World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel calls up 75,000 troops as bombing continues in Gaza

காசாவில் குண்டுவீச்சுக்கள் தொடர்கையில் இஸ்ரேல் 75,000 துருப்புக்களை அழைக்கிறது

By Bill Van Auken 
17 November 2012

Back to screen version

வெள்ளியன்று பிற்பகல் இஸ்ரேலிய இராணுவம் பாதுகாப்புத் தூண் -Pillar of Defense- என்று அது அழைக்கும் சமீபத்திய தாக்குதலை மக்கள் நெருக்கமாக வசிக்கும் காசாப் பகுதி மீது 500க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகப் பெருமை பேசுகிறது. இஸ்ரேலிய அரசாங்கம் காசாமீது தரைவழிப் படையெடுப்பு விளிம்பில் உள்ளது என்று பெருகியுள்ள அடையாளங்களுக்கு நடுவே அதிகரிக்கும் வான்தாக்குதல் போர் வெளிப்பட்டு வருகிறது. இது குருதி கொட்டுதலை பாரியளவில் அதிகரிக்கும்.

இடைவிடா குண்டுவீச்சுக்கள் பரந்தளவில் அழிவையும் கொலைகளையும் விளைவித்துள்ளது. வெள்ளியன்று இரவு உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 29 ஐ எட்டியது. காயமுற்றவர்கள் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. அண்மையில் கொல்லப்பட்டவர்களுள் ஒரு இரண்டு வயது பாலஸ்தீனிய சிறுவர்களும் அடங்குவர். இறந்த, காயமுற்ற பெரும்பாலான சாதாரண குடிமக்களில் எட்டு குழந்தைகளும் ஒரு கருவுற்றிருக்கும் பெண்ணும் அடங்குவர்.

இஸ்ரேலிய அரசாங்கமும் இராணுவமும் இடைவிடாமல் காசா மீதான தாக்குதல்கள் முற்றிலும்பயங்கரவாதிகளைத்தான்இலக்கு கொண்டுள்ளன, பொதுமக்கள் இறப்புக்கள் ஏற்பட்டால் அவை மக்களிடையே ஹமாஸ் மறைந்திருப்பதின்விளைவு என்றும் கூறுகின்றன. ஆனால் உண்மையில் குண்டுகளும் ஏவுகணைகளும் வீடுகள், மருத்துவமனைகள், பணியிடங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றை அழிக்கின்றன.

இஸ்ரேலிய இராணுவம் குறைந்தப்பட்சம் 12,000 கைத்தொலைபேசிகளுக்கு குறுந்தகவல்களைக் காசாவிற்குள் அனுப்பியுள்ளது என்றும் இவற்றில் ஹமாமஸுடன் தொடர்பு உடையவர்களிடம் இருந்து ஒதுக்கி இருக்க வேண்டும் இல்லாவிடின் இறப்பை எதிர்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உள்ளது என்றும் வெள்ளியன்று உறுதி செய்யப்பட்டது. ஹமாஸ்தான் 25 மைல் நீள காசாப்பகுதியை ஆட்சி செய்து வருகிறது.

வெள்ளியற்று இலக்குவைத்து அழிக்கப்பட்டவற்றில் காசா நகரத்தில் உள்துறை அமைச்சரகத்தின் பொதுவிவகாரத் துறைக்கட்டிடம் ஆகும். இதில் பாலஸ்தீனிய குடிமக்களின் சான்றுகள் 70 ஆண்டுகளாக சேகரித்து வைத்துள்ளவை இருக்கிறது. மேலும் 20 பேருக்கு வேலைகொடுக்கும் ஒரு குடும்பத்திற்குச் சொந்தமான ஆலையும் ஒரு உணவுப் பொருள் கடையும் தாக்கப்பட்டன.

இஸ்ரேலியத் தாக்குதலை எதிர்கொள்கையில் பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுக்களை ஏவின. பொதுவாக பெரும்பாலும் திறனற்றவை என்றாலும், அவற்றுள் ஒன்று டெல் அவிவ் பகுதியை வெள்ளியன்று தாக்கியது. மற்றொன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசெலத்திற்கு அருகே உள்ள ஹுஷ் எட்சியோன் எனப்படும்  ஒரு சட்டவிரோதக் குடியிருப்பைத் தாக்கியது. புதன் அன்று ஒரு ராக்கெட் தெற்கு நகர கிரயாட் மலாச்சியில் ஒரு குடியிருப்பு இல்லத்தைத் தாக்கி இரண்டு இஸ்ரேலிய பெண்களையும் ஒரு ஆணையும் கொன்றது.

