சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Greens, Stalinists staggered by President Hollande’s unpopularity

ஜனாதிபதி ஹாலண்டின் செல்வாக்கற்ற நிலை குறித்து பிரெஞ்சுப் பசுமைவாதிகள், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தடுமாற்றம்

By Kumaran Ira 
14 November 2012
use this version to print | Send feedback

ஏயர்பஸ்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி லூயி கலுவாவின் போட்டித்தன்மை அறிக்கையை ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) ஒப்புக் கொண்டுள்ளமை, PS இன் வாடிக்கையான பாராளுமன்ற மற்றும் குட்டி முதலாளித்துவ “இடது” கட்சிகளிடேயே ஒரு நெருக்கடியைத் தூண்டியுள்ளது. ஹாலண்டிற்கான கருத்துக் கணிப்பு விகிதங்கள் மே மாதம் தேர்தலுக்குப்பின் 60%ல் இருந்து இப்பொழுது 30% எனச் சரிந்துவிட்டதை அவை பதட்டத்துடன் காண்கின்றன. 

ஹாலண்டிற்கு தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த பல கட்சிகள் ஐரோப்பிய சுற்றுச்சூழல் / பசுமை கட்சி (EELV), ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF)—இப்பொழுது இழிந்த முறையில் அவருடைய சிக்கனக் கொள்கைகளில் இருந்து தங்களை ஒதுக்கிக் கொள்ள முற்பட்டுள்ளன. ஹாலண்டிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அவை வழிதடுமாறச் செய்ய முயல்கின்றன; அதையொட்டி மக்கள் தங்களுக்கு ஆதரவைக் கொடுத்தால், அவர்கள் ஹாலண்டின் கொள்கைகளை மாற்றுவர் என்னும் போலித்தோற்றங்களை விதைக்க முயல்கின்றனர்.

கலுவாவின் அறிக்கை, ஹாலண்டின் நிகழ்ச்சி நிரலை மிகவும் தெளிவாக்கியுள்ளது; பிரெஞ்சுப் பெருநிறுவன போட்டித்தன்மை ஏற்றம் பெறுவதற்கு தொழிலாளர் வாழ்க்கைத் தரங்கள் குறைக்கப்பட வேண்டும் என அப்பட்டமாக வாதிட்டுள்ளது. ஒரு “போட்டித்தன்மை உடைய அதிர்ச்சி” யை அது முன்வைத்துள்ளது; அதில் 20 பில்லியன் யூரோக்கள் (அமெரிக்க $25.4 பில்லியன்) பெருநிறுவன வெட்டுக்களில் குறைப்புக்கள், மதிப்புக் கூட்டு வரிகளில் அதிகரிப்பு மற்றும் பொதுநலச் செலவுகளில் வெட்டுக்கள் ஆகியவை இருக்கும். 20 பில்லியன் யூரோக்கள் பெருநிறுவன வரிக் குறைப்பு தொழிலாளர் செலவினங்களில் 6% குறைத்துவிடும்.

வெள்ளியன்று EELV அதிகாரிகள் அரசாங்கத்தை விட்டு நீங்குவதாகக் குறுகிய காலத்திற்கு அச்சுறுத்தினர். EELV செனட் உறுப்பினர் Jean-Vincent Placé, “கலுவா அறிக்கைக்குப்பின் வருபவை வணிகச் சார்பு அறிவிப்புக்களாக மாற்றுத் திட்டங்கள் அல்லது சுற்றுச்சூழல் மாறுதல் குறித்து இல்லை என்பதால், நான் பெருகிய முறையில் அரசாங்கத்தில் எங்கள் பங்கு குறித்து குழப்பம் அடைகிறேன்.” என்று கூறியுள்ளார்.

