WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
சீனக்
கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ்:
ஒரு தன்னலக்குழுவின் ஒன்றுகூடல்
By John Chan
8 November 2012
பெய்ஜிங்கில் இன்று ஆரம்பமாகும்
18வது
சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக் காங்கிரஸ்,
கடந்த தசாப்த கட்சித் தலைமை மாற்றத்திற்குப் பின்
—ஜனாதிபதி
ஹு ஜின்டாவோ மற்றும் பிரதமர் வென் ஜியாபோ வந்தபின்--
செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே உள்ள பெரும் பிளவு
இன்னும் அதிகரித்துவிட்டது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது
குறைந்தப்பட்சம்
24
தனியார் துறை,
பெரும் செல்வாக்குப் படைத்த
2,270
பிரதிநிதிகளின் கைவசம் உள்ளது.
இவர்களுள் இரண்டு அல்லது மூவர் பில்லியனர்கள் ஆவர்;
செய்தி ஊடக ஊகத்தின்படி இவர்கள் மத்திய குழுவில் சேரக்கூடும்.
மிகவும் குறிப்பிடத்தக்கவர் அமெரிக்க
11
பில்லியன் டாலரை கொண்டிருந்த சீனாவில்
2011ம்
ஆண்டின் அதிக செல்வம் படைத்தவரான,
Sany
கனரகத்
தொழில் நிறுவனத்தின் தலைவரான லியாங் வென்ஜென் ஆவார்;
இப்பொழுது அவர் உலகின் ஆறாம் மிகப் பெரிய பொறியியல்துறை
இயந்திரங்கள் தயாரிப்பாளர் ஆவார்;
இவருடன் துணை ஜனாதிபதி ஜி ஜின்பிங்,
ஹுவிற்குப் பின் பதவிக்கு வர இருப்பவரும் உள்ளார்;
இவர் இந்த ஆண்டு முன்னதாக அமெரிக்காவிற்கு பயணித்திருந்தார்.
பெருவணிகத்தின் உத்தியோகபூர்வ ஏடான
China
Enterprise News
பெரும் ஆர்த்துடன் எழுதியது:
“இவ்வளவு
தனியார் வணிகர்கள் காங்கிரசில் பிரதிநிதிகள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
கட்சியின் தலைமை வெளிப்படையாகவும் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு
(முதலாளித்துவத்தினரை)
செல்லும் மனப்பாங்கையும் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
லியாங்
போன்ற வணிகர்களைத் தவிர,
உயர்மட்ட
CCP
தலைவர்களின் சொத்துக்கள் கவனத்துடன் பாதுகாக்கப்படும் இரகசியாமாக
உள்ளன.
ஏனெனில் அவர்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் சொந்த
சொத்துக்களை அதிகப்படுத்திக் கொண்டு இப்படி தாமாகவே "மக்களின் ஊழியர்கள்,"
என்று அறிவித்துக்கொண்டவர்கள்மீது மக்களுடைய விரோதப்போக்கு உள்ளது.
CPP
பிரதிநிதிகள் சேர்த்து வைத்துள்ள செல்வங்கள் பற்றி ஓரளவு தெரிந்து
கொள்ள வேண்டும் என்றால்,
அவை தேசிய மக்கள் காங்கிரஸ்
NPC
மற்றும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு
(CPPCC)
வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களில் இருந்து அறிய முடியும்—இவை
சீனாவின் சட்டமன்ற,
ஆலோசனை மன்றங்கள் ஆகும்.
மிக அதிக செல்வம் படைத்த
70 NPC
பிரதிநிதிகள் மொத்தம்
2011ல்
90
பில்லியன்
டாலர் சொத்துக்களை வைத்திருந்தனர்.
உயர்மட்ட
70 CPPCC
உறுப்பினர்கள் இன்னும் செல்வந்தர்களாக இருந்னர்
--
அவை
100
பில்லியன் டாலர்கள்.
2002ல்
நடந்த கடைசி அதிகார மாற்றத்தின்போது,
ஹு ஜனிடாவோ அதிகாரத்தை ஜியாங் ஜெமின்னிடம் இருந்து பெற்றபோது,
CCP
அமைப்புச் சட்டத்தில் ஒரு முக்கிய திருத்தம்,
ஜியாங்கின்
“மூன்று
பிரதிநிதித்துவ தத்துவம்”
என்பது செய்யப்பட்டது.
இத் தத்துவம் கட்சியை செல்வம் படைக்க முயல்வோருக்கு திறந்துவிடுதல்,
அவர்களும் மத்தியதரத் தட்டின் ஒரு பகுதி உயர் பிரிவுகளும்
“மிக
முன்னேற்றமான”
உற்பத்தி சக்திகள்,
கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதாக
இத்திறந்துவிடுதலை நியாயப்படுத்தியது.
