சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A major shift in the global economy

உலகப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய திருப்பம்

Nick Beams
10 November 2012
use this version to print | Send feedback

2008 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஆளும் உயரடுக்கின் முக்கிய பிரிவுகள் லெஹ்மன் பிரதரஸ் சரிவிற்குப் பின் வெடித்த நிதிய நெருக்கடியை தொடர்ந்து ஒபாமாவிற்கு ஆதரவளித்தல் என்னும் முடிவை எடுத்தன. ஒபாமாவின் பிரச்சாரம் தோற்றுவித்துள்ளநம்பிக்கை மற்றும் நீங்கள் மாற்றமுடியும் என நம்புங்கள் என்ற போலிநப்பாசைகளின் மதிப்பீடுகளில் அவர்களுடைய கணக்கீடுகள் இருந்தன. அப்பிரச்சாரம் புஷ் நிர்வாகத்திற்கு எதிரான பரந்த மக்கள் விரோதப்போக்கின் நடுவே மூச்செடுக்கும் அவகாசத்தை கொடுக்கும் என்று அவர்கள் நம்பினர்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கணிசமான திருப்பத்துடன் இணைந்து அவநம்பிக்கை இன்னும் படர்ந்து சென்றுள்ளது. பரந்தளவில் பேசுகையில், உலகெங்கிலும் அரசாங்கங்களும் நிதிய நிறுவனங்களும் நிதியக் கரைப்பு மற்றும் உலக மந்த நிலையைத் தடுப்பதற்கு எடுத்துள்ள ஒரு தொடர் நடவடிக்கைகள் அவற்றின்  மட்டுப்படுத்தப்பட்ட திறனின் முடிவிற்கு வந்துள்ளன.

அமெரிக்காவில் பெரும் நிறுவனங்கள் ஒபாமா நிர்வாகம் ஊதியங்கள் ஒரு மணி நேரத்திற்கு 14 டாலர் மட்டும்தான் எனக் குறைக்கப்பட்ட ஜெனரல் மோட்டார்ஸை மறு கட்டமைப்பதை சாதகமாக எடுத்துக்கொண்டு பல நிறுவனங்களும் தங்கள் இலாபங்களை அதிகரித்தன. ஆனால் வருமானங்கள் குறைவு மற்றும் தேவைகளின் சரிவு இவற்றை எதிர்கொள்கையில் செலவுகளைக் குறைத்தல் என்பது கால வரையின்றித் தொடர முடியாது. எதிர்கால நிலைமைகள் குறித்த உறுதியான குறியீடான வணிக முதலீடு வரலாற்றுரீதியாக மிகக்குறைந்தளவில் உள்ளதுடன், மூன்றாம் காலாண்டிலும் பூஜ்ய வளர்ச்சியைத்தான் பதிவு செய்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு நிதிய நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும்  முயற்சியில் மிக அதிக, முடிவில்லாத குறைந்த வட்டி நிதியை வழங்கி மத்திய வங்கிக்கூட்டமைப்பின் சொத்து இருப்புக்களை கிட்டத்தட்ட 2.5 டிரில்லியன் டாலர் என அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் நிதிய ஊக்கத்திற்கு உந்துதல் சக்தி வழங்கும் அதன் திறமையை இழந்துள்ளது.

மத்திய வங்கிக் கூட்டமைப்பின் கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் ஏற்றுச் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் இருப்புநிலைக் குறிப்புக்களில் உள்ள நிதியச் சொத்துக்கள் 6 டிரில்லியன் டாலரில் இருந்து 18 டிரில்லியன் டாலர் என்று, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்குக் கிட்டத்தட்ட சமமாக உள்ளன. நிதியச் செய்தியாளர் சத்யஜித் தாஸ் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல்: “உலகப் பொருளாதாரம் நிதியப் போதைக்கு அடிமையாகியுள்ளது”, கூடுதலான மருந்து உட்செலுத்துதல்கள் அனைத்தும் இயங்குவதற்கு நோயாளிக்கு தேவையாகவுள்ளது”.

