WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French social democrats adopt new cuts after accepting pro-austerity Gallois
report
பிரெஞ்சு சமூக ஜனநாயக வாதிகள் சிக்கனச் சார்பு கலுவா அறிக்கையை ஏற்றபின்னர் புதிய
வெட்டுக்களை பின்பற்றுகின்றனர்
By
Antoine Lerougetel
7 November 20127
ஜனாதிபதி
பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி
(PS)
அரசாங்கம் பல பில்லியன் மதிப்புடைய புதிய வரவு-செலவுத் திட்ட
வெட்டுக்களை நேற்று அறிவித்தது;
இது சோசலிஸ்ட் கட்சி வேண்டுகோளின்படி நவம்பர்
5ம்
திகதி முன்னாள் இரயில்வே மற்றும் ஏயர்பஸ் தலைவர் லூயி கலுவா தயாரித்த சிக்கன சார்பு
அறிக்கை வெளிவந்தபின் வந்துள்ளது.
அவருடைய
உத்தியோகபூர்வ
Matignon Palace
இல்லத்தில்
இருந்து பேசிய பிரதம மந்திரி
Jean-Marc Ayrault
தன்னுடைய
முக்கிய கொள்கைகளில் இருந்து சில முக்கிய கருத்துக்களைக் கோடிட்டுக் காட்டினார்:
இவை பிரெஞ்சு பெருநிறுவனப் போட்டித்தன்மையை வளர்க்கும் கொள்கைகள்
ஆகும்.
திட்டங்களின் மையத்தில்
20
பில்லியன் யூரோக்கள்
(அமெரிக்க
$25.6
பில்லியன்)
பெருநிறுவன வரிகளில் குறைப்புக்கள் என்று உள்ளன.
இத்தொகையில் பாதி செலவுக்குறைப்புக்கள் வடிவில் சுமத்தப்படும்;
மற்றொரு பாதி விற்பனை வரி அதிகரிப்பில் கிடைக்கும்
(மதிப்புக்கூட்டு
வரி
VAT):
மற்றும்
“சுற்றுச்
சூழல்”
வரிகள் என்று உழைக்கும் மக்கள் கொடுக்கும் வரியில் இருந்து வரும்.
“சமூகப்
பங்காளிகள்”—அதாவது
முதலாளிகள் குழுக்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர்—இப்பொழுது
சமூகப் பாதுகாப்பிற்கு நிதியளிக்கும்
“சீர்திருத்தம்”
ஒன்றைத் தயாரிப்பர் என்று
Ayrault
கூறினார்.
அவருடைய
கொள்கை பிரெஞ்சு பெருநிறுவனத்தின் போட்டித்தன்மையை மீட்கும் வகையில் தொழிலாளர்களின்
ஊதியங்கள்,
வாழ்க்கைத்தரங்களை ஜேர்மனி உட்பட பிற நாடுகளில் இருக்கும் குறைந்த
ஊதியங்களுக்கு ஒப்பக் குறைக்க வேண்டும் என்பதுதான் என்று
Ayrault
ஒப்புக் கொண்டார்.
“நம்
தொழிலாளர் செலவுகளைப் பற்றிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
அதுவும் நம் முக்கிய ஐரோப்பிய போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு;
ஏனெனில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் செலவுகள் மாறுபட்டுள்ளன.
பிரெஞ்சு
நிறுவனங்களில் கூடுதல் முதலீட்டிற்கும் அவர் அழைப்பு விடுத்தார்;
500
மில்லியன் யூரோக்கள் சிறிய,
நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.
தவறிப் போய்
Ayrault,
இந்நிதிகள் சர்வதேசச் சந்தைகளுக்காக இந்த நிறுவனங்களுக்கு
“சிறப்புத்
தேர்ச்சி
(specialization)
என்பதற்குப்
பதிலாக ஊகத்திற்கு
(speculation)
அளிக்கப்படும் என்று கூறியபோது பார்வையாளர்கள் நகைத்தனர்.
தான்
“திரு.
கலுவாவின் பரிந்துரைகள் அனைத்தையும் கிட்டத்தட்ட”
ஏற்றுள்ளதாகவும்
Ayrault
பெருமிதத்துடன் அறிவித்தார்.
இத்திட்டங்கள் ஹாலண்ட் நிர்வாகத்தின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தன்மைக்கு
மற்றொரு உறுதிப்பாடாகும்;
இந்நிர்வாகம் அதன் ஆறு மாத பதவிக்காலத்தில் பில்லியன் கணக்கான
யூரோக்கள் வெட்டுக்களை சமூகநலச் செலவுகளில் சுமத்தியுள்ளது;
பரந்த வேலை நீக்கம் கார்,
போக்குவரத்து,
மற்றும் பிற தொழில்களில் பேரழிவிற்கு என நின்றிருந்தார்.
