சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Euro zone finance ministers demand deeper cuts in Greece, Europe          

யூரோப்பகுதி நிதி மந்திரிகள் கிரேக்கத்திலும், ஐரோப்பாவிலும் ஆழ்ந்த வெட்டுக்களைக் கோருகின்றனர்

By Robert Stevens and Jordan Shilton
13 November 2012
use this version to print | Send feedback

திங்களன்று யூரோப்பகுதி நிதி மந்திரகளின் கூட்டம் திவாலான கிரேக்க நாட்டிற்கு முன்பு ஒப்புக் கொள்ளப்பட்ட பிணையெடுப்பு நிதியில் இருந்த இன்னும் ஒரு தவணையான 31.5 பில்லியன் யூரோக்களை வழங்குவதற்கான முடிவை எடுக்க மறுத்துவிட்டது.

கிரேக்க பாராளுமன்றம் ஞாயிறன்று ஒரு புதிய 13.5 பில்லியன் சிக்கனப் பொதிக்கான சட்டத்தை இயற்றியும்கூட யூரோக்குழுவின் தலைவர் Jean-Claude Juncker கூட்டத்தில் எத்தகைய உறுதியான முடிவும்எடுக்கப்பட மாட்டாது என்று அறிவித்தார்.

ஐரோப்பிய ஆணையம் இப்புதிய சிக்கன நடவடிக்கைகளை வரவேற்றிருக்கையில், செய்தித்தொடர்பாளர் சைமன் ஓகோனர், கிரேக்கத்திற்கு இன்னும் கடன்கள் கொடுப்பதற்கு முன்னதாக, சட்டவரைவின் இறுதிப் பதிப்பை நாங்கள் இன்னமும் விரிவாக ஆராய வேண்டியுள்ளதுஎன்றார்.

டச்சு நிதி மந்திரி Jeroen Dijsselbloem, கிரேக்கர்கள் கடைசி நேரம் வரை பலவிடயங்களை விட்டுவைக்கின்றனர். எனவே நாங்களும் எங்கள் நிலைப்பாட்டை கவனத்திற்கு எடுக்க தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுவோம்என்றார்.

 இது இன்னும் சமூக வறிய நிலையை கோருவது என்பதின் இரகசிய மொழியாகும் இது. கிரேக்க பாராளுமன்ற வாக்கெடுப்பிற்குப்பின் ஏற்கனவே கொடுக்கப்பட வேண்டிய தவணை நிதி பொதுத்துறையில் 2,000 பணிநீக்கங்கள் ஏதென்ஸால் உறுதிசெய்யப்படும் வரை நிறுத்தி வைக்கப்படும் என்று வெளிப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி என்னும் முக்கூட்டுநிதி மந்திரிகளின் கூட்டத்திற்கு முன்னால் வெளியிட்ட அறிக்கை ஒன்று சிக்கன நடவடிக்கைகள் குறித்த கிரேக்க மக்களின் பெருகிய விரோதப் போக்கை கவனித்துள்ளது. மொத்தக் கொள்கை செயற்பாடு குறித்த முக்கிய இடர்கள் கவலையைத் தருகின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் கூட்டணியின் ஆதரவு பலமிழந்துள்ளது. அரசாங்கம் உறுதியாக இருந்தபோதிலும்கூட திட்டத்தின் சில கூறுபாடுகள் அரசியல் எதிர்ப்பை முகங்கொடுக்கின்றன.என்று அது குறிப்பிட்டுள்ளது.

கிரேக்கம் அதன் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை குறைப்பு இலக்குகளை 2016 ஒட்டி அடைந்தாலும்கூட, இன்னும் 32.6 பில்லியன் யூரோக்கள் ($41 பில்லியன்) அதற்கு கடன்களாக தேவைப்படும் என்று அறிக்கை மதிப்பீடு செய்துள்ளது. எதிர்வரும் வெள்ளியன்று வங்கிகளுக்கு ஐந்து பில்லியன்கள் கடன் திருப்பி கொடுப்பதற்கான காலக்கேட்டை கிரேக்கம் எதிர்கொள்கிறது. கிரேக்க அரசாங்கம் புதிய பத்திரங்களை செவ்வாயன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இது காலக்கெடுவை சந்திக்க உதவும் வகையில் ஒன்று மற்றும் மூன்று மாதங்களில் திருப்பக் கொடுக்கப்படும். இதனால் அரசாங்கம் 3.12 பில்லியன் யூரோக்களை ($4 பில்லியன்) பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கிறது.