காசா மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இஸ்ரேலிய அரசாங்கப் பயங்கரவாதத்தின் முதல் மூன்று நாட்கள் ஒரு ஆரம்பம்தான் என்பதற்கு அடையாளங்கள் உள்ளன. “நடவடிக்கைகளை கணிசமாக நாங்கள் அதிகப்படுத்தப்போகிறோம்என்று ஒரு மூத்த அதிகாரி இஸ்ரேலிய செய்தி ஊடகத்திடம் கூறினார்.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகுவின் மந்திரிசபை 75,000 இருப்புப் படையினரை அழைப்பதற்கான ஒரு கோரிக்கைக்கு ஒப்புதல் கொடுத்த பின்னர் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. கடைசியாக காசா தரைவழியே 2008-2009 இல் Operation Cast Lead மூலம் தாக்கியபோது, கிட்டத்தட்ட 1,400 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அப்பொழுது அரசாங்கம் 10,000 இருப்புப் படையினரைத்தான் அழைத்திருந்தது.

படையெடுப்பிற்கான தயாரிப்புக்களுக்கு அடையாளமாக ராய்ட்டர்ஸ் வெள்ளியன்று பிற்பகலில் இஸ்ரேலிய போர் விமானங்கள், டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சந்தேகத்திற்கு உரிய பாலஸ்தீனிய ராக்கெட் தளங்களின் மீதான குவிப்பை வடக்கு காசா எல்லைக்கு மாற்றினர். அங்கு அவர்களுடைய குண்டுகள் நிலக்கண்ணிகள், கெரில்லா துப்பாக்கி பதுங்கிடங்களை அகற்றியதின் மூலம் ஊடுருவல் பாதைகளை தோற்றுவித்துள்ளதுஎன்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் காசாவிற்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலையை குடிமக்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது மட்டும் இல்லாமல் வறுமையான வேலிக்குள் சுற்றிவைளைக்கப்பட்டு இருக்கும் எல்லைப் பகுதிக்குச் செல்லும் இரண்டு சாலைகளையும் பயன்படுத்த தடை விதித்துள்ளது. டாங்குகள், கவசக் கார்கள் மற்றும் தானியங்கித் துப்பாக்கிகள் ஆகியவை எல்லை முழுவதும் குவிக்கப்பட்டுள்ளன.

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் எத்தகைய படையெடுப்பும் எதிர்க்கப்படும் என்று உறுதிமொழியளித்தார். “அத்தகைய தாக்குதலில் ஏற்படும் தீவிர விளைவுகளைப் பற்றி இஸ்ரேலியர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்; உடல்களை எடுத்துச் செல்லும் பைகளையும் அவர்கள் கொண்டுவரவேண்டும்என்று ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் சமி அபு ஜுஹ்ரி கூறினார்.

இதற்கிடையில் இஸ்ரேலின் Home Front Command உள்நாட்டு முன்னணிக் கட்டுப்பாடு நகரசபை அதிகாரிகளுக்கு காசாவில் ஏழு வாரப் போருக்கான தயாரிப்புக்களுக்கு குடிமக்கள் பாதுகாப்பை செய்ய உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் காசாவிற்கு எதிரான கடைசிப் போர் மூன்று வாரங்கள்தான் வான் தாக்குதலில் தொடங்கி தரையில் படையெடுப்பு முடியும் வரை நடைபெற்றது.

மூன்று நாட்களுக்குப் பின்பும், இஸ்ரேலிய மின்னல்வேக தாக்குதல்  காசாவில் ஒரு மனிதாபிமானப் பேரழிவை எழுப்பியுள்ளது. இங்குள்ள 1.7 மில்லியன் மக்கட்தொகை இடைவிடா இஸ்ரேலிய முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளதுபோல், இஸ்ரேலிய அரசாங்கம் அப்பகுதிக்குள் அனுமதிக்கப்பட வேண்டிய உணவு விநியோகங்களின் மொத்தத்தைக்கூட நிர்ணயித்துள்ளது. இதற்காக நீடித்த ஊட்டமின்மையைத் தவிர்க்க தேவையான மிகக்குறைந்தளவு கலோரிகளின் எண்ணிக்கை கூடகணக்கிடப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள மருத்துவமனைகளின் வைத்தியர்கள் ஏற்கனவே இஸ்ரேலியத் தாக்குதல் சுமத்தியுள்ள இறப்பு எண்ணிக்கையால் அவர்கள் திகைப்பு அடைந்துள்ளனர். மற்றும் முக்கிய மருந்துகளும் பிற பொருட்களும் தீர்ந்து கொண்டிருக்கின்றன என்று எச்சரித்துள்ளனர். வெள்ளியன்று பாலஸ்தீனிய அதிகாரத்தின் சுகாதார மந்திரி ஹனி அப்தீன் 15 லாரிகள் அடங்கிய மருந்துகள், மருத்துவப் பொருள்கள் என்று ரமல்லாவைத் தளமுடைய நிர்வாகம் அனுப்பியள்ள வாகன வரிசையை காசாவிற்குள் அனுமதிக்க இஸ்ரேலிய இராணுவம் மறுத்துவிட்டது என்று கூறினார்.

