சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Mass demonstrations in Spain, Portugal, Italy against austerity and unemployment

சிக்கனம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் இத்தாலியில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள்

By our reporters
15 November 2012
use this version to print | Send feedback

புதன் அன்று பல ஐரோப்பிய நாடுகளில் விரைவில் அதிகரிக்கும் வேலையின்மை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் ஆணியிட்டுள்ள சிக்க நடவடிக்கைக்களுக்கு எதிராக நூறாயிரக்க்கணக்கான தொழிலாளர்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர்.

ஸ்பெயினிலும் போர்த்துக்கல்லிலும் பொது வேலைநிறுத்தங்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தன; பல வணிகங்களும் பள்ளிகளும் இதையொட்டி மூடப்பட்டன. வேலைநிறுத்த நடவடிக்கையால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது; நூற்றுக்கணக்கான பயணங்கள் இரத்து செய்யப்பட்டன. தொழிற்சங்கங்கள் இரு நாடுகளிலும் வேலைநிறுத்தங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்கு பெற்றனர் எனக் கூறின.

ஸ்பெயினில் உத்தியோகபூர்வமாக வேலைநிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது; ஆர்ப்பாட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை மாலையே தெருக்களுக்கு வந்துவிட்டனர். மாட்ரிட்டில் கோபங்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பல இடங்களிலும் பொலிசாருடன் மோதினர்.

மாட்ரிட் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்படுவதை தொழிலாளர்கள் தடுக்க முயற்சிக்கையில் பொலிசார் அவர்களைத் தாக்கினர். தலைநகரத்தின் மையத்தில் கலகப் பிரிவுப் பொலிசார் இரப்பர் தோட்டாக்களை சுட்டதோடு, மத்திய Plaza de Cibeles சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற தடியடிப் பிரயோகமும் செய்தனர்.

ஒரு முந்தைய மோதலில், பொலிசார் தடியடி நடத்தி நூற்றுக்கணக்கான இளம் எதிர்ப்பாளர்களை அருகில் இருந்த Gran Via Avenue வைத் தடைசெய்வதில் இருந்து தடுத்தனர். எதிர்ப்பாளர்கள்அதிகார துஷ்பிரயோகம்”, “மேலும் கல்வி, குறைந்த பொலிசார்” என்று கூவி அதை எதிர்கொண்டனர். உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் கருத்துப்படி பொலிசார் 82 எதிர்ப்பாளர்களை நாடு முழுவதும் கைது செய்தனர்; 34 பேர் காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

போர்த்துக்கல்லில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாலையில் இருந்தே தெருக்களுக்கு வந்தனர்; ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றை கண்டித்த கோஷ அட்டைகளை சுமந்திருந்தனர். புதன் அன்று வெளிவந்த புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் வேலையின்மை விகிதம் புதிய மிக அதிக அளவான 15.8% ஐ எட்டியது; வரவிருக்கும் மாதங்களில் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிஸ்பனில் மெட்ரோ இரயில் பணிகளில் வேலைநிறுத்தங்கள் பல பள்ளிகள், பொது அலுவலகங்களில் பணியை ஸ்தம்பிக்கச் செய்தது; அவை நகரெங்கிலும் மூடப்பட்டன. படகு மற்றும் இரயில் பயணங்கள் நாடு முழுவதும் பாரிய அளவில் குறைக்கப்பட்டன.

இத்தாலியில் தொழிற்சங்கங்க வேலைநிறுத்த நடவடிக்கைகள் நாள் முழுவதும் தொடர்ந்த நான்கு மணிநேர வேலைநிறுத்தங்களின் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டன; ஆயினும் இது பள்ளிகள், துறைமுகங்கள் மற்றும் பல ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டது.

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபாடு கொண்ட ஆர்ப்பாட்டங்கள் ரோம், டூரின் மற்றும் மிலோனில் நடைபெற்றன; அங்கு போக்குவரத்துத் தொழிலாளர்கள், இரயில் சாரதிகள், மருத்துவ மனை ஊழியர்கள் ஆகியோர் தெருக்களில் மாணவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ரோமின் மையப்பகுதியில், டஜன் கணக்கான இளம் எதிர்ப்பாளர்கள், பொலிஸ் வட்டத்தை மீற முற்படுகையில் பொலிசாரால் கண்ணீர்ப்புகை, ஆயுத வாகனங்கள்மூலம் தாக்கப்பட்டனர்.