யூரோப்பகுதி மந்திரிகள் சந்திக்கையில், ஜேர்மனிய வணிக நிர்வாகிகள் தூதுக்குழுவுடன் ஜேர்மனிய சான்ஸ்லர் போர்த்துக்கல்லுக்கு வருகை புரிந்து அதன் ஜனாதிபதியையும் பிரதம மந்திரியையும் சந்தித்தார். மேர்க்கெலின் பயணம் போர்த்துக்கல்லில் நாடெங்கிலும் சிக்கனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் பெருகியுள்ள நிலையில் நடைபெற உள்ள சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஒருநாள் பொது வேலைநிறுத்தத்திற்கு 48 மணிநேரம் முன்னதாக வந்துள்ளது.

போர்த்துக்கல்லிலும் ஐரோப்பா முழுவதும் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகள் தேவை என்னும் அவருடைய அரசாங்கத்தின் வலியுறுத்தலை கண்டித்த எதிர்ப்பாளர்கள் மேர்க்கெல் முன் ஆர்ப்பரித்தனர். லிஸ்பனில் பெரும் பொலிஸ் பிரசன்னம் இருந்தாலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் போர்த்துக்கல் மேர்க்கெலின் நாடு அல்ல, அங்கேலா மேர்க்கெல் ஒரு படுகொலை செய்பவர்என்ற கோஷ அட்டைகளை ஏந்தியிருந்தனர். அணிவகுத்தவர்கள், மேர்க்கெல் இது செயல்படாது, மேர்க்கெல், வெளியேறுகஎன்று கோஷமிட்டனர். நகரெங்கிலும் சுவரொட்டிகள் நாங்கள் கொடுக்கிறோம், அவர்கள் விளையாடுகிறார்கள், வங்கிகளுக்கு வெற்றிஎன்று ஒட்டப்பட்டிருந்தன.

போர்த்துகீசிய பிரதம மந்திரி பாசோஸ் கொயிலோவை கடற்கரைக் கோட்டையில் லிஸ்பனுக்கு வெளியே சந்தித்த மேர்க்கெல் அவருடைய அரசாங்கத்தின் மிருகத்தன நிகழ்ச்சிநிரல் பற்றிக் குறிப்பிட்டார்: இத்திட்டம் மிகச்சிறந்த முறையில் போர்த்துகல்லினால் செயல்படுத்தப்படுகிறது. கடினமான கட்டத்தைக் கடக்க வேண்டும் என்று உறுதியான பெரும் உணர்வை நான் இங்கு காண்கிறேன்என்றார்.

முக்கூட்டில் இருந்து பெறப்பட்டுள்ள 78 பில்லியன் யூரோக்கள் ($101 பில்லியன்) கடன்களுக்கு ஈடாக பெரும் சிக்கனங்களைச் சுமத்துவதில் விட்டுக்கொடுப்பு ஏதும் இராது என்றார் கொயிலோ. சமூக நிலைமை கடினமாக உள்ளது என்று நாங்கள் அறிவோம். சீர்திருத்தம் பற்றிப் பேசுவது சுலம், செயல்படுத்துவது கடினம். இடர்ளைப் பற்றி நாங்கள் அறிவோம். ஆனால் இது ஒன்றுதான் முன்னேயுள்ள பாதை என நாங்கள் நினைக்கிறோம்.

முக்கூட்டிடம் இருந்து இன்னும் கடனாக 2.5 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்படுவதை போர்த்துக்கல் எதிர்பார்க்கிறது. கிரேக்கம் போலவே இந்நிதிகள் அனைத்தும் வேலைகள், ஊதியங்கள், தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது கடுமையான தாக்குதல்கள் சுமத்தப்பட வேண்டும் என்னும் நிபந்தனையில் பேரில் தவணை முறையில் கொடுக்கப்படுகின்றன. முக்கூட்டு இப்பொழுது முன்பு கொயிலோ ஆட்சியில் உடன்பட்டிருந்த சிக்கன நடவடிக்கைகளின் காலாண்டுச் செயற்பாட்டை ஆராயும் பணியில் உள்ளது. முழுமையாக நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால்தான் போர்த்துக்கல் 2.5 பில்லியன் யூரோக்களைப் பெறும்.

போர்த்துக்கீசிய ஆளும் உயரடுக்கு பொருளாதாரச் சரிவைத் தவிர்க்கப் பெரும்முயற்சியுடன் செயல்படுகிறது. முக்கூட்டு மற்றும் வங்கிகள் முன்னோடியில்லாத செலவுக் குறைப்புக்கள் தேவை என்பதைச் செயல்படுத்துவதற்கான தங்கள் முழு ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது. இவ்வகையில் மேர்க்கெலின் பயணத்திற்கு முன்பே, அதிகாரிகளால் ஒரு சிறிய திரைப்படம் தயாரிக்கப்பட்டது. பைனான்சியல் டைம்ஸின்படி அதன் நோக்கம் போர்த்துகீசிய மக்கள் நீண்ட மணி நேரம் உழைக்கின்றனர், அதிக வரிகள் செலுத்துகின்றர், ஜேர்மனியர்ளைவிடக் குறைந்த விடுமுறை நாட்களைக் கொண்டுள்ளனர்என்பதைக் காட்டுவதாகும். திருமதி மேர்க்கெலின் பயணத்திற்கு முன் அதை ஜேர்மனியில் காட்ட எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லைஎன்று செய்தித்தாள் தொடர்ந்து எழுதியுள்ளது.

