WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
Chinese president’s
speech points to uncertainty and crises ahead
வரவிருக்கும் உறுதியற்ற நிலை
நெருக்கடிகள் குறித்து சீன ஜனாதிபதியின் உரை சுட்டிக் காட்டுகிறது
By John
9 November 2012
சீனக்
கம்யூனிஸ்ட் கட்சியின்
(CCP)
வெளியேறும் பொதுச் செயலர் ஜனாதிபதி ஹு ஜின்டாவோ கட்சியின்
18வது
தேசியக் காங்கிரசில் நேற்று தொடக்க உரையை ஆற்றி,
துணை ஜனாதிபதி ஜின்பிங் தலைமையிலான அடுத்த தலைமுறைக்கு பரந்த
செயற்பட்டியலை நிர்ணயித்தார்.
அவருடைய உரையின் முக்கிய கருத்து பொருளாதாரத்தில் தனியார்துறையின்
சட்டபூர்வ அந்தஸ்தை விரிவாக்கி,
உயர்த்துதல்;
அதே நேரத்தில் அமெரிக்காவை சமாதானப்படுத்தும் வகையில்
“அமைதியான
வளர்ச்சி”
என்னும் வெளியுறவுக் கொள்கையை தொடர வேண்டும் என்பவையாகும்.
அவருடைய உரை
கடந்த வாரம் வெளியேறும் மத்திய குழுவின் உயர்மன்றத்தினால் இசைவு கொடுக்கப்பட்ட
அவருடைய அறிக்கையின் சுருக்கமாகும். போட்டியிடும் பிரிவுகளுக்கிடையே சமநிலையை
உருவாக்கி இந்த ஆண்டு வெளிப்பட்டுள்ள தீவிர வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் முயற்சியாக அது இருந்தது. கட்சி ஒன்றுபட்டுள்ளது என்று உலகிற்குக்
காட்டும் அடையாளமாக இளம் கம்யூனிஸ்ட் கழக பிரிவில் உள்ள ஹு,
மக்களின் பெரும் அரங்கில் ஷாங்காய் குழு என அழைக்கப்டும் பிரிவைச்
சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜேமின் உடன் அவருக்குச் சற்று பின்னராக உள்ளே
நுழைந்தார்.
மாநாட்டில்
சற்றேறக்குறைய 2,700 செய்தியாளர்கள் இருந்தனர்; இந்த எண்ணிக்கை 2,300
பிரதிநிதிகளையும் விடக் கூடுதலானது. சீனா மற்றும் அதன் தலைமை உலக
முதலாளித்துவத்திற்குக் கொண்டுள்ள முக்கியத்துவத்திற்கு இது ஒரு குறிப்பாகும்.
காங்கிரஸ்,
ஒரு கம்யூனிஸ்ட்டுக்களின் கூட்டம் என்று பாசாங்கு செய்வதற்கு ஹு
விரும்பவில்லை;
அவருடைய உரையில்
“தொழிலாள
வர்க்கம்”
என்னும் சொற்றொடர் வரவேயில்லை,
அதே நேரத்தில்
“சீனப்
பண்புகளை கொண்ட சோசலிசம்”
என்பது சீன முதலாளிதத்துவத்தின் இடக்கரல் சொற்றொடராக இருந்தது.
அவருடைய உரை
“சீனத்தை
நேசிக்கும் அனைவருக்கும்”
என்ற அழைப்பில் இருந்தது;
முக்கியமாக செல்வம் படைத்த உயரடுக்கு,
மத்தியதர வர்க்கங்களுக்கு;
“சீன
தேசம் பெரும் புத்துயிர்ப்பு காணவேண்டும் என்ற”
தேசிய அழைப்பும் இருந்தது.
சீனா உலகின்
மிகப் பெரிய ஏற்றுமதி நாடு,
இரண்டாம் பெரிய பொருளாதாரம் என்று ஹு நாட்டுப்பற்றுடன் பேசியது
நாட்டின் மாபெரும் முரண்பாடுகளை மறைத்துவிடவில்லை.