டூரின், மிலான் ஆகிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்தன. இத்தாலியில் கோபம் மிகுந்த எதிர்ப்புக்கள் இரண்டு அராசங்க மந்திரிகள் சார்டினியாவில் ஒரு கூட்டத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அகற்றப்பட்ட ஒரு நாளைக்குப் பின் வந்தன; எதிர்ப்பாளர்கள் தீவிலுள்ள சாலைகளை எரியும் கார்களை வைத்து அடைத்துவிட்டனர்.

செவ்வாயன்று தொழிலாளர் பிரிவு மந்திரி எல்சா போமரோ நாப்பிள்ஸில் உரைநிகழ்த்திய வேளையில், தனது மகள் வேலை பார்க்க இயலாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தன் மணிக்கட்டுக்களை வெட்டிக் கொள்ளப் போவதாக அச்சுறுத்திய ஒருவரால் அது தடைக்கு உட்பட்டது. ஏற்கனவே எதிர்ப்பாளர்கள் திங்களன்று பொலிசாருடன் மோதியிருந்தனர்.

ஐரோப்பிய தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது; இது தொழிலாளர்களிடையே குறிப்பாக தென் ஐரோப்பிய நாடுகளில் பெருகும் சீற்றத்தைத் தணித்து திசைதிருப்பும் முயற்சியாகும்; இந்நாடுகள் மிகப் பெரிய அளவில் வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் சுமத்தப்பட்டுள்ள சிக்கனக் கொள்கைகளால் பெரிதும் அழிவிற்கு உட்பட்டுள்ளன.

ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் இத்தாலியில் எதிர்ப்புக்கள் பெரிய, சீற்றம் மிகுந்த ஆர்ப்பாட்டங்கள் இருக்கையில், ஐரோப்பிய தொழிற்சங்க அதிகாரத்துவம் வேண்டுமென்றே ஐரோப்பாவின் பிற இடங்களில் தொழிலாளர்கள் திரட்டைத் தடுக்க முற்பட்டது என்பது தெளிவு.

கிரேக்கத்தில், எதிர்ப்புக்களை பொறுத்த வரை ஒப்புமையில் அதிகம் பேர் ஈடுபடவில்லை. நாட்டின் முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் மூன்று மணி நேரத்திற்கு மட்டும் நடவடிக்கையை வரம்பு கட்டிவிட்டனர். ஏதென்ஸில் சின்டகமா சதுக்கத்தில் 3,000 பேர் மட்டுமே பங்கு பெற்றனர்.

கடந்த வாரம். கிரேக்கத்தில் ஐந்தாம் சிக்கனப்பொதி என்று ஐரோப்பியம் ஆணையிட்டுள்ளதற்கு எதிராக நூறாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களால் நாடே முடங்கியது. அப்பொழுது முதல் தொழிற்சங்கங்கள் தொழில்துறை நடவடிக்கையை மூடித் தொழிலாளர்களுக்கு தளர்ச்சியைக் கொடுக்கத்தான் உழைக்கின்றன. தெருக்களை துப்புரவு படுத்துதல், மின்விசை நிலையத் தொழிலாளர்கள், ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையான வேலைநிறுத்தங்களை சங்கங்கள் முடித்துவிட்டன. அதே நேரத்தில் மற்ற தொழில்துறைகளுக்கு வேலைநிறுத்தங்களை ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்தது.

பல கிரேக்க நகரங்களிலும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் ஏதென்ஸில் உள்ள மத்திய அரசாங்கத்திற்கு பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய பொதுத்துறைத் தொழிலாளர்கள் பட்டியலை அனுப்புவதை தடுக்கத் தொழிலாளர்கள் நகரவை அரங்குகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இத்தகைய மீறல் இருந்தபோதிலும்கூட, அரசாங்கம் ஏற்கனவே 2,000 அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது.

