World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Opel auto plant on brink of closure

ஜேர்மனி: ஓப்பல் கார்த்தயாரிப்பு ஆலை மூடலின் விளிம்பில்

By Dietmar Henning
5 November 2012
Back to screen version

அமெரிக்கக் கார்த்தயாரிப்பு நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் (GM) அதன் ஐரோப்பிய நஷ்டங்களை எதிர்கொள்ளும் வகையில் ஜேர்மனியில் உள்ள போஹும் நகரிலுள்ள ஓப்பல் ஆலையை மூடுதல் மற்றும் பாரிய வேலை வெட்டுக்கள் ஆகியவற்றை மேற்கொள்கிறது.

நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தற்போதைய Zafira Tourer (2016) மாதிரி நிறுத்தப்படுவதாலும், மற்றும் பிற ஆலோசனைகளைப் பொறுத்து போஹுமில் உள்ள ஓப்பல் ஆலையில் எப் புதிய மாதிரி தயாரிப்பிற்கும் திட்டமில்லை.” என கூறியுள்ளது.

இது 3,200 ஓப்பல் தொழிலாளர்களின் தலைவிதியை முடிவிற்குக் கொண்டுவருவதுடன், நேரடியாக தமது உயிர்வாழ்விற்காக போஹுமில் இருக்கும் ஆலையை நம்பியிருக்கும் மற்ற நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தலைவிதியையும் முடிவிற்குக் கொண்டுவருகிறது.

IG Metall தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் கடந்த வசந்த காலத்தில் இருந்து நிர்வாகத்துடன் தீவிரப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்ற. GM உறுதியுடன் போஹும் ஆலையை மூடத் தீவிரமாக இருந்தது என்று அவர்கள் அறிவர். ஆனால் முதலாளிகளை தொடர்ந்து திருப்திப்படுத்தவும் தொழிலாளர் பிரிவினருக்கு உத்தரவாதம் கொடுக்கவும் முற்பட்டனர். எச்சூழ்நிலையிலும் அவர்கள் வேலைகளைக் பாதுகாக்க முக்கியமான போராட்டத்தை நடத்துவதற்கு தலைமை தாங்கத் தயாராக இல்லை. மாறாக அவர்கள் பெருகிய முறையில் பெரும் சலுகைகளைக் கொடுக்க முன்வந்தனர். உதாரணமாகப் பேச்சுக்களின் ஆரம்பத்தில் தொழிற்சங்கம் ஓர் அற்ப ஊதிய உயர்வான 4.3% ஒத்திப்போட ஒப்புக் கொண்டது.

ஓப்பல் தொழிலாளர்கள் இப்பொழுது இந்த ஊதியத்தை மொத்த ரொக்கமாக மே முதல் அக்டோபர் மாதங்கள் வரை பெறுவர். ஆனால் அதிகரிப்பு விகிதம் வரவிருக்கும் மாதங்களில் பேச்சுக்கள் தொடர்கையில் இன்னும் தாமதப்படுத்தப்படும்.

IG Metall தொழிற்சங்கம் மீண்டும் நிர்வாகத்தை திருப்திப்படுத்த முயலும். “இப்படித்தான் வழமையான விடயங்கள் நடத்தப்படும் என்ற கூற்று உள்ளது. பேச்சுக்களில் தொடர்புடைய தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும் தொழிலாளர் பிரிவினரின் அச்சங்களை அமைதிப்படுத்த முற்படும். பல மாதங்களாக போஹும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவர் ரைனர் ஐனென்கல் போஹும் ஆலை மூடப்படுவது குறித்துத் தான் பேச்சுவார்த்தை நடாத்துவதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். ஆலையில் இப்பொழுது வந்துள்ள ஆலை மூடல் பற்றி வதந்திகளைப் பற்றிக் கூறுகையில் அவர் அக்டோபர் தொடக்கத்தில் கூட “IG Metall க்கும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களுக்கும் எந்த ஓப்பல் ஆலை மூடல் பற்றியும் பேச்சுவார்த்தைகள் இல்லை.” என்றார்.

அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் ஆலையை மீட்பதற்கு பயன்படுத்தப்படும் என்று அவர் இப்பொழுதும் கூறுகிறார். இது ஒரு வேண்டுமென்றே கூறப்படும் ஏமாற்றுத்தனம் ஆகும். பேச்சுவார்த்தைகளில் இருக்கும் ஒரேயொரு விடயம் ஆலை மூடலை  எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்.