சீனாவின் பொருளாதார வளர்ச்சிக் குறைவைப்பற்றி வெளிப்படையாக
ஒப்புக்கொள்ளாமல்,
செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பிளவு பரந்து போவதை ஒப்புக்
கொள்ளாமல்,
அமெரிக்காவுடனோ,
ஜப்பானுடனோ மோதல் என்னும் ஆபத்தை ஒப்புக் கொள்ளாமல்,
ஹு
CCP “இதுகாறும்
அறிந்திராத இடர்களையும் சவால்களையும்”
முகங்கொடுக்கிறது என்றார்.
சீனாவின்
சரியும் வளர்ச்சியின் பின்னணியில் அதன் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளில்,
தொடர்ந்த சரிவு குறிப்பாக அமெரிக்கா,
ஐரோப்பா,
ஜப்பான் ஆகியவற்றில் இருப்பவை உள்ளன.
“உள்நாட்டுத்
தேவைக்கு ஏற்றம் கொடுப்பதற்கான”
“கடினமான
போர்”
மற்றும்
“தனிநபர்
நுகர்வுத் திறனைக் கட்டவிழ்த்தல்”
ஆகியவை உள்நாட்டு மொத்த உற்பத்தியை
2020ல்
2010ஐப்
போல் இருமடங்காக்குவதற்கு ஹு அழைப்பு விடுத்தார்.
ஆனால் நுகர்வோர் உந்துதலில் வளர்ச்சி என்பது பெரும் தடையை
எதிர்நோக்குகிறது.
அதுவும்
1978ல்
முதலாளித்துவ மீட்பில்
CCP
நுழைந்தபின்,
உண்மையான ஊதியங்களில் கணிசமான உயர்வு என்பது சீனா உலகின் மிகப்
பெரிய குறைவூதிய தொழிலாளர் அரங்கு என்பதுடன் பொருந்தியிருக்கப்போவதில்லை.
ஹு வின்
தலைமை ஏற்றுமதி/முதலீடு
உந்துதல் கொண்ட வளர்ச்சி உள்நாட்டு நுகர்வில்
“சமச்சீர்”
செய்யப்பட வேண்டும் எனப் பல ஆண்டுகளாகக் கூறிவருகிறது.
ஆயினும்கூட,
சீன இல்ல நுகர்வு உலகின் மிகக் குறைவானவற்றுள்தான் இருந்து வருகிறது;
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்காவில்
70%
என்று இருக்கையில் இது இங்கு
37%
என்றுதான் உள்ளது.
உண்மையில் சராசரி வருமானத்தை
2020க்குள்
இரு மடங்காக ஆக்குதல் என்னும் ஹுவின் உறுதிமொழி செல்வந்தர்கள்,
மத்தியதர வர்க்கத்தினரை மேலும் செல்வம் அடையச் செய்தல் என்றுதான்
பொருள் தரும்.
ஜனாதிபதி
ஹுவும் பிரதமர் வென் ஜியாபோவும் முழு அளவு
“தடையற்ற
சந்தை”
மறுகட்டமைப்பு திட்டத்தைத் தயாரித்துள்ளனர்;
இது மேலை நிதிய மூலதனத்தின் பிரிவுகளுடன் இயற்றப்பட்டுள்ளது;
“சீனா
2030”
என்ற வடிவமைப்பில் உள்ள அறிக்கை பெப்ருவரி மாதம் உலக வங்கியால்
வெளியிடப்பட்டது.
தன்னுடைய
உரையில் ஹு
,
சீனா
“பொருளாதாரத்தின்
தனியார்துறை அரசாங்கத் துறையுடன் சம வாய்ப்புத் தளத்தில் போட்டியிடுவது
உறுதிப்படுத்தப்பட வேண்டும்”,
“பொது
உடைமையை பல வகைகளில் செயல்பட அனுமதிக்க வேண்டும்”
என்று அறிவித்தார்.