அரசாங்கம்
செலவழிக்கும்
10
பில்லியன் யூரோக்களுக்கு விற்பனை வரிகளில் அதிகரிப்பு என்னும் சமூக
vat
மூலம் ஈடு செய்வதில் ஹாலண்ட் ஓர் இழிந்த தலைகீழ்ப் பணியைத்தான்
செய்துள்ளார்.
இது அவருக்கு முன் பதவியில் இருந்த ஜனாதிபதி நிக்கோலோ
சார்க்கோசியால் அறிவிக்கப்பட்டபோது ஹாலண்ட் அதை,
“நியாயமற்றது,
ஆதாரமற்றது,
இருப்பதைச் சீராக்கும் முயற்சி”
என்று கண்டித்தார்.
இப்பொழுது அவர் அவரால் ஒப்புக் கொள்ளப்பட்ட
“நியாமற்ற”
தொழிலாள வர்க்க நடவடிக்கையை தன்னுடையது என்றே கூறுகிறார்.
முதலாளிகள்
அமைப்பான,
மெடெப் என்பதற்குத் தலைவரான
Laurence Parisot,
களிப்புடன்
இதை எதிர்கொண்டார்:
“ஆம்.
நாங்கள் கூறுவது கேட்கப்பட்டுள்ளது...
போட்டித்தன்மை பிரச்சினை மேசையின் மையத்தில் வைக்கப்பட்டது என்பது
தெளிவு.
தீவிர நடவடிக்கைகள் இப்பொழுது எடுக்கப்படுகின்றன.”
ஸ்ராலினிச
பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி
(PCF)—நீண்ட
காலமாக
PS
உடைய கூட்டணிப் பங்காளிக் கட்சி,
ஹாலண்ட் நிபந்தனையற்று தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இந்த மே
மாதம் கூறிய கட்சி—இழிந்த
முறையில் இந்த நடவடிக்கையை
“வாங்கும்
சக்திக்கு எதிரான சுத்தியலடி”
என்று கூறியுள்ளது.
ஆனால் இதையொட்டி
PCF
மற்றும் பிற பிரெஞ்சு குட்டிமுதலாளித்துவ
“இடது”
கட்சிகள் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவை
PS
உடனும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும் அவை வெட்டுக்களை
திட்டமிடுகையில் நெருக்கமாக உழைப்பது நின்றுவிடாது.
ஹாலண்ட்
அரசாங்கம் கலுவா அறிக்கையை ஏற்ற மறுநாள் தன் அறிவிப்பை செய்துள்ளது.
கலுவா அறிக்கை இதேபோன்ற மகத்தான வெட்டுக்களை சமூகநலச் செலவுகளில்
செய்யவேண்டும்,
அதையொட்டி பெருநிறுனப் போட்டித்தன்மை ஏற்றம் அடையும் என்று
கூறியிருந்தது.
தொழிலாளர்
செலவுகளை
30
பில்லியன் யூரோக்கள் குறைக்க வேண்டும் என்று கலுவா
திட்டமிட்டிருந்தார்—இதில்
பெருநிறுவன வரிகளில்
20
பில்லியன் யூரோக்கள் குறைப்பு மற்றும்
10
பில்லியன் மதிப்புடையவை தொழிலாளர் மீதான வரிகள் மூலம் ஈடு
செய்யப்படலாம் என்றார்
(பிந்தையது
PS
ஆல் கைவிடப்பட்டது);
இதைத்தவிர அவருடைய அறிக்கை கூடுதலான
“வளைந்து
கொடுக்கும் தன்மை உடைய வேலை”
அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றது.
நிர்வாகம் வேலைப் பாதுகாப்பு முறைகளைக் குறைத்தல்,
பணி நேரங்களை மாற்றுதல்,
பணி அட்டவணையை விருப்பப்படி மாற்றுதல்,
அவற்றை ஒட்டி ஊதியங்களில் மாற்றம் கொண்டுவருதல் என்பவற்றின்
மறுபெயர்தான் இந்த வளைந்து கொடுக்கும் தன்மை ஆகும்.
தொழிற்சங்க
அதிகாரத்துவத்தின் நலன்களுக்கும் கலுவா ஒப்புதல் கொடுத்திருந்தார்.
குறைந்தப்பட்சம் நான்கு
“தொழிலாளர்களின்
பிரதிநிதிகள்”,
அதாவது தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் நிர்வாகத்தின் ஆட்சிக்
குழுவிற்குள் இருக்க வேண்டும் என்று அவர் முன்வைத்தார்.
இது அனைத்துத் தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.
இதையொட்டி அவர்கள் நிதிவசதி நிறையப் பெறுவர்,
தொழிலாளர்கள் மீது செலவைச் சுமத்தவும் வேலை வெட்டுக்களைச்
சுமத்தவும் நிர்வாகத்துடன் ஒத்துழைப்பர்.
