியில் தென் கரோலினாவின் குடியரசுக் கட்சி
செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம், “சூசன் ரைஸ் தன்னுடைய கதையைக் கூறியதற்குக்
காரணம், தேர்தலுக்கு சில வாரங்கள முன்பு பெங்காசியில் நம் தூதரகம் ஒரு அல்குவைதா
ஆதரவுடைய அல்லது தொடர்புடைய ஆயுதக்குழுவினால் தாக்கப்பட்டது என்பது வெளிவந்தால், பல
மாதங்களாக நாம் கேட்டுவரும் கதையான அல் குவைதா தகர்க்கப்பட்டுவிட்டது, பின்லேடன்
இறந்து விட்டார், நாம் பாதுகாப்பாக உள்ளோம் என்பதை அழித்துவிடக்கூடும் என்பது
பலகாரணங்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என்று நான் நினைக்கிறேன்.” என கூறினார்.
ஆனால்
ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தியதுபோல், பெட்ரீயஸ் தெளிவுபடுத்தப்படாத இறுதி
CIA
கருத்துக்களில் கையெழுத்திட்டதாக ஒப்புக் கொண்டார் என்றும், அவற்றில் பயங்கரவாதத்
தாக்குதல் பற்றிய குறிப்போ, செய்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களுடைய பெயர்களோ
இல்லை என்றும் இத்தாக்குதல் முஸ்லிம் விரோத ஒளிநாடா பற்றிய எதிர்ப்புக்களுடன்
தொடர்பு கொண்டது என்பதை ஒப்புக்கொண்டதாகவும் கூறுகின்றனர். உளவுத்துறை குழுக்களிடம்
இக்கருத்துக்களைப் பின்பற்றி ரைஸ் தன்னுடைய தொலைக்காட்சி நிகழ்வுகளில் பேசினார்
என்றும் ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து அரசியல் குறுக்கீடு இல்லை என்றும் பெட்ரீயஸ்
மறுத்தார்.
சில
குடியரசுக் கட்சியினர் உட்பட மற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், செப்டம்பர் 14 அன்று
பெங்காசித் தாக்குதல் குறித்து பெட்ரீயஸ் சாட்சியம் அளித்தபோது, அல்குவைதா
பிரிவுகள் தொடர்பு இருக்குமோ என்பது பற்றி குறைமதிப்பிட்டார், தாக்குதலை
தன்னியல்பான எதிர்ப்புக்களுடன் தொடர்புபடுத்தினார் என்று கூறுகின்றனர்.
ஒபாமா
நிர்வாகம் தேர்தல் காரணங்களுக்காக அல் குவைதா தொடர்புடைய சக்திகளின் பங்கை
மறைத்திருந்தாலும், மறைக்காவிட்டாலும், பெங்காசி நிகழ்வுகளின் இன்னும் அடிப்படையான
அரசியல் முக்கியத்துவம் இரண்டு கட்சிகளாலும், முழுச் செய்தி ஊடகத்தாலும்
புதைக்கப்படுகிறது. அமெரிக்கத் தூதரகம் மற்றும்
CIA
இணைப்புக் கட்டிடத்தின்
மீதான தாக்குதல்,
2011 முகாமர் கடாபியை அகற்றி தனக்கு இன்னும் வளைந்து கொடுக்கும்
ஆட்சியை நிறுவுவதற்கான போரின்போது வாஷிங்டன் அல் குவைதாவுடன் இணைப்புடைய இஸ்லாமிய
மற்றும் ஜிகாதிஸ்ட்டுக்கள் சக்திகளுக்கு நிதியுதவி வழங்கி பிறஉதவிகளை கொடுத்தது
என்னும் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது.
ஒபாமா
நிர்வாகத்தின் முக்கிய நபராக ஸ்டீவன்ஸ் இருந்து, அமெரிக்க நேட்டோ வான்தாக்குதல்கள்
ஆதரவைக் கொண்ட தரை நடவடிக்கைகளில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த அல்குவைதாவிற்கு
ஆயுதங்கள், நிதி ஆகியவற்றை கொடுத்து வந்தார். அப்போருக்கு சிறப்புப் படைகளின்
பயிற்சியாளர்கள் உதவியும் இருந்தது. இப்போர் இறுதியில் கடாபி ஆட்சியைக் கவிழ்த்தது.
அதன் பின் அமெரிக்கா இச்சக்திகளை பின்னணியில் தள்ள முற்பட்டு இன்னும் “கௌரவமான”
தகமையுள்ள கைப்பாவை அரசாங்கத்தை இருந்த முயன்று, அது முற்றிலும் வாஷிங்டனுக்குக்
கீழ்ப்பட்டு இருக்கும் என்றும் கருதியது.
ஆனால் அல்
குவைதாவுடன் இணைப்பு உடைய இஸ்லாமிய ஆயுததாரிகள் கூட, நாட்டின் கூடிய பகுதிகளிலும்
மேலாதிக்கம் கொண்டிருந்ததுடன், அவர்கள் ஏமாற்றுப்பட்டுவிட்டனர் என்ற உணர்வில்
அமெரிக்காவிற்கு எதிராகத் தாக்கினர். இதை உளவுத்துறை அமைப்புக்கள் “பதிலடி
நடவடிக்கை” என்று கூறுகின்றன.
