WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஐரோப்பாவில் சிக்கன
நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றப்பாதை
World
Socialist Web Site editorial
board.
14
November 2012
ஐரோப்பிய
தொழிற்சங்கக் கூட்டமைப்பு
விடுத்த அழைப்பின் பேரில்
தெற்கு ஐரோப்பா முழுவதும்
தொழிலாளர்கள் இன்று
சமூக சிக்கன கொள்கைகளுக்கு
எதிராக எதிர்ப்புக்களைத்
தெரிவிக்கையில்,
அவர்கள்
அரசியல் முன்னோக்கு தொடர்பான அவசரமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த,
ஆனால் அளவிலும்
காலத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட முந்தைய வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும்http://www.wsws.org/donate.shtml
மேற்கு ஐரோப்பாவில்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் நாஜி ஆக்கிரமிப்பிற்குப் பின் காணப்படாத அளவிலான
சமூகப் பேரழிவை நிறுத்துவதில் தோல்வி அடைந்துள்ளன.
ஐரோப்பா முழுவதும்
2008ல் இருந்து
நடைபெறுகின்ற பெரும்பான்மையான வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் டஜன் கணக்கான ஒருநாள்
தேசிய வேலைநிறுத்தங்களுக்கு மத்தியிலும் ஐரோப்பிய ஒன்றியமோ ஒரு சில ஆண்டுகளுக்கு
முன்பு நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாத சமூகநலச் செலவு வெட்டுக்களை
சுமத்தியுள்ளது.
கிரேக்கத்திலும்
ஸ்பெயினிலும் தொழிலாளர்களில்
25%மும்
இளைஞர்களில் பாதிக்கு
மேலானவர்களும் வேலையின்மையில்
உள்ளனர்.
கிரேக்கத்தின்
பொருளாதாரம் 2008ல்
இருந்து 25%
சுருங்கிவிட்டது,
ஊதியங்கள் குறைகையிலும்,
வரிகள்
உயர்கையிலும்,
கிரேக்கப்
பொதுமக்கள் உணவிற்கும்
அடிப்படைச் சுகாதாரப்
பாதுகாப்பிற்கும் அறக்கட்டளை நிறுவனங்களைகளைத்தான் நம்பியுள்ளனர்.
ஆயினும்கூட,
ஐரோப்பிய ஒன்றியம்
கிரேக்கத்தின்
கடன்களைக் குறைக்க முடியாத
தன்
கொள்கைகளின் தோல்வியை
கண்டும்கூட,
இழிந்த
முறையில் கிரேக்கத்தின்
பிரதமர் அன்டோனிஸ் சமரஸின்
கூட்டணி அரசாங்கத்துடன்
இணைந்து ஒரு புதிய
13.5
பில்லியன்
யூரோக்கள் ($17.2
பில்லியன்)
சமூகநலக்
குறைப்பு பொதியை இயற்றியுள்ளது.
400,000
மக்களுக்கு
மேல் தங்கள் வீடுகளில் இருந்து
வெளியேற்றப்பட்டுள்ள
ஸ்பெயினில்,
அதிகாரிகள்
கலகப் பிரிவுப் பொலிசாரின்
கருவிகளை அதிகரிப்பதற்கான
செலவீனங்களை
1780%
உயர்த்தியுள்ளனர்.
முன்னாள்
ஜேர்மனிய சான்ஸ்லர் ஹெல்முட் ஷ்மித் சமீபத்தில் ஐரோப்பா
புரட்சியின் விளிம்பில்
நிற்கிறது என்று எச்சரித்தார்.
இது
ஆளும்
வர்க்கத்தின் அரசியல்
பிரதிநிதிகள் தாங்கள்
முகங்கொடுக்கும் ஆபத்துக்கள்
பற்றி தெளிவாகத் தெரிந்துள்ளனர்
என்பதைக் காட்டுகிறது.
இத்தாக்குதல்கள் உலக முதலாளித்துவத்தின் ஒரு வரலாற்று நெருக்கடியில் இருந்து
தோன்றுகின்றன. அந்நெருக்கடியில் புரட்சிகர தாக்கங்கள் உள்ளன.
செல்வந்தர்களுக்குக்
கொடுப்பதற்கு வங்கிகளில் டிரில்லியன் கணக்கான யூரோக்கள் உட்செலுத்தப்படுகின்றன;
அரசாங்கங்கள்
முதலாளிகளுடன் இணைந்து செயல்பட்டு தொழிற்துறையை உலகளவில் போட்டித்தன்மையையுள்ளதாக
வைத்திருக்க வேலைகளையும் ஊதியங்களையும் குறைக்கின்றன அல்லது தொழிற்சாலைகளை
முற்றிலும் மூடிவிடுகின்றன.
நிதிய
மூலதனம் ஒரு நாட்டின் தொழிலாளர்களை மற்ற நாட்டின் தொழிலாளர்களுக்கு எதிராக
வேலைகளுக்கான சகோதரப் போராட்டத்தில் எதிரெதிராக நிறுத்துகிறது.