வீட்டுத்துறை மற்றும் வெளியுறவுத் துறை என EELV இரண்டு மந்திரிப் பிரிவுகளைக் கொண்டுள்ளது; இழிந்த முறையில் அது மத்தியதர வர்க்கங்களுக்கு வாதிடும் அமைப்பு என்று காட்டிக் கொள்ளும் அதே நேரத்தில் நிதியமூலதனத்திற்குத் தான் மிகவும் பாதுகாப்பான அமைப்பு என்றும் அடையாளம் காட்டுகிறது. சிக்கன சார்பு ஐரோப்பிய உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்தபின், EELV ஆர்கானிக் சட்டம் என்பதற்கு வாக்களித்தது; அதில் சமச்சீர் வரவு-செலவுத் திட்டம் என்பது பிரெஞ்சுச் சட்டத்தில் ஒருதங்க விதி என்று எழுதப்பட்டிருந்தது; இத்தேவை ஐரோப்பிய ஒன்றிய நிதிய உடன்பாட்டிலும் பட்டியல் இடப்பட்டுள்ளது; 2013 பிரெஞ்சு சிக்கன வரவு-செலவுத் திட்டத்திற்கும் EELV வாக்களித்துள்ளது.

அவருடைய கருத்துக்கள் குறித்து EELV க்குள் தொடக்கத்தில் விவாதம் இருந்தபின், Placé விரைவில் தன் விமர்சனத்தில் இருந்து பின்வாங்கினார். “நான் ஒன்றும் நாளையே நாங்கள் அரசாங்கத்தில் இருந்து நீங்கிவிடுவோம் என்று கூறவில்லை.” என்றார்.

PS ன் நீண்டக்கால ஆளும் பங்காளியாக 1980கள் 1990களில் இருந்து உள்ள PCF இன் சுற்றுப்பகுதியில் இருந்து சில செயலற்ற விமர்சனங்கள் வந்துள்ளது. முறையாக இது ஒன்றும் அரசாங்கத்தின் ஆளும் பாராளுமன்றக் கூட்டணியின் ஒரு பகுதி அல்ல; ஆனால் நடைமுறையில் ஹாலண்ட் அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுக்கிறது.

PS உடைய முன்னாள் மந்திரியும், இடது கட்சியின் (PG)  தலைவருமான Jean-Luc Mélenchon —இது PS மற்றும் PCF இவற்றிற்கு இடையே உறவை வலுப்படுத்துகிறது திங்களன்று ஒருமாற்றீட்டு வரவு-செலவுத் திட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் பிரான்சின் செல்வந்தர்கள்மீது வரிவிதிப்பதின் மூலம் எடுக்கப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. PG உடைய பிரச்சாரமான மாதக் குறைந்த ஊதியம் 1700 யூரோக்களுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்பதைப்போல், இந்த முற்றிலும் நியாயமான கோரிக்கை பயனற்றது, ஏனெனில் அதைச் செயல்படுத்தும் எண்ணம் PG இடம் இல்லை.

நீண்ட காலம் PS இன் செயலர்களை கொண்டுள்ள PG கட்சி ஹாலண்டின் சிக்கனக் கொள்கைகளை அளிப்பதில் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. PSன் கொள்கைகளில் இருக்கும் வர்க்கத் தன்மை, பாராளுமன்ற தந்திரோபாயங்களால் PG உறுப்பினர்களால் மாற்றப்பட முடியும் என்ற போலித் தோற்றங்களை அது முக்கியமாக செயலில் கொண்டுள்ளது; எனவே ஹாலண்டின் சிக்கன நடவடிக்கைகளுக்கு சுயாதீன அரசியல் எதிர்ப்புக்கள் வளர்வதை நிறுத்த முற்படுகிறது. (See also: “What are the politics of French Left Front candidate Jean-Luc Mélenchon?”)