நாட்டின் எஞ்சியிருக்கும்
100,000
அரச நிறுவனங்கள்,
பெரும்பாலும் ஏற்கனவே கூட்டுப் பங்கு நிறுவனங்களாக இருப்பவை,
தனியார்,
அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படும்;
எல்லாவற்றிற்கும மேலாக இப்பொழுது அவற்றின்
“தலைமை
நிர்வாக அதிகாரி”
அல்லது
“தலைவர்”
என்று இருக்கும்
CCP
அதிகாரிகளுக்கு.
அதே
நேரத்தில் ஹு,
அரச கட்டுப்பாட்டில் இருக்கும் பெரிய
“மூலோபாயப்
பிரிவுகள்”
பாதுகாப்பு,
விசை போன்றவை,
“தூண்
போன்ற”
தொழில்கள்,
கார்த்தயாரிப்பு,
இயந்திரத்துறை,
எஃகு ஆகியவை தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
ஆட்சி,
“அரச
மூலதனத்தை முக்கிய தொழில்களிலும் முக்கிய துறைகளிலும் அதிகமாக முதலீடு செய்யும்;
அவைதான் பொருளாதாரத்தின் உயிர்த்தன்மையைக் கொண்டவை,
தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமானவை”
என்றார் அவர்.
இது போட்டிப் பிரிவுகளை சமாதானப்படுத்தும் நோக்கம் கொண்ட குறிப்பு
ஆகும்;
அவற்றின் அதிகாரம்,
செல்வம் மற்றும் சலுகைகள் ஆகியவை அரச பாதுகாப்புடைய தொழில்களுடன்
பிணைந்துள்ளவை.
CCP
யில் படர்ந்துள்ள ஊழல்பற்றி அசாதரணமான முறையில் அப்பட்டமான
எச்சரிக்கையை விடுத்தபோது,
ஹு சீனாவைத் தாக்கியுள்ள பாரிய சமூக அழுத்தங்களை பற்றிய ஒரு
காட்சியையும் கொடுத்தார்.
“இப்பிரச்சினையை
(ஊழல்)
நாம் கையள்வதில் தோற்றால்,
அது கட்சியை ஆபத்திற்கு இட்டுச் செல்லும்,
கட்சியின் சரிவையும்,
அரசின் நிலைகுலைவையும் கூட ஏற்படுத்தலாம்”
என்றார் அவர்.
கட்சியின்
உயர்மட்டத் தலைவர்கள்
–போ
ஜிலை,
லியு ஜிஜுன்
–
ஆகியோர் வெளியேற்றப்பட்டதில் இருந்து ஊழல் அதிக அளவில்
தெரியவந்துள்ளது;
அவர்களுடைய சொந்தச் சொத்துக்கள் உட்பூசலில் அவர்கள் ஈடுபட்டபோது
பகிரங்கமாக அம்பலப்படுத்தப்பட்டன.
ஹு கூறும் அச்சம் ஊழலைப் பற்றிய பொதுச் சீற்றம்,
அதுவும்
CCP
யின் அனைத்து மட்டங்களிலும் என்பது,
ஆட்சிக்கு எதிரான தீவிர அரசியல் எதிர்ப்பைத் தோற்றுவிக்கலாம்
என்பதாகும்.
ஒரு புதியச்
சுற்று சந்தைச் சார்பு மறுகட்டமைப்பிற்கு ஹு விடுக்கும் அழைப்பு,
உலக பெருநிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புக்களைத் திறந்துவிடும்
வடிவமைப்பை கொண்டது;
முக்கிய சக்திகள்,
குறிப்பாக அமெரிக்காவை சமாதானப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டது.
CCP
காங்கிரஸ் தொடங்குவதற்கு முன் ஹு பாரக் ஒபாமா மீண்டும் அமெரிக்க
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தன் பாராட்டுக்களைத் தெரிவிக்க விரைந்து
செயல்பட்டு ஒத்துழைப்புடன் கூடிய உறவு தேவை என்று முறையிட்டார்.