இது
வாழ்க்கைத்தரங்களில் கீழ்நோக்கி செல்லும் தன்மைக்கு தீயூட்டி கிழக்கு ஐரோப்பா,
ஆசியாவில் இருக்கும்
தரங்களுக்குக் கொண்டு செல்லுகிறது.
ஐரோப்பா
முழுவதற்கும் பரிசோதனை மற்றும் மாதிரியாக கிரேக்கம் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள
சிறப்புப் பொருளாதாரப் பகுதிகளில் கொடுக்கப்படும் மிகக்குறைந்த ஊதியங்களில் இருந்து
இலாபங்களை அடைகின்றன.
இத்தகைய
கொள்கைகள் தொழிலாள வர்க்கம் அரச அதிகாரத்தை எடுத்துக் கொண்டு வங்கிகளை கைப்பற்றி
ஐரோப்பிய மற்றும் உலகப் பொருளாதாரத்தை பொதுஜனங்களின் நலன்களுக்காகப்
பகுத்தறிவார்ந்த முறையில் திட்டமிடுவதின் மூலமும் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச
தாக்குதல் நடத்துவதின் மூலமும்தான் நிறுத்தப்பட முடியும்.
இன்னுமொரு எதிர்ப்பு
நடவடிக்கையை ஏற்பாடு செய்வதன் மூலம் தொழிலாளர்கள் இதை எதிர்த்துப் போராட முடியாது.
முன்னரைப்போலவே
ஆளும் வர்க்கங்கள் தொழிற்சங்க அதிகாரத்துடன் இணைந்து செயல்பட்டு ஒரு நாள்
வேலைநிறுத்தம் முடியக் காத்திருந்து பின்னர் தங்கள் தொழிலாளர்கள் மீதான
தாக்குதலைத் தொடரும்.
தொழிலாள
வர்க்கம் சோசலிசத்திற்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் அவசியத்திற்கு
முகங்கொடுக்கிறது.
இதற்கு ஐரோப்பாவில்
வெகுஜன இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் இணைந்த அரசாங்கங்களை அகற்றி,
ஐக்கிய ஐரோப்பிய
சோசலிச அரசுகளுக்குள் தொழிலாளர்கள் அரசாங்கங்களை உருவாக்குவது அவசியமாகின்றது.
அத்தகைய
போராட்டம் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் மூலம் நடத்தப்பட முடியாது. மாறாக
அவற்றிற்கு எதிராகத்தான் நடத்தப்பட வேண்டும். அவை ஒவ்வொரு நாட்டிலும்
தாக்குதல்களுக்கு உதவுகின்றன,
உடந்தையாக உள்ளன.
இன்று
ஜேர்மனிய தொழிற்சங்க அதிகாரத்துவம் பேர்லினில் பிராண்டன்பேர்க் வாயிலில்
“தனித்தனி ஜேர்மன்
தொழிற்சங்க கூட்டமைப்பு -DGB-
உறுப்பினர்கள்”
மூலம் அதன் நடவடிக்கைகளை மையமாக கொண்டு அவர்கள்
“ஐரோப்பியத்
தொழிலாளர்களுடன்
தங்கள் ஒற்றுமைத் தகவலை”
ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா
மேர்க்கெலுக்கு அனுப்புவர் என்றது.
பிரித்தானியாவில்
100
பில்லியன்
பவுண்டு சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு வேலைநிறுத்தத்தைக்கூட
நடத்தாத அமைப்பான பிரித்தானிய
தொழிற் சங்க காங்கிரஸ் ஐரோப்பிய
ஒன்றியத்தை அழுத்தத்திற்கு உட்படுத்தி
“சமூக
இணையங்கள் மூலம் உண்மையான நடவடிக்கையை”
மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இத்தகைய
இழிந்த போலிச் சொற்களுக்குப் பின் ஐரோப்பிய தொழிற்சங்க கூட்டமைப்பின் நிதிய மூலதனத்தின் கொள்கைகளுடனான
அடிப்படை உடன்பாடு உள்ளது.
நவம்பர் 14
அன்று
எதிர்ப்புக்களுக்கு
அழைப்புவிடுத்து
“பற்றாக்குறையற்ற
வரவு-செலவுத்
திட்டம்
என்னும்
இலக்கிற்கு”
அது
ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு ஆதரவை கொடுக்கும்
என்று ஆரம்பிக்கின்றது.
அதன்பின்
அது
“ஐரோப்பிய
மத்திய வங்கிக்கு”
கடைசிப்பட்ச
கடன் வழங்கும்
அமைப்பு என்னும் பங்கைக்
கொடுக்கிறது. இதனால்
யூரோப்பத்திரங்கள்
வெளியிடப்பட்டு,
முதலாளிகள் கூட்டமைப்புக்கள்,
ஐரோப்பிய
ஒன்றியம்,
தேசிய
அரசாங்கங்கள் மற்றும்
தொழிற்சங்கங்களுக்கு இடையே
ஒரு
புதிய “சமூக
உடன்பாடு”
ஏற்படக்கூடியதாக இருக்கும் என்கின்றது.