1989ல்
தியனன்மன் சதுக்கப் படுகொலையில் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்கியபின்
முதலாளித்துவ வர்க்கத்தின் உறுப்பினர்களை ஆளும் கட்சிக்குள் அனுமதிப்பது ஜியாங்கின்
கொள்கையான முதலாளித்தவ மீட்பை விரைவுபடுத்துதல் என்பதன் தர்க்கபூர்வ மரபியமாகும்.
அரச சொத்துக்களை முழுமையாகத் தனியார் மயமாக்கியது,
மற்றும் சீனாவை ஒரு மகத்தான குறைவூதிய அரங்காக சர்வதேச
நிறுவனங்களுக்கு மாற்றியது என்பதற்கு ஜியாங் தலைமை வகித்தார்;
இவை
1970களில்
தொடங்கிய முதலிளாத்துவ மீட்பு வழிவகையில் ஒரு பகுதியாக நடைபெற்றன.
“கம்யூனிஸ்ட்
கட்சியில்”
உள்ள முக்கிய நபர்களால் இப்பொழுது கட்டுப்படுத்தப்படும்
பெருநிறுவனப் பேரரசுகள்,
முந்தைய சோவியத் ஒன்றியம்
1991ல்
கலைக்கப்பட்டபின் ஸ்ராலினிச தலைவர்களால் விழுங்கப்பட்ட அரச சொத்துக்களைப் போல்
பெரியவை இல்லாவிடினும்,
இன்னமும் அதிகமாகவேதான் உள்ளன.
மாநாடு
தொடங்கியவுடன்,
அரச செய்தி ஊடகம் ஹு மற்றும் வென் ஆகியோரின்
10
ஆண்டு காலத்தை சீனாவில்
“தங்கச்
சகாப்தம்”
என்று அறிவித்தது.
உண்மையில் நாட்டின் முதலாளித்துவத்தினருக்குத்தான் இத்
“தங்கக்
காலம்”
ஆகும்.
2002
ஐ ஒட்டி,
சீனாவில் டாலர் பில்லியனர்கள் இருந்ததில்லை.
இப்பொழுது இந்நாடு அமெரிக்காவிற்கு வெளியே இரண்டாம் பெரிய
பில்லியனர்கள் குழுவைக் கொண்டுள்ளது
(2011ல்
271
பேர்).
சீனாவில்
செல்வந்தர் பட்டியலை வெளியிட்ட ஹு ருன் கருத்துப்படி,
சீனப் பில்லியனர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளதை விட இரு
மடங்காக இருக்கலாம்;
அல்லது
“கிட்டத்தட்ட
600”
என—அதில்
CPP
தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்று
“வெளியே
தெரியாத பில்லியனர்களின்”
எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டார்.
சமீபத்திய
நியூ யோர்க் டைம்ஸ்
பிரதமர்
வென் ஜியாபோவின் குடும்பத்தின்
“புதைத்துவைக்கப்பட்டுள்ள
சொத்துக்கள்”
$2,7
பில்லியன் என்று கூறப்பட்டுள்ள அறிக்கை சீனாவில் ஒரு அரசியல்
புயலைத் தூண்டியது.
ஆனால் இது பனிப்பாறையின் உச்சிதான்;
நாடு முழுவதும் நடைபெறும் பரந்த வழிவகையைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
வென்னுடைய
மனைவி ஜாங் பீய்லி ஆபரணங்கள் வணிகத்தில் சீனாவில் முக்கிய பெண் வணிகர்களுள்
ஒருவராவார்.
“பின்னர்
தனியார்மயமாக்கப்பட்ட அரச வைர நிறுவனங்களை நிர்வகித்த முறையில்,
அவர் தன் உறவினர்களுக்கு சிறு பங்குகளை பில்லியன் டாலர் பெறுமான
காப்பீட்டுத் துறை,
தொழில்நுட்பம்,
சொத்துக்கள் துறை ஆகியவற்றில் அளித்து உதவினார் என்று டைம்ஸ்
கண்டறிந்துள்ளது.
“தம்பதிகளின்
ஒரே மகன் தான் ஆரம்பித்த தொழில்நுட்ப நிறுவனத்தை ஹாங்காங்கின் மிக அதிக செல்வம்
படைத்தவரான லி காஷிங்கிற்கு
10
மில்லியன் டாலருக்கு விற்றார்;
மற்றொரு முதலீட்டுக் கருவியை சீனாவின் மிகப் பெரிய தனியார் பங்கு
நிறுவனமான
New Horizon Capital
ஐ நிறுவப்
பயன்படுத்திக் கொண்டார்.
Bloomberg News
பொது
ஆவணத்தைத் தளம் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தி துணை ஜனாதிபதி ஜியின் விரிவான குடும்ப
உறுப்பினர்களின் சொத்துக்கள் குறைந்தப்பட்சம்
376
மில்லியன் டாலராக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது;
இதில் அபூர்வ நில நிறுவனத்தில்
1.73
பில்லியன் டாலர் மதிப்பில்
18%,
மற்றும் ஒரு தொலைக்காட்சி தொழில்நுட்ப நிறுவனத்தில்
20.2
மில்லியன் டாலர் மதிப்புடைய பங்கும் உள்ளன.