இந்த
அறிக்கையைத் தயார் செய்வதில் கலுவாவின் நோக்கம் பிரான்சின் தொழில்துறைச்
சரிவிற்குக் காரணங்களை அடையாளம் கண்டு பிரான்சின் உயரும் வணிகப் பற்றாக்குறைக்கு
தக்க முறைகளை முன்வைத்தல் ஆகும்;
இதுவோ இப்பொழுது
70
பில்லியன் யூரொக்கள் என்று வளர்ந்துவிட்டது.
கிட்டத்தட்ட
700.000
தொழில்துறை வேலைகள் கடந்த தசாப்தத்தில் இழக்கப்பட்டு விட்டன.
இத்தகைய
குருதி கொட்டும் முறை
2008
நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து அதிகரித்துவிட்டது:
கடந்த ஆண்டில் மட்டும் பிரான்சின் யூரோப்பகுதி ஏற்றுமதியில் பங்கு
17ல்
இருந்து
13
விகிதம் என குறைந்துவிட்டது;
பிரான்சின் வேலையின்மை
10.2
சதவிகிதம் என்று உள்ளது;
ஜேர்மனியின்
6.9%
உடன் இதை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.
கலுவா
கொடுக்கும் தீர்வுகள் அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் ஏற்கப்பட்ட
கொள்கைகளுடன் இயைந்து உள்ளன;
அவை அனைத்தும் ஐரோப்பிய மந்தநிலையின் அழுத்தத்தை ஒட்டியும்,
உலகச் சரிவு,
குறைவூதியத் தொழிலாளர் அரங்குகள் ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவில்
உலகப் போட்டித்தன்மையை ஒட்டி வந்துள்ளதை அடுத்து கூறப்படுகின்றன.
கடந்த கால சலுகைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்,
பொதுநல அரசு என்னும் கருத்து அழிக்கப்பட்டு உலகச் சந்தைகள்
வாழ்க்கைத் தரங்களில் கீழே செல்வதற்கு போட்டியிட வைக்கும்.
இக்கொள்கைகள் கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும்
25%
வேலையின்மையை தோற்றுவித்துள்ளன;
இப்பொழுது வடக்கு ஐரோப்பாவிற்கும் வந்துவிட்டன.
Mediapart
செய்தி இணைய தளத்தின் கருத்துப்படி இந்த அறிக்கை முதலாளிகளுடன்
பரந்த ஆலோசனைகளுக்குப் பின் இயற்றப்பட்டது.
இந்த அறிக்கையைத் தயாரித்த கலுவாவின் உதவியாளர்களில் ஒருவர்
Pierre Emmanuel Thiard
ஆவார்;
இவர்
Union for a Popular Majority (UMP)
கட்சியின்
உறுப்பினர்,
பொருளாதாரக் கொள்கையில் சார்க்கோசிக்கு ஆலோசகராக இருந்துள்ளார்.
அதன்
செல்வாக்கற்ற கொள்கைகளினால் கலுவா அறிக்கையில் இருந்து தன்னை ஓரளவிற்கு ஒதுக்கி
வைத்துக்கொள்ள முதலில் முயன்றபின்,
அரசாங்கம் இப்பொழுது அதைத் தழுவிவிட்டது.
அறிக்கை
குறித்து பெரும் ஆர்வத்துடனான பாராட்டு
PS
ன் தொழில்துறை புத்துயிர்ப்பு மந்திரி
Arnaud Montebourg
இடம்
இருந்து வந்தது.
இவர் பல நேரமும்
PS
இல் ஒரு
“இடது”
என்று வர்ணிக்கப்படுபவர்.
“அனைத்துக்
குடிமக்களையும் திரட்டுவதற்கு ஊக்கம் அளிக்கிறது....
லூயி கலுவா நாட்டுப் பற்று நிறைந்த எதிர்கொள்ளலுக்கு அழைப்பு
விடுகிறார்.
இதன் பொருள் அனைத்து பிரெஞ்சு மக்களும் தங்கள் பங்கை தொழில்துறை
புத்துயிர்ப்பிற்கு அளிக்கலாம் என்பதுதான்....
பிரெஞ்சு மக்கள் கலுவா அறிக்கையை படிக்க வேண்டும்,
அது உயர்ந்த கருத்துக்களைக் கூறுகிறது என்று நான் நினைக்கிறேன்.”
என்றார்.
தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் இழப்பில் பிரெஞ்சு வணிகத்தை போட்டித்தன்மை
உடையதாக செய்வதற்கு ஆதரவைக் கொடுக்கின்றன.
PS
உடன் பிணைந்துள்ள
CFDT (பிரெஞ்சு
ஜனநாயகத்
தொழிலாளர் கூட்டணி)
யின் தலைவர் பிரான்சுவா செரேக் கூறினார்:
“CFDT
பணியை நசுக்கும் சமூகப் பாதுகாப்பிற்கு நிதியளித்தலில் ஓரளவை
மாற்றுவதற்கு சாதகமாக உள்ளது;
அதை
CSG
மீது இருத்தவும் விரும்புகிறது.”
கலுவா
“சரியான
திசையில் செல்கிறார்”
என்றும் அவர் கூறினார். |