லிபியாவில்
உள்ள அல்குவைதா சக்திகளுடன் இணைந்து செயலாற்றியதும், சிரியாவில் அமெரிக்கா தூண்டும்
ஆட்சி மாற்றத்திற்கான போரில் இதை தொடர்வது “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்னும்
மோசடியை முற்றிலும் அம்பலப்படுத்துகிறது. அதுதான் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில்
நடைபெறும் பெரிய போர்களை நியாயப்படுத்தவும், பிற கணக்கிலடங்கா டிரோன் தாக்குதல்கள்,
பிற இராணுவ தலையீடுகள் மற்றும் அமெரிக்காவிற்குள் ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித்
தாக்குதல்கள் ஆகியவற்றை நியாப்படுத்தவும் கூறப்பட்டது. எல்லாவற்றிற்கும மேலாக
உளவுத்துறை அமைப்புக்கள், இராணுவம், வெள்ளைமாளிகை, காங்கிரஸ் மற்றும் செய்தி ஊடகம்
ஆகியவை மறைப்பதற்கு உறுதி கொண்டதும் இதைத்தான்.
சில செய்தி
ஊடகத் தகவல்கள் உளவுத்துறை, இராணுவ அமைப்புக்கள், வெள்ளை மாளிகை, வெளிவிவகாரத்துறை
இன்னும் சில அரசாங்க அமைப்புகளுக்கு இடையே நடக்கும் மோதல்களின் கூறுபாடுகள்
குறித்து குவிப்புக் காட்டியுள்ளன. மிகமிக இரகசியமான பொலிஸ்-உளவுத்துறை அமைப்பான
FBI
போட்டி
CIA
தலைவர்
கவிழ்ப்பிற்கு வழிவகுத்தது குறித்து விசாரணை நடத்தியது. ஆப்கானிஸ்தானில் உள்ள
உயர்மட்ட தளபதியையும் கண்காணித்துள்ளது என்பது இந்நிகழ்வுகளின் அரசியல்
பரிமாணத்திற்குச் சான்றாக உள்ளன.
கடந்த மாதம்
வாஷிங்டன் போஸ்ட்,
பெட்ரீயஸிற்கும்
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் ஜோன் பிரென்னனுக்கும் இடையே விரிவாகிக்
கொண்டுபோகும டிரோன் படுகொலைத் திட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்த மோதலைப்பற்றித்
தகவல் கொடுத்துள்ளது. இச்செய்தித்தாள் பெட்ரீயஸ்
CIA
உடைய ஆயுதமேந்திய டிரோன்கள் படை விரிவாக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் என்றும்
பிரென்னன் இத்திட்டத்தில்
CIA
உடைய
பங்கைக் குறைக்கும் உந்துதலுக்கு தலைமை வகித்தார், இராணுவத்திற்கு இன்னும் அதிகாரம்
கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார் என்று தெரிவிக்கிறது.
தன்னுடைய
CIA
இறுதி நாட்களில் பெட்ரீயஸ்
தன் பெயரளவு உயரதிகாரியான தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பருடனும்
மற்றும் பென்டகன், வெளிவிவகாரத்துறை மற்றும் “பிற அமைப்புக்களுடனும் கூட பெங்காசித்
தாக்குதல் குறித்து
CIA
மீதான குறைகூறல்களுக்கு
விடையிறுத்தல்” பற்றி மோதினார். இப்பிரிவுகளிடம் இருந்து வந்த எதிர்ப்புக்களை மீறி
பெட்ரீயஸ் செய்தி ஊடகத்திற்கு தாக்குதலுக்கு
CIA
பதிலளிப்பதற்கான காலக் கெடுவையும் நிர்ணயித்தார்.
“நாங்கள்
எங்கள் எதிர்ப்புக்களைத் தெரிவித்து விட்டோம். பல அமைப்புக்களும் தெரிவித்துள்ளன”
என்று ஒரு “மூத்த இராணுவ அதிகாரி” கூறியதாக ஜேர்னல் தெரிவித்துள்ளது.
காலக்கெடு
பகிரங்கமாக தெரிவிக்கப்படும் என்பது பற்றி கிளாப்பருக்குத் தெரியாது என்று
செய்தித்தாள் கூறியது. ஒரு வாரம் கழித்து, தேர்தல் தினத்தன்று,
FBI
கிளாப்பரிடம் பெட்ரீயஸ் பற்றிய தன் விசாரணையை தெரிவித்தது.
கிளாப்பர் உடனடியாக பெட்ரீயஸிடம் அவர் இராஜிநாமா செய்யவேண்டும் என்று கூறிவிட்டார்.
பெங்காசி
நிகழ்வுகள் அமெரிக்க ஆளும் வட்டம் மற்றும் அரசுக்குள் ஒரு ஆழ்ந்த அரசியல் நெருக்கடி
உள்ளது என்பதற்கு ஒரு காரணியாக உள்ளது. இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் சில
கூறுபாடுகள் குறித்த உள் வேறுபாடுகளை அதிகப்படுத்துகிறது. அரசியலில் கணக்குகளை
தீர்த்துக்கொள்ள பாலியல் அவதூறுகளைப் பயன்படுத்தவது நீண்டகாலமாக உள்ள வடிவமைப்பு
முறைதான். |