சமீபத்திய இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஒரு தீவிரப் பொறுப்பற்ற தன்மை காணப்படுகிறது. காசா மீது ராக்கெட் தாக்குதல்களை ஆரம்பிக்கும் கட்டாயத்திற்கு அது உட்பட்டுள்ளது என்பது ஓர் அப்பட்டமான பொய் ஆகும். இத்தாக்குதல்களை இஸ்ரேலிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். புதன்கிழமை பதிலடித் தாக்குதல் வரை இந்த ஆண்டு ஒரு இறப்பைக் கூட ஏற்படுத்தவில்லை. Pillar of Defence நடவடிக்கை என்பது ஹமாஸ் இராணுவத் தலைவர் அஹ்மத் ஜபாரியைப்  படுகொலை செய்ததில் இருந்தே வன்முறை பெரிதும் ஆரம்பித்தது.

நெத்தென்யாகு அரசாங்கத்திற்குள் மற்றொரு போருக்கான வேண்டுமென்ற ஆத்திரமூட்டல்கள் பற்றிய கணக்கீடுகளின் அடித்தளத்தில் இராணுவவாதத்தின் வெடிப்புத் தன்மை உள்ளது. இது இஸ்ரேலுக்குள் பெருகும் சமூக அழுத்தங்களைத் திசைதிருப்ப உதவும். அபிவிருத்தியடைந்த உலகில் மிகஅதிகளவு வறுமை மற்றும் சமத்துவமற்ற நிலை என்பவற்றால் இந்த நாடு இப்பொழுது அடையாளமிடப்பட்டுள்ளது. இங்கு 75% தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு $1700 அல்லது அதற்கும் குறைவாகச் சம்பாதிக்கின்றனர். நாட்டில் மொத்தப் பொருளாதாரத்தையும் 20 குடும்பங்கள்தான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் நெத்தென்யாகு அரசாங்கத்தின் வலதுசாரி பொருளாதார, சமூகக் கொள்கைகளின் விளைவின் தாக்கத்தினால்  நிலைமை மோசமாகி உள்ளது.

ஜனவரி மாதம் தேசியத் தேர்தல்கள் நடக்க இருக்கும் நேரத்தில், அதற்குச் சில வாரங்கள் முன்பு போரை தொடக்கும் இழிந்த செயலை நெத்தென்யாகு ஈடுபட்டுள்ளார் என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். உண்மையில் அவருடைய வலதுசாரிக் கூட்டணி சியோனிச அரசியல் கட்டமைப்பிற்குள் இருந்து முக்கிய எதிர்ப்பு எதையும் முகங்கொடுக்கவில்லை. அதன் இன்னும் பெரிய கவலை வர்க்கப் போராட்டம் மற்றும் சமூக எதிர்ப்பு கீழிருந்து வெடித்து விடுமோ என்பதுதான்.

காசா மீதான தாக்குதலின்அடித்தளத்தில் இருக்கும் மற்றொரு காரணி ஈரானுக்கு எதிரான போருக்கான இஸ்ரேலிய ஆட்சியின் உந்துதல் ஆகும். இஸ்ரேலிய நாளேடு Haaretz இன் இராணுவ விவகாரங்கள் பற்றி எழுதும் கட்டுரையாளர் அமிர் ஓரெனால் வெள்ளியன்று ஒரு கட்டுரையில் இது சுட்டிக்காட்டப்படுகிறது. “நெத்தென்யாகுவைப் பொருத்தவரை காசாவில் போர் விரிவாக்கம் ஈரான் மீதான தாக்குதலுக்கு வழிவகுக்கும்என்ற தலைப்பில் வந்துள்ள இக்கட்டுரை நெத்தென்யாகுவும் அவருடைய பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக்கும் ஈரானில் ஒரு முக்கிய நடவடிக்கையில் ஈடுபடும் கனவைக் கைவிட்டுவிடவில்லை;” என்றும்ஒரு ஈரானின் மீதான நடவடிக்கைக்கு முன்னுரை போல் காசாத் தாக்குதல் அமையலாம்என்றும் எழுதியுள்ளார்.