கடந்த ஒரு
தசாப்தமாக
“அமைதியான
ஏற்றம்”
என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஹு சீனாவில் வெளியுறவுக் கொள்கையைக்
கட்டமைத்துள்ளார்.
இதற்கு சீனாவின் பொருளாதார வலிமை ஆசியா மற்றும் சர்வதேச அளவில்
இருக்கும் ராஜதந்திர உறவுகளைக் கட்டமைக்க பயன்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த மூலோபாயம் பெருகிய முறையில் ஹுவின் பிரிவு
எதிர்ப்பாளர்கள் மற்றும் சீன இராணுவத்தின் பிரிவுகளால் எதிர்க்கப்படுகிறது;
ஏனெனில் ஒபாமா நிர்வாகம் ராஜதந்திர மற்றும் மூலோபாயத் தாக்குதலை,
அதாவது ஆசியாவில்
“முன்னிலை”
என்பதின் மூலம் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கணிசமாகக்
குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது.
“போர்
அல்ல,
சமாதானம்”
தேவை என்பதை ஹு வலியுறுத்தினார்;
அதேபோல்
“அண்டை
நாட்டவருடனும் நண்பர்களாக இருக்க வேண்டும்”
என்பது சீனாவில் உலகந்தழுவிய ராஜதந்திர முறையின் அடிப்படை என்றும்
வலியுறுத்தினார்.
ஆயினும்கூட அவர்
“புதிய
காலத்தின் தீவிர பாதுகாப்பிற்கு”
இசைவு கொடுத்து
“இத்தகவல்
காலத்தில் உள்ளூர்ப் போரை வெற்றி பெறுவதற்குக்கூடத் தீவிர இராணுவத் தயார் நிலை”
தேவை என்றார்.
“நம்முடைய
கடல் ஆதாரங்களைப் பயன்படுத்தும் நம் திறன் அதிகரிக்க வேண்டும்”
என்று கூறிய அவர் சீனவின் கடல்சார் உரிமைகள்,
நலன்கள் காப்பது உறுதி என்றும் சீனா ஒரு கடல் வலிமை படைத்த நாடு
என்று கட்டமைக்கப்படும் என்றும் கூறினார்.
தெளிவாக
இந்த வார்த்தைகள்,
வேண்டுமென்றே ஒபாமா நிர்வாகத்தின் மூலம் தூண்டிவிடப்படும்
பிலிப்பைன்ஸ்,
வியட்நாம்,
ஜப்பான் கடல் சார்ந்த சர்ச்சைகளை எதிர்கொள்ளுகையில் மிக பலவீனமாக
இருப்பதாக ஹு வை விமர்சிக்கும் நிலையில் அந்த தணிக்கும் முயற்சியாகும். குறிப்பாக
சீன இராணுவம்,
அமெரிக்கா அதன் கடற்படை மேலாதிக்கத்தை வலுப்படுத்த அதுவும்
தென்கிழக்கு சீனா மூலம் செல்லும் முக்கிய கப்பல் பாதைகள் மீது என்பது குறித்து கவலை
கொண்டுள்ளது;
இப்பாதைகளைத்தான் சீனா எரிசக்தி மற்றும் மூலப் பொருட்களுக்காக
மத்திய கிழக்கு,
ஆபிரிக்கா ஆகியவற்றில் இருந்து வருபவற்றிற்காக,
நம்பியுள்ளது.
உட்கட்சி
வேறுபாடுகள் வெளியுறவு,
பொருளாதாரக் கொள்கைகள் குறித்து இருப்பவற்றில் ஹு ஒரு நடுப்பாதையைக்
கடைப்பிடிக்க முயல்வது ஒரு தற்காலிக ஒற்றுமையைத்தான் உருவாக்க முடியும்;
ஆட்சியோ ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை முகங்கொடுக்கிறது;
தீவிர சமூக அழுத்தங்கள்,
அமெரிக்காவுடன் மோதல் ஆகியவற்றையும் எதிர்கொள்கிறது. |