பேச்சுக்களில் பங்குபற்றிய அனைவரும் ஆலை எப்படி மூடப்பட வேண்டும் என்பது குறித்து செயல்பட்டுவருகின்றனர் என்பது GM மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலிய அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ஒரு பணிக்குழுவினால் குறிக்கப்பிடப்பட்டது. இது உத்தியோகபூர்வமாக GM மற்றும் ஓப்பலின் மேற்பார்வைக்குழுவின் துணைத் தலைவரான ஸ்ரெபான் கிர்ஸ்கியினால், வடக்கு ரைன் வெஸ்ட்பாலிய மாநில பொருளாதார மந்திரி காரெல்ட் டூயினுடன் கடந்த செவ்வாயன்று ஒரு கூட்டு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்குழு, “போஹும் 2022 முன்னோக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது போஹும் மற்றும் ரூர் பகுதியில் வேலைகளை பாதுகாத்தல், புதிய வேலைகளைத் தோற்றுவித்தல் ஆகியவற்றை வளர்ப்பது குறித்தும் போஹுமின் ஓப்பல் உள்ள இடத்தின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்கும் எனக்கூறப்படுகின்றது.

ஐனென்கல் இப்பணிக்குழுவை சமீபத்திய அறிக்கை ஒன்றின் மூலம் வரவேற்றுள்ளார்”. “பல மாதங்களாக ஓப்பல் பணிக்குழு வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா பொருளாதார மந்திரி, போஹும் நகரவை, வணிகக்குழு மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்குழு, தொழிற்சங்கங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் (Bochum, Aache, Duisburg/Essen) மற்றும் ஆடம் ஓப்பல் ஏஜி ஆகியவற்றுடன்  ஒத்துழைத்து போஹும் ஆலையைக் பாதுகாக்க திட்டங்களை இயற்ற முற்பட்டுள்ளது என அறிவித்தார். ஓப்பலின் போஹும் 2022 முன்னோக்கு என்ற இத்திட்டம் இதே திசையில்தான் செல்லுகிறது என்றார் ஐனென்கல்.

ஐனென்கல் பணிக்குழு பங்கு பெறுவது போஹும் ஆலை குறித்த GM பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு மாற்றீடு என ஆகாது என்று வலியுறுத்தினார். “பணிக்குழு வளர்ச்சி அடையவேண்டுமே ஒழிய கலைக்கப்படக்கூடாது.” ஐனென்கல் மற்றும் IG Metall செயலர்களுமே அதை அகற்றும் பொறுப்பைக் கொள்ள விரும்புகின்றனர். கடந்த காலத்தில் IG Metall மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் தொழிலாளர் பிரிவின் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆதரவு கொடுத்துள்ளனர். ஆலையை பாதுகாக்க வேண்டும் என்னும் பெயரில் அவர்கள் ஒரு சுற்றுப் பணி நீக்கங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களை ஒன்றன்பின் ஒன்றாக ஒப்புக் கொண்டுள்ளனர். இறுதியில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் ஆலையை மூடவும் ஒப்புக் கொண்டனர். இப்பொழுது போஹுமின் முறை வந்துவிட்டது.

போஹும் ஆலைமூடலைத் தவிர, ஓப்பல் இன்னும் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. நிறுவனம் இந்த ஆண்டில் 2,600 வேலைகளை அகற்றிவிட்டது. அவற்றில் பெரும்பாலானவை ஜேர்மனியில்தான். ஓப்பலின் ருஸ்ஸல்ஹெய்மின் தலைமையகச் செய்திகளின்படி ஏற்கனவே 2,300 தொழிலாளர்கள் பணியில் இருந்து நீங்கிவிட்டனர். இதில் 1,000 தற்காலிகத் தொழிலாளர்களும் அடங்குவர். ஜெனரல் மோட்டார்ஸ் கிட்டத்தட்ட 38,000 பேரை ஐரோப்பா முழுவதும் கொண்டுள்ளது. இதில் ஜேர்மனியில் 20,000 பேர் உள்ளனர். பணிநீக்க உடன்பாடுகள் குறித்த அச்சுறுத்தல் பயன்படுத்தப்பட்டு இன்னும் பல தொழிலாளர்கள் பணியில் இருந்து நீங்குமாறு கட்டாயப்படுத்தப்படுவர்.