2009ம்
ஆண்டு இரகசிய அமெரிக்க தூதரகத் தந்தி,
விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்டது,
CPP
பொலிட்பீரோவின் நிலைக் குழு
(PBSC)
வை
“ஒரு
பெரிய நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் உள்ளவர்கள்”
என்று ஒப்பிட்டு,
ஜனாதிபதி ஹு அக்குழுவின் தலைவராக இருந்து வெவ்வேறு
“தனி
நலன்களை”
கட்டுப்படுத்துகிறார் என்று கூறியுள்ளது.
இரகசிய
ஆதாரங்களை மேற்கோளிட்டு,
இத்தந்தி எப்படி உயர்மட்டப் பிரிவினர்
PRC
சீன மக்கள் குடியரசின்
“பொருளாதார
நலன்களை”
பிரித்துக் கொண்டது என விவரிக்கிறது:
“முன்னாள்
பிரதமர் லி பெங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைத்து மின்சார சக்தி நலன்களையும்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்தது;
PBSC
உறுப்பினரும் பாதுகாப்பு பெருந்தலைவருமான ஜௌ யாங்காங் மற்றும்
அவருக்கு நெருக்கமானவர்கள் எண்ணெய் நலன்களைக் கட்டுப்படுத்தினர்;
மறைந்துவிட்ட முன்னாள் உயர் தலைவர் சென் யுன்னின் குடும்பம்
PRC
உடைய வங்கித்துறையில் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டிருந்தது;
PBSC
உறுப்பினரும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை அமைப்பின தலைவருமான ஜியா
குங்லின் முக்கிய பெய்ஜிங் சொத்துக்கள் பிரிவு வளர்ச்சிக்குப் பின்னணியில்
நலன்களைக் கொண்டிருந்தார்;
ஹு ஜின்டாவொவின் மருகன்
Sina.com
உரிமையாளர்;
வென் ஜியாபோவின் மனைவி சீனாவில் பெரும் மதிப்புடைய கற்கள் துறையைக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்தனர்.
தங்கள்
சொத்துக்கள் குறித்தும் பொதுவாக புதிய முதலாளித்துவத்தனர்பாலும் மக்களுடைய விரோதப்
போக்கை நன்கு அறிந்திருந்த
CCP
தலைவர்கள்,
பொது
எதிர்ப்புக்கள் தோன்றுமோ என்ற அச்சத்தில் பாரிய பாதுகாப்புப் படையை திரட்டி
நாட்டின் உயரடுக்கை மாநாட்டில் பாதுகாக்கப் பயன்படுத்துகின்றனர்.
அரசாங்கப்
பாதுகாப்புப் பிரிவின் தலைவரான ஜௌ கடந்த மாதம் அவருடைய அதிகாரிகளிடம்,
“அனைத்துவகை
வேறுபாடுகள்,
உறுதியற்ற தன்மைகள் பாதுகாப்பற்ற கூறுபாடுகள் விளங்குகின்றன”
இவை முக்கிய நிகழ்வில் எத்தகைய தடையையும் ஏற்படுத்திவிடாமல் உறுதி
செய்யப்பட வேண்டும் என்றார்.
ஏதோ
“போர்க்காலம்”
போல் அதற்காக
100,000
பொலிசார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
1.4
மில்லியன் குடியிருப்போர்
“தன்னார்வத்
தொண்டர்கள்”
என்று ரோந்து வருவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெய்ஜிங்கில் பல எதிர்ப்பாளர்களும் இல்லக் காவலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
CCP
இன் தலைமைக்குள் காங்கிரசிற்கு முன்னதாக வெளிப்பட்டுள்ள
குறிப்பிடத்தக்க உட்பூசல்கள்,
இவை மெதுவாக வளரும் பொருளாதாரம்,
பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கை குறைமதிப்பிற்கு
உட்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு முயற்சி ஆகியவற்றால்
எரியூட்டப்படுகின்றன.
ஆனால் தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும்கூட
CCP
தலைமை முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான விரோதப் போக்கில்
ஒன்றுபட்டு நிற்கின்றன.
ஜி இன்
கீழுள்ள
“சிவப்பு”
தன்னலக்குழு,
தங்களுக்கு முன்பு இருந்தவர்களைவிட உழைக்கும் மக்களின் எந்தவொரு
எதிர்ப்பையும் கையாளும் போது இன்னும் இரக்கமற்றே இருக்கும்.
நூற்றுக்கணக்கான பில்லியன்களை சீனாவில் முதலீடு செய்து அந்நாட்டில்
உள்ள தொழிலாள வர்க்கத்தின் மலிவு கூலி உழைப்பு சக்தியை சக்தியை சுரண்டும் புதிய
முதலாளித்துவத்தினர் மற்றும் நாடுகடந்த நிறுவனங்களின் சொத்துக்களைக் காக்க அவர்கள்
எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். |