யூரோ மந்திரிகள் கடுமையான சிக்கனத்திற்கு மாற்றீடு இல்லை என வலியுறுத்துவதற்கு சந்திக்கையில், ஐரோப்பிய ஆணையம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காக முன்வைத்துள்ள புதிய பொருளாதாரக் கணிப்புக்கள் 2008 நிதியக் கரைப்பில் இருந்து ஐரோப்பிய அரசாங்கங்களால் செயல்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகள் பொருளாதார மீட்பிற்கு வழிவகுக்கும் என்னும் உத்தியோகபூர்வ கூற்றுக்களை மறுக்கின்றன.

கணிப்புக்களின்படி யூரோப்பகுதிப் பொருளாதாரம் 2013 முழுவதும் கிட்டத்தட்ட தேக்க நிலையில் இருக்கும். நிதானமான வளர்ச்சி 2014ல் வரும் வாய்ப்பு உள்ளது. வேலையின்மை அடுத்த ஆண்டு 12% அடைந்து, 2014 வரை மிக அதிகமாகவே இருக்கும்.

ஒரு செய்தி அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார, நிதிய விவகாரங்களின் ஆணையர் ஒல்லி ரெஹ்ன் புள்ளிவிவரங்கள சிக்கன நடவடிக்கைள் தீவிரப்படுத்த வேண்டும் என்பதைச் சித்தரிக்கின்றன என்றார். ஐரோப்பா பெரும் பொருளாதார சமச்சீரை மறுபடியும் அடையும் வழிவகையில் உள்ளது. இது இன்னும் சிறிது காலம் நீடிக்கும்என்றார். ஐரோப்பா தொடர்ந்து நல்ல நிதியக் கொள்கைகளை கட்டுமானச் சீர்திருத்தங்களுடன் இணைத்து, தொடர்ச்சியான வளர்சிக்கு சூழ்நிலையை உருவாக்க வேண்டும்என்றார் அவர்.

ரெஹ்ன் உடைய கருத்துக்கள் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் கொள்கை ஐரோப்பியத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களை குறைத்து அவற்றை சீனா மற்றும் பிற குறைவூதியத் தொழிலாளர் நாடுகளுக்கு ஒப்பாகச் செய்வதுதான் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

போர்த்துக்கீசிய பயணத்திற்கு முன்பு மேர்க்கெல் தன்னுடைய கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் பிராந்தியக் கூட்டத்தில் கடன் நெருக்கடி இன்னும் ஐந்து ஆண்டு காலத்திற்கேனும் நீடிக்கும் என்று எச்சரித்தார். ஐரோப்பாவில் முதலீடு செய்வது உகந்தது என உலகத்தை நாம் நம்பவைக்க வேண்டும்என்றார் அவர்.  அதிக இலாபத்தை ஈட்டவேண்டும் என்று முயல்வோருக்கு, இன்னும் ஆழ்ந்த வெட்டுக்களும் இன்னும் மிருகத்தனமான தொழிலாளர் சுரண்டலும், உலகச் சந்தைகளில் இருந்தும் உலக வங்கிகளிலும் இருந்தும், ஊகவணிகர்களிடமும் இருந்து ஈர்ப்பதற்கான ஒரு இரகசிய செய்தியாகும்

அயர்லாந்து அரசாங்கமும் இன்னும் வெட்டுக்களுக்குத் திட்டமிட்டுள்ளது. செலவுக்குறைப்புக்களும் மற்றும் 3.5 பில்லியன் அளவிற்கு வரிவிதிப்பு அதிகரிப்புக்கள் டிசம்பரில் வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகமாகலாம். இது ஏற்கனவே 2008ல் இருந்து வந்துள்ள 25 பில்லியன் சிக்க நடவடிக்கைகளை தவிர வருவது ஆகும். அயர்லாந்து நாட்டின் அரசாங்கக் கடன் 2015 அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 150% என அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இத்தரம் நீடித்து நிலைக்காது என்றும் காணப்படுகிறது.

ஐரோப்பிய ஆணையத்தின் கணிப்புக்களின்படி, ஸ்பெயின் 2013வரை அதன் வரவு-செலவுத் திட்ட இலக்குகளை பெரிதும் அடையாது. இது முக்கூட்டிடம் முழுப் பிணையெடுப்புத் தேவை என்ற கோரிக்கையை முன்வைக்கும் அழுத்தத்தை ஸ்பெயின் மீது அதிகரிக்கும்.