தனியார் வங்கிக்கடன்கள் பொதுக் கடனாக மாற்றப்பட்ட நிலையில், அரசாங்கக் கடன் தரங்கள் விரைவில் அதிகமாகிவிட்டன. 11 முக்கிய நாடுகளின் கடன் நிலை 2007ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 381 சதவிகிதம் என்பதில் இருந்து 2012இல் 417 சதவிகிதத்திற்கு உயர்ந்துவிட்டது. அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களின் திட்டம் இந்த பாரியளவு நிதியை வங்கிகளுக்குக் கொடுத்ததை மீட்பதாகும். இதற்கு அவை கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கையாள்கின்றன. அவை சமூகநலச் செலவுகளைக் குறைத்தல், தொழிலாள வர்க்கத்தை வறிய நிலையில் தள்ளுதல் ஆகியவற்றைச் செய்கின்றன.

நெருக்கடி வெடித்த உடன், பல நிதிய வர்ணனையாளர்களும் செய்தி ஊடகப் பண்டிதர்களும் சீனா மற்றும் பிற எழுச்சி பெறும் சந்தைகள் பெரிய பொருளாதாரங்களில் இருந்து விலகி உலக முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய மையங்களாகும் என்று கூறினர்.

ஒரு குறுகிய காலத்திற்கு இந்த நப்பாசைகள் சீனப் பொருளாதாரத்தின் தொடர்ந்த வளர்ச்சியால் நீடித்தன. அரசாங்கத்தின் செலவு நடவடிக்கைகள், கடன்களை விரிவாக்குவது ஆகியவை முதலீட்டு ஏற்றத்திற்கு எரியூட்டின. இப்படித்தான் கோல்ட்மன் சாஷ்ஸும் பொருளாதார வரலாற்றில் மிகப் பெரிய உந்துதலைக் கொடுத்தது. ஆனால் சீன ஆட்சியின் நடவடிக்கைகள் நாட்டின் ஏற்றுமதிச் சந்தைகள் எல்லாவற்றிற்கும் மேலாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மீட்பு அடையும் என்ற நம்பிக்கைத் தளத்தைக் கொண்டிருந்தன. அந்த நப்பாசை முற்றிலும் உண்மையாகச் சிதைந்துவிட்டது, சீன ஊக்க கொள்கையில் உள்ளடங்கியிருந்த வரம்புகள் தெளிவாக வெளிப்பட்டன.

பைனான்சியல் டைம்சின் சீன நிருபரான டேவிட் பில்லிங் உடைய கருத்துப்படி, சீனாவில் பொருளாதாரம் பற்றிய உணர்வு சமீபத்திய மாதங்களில் அறிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு இருண்டுவிட்டது.” சீன வளர்ச்சி விகிதம் கடந்த ஏழு மாதங்களாக சரிந்து கொண்டிருக்கிறது, இப்பொழுது 1999க்குப் பின்னர் அதன் மிகக் குறைந்த அளவில் உள்ளது.

முதலீட்டு ஏற்றத்தின் அளவு அவ்வாறாக உள்ள நிலை, சீனாவின் கட்டுமானம் அனைத்தினதும் அரைப்பகுதி கடந்த ஆறு ஆண்டுகளில் மறுபடியும் கட்டியமைக்கப்பட்டுள்ளது என மதிப்பிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி, முதலீட்டுச் செலவில் தளம் கொண்டது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 50% இருப்பது இப்பொழுது நீடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது; சில பொருளாதார வர்ணனையாளர்கள் வெளிப்படையாக ஒரு நெருக்கடி தவிர்க்க முடியாது என்று கூறும் அளவிற்கு வந்துள்ளது.

உலக மொத்த உள்நாட்டுப் பொருளாதாரத்தில் 20%க் கொண்ட, சீன, அமெரிக்கப் பொருளாதாரங்களைவிடப் பெரிய யூரோப்பகுதியின் சமீபத்திய புள்ளி விவரங்கள் உலக மந்தநிலைப் போக்குகளின் தெளிவான வெளிப்பாடு ஆகும். இந்த வாரம் ஐரோப்பிய ஆணையம் அடுத்த ஆண்டிற்கான அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த அதன் கணிப்பை ஒரு சதவிகிதத்தில் இருந்து 0.1 சதவிகிதம் என்று குறைத்துவிட்டது. இதற்குக் காரணம் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 0.4 சதவிகிதம் சுருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுவதுதான்.