ஜெனரல் மோட்டார்ஸ் தன் பிரெஞ்சுப் போட்டி நிறுவனம் PSA Peugeot  Citroen உடன் கூட்டாக சேர்ந்து இன்னும் சேமிப்புக்களை எதிர்பார்க்கிறது. நான்கு வாகன மாதிரிகள் கூட்டாக இணைந்து தயாரிக்கப்பட உள்ளன. இந்த ஒத்துழைப்பில் இருந்து வரும் முதல் கார்கள் 2016 இறுதியில் சந்தைக்கு வரவுள்ளன. இது ஓப்பல் மற்றும் Peugeot Citroen இல் இன்னும் வேலை இழப்புக்களின் பாதிப்பினால் ஏற்படும். PSA Peugeot நிறுவனம் நீண்ட காலத்திற்கு முன்னரே 8,000 வேலைகளை அகற்றுவதாகவும், பாரிசுக்கு வடக்கே உள்ள Aulnay-sous-Bois ஆலையை மூடுவதாகவும் அறிவித்துவிட்டது.

ஜெனரல் மோட்டார்ஸ் ஐசனாக்கில் அதன் பணி முறைகள் -work shifts- ஒன்றை நிறுத்துவது என்னும் முடிவை உறுதி செய்து, இரண்டு பணி முறைக்கு மாறுவது என்று தீர்மானித்துள்ளது. மேலும் ஒப்பல் அஸ்ட்ரா மாதிரியின் உற்பத்தி இப்பொழுது அங்கு உள்ள மூன்று ஆலைகளை இரண்டாக இணைப்பதில் செய்யப்படும். இம்மூன்று ஆலைகளும் Russelheim, Ellesmere Port (United Kingdom), Gliwice (Poland) ஆகிய இடங்களில்  தற்பொழுது ஓப்பலின் சிறந்த விற்பனையாகும் கார்களை தயாரிக்கின்றன. மேற்கு ஐரோப்பியத் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் போலந்துத் தொழிலாளர்கள் எப்பொழுதுமே குறைந்த ஊதியத்தைத்தான் பெறுகின்றனர். Ellesmere Port இல் உள்ள தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கமும் ஊதியங்களிலும் பணி நிலைமைகளிலும் பெரும் விட்டுக்கொடுப்புகளை கொடுத்துள்ளன. உற்பத்தியில் வெட்டு என்பது Russelsheim தொழிலாளர்களின் இழப்பில் செயல்படுத்தப்படும். தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் IG Metall உம் இன்னும் பெரிய தாக்குதல்களை Ellesmere Port இல் நடத்தியதைவிட அதிகமாகச் செய்தால் ஒழிய இதுதான் விளைவாக இருக்கும்.

ஆனால் செலவு குறைக்கும் உந்துதல் இருந்தபோதிலும்கூட, GM ஓப்பலில் இன்னும் இழப்புக்களுக்கு தன்னைத் தயாரித்துக் கொள்கிறது. ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை ஓப்பல் மற்றும் வாக்ஸ்ஹால் வாகனங்கள் ஐரோப்பாவில் புதிதாகப் பதிவு செய்யப்படுவதின் எண்ணிக்கை 15% க்கும் மேல் குறைந்து 657,400 கார்களாகிவிட்டன. ஜேர்மனியில்கூட 163,00 ஓப்பல் கார்கள்தான் விற்கப்பட்டன. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் விறபனையில் 13% சரிவு ஆகும். இதை எதிர்கொள்ளும் வகையில ஓப்பல் அதன் விற்பனை நிறுவனங்கள், விநியோகத்தர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. இந்த ஆண்டு பெப்ருவரி முதல் அதன் இருப்புக்கள் 100,000 வாகனங்கள் குறைவாகிவிட்டன; மற்றும் 20,000 குறைந்த அளவு கார்கள்தான் இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் தயாரிக்கப்படும்.

விற்பனையில் இத்தகைய குறைவு ஐரோப்பாவில் அதிகரிக்கும் பொருளாதார மந்தநிலையின் நேரடி விளைவு ஆகும். அனைத்துக் கார்த் தொழிலாளர்களைப் போலவே GM ஊழியர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகள் தோற்றுவிக்கும் நிலையினால் ஐரோப்பாவில் விற்பனை நெருக்கடிக்கு விலை கொடுக்கின்றனர். குறிப்பாக இது ஐரோப்பிய சந்தைகளை முற்றிலும் அநேகமாக நம்பியிருக்கும் கார்களைத் தயாரிக்கும் தொழிலாளர் பிரிவிற்கு பொருந்தும் உண்மையாகும். இது Opel, Peugeot Citroën, Fiat, Ford ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் போர்ட் அதன் மூன்று ஆலைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. பெல்ஜியத்தில் கெங்க்கிலும், ஐக்கிய இராஜ்யத்தில் டாஜென்ஹாம் மற்றும் சௌதாம்ப்டனிலும். கிட்டத்தட்ட 5,700 ஆண்-பெண் தொழிலாளர்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுவர்; இதைத்தவிர ஆயிரக்கணக்கான துணைத் தொழில்களில் உள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.