ஏதென்ஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பல போலி இடது அமைப்புக்களான சிரிசா, அன்டர்ஸ்யா போன்றவற்றின் ஆதரவாளர்களுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. பெரும்பாலும் தொழிலாளர்கள் புதனன்று நடைபெற்ற பெயரவு நடவடிக்கையில் பங்கு கொள்ள மறுத்துவிட்டனர்.

பிரான்சிலும் CGT எனப்படும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு அறிவிந்திருந்த 130 ஆர்ப்பாட்டங்களுக்கு அதிக ஆதரவு இல்லை. நடத்தப்பட்ட அணிவகுப்புக்களும் முக்கியமாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் போலி இடது குழுக்களில் Lutte Ouvrière, New Anti-Capitalist Party போன்ற அவர்களுடைய ஆதரவாளர்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்களின் பங்கைத்தான் கொண்டிருந்தன.

பிரான்சில் ஐந்து முக்கிய கூட்டமைப்புக்கள்—CGT, CDFT, FSU, Solidaires, Unsa—எவையும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடவில்லை. பாரிசில் நடந்த அணிவகுப்பு ஒப்புமையில் குறைந்த அளவான 5,000 பொதுத்துறை தொழிலாளர்களை மட்டுமே ஈர்த்தது. தொழில்துறைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் வரவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களோ, பதாகைகளோ ஒல்னேயில் PSA கார்த்தயாரிப்பு  நிறுவன ஆலையை மூடியதை எதிர்த்துக் காணப்படவில்லை; இம் மூடல் பாரிஸ் பகுதியில் 10,000 வேலை இழப்புக்களை ஏற்படுத்தும்.

மேற்கு பிரான்சில் மரபார்ந்த முறையில் இடது சார்பு நாந்தில் 3,000 பேர்தான் அணிவகுத்தனர். ரென்னில் 800 பேர் மட்டுமே எதிர்ப்பில் கலந்து கொள்ள வந்தனர்; பிரான்சின் இரண்டாம் பெரிய நகரான மார்சேயியில் ஒரு சில ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். லியோனில் 1,800 பேர் பங்கு பெற்றனர்.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில்  “ஆர்ப்பாட்டக்காரர்கள் நம் அரசை வினாவிற்கு உட்படுத்தவில்லை, மாறாக அதற்கு ஆதரவு கொடுக்கின்றனர்” என்று அறிவித்தார்.

மற்ற ஐரோப்பியத் தொழிலாளர்களுடன் ஒற்றுமை உணர்வைக் காட்டுவதற்கு ஜேர்மனியில் தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களைத் திரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு DGB உடைய பேர்லின் அணிவகுப்பு தொழிற்சங்கப் பதாகைகள் அற்ற நிலையில்தான் இருந்தது. பேர்லினில் பிராண்டன்பேர்க் வாயிலில் கூடிய கிட்டத்தட்ட 200 பேரும் இடது கட்சி, அட்டாக் அல்லது பிற மத்தியதர வர்க்கஇடது குழுக்களின் உறுப்பினர்கள் ஆவர். காசினோ வகையில் உள்ள முதலாளித்துவத்திற்கு முற்றுப் புள்ளி தேவை எனக் கோரிய, வேர்டி பொதுச் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரின் வெற்று உரைக்குப் பின் கூட்டம் விரைவில் கலைந்தது.

லண்டனில், பிரித்தானிய தொழிற்சங்க காங்கிரஸ், முதலாளித்துவத்திற்கான அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, ஐரோப்பிய ஆணையத்திடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தது; EU, IMF, ECB ஆகியவை சுமத்தியுள்ள நடவடிக்கைகள் குறித்து புகார்கள் இருந்தன; “இவை நிதியச் சந்தைகளில் மீண்டும் நம்பிக்கையை மறுபடியும் நிறுவுவதற்குப் பதிலாக ஐரோப்பா முழுவதையும் பொருளாதாரத் தேக்கத்தில் தள்ளுகின்றன....” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.