ஹாலண்ட் நிர்வாகத்தின் ஆதரவிற்குச் சரிவு, PCF ஐக் கூட ஹாலண்டைக் குறைகூற வைத்துள்ளது. PCF ன் நாளேடான l’Hmanite  “தொழில்துறை முதலாளி லூயி கலுவா உடைய பரிந்துரைகள் பிரெஞ்சு மக்களுக்கு மிக அதிக, மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும்; அதே நேரத்தில் நம் ஆடு ஒரு பொருளாதார, நிதிய முட்டுச்சந்தியில் இருந்து மீள முடியாமலும் போகும்; இதையொட்டி வேலை வெட்டுக்கள்தான் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளது.

l”Humanite இழிந்தமுறையில் பொதுப்பணத்தை பெருநிறுவனப் பிணை எடுப்பிற்கு ஹாலண்ட் பயன்படுத்துவதைக் குறைகூறியுள்ளது.  இந்த நிதிகள் “முதலீடு மற்றும் வேலைகள் தவிர மற்ற நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம்” என்று குறிப்பிட்டுள்ளது; ஹாலண்ட் வேலை தோற்றுவித்தல் மற்றும் முதலீடு இலக்குகளை நிறுவவில்லை என்றும் குறைகூறியுள்ளது.

உண்மையில் ஹாலண்ட் நிர்வாகம் இந்நிதிகளை வேலைகளை வெளியே அனுப்புவதற்கும் ஆலைகள் மூடலுக்கும் பயன்படுத்துகிறது, அவையோ தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் பேச்சுக்களுக்குப் பின்தான் நடந்துள்ளன, அதில் PCF ம் ஒரு முக்கிய அரசியல் சக்தி என்பதைப் பற்றி செய்தித்தாள் மௌனமாக உள்ளது.

L’Humanité , PCF போன்ற சக்திகளிடம் இருந்து வரும் அழுத்தம் ஹாலண்டின் கொள்கைகளை மாற்றும் என்ற போலித்தோற்றங்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது. “அரசாங்கம்....சிக்கனக் கொள்கையில் முழ்கிவிட்டது....பிரான்சிலும் ஐரோப்பாவிலும் இவற்றின் உதாரணங்கள் அவை சுவரில் மோதுவதற்குத்தான் வழிவகுக்கும் எனக் காட்டியுள்ளன. இப்பொழுதாவது இடதின் குரல்களைக் கேட்டு, போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று அது எழுதியுள்ளது.

அவ்வாறு L’Humanité s கூறவில்லை என்றாலும் ஹாலண்டின் மிகச் சமீபத்திய வெளிப்படையான முன்னோடி சமூக ஜனநாயகப் பிரதம மந்திரி பாப்பாண்ட்ரூ கிரேக்கத்தில் செய்திருப்பதுதான். பாப்பாண்ட்ரூவின் கொள்கைகள் கிரேக்கச் சமூகத்தை பல தசாப்தங்கள் பின்தள்ளிவிட்ட்து—கிரேக்கப் பொருளாதாரத்தில் 25% சுருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, சுகாதாரம், கல்வி, சமூகநலப் பணிகளில் சரிவை ஏற்படுத்தியுள்ளது, வேலையின்மை 25%க்கும் மேல் உயர்ந்துவிட்டது. ஆனால் L’Humanite  இதை நேரடியாக எழுப்ப முடியாது; ஏனெனில் அது ஜனாதிபதித் தேர்தல்களில் ஹாலண்டிற்கு இது கொடுத்த ஒப்புதலின் பிற்போக்குத் தன்மையைத் தெளிவாக்கிவிடும்.

L’Humanité உடைய குறைகூறல்கள் தொழிலாள வர்க்கத்தில் இருக்கும் எதிர்ப்புக்களைப் பிரதிபலிக்கவில்லை, தொழிற்சங்க அதிகார்த்துவம் மற்றும் பிரெஞ்சு ஆளும் உயரடுக்குடன் ஒருங்கிணைந்திருக்கும் வசதி மிக்க மத்தியதர வகுப்பின் பிற பிரிவுகளுடைய கவலைகளைப் பற்றித்தான் பேசுகிறது; அவற்றிற்காகத்தான் PCF  ம் பேசுகிறது. இவை ஹாலண்டின் கொள்கையான ஆலை மூடல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை; ஹாலண்டின் செலவுக் குறைப்புக்களின் பாதிப்புத்திறன் பற்றியும் தெளிவாக எச்சரிக்கவில்லை; ஆனால் இப்பாதையில் செல்வதால் பிரெஞ்சு முதலாளித்தவத்திற்கு ஏற்படக்கூடியுட்குறிப்புக்களைப் பற்றிக் கவலை கொண்டுள்ளன.