ஐரோப்பிய
தொழிற்சங்க கூட்டமைப்பு
பல
மில்லியன் வேலைகள்,
பொதுப்பணிகளுக்குப்
பல
டிரில்லியன்கள் என்பதற்கு
வாதிடவில்லை. மாறாக
இன்னும் கூடுதலாக பணத்தை
அச்சடித்து வங்கிப் பிணையெடுப்புக்களுக்காக நிதி
தரவேண்டும் என்று வாதிடுகிறது;
இதற்காக
தொழிற்சங்கங்கள் ஆளும் வர்க்கத்துடன் சமூக வெட்டுக்களுக்காக பேச்சுவார்த்தைகளை
தொடரும்.
அது
முன்வைக்கும் கொள்கைகளும் மற்றும் அது
பாதுகாக்கும்
வர்க்க நலன்களும் சர்வதேச நாணய நிதியம்,
ஐரோப்பிய
வங்கி மற்றும் ஐரோப்பிய
ஒன்றியம் ஆகியவற்றின்
கொள்கைகளில் இருந்து வேறுபாடு
கொள்ளாதவை.
வங்கிகள்
மற்றும் வங்கியாளர்களின் அரசாங்கங்கள் நடத்தும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராகத்
திறமையுடன் நடாத்த புதிய சுயாதீன தொழிலாள வர்க்கப் போராட்ட அமைப்புக்கள் தேவையாகும்.
இந்தப் புதிய
அமைப்புக்களில் அரசியல் வழிகாட்டும் பாதை ஐரோப்பா அதற்கு அப்பாலும்,
சோசலிசத்திற்கான ஒரு
பொதுப் போராட்டத்திற்கு அனைத்து தேசிய,
மொழி,
இன,
எல்லைகளைக் கடந்து தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுத்த போராடவேண்டும்.
இதற்கு
உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சி தேவை. அவற்றின்
மத்தியதரவர்க்க போலி இடது கட்சி நட்பு அமைப்புக்களான கிரேக்கத்தில் சிரியா,
ஜேர்மனியில் இடது
கட்சி,
பிரான்சில் புதிய
முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சி,
பிரித்தானியாவில்
சோசலிச தொழிலாளர் கட்சி,
அமெரிக்காவில்
சர்வதேச சோசலிச அமைப்பு போன்றவற்றிற்கு எதிராக சமரசத்திற்கு இடமில்லாத போராட்டம்
தேவை.
இச்சக்திகள்
தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்குப்
பின் நிற்கவேண்டும் என்று
வலியுறுத்துவதுடன், சிக்கன நடவடிக்கைக்கான தொழிற்சங்கங்களின் ஆதரவை
மூடிமறைக்க முற்படுகின்றன. ஏனெனில்
அவை
சலுகை மற்றும் வசதியான
மத்தியதர உயரமட்ட வர்க்கத்தைச்
சார்ந்தவையும்,
தொழிலாள வர்க்கத்திற்கு
விரோதப் போக்கு உடையவையும் மற்றும் ஐரோப்பா
முழுவதும் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் வெட்டுக்களுக்கு
ஆதரவைத் கொடுப்பவையுமாகும்.
போர்த்துகீசிய இடது கூட்டு,
முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீடைக் காண தான் விரும்புவதாக அறிவித்தாலும்,
பிற்போக்குத்தன
கிரேக்க வகைப்பட்ட
“பிணையெடுப்பு”
போர்த்துக்கல்
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது ஆதரவாக வாக்களித்தது.
கிரேக்கத்தின்
சமீபத்தைய வெட்டுக்களுக்கான பேச்சுவார்த்தைகளின்போது சிரிசா பாராளுமன்றத்தை விட்டு
வெளியேறுவதில்லை என்று முடிவெடுத்தது. அத்தகைய செயல் அரசாங்கத்தின் வீழ்ச்சியை
தூண்டி,
வரவு-செலவுத்
திட்ட பேச்சுவார்த்தைகளை உடையச் செய்திருக்கும்.
மாறாக சிரிசா தலைவர்
அலெக்சிஸ் சிப்ரஸ் ஜேர்மனிய வாராந்திர ஏடு
Die Zeit
க்குக்
கொடுத்த பேட்டியில் கிரேக்கக்
கடனுக்கு “கிரேக்க
மக்கள்”
பொறுப்புக் கொண்டுள்ளனர் என்று
அறிவித்தார்.
ஐரோப்பிய
ஒன்றியம் மற்றும் அதனுடன் இணைந்த முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராகப் புரட்சிகர
சுயாதீன அரசியல் போராட்டத்திற்கு போராடும் ஒரே கட்சி நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும்தான்.
உலக சோசலிச வலைத்
தளத்தை படிக்குமாறும், எங்களுடன் தொடர்புகொள்ளுமாறும், நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவை
ஐரோப்பிய,
சர்வதேச
தொழிலாள வர்க்கத்தின்
புதிய சோசலிசத் தலைமையாக
கட்டியமைக்கும் எங்கள்
போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு
தொழிலாளர்ளைக் கேட்டுக் கொள்ளுகிறோம். |