இத்தகைய கீழ்நோக்கு திருப்பத்திற்கு முக்கிய காரணம் ஜேர்மனிய பொருளாதாரத்தின் சரிவுதான். இது முன்னதாக 1.7% இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, அடுத்த ஆண்டு 0.8 சதவிகிதம்தான் வளர்ச்சியை காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகளில் பல பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்புள்ளி விவரங்களைப் பற்றிக் கூறுகையில், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ டிராகி, முன்பு ஜேர்மனி யூரோப் பகுதியின் மற்ற இடங்களின் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து ஒதுக்கப்பட்டு நின்றது, ஆனால் அக்காலக்கட்டம் முடிவடைந்துவிட்டது என்றார்.

ஐரோப்பா முழுவதும் வேலையின்மை 12%க்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதன் பொருள் கிரேக்கம், ஸ்பெயினில் நிலவிய மந்த நிலைமைகள் போன்றே கண்டம் முழுவதும் பரவும் என்பதுதான்.

பொருளாதார வளர்ச்சி சரிகையில் யூரோப் பகுதி முழுவதும் நிதிய உறுதியற்ற தன்மை அதிகமாகும். இது கிரேக்கம், ஸ்பெயின் அல்லது பிற நாடுகள் என்று ஏதேனும் அதன் கடன்களைத் திருப்பித் தரவில்லை என்றால் நீண்டகாலவிளைவுடைய உலக நெருக்கடியை தோற்றுவிக்கும் என்ற அச்சத்தைக் கொடுக்கிறது. சுற்றுவட்டத்தில் உள்ள நாடுகள் என அழைக்கப்படுபவற்றுடன் பிரச்சினைகள் நின்று விடுவதில்லை.

ஜேர்மனிய வங்கிகளின் கண்ணோட்டம்எதிர்மறைப் பார்வையாகத்தான் உள்ளது. பிரெஞ்சு வங்கிகளைப் பற்றித் தொடர்ந்த கவலைகள் உள்ளன. இதுவரை பெரிய நெருக்கடி தவிர்க்கப்பட முடிந்தது என்றால், ஐரோப்பிய மத்திய வங்கி 1 டிரில்லின் டாலரை ரொக்கம் இல்லாத வங்கிகளுக்கு வழங்கியதுடன் மற்றும் பெரும் கடன்பட்டுள்ள நாடுகளின் பத்திரங்களை வாங்குவதாகக் கொடுத்துள்ள உறுதிமொழிகளும்தான். ஆனால் ஐரோப்பிய மத்திய வங்கியின் எந்த அளவு ரொக்கமும் முக்கிய பிரச்சினையை தீர்க்க முடியாது. முக்கிய ஐரோப்பிய வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் நீர்மை என்பதற்குப் பதிலாக திவால் நெருக்கடியைத்தான் எதிர்கொள்கின்றன.

உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் நடைபெறும் சரிவை முகங்கொடுக்கையில், உலகம் முழுவதும் ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதுதான். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா நிர்வாகம் அதன் முதல் வேலையாக பெரும் செலவுக் குறைப்புக்களைக் கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சமூகநலப் பாதுகாப்பு உரிமைகளில். ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைகள், ஸ்பெயினிலும் கிரேக்கத்திலும் மந்த நிலை போன்ற நிலைமைகளைக் கொண்டுவந்தவை, தீவிரப்படுத்தப்பட உள்ளன. சீனாவில், கடந்த நான்கு ஆண்டுகளாக நடக்கும் ஊக்க நடவடிக்கைகள் உலகச் சரிவு என்னும் சுவரில் முட்டி நிற்கின்றன.

உலகப் பொருளாதாரத்தில் திருப்பம் என்பது தொழிலாள வர்க்கத்திற்கு தீர்மானகரமான அரசியல் சவால்களைக் கொடுக்கிறது. அவற்றை சந்திப்பதற்கான முதல் படி, முதலாளித்துவம் தோற்றுவிட்டது மற்றும் சாதாரண நிலைமைகளுக்கு மீளுதல் என்பது இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொள்வதுதான்.

புதிய இயல்பான நிலை என்பது பெருமந்த நிலைமைகளுக்கு திரும்புதல் என்பதாகும். அதாவது போர்கள், பாரிய வேலையின்மை, சர்வாதிகார ஆட்சி வகைகள் எனபனவாகும். இது தொழிலாள வர்க்கத்திற்கு வரலாற்றுரீதியாக காலத்திற்கொவ்வாத இலாப அமைப்புமுறையை தூக்கிவீசுவதற்கான ஒரு அரசியல் போராட்டத்தை ஆரம்பித்து, ஒரு திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தை கட்டியமைக்க வேண்டியதேவையை முன்வைக்கிறது.