அவர்களுடைய விமர்சனங்கள்,  ஹாலண்டின் கொள்கை ஐரோப்பா மீது ஜேர்மன் கட்டுப்பாடு மற்றும் யூரோவை ஏற்கும்  நிலைக்குத் தள்ளும் என்ற பிரெஞ்சு முதலாளித்துவத்தின் சிலபிரிவுகளின் கவலைகளுடன் இணைந்துள்ளது. (See also: “Former finance minister confirms France considered leaving euro zone”)

எல்லாவற்றிற்கும் மேலாக, இவை ஹாலண்டிற்கு இடதில் இருந்து வெகுஜன எதிர்ப்புக்கள் வெளிப்படுவது குறித்த பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் பெருகிய கவலைகளையும் பிரதிபலிக்கின்றன; அவற்றைத் தாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவை அஞ்சுகின்றன.

அதிகாரத்தை எடுத்துக் கொண்டபின்னர், ஹாலண்டின் நிர்வாகம் அதன் மோசடித்தன, தெளிவற்ற தேர்தல் உறுதிமொழிகளைக் கைவிட்டு, சிக்கனக் கொள்கைகள், ஏராளமான பணிநீக்கங்கள் முக்கிய தொழில்களில் என்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. 2013 சிக்கன வரவு-செலவுத் திட்டத்திற்கு நிர்வாகம் வாக்களித்துள்ளது; அதில் 30 பில்லியன் யூரோக்கள் செலவுக்குறைப்புக்களில் உள்ளன. கடந்த மாதம் இது ஐரோப்பிய ஒன்றிய நிதிய உடன்பாட்டில் கையெழுத்திட்டது; அது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் வடிவமைப்பைக் கொண்டது; கடுமையான பற்றாக்குறை வெட்டு இலக்குகளைக் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் “தொழிற்சந்தை” சீர்திருத்தங்கள் பற்றி பேச்சுக்கள் நடத்துகின்றன; இவை எஞ்சியிருக்கும் தொழிலாளர் பாதுகாப்பை அகற்றுவதுடன் தொழிலாளர் செலவுகளையும் குறைத்துவிடும்.

ஹாலண்டின் தேர்தலை ஆதரித்த குட்டி முதலாளித்துவ “இடது” கட்சிகளின் அரசியல் பொறுப்பை இது உயர்த்திக் காட்டுகிறது. அவை சார்க்கோசியின் கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பை ஹாலண்டிற்குப் பின் கொண்டுவந்தன; PS அதிகாரத்தில் இருந்தபோது தொழிலாளர் விரோதக்கொள்கைகளைத்தான் தொடர்ந்தன என்ற வரலாறு உள்ளது என்பதையும் ஒப்புக் கொண்ட போதும் அவர் குறைந்த பிற்போக்குத்தனக் கொள்கைகளை தொடர்வார் என்று கூறின.

அவர்களின் திவாலான கருத்துக்கள் ஹாலண்டின் வலதுசாரிக் கொள்கைகளால் நிராகரிக்கப்பட்டு விட்டன. ஹாலண்ட் செல்வாக்கற்ற அவருடைய கன்சர்வேடிவ் முன்னோடி நிக்கோலா சார்க்கோசி ஆரம்பத்தில் முன்வைத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுத்தார்; இதில் விற்பனை வரி அதிகரிப்பு, தொழிலாளர் செலவுகளில் 20 பில்லியன் யூரோக்கள் வெட்டுவது ஆகியவை அடங்கும்; இவை சார்க்கோசியே ஆரம்பத்தில் முன்வைத்த 13 பில்லியன் யூரோக்களை விட கணிசமாக அதிகம் ஆகும்.

ஹாலண்ட் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு என்பது தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் சுயாதீன அரசியல் அணிதிரள்வை அடிப்படையாக கொள்ள வேண்டும். PS   உடன் பிணைந்துள்ள குட்டி முதலாளித்துவ “இடது” அத்தகைய போராட்டத்திற்கு ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டுள்ளது.