ஏட்டளவில் அஹ்மத் ஜபரிக்கு எதிரான தாக்குதலை நடத்தத் திறன் உடைய படை ஈரானிய ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜட் இருக்கும் இடத்தையும் துல்லியமாக அறியமுடியும். Fajr ஏவுகணைகளை அழித்த படை அவற்றின் மிகப் பெரிய வாரிசுகளான Shihabs ஏவுகணைளையும், ஈரானின் அணு நிலையங்களையும் அழிக்க முடியும்.” என்று ஓரென் எழுதியுள்ளார்.

இச்செயற்பாடு இஸ்ரேலின் இராணுவத் தளபதிகளை ஈரானுக்கு எதிரான தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள், தந்திரோபாயங்கள் ஆகியவற்றை பரிசோதிக்க அனுமதிக்கும். சர்வதேச பிரதிபலிப்பையும் இஸ்ரேல் மதிப்பிட உதவும்.

காசா மீதான தாக்குதல் வாஷிங்டனுடைய நிபந்தனையற்ற ஆதரவைக் கொண்டுள்ளது. வெள்ளை மாளிகை மற்றும் வெளிவிவகாரத்துறை ஆகியவை பல அறிக்கைகளில் இஸ்ரேலின்தற்காப்பு உரிமைபற்றி பேசியுள்ளன.

தெஹ்ரானுடன் ஈரானிய அணுச்சக்தித் திட்டம் பற்றி பேச்சுக்கள் மூலம் உடன்பாடு காணக்கூடிய ஒபாமா நிர்வாகத்தின் முயற்சியையும் தவிர்த்துவிடும் சாத்தியப்பாட்டையும் இது  கொண்டுள்ளது.

டெல் அவிவ் கருத்திற்கொள்ளும் மற்றொரு முன்னணி அரபு முதலாளித்துவ ஆட்சிகள் இதை எதிர்கொள்ளும் தன்மை ஆகும். அதில் ஜனாதிபதி முகம்மது முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவம் நிர்வாகமும் அடங்கும். வெள்ளியன்று எகிப்தின் பிரதம மந்திரி ஹிஷம் கண்டில் காசாவில் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்டார். ஆனால் முர்சி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முர்சி அரசாங்கம் இஸ்ரேலுடன் கொண்டுள்ள காம்ப் டேவிட் உடன்பாட்டை முறிக்கத் தயாராக இருப்பது பற்றியோ  அல்லது காசாவுடனான அதன் எல்லையைத் திறந்து இராணுவ, மனிதாபிமான உதவிகள் அங்கு பாய்வதை அனுமதிப்பது குறித்தும் உறுதியான குறிப்பைக் காட்டவில்லை.

அரபு லீக் திங்களன்று கெய்ரோவில் காசா நெருக்கடி பற்றிச் சந்திக்க உள்ளது. கூட்டத்திற்கு முன்னதாக ஈராக்கின் தூதர் குவைஸ் எல்- அசாவி வெள்ளியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரபு நாடுகள் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் முக்கியமாக அமெரிக்கான மீது எண்ணெய் ஆயுதத்தை பயன்படுத்தி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார். ஆனால் சில மணி நேரங்களுக்குப் பின் அவருடைய அலுவலகம் இக்கருத்தை நிராகரித்து, ஈராக் அரபு லீக்கிற்கு எத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்றும் உறுதியளித்தது.

இது அரபு முதலாளித்துவ ஆட்சிகள் அனைத்தினதும் மனப்பாங்கின் துல்லியமான பிரதிபலிப்பு ஆகும். அவற்றுள் பல காசாப் படுகொலையை சிரியாவின் ஆட்சிமாற்றத்திற்காக அமெரிக்காவிற்கு ஆதரவுகொடுப்பதில் இருந்து தேவையற்ற திசைதிருப்பல் என்றும் கருதுகின்றன.

ஆனால் பிராந்தியத்தில் இருக்கும் பரந்த உழைக்கும் மக்களை பொறுத்தவரை, காசா மக்கள் மீதான தாக்குதல் மற்றும் தங்கள் நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் நிகழ்த்தும் தீயசெயல்கள் ஆகியவை பெருகிய சீற்றத்தையும் அமைதியின்மையையும் தோற்றுவித்துள்ளன. இவை வெள்ளியன்று லெபனான், எகிப்து,  யேமன், மற்றும் பிற இடங்களில் இஸ்ரேலிய தாக்குதல் குறித்து நடந்த ஆர்ப்பாட்டங்களில் பிரதிபலிக்கின்றன.