WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The
class issues in the 2012 elections
2012
தேர்தல்களில் வர்க்கப் பிரச்சினைகள்
Joseph
Kishore
6 November 2012
அமெரிக்காவில்
இருக்கும்
அதன்
அனைத்து
ஆதரவாளர்களையும்
சோசலிச
சமத்துவக்
கட்சியின் ஜனாதிபதி
வேட்பாளர்
ஜெரி வைட்,
துணை
ஜனாதிபதி
வேட்பாளர்
பிலிஸ்
ஷெரர்
ஆகியோருக்கு
இன்றைய
தேர்தலில்
வாக்களிக்குமாறு
அழைப்பு
விடுகிறது.
சோசலிச
சமத்துவக்
கட்சிக்கான
ஒரு வாக்கு
என்பது பெரு
வணிகத்தின்
இரு
கட்சிகளான
ஜனநாயகக்
கட்சி,
குடியரசுக்
கட்சி
ஆகியவற்றிற்கு மாற்றீடாக தொழிலாளர்
வர்க்கத்தின்
சோசலிச
ஆதரவு
வர்க்க நனவு அறிக்கையாகும்.
இன்று
பல
மில்லியன்
வாக்குகள்
எண்ணப்பட்டபின்
வெற்றி
பெறுபவர்
தீர்மானிக்கப்படுவார்
எனின்,
ஒபாமா
மீண்டும்
தேர்ந்தெடுக்கப்படுவார்
அல்லது
அவருக்கு
அடுத்த
ஜனாதிபதியாக
ரோம்னி
அறிவிக்கப்படுவார்.
இரண்டில் எது நடந்தாலும்,
ஆளும்
வர்க்கத்தின்
அடிப்படைக்
கொள்கை
தொடரும்.
அமெரிக்கத்
தேர்தல்களின்
பொதுவான
குறைந்த
தரங்களின்படிகூட,
2012
பிரச்சாரம்
ஒரு
இழிந்த
காட்சியாகத்தான்
இருந்தது.
பில்லியன்
கணக்கான
டாலர்கள்
செலவழிக்கப்பட்டுள்ளன,
முடிவிலா
விளம்பரங்கள்
வந்துள்ளன
மற்றும்
செய்தி
ஊடகத்தில்
நிரம்பி
வழியும்
அளவிற்கு
தேர்தல்
பற்றிக்
கூறப்பட்டுள்ளது
என்றாலும்
கூட,
அதன் உள்ளடக்கம் பற்றி
ஏதும்
தீவிரமாக
கலந்துரையாடப்படாததுடன், விவாதிக்கப்படவும்
இல்லை.
ஒபாமாவும்
ரோம்னியும்
திங்களன்று
தங்கள்
பிரச்சாரங்களை
வாடிக்கையான
முறையில்
நிறைய
வெற்றுவார்த்தைகள் மற்றும் பொய்களுடன் முடித்துக்
கொண்டனர்.
குடியரசுக்
கட்சி
வேட்பாளர்
ஒபாமாவின்
2008
பிரச்சாரத்தின்
வெற்று
மந்திரமான
“மாற்றம்”
என்பதை
எடுத்துக்
கொள்ள
முற்பட்டார். அதே
நேரத்தில்
ஜனாதிபதியை
போதுமான
அளவிற்கு
“இரு
கட்சியையும்
அரவணைத்துச்
செல்லவில்லை”
என்றும்
குறைகூறினார்.
இதற்கு
ஜனநாயகக்
கட்சிக்காரர்
விடையிறுக்கையில்
இரண்டாம்
பதவிக்காலத்தில்
அவர்
“அனைவரும்
அவருக்கு
உரிய
பங்கை
வழங்குமாறு”
உத்தரவாதப்படுத்துவதாக
அறிவித்தார். அதே
நேரத்தில்
“உண்மையான
மாற்றம் எப்படி
இருக்கும்
என
எனக்குத்
தெரியும். நான்
அதற்காக
எப்படிப்
போராடுகிறேன்
என்பதைக்
நீங்கள்
கண்டுள்ளீர்கள்”
என்றார்.
தன்னுடைய
நான்கு
ஆண்டு
பதவிக்காலத்தில்
தனக்கு
முன்பு
பதவியில்
இருந்தவருடைய
அனைத்து
வலதுசாரிக்
கொள்கைகளையும்
தொடர்ந்து,
விரிவாக்கம்
செய்து,
இலாபங்களும்
பங்கு
விலைகளும்
பெரும்
ஏற்றத்தைக்
காண்பதை
மேற்பார்வையிட்டு,
அதே
நேரத்தில்
பல
தலைமுறைகளாக
காணப்படாத
குறைந்த
விகிதத்தில் ஊதிய அதிகரிப்பையும் மேற்பார்வையிட்ட
ஒரு
ஜனாதிபதியிடம்
இருந்து
வந்த
சொற்களாகும்
இவை.
தேர்தல்கள்
முடிந்தபின்
ஆளும்
வர்க்கத்தின்
உண்மையான
செயற்பட்டியல்,
அமெரிக்க
மக்களிடம்
இருந்து
முறையாக
மறைக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களில்
எவருக்கு
முக்கியமோ,
அவர்களுக்கு
ஒபாமா
ஏற்கனவே
“தன்னுடைய
செயலின்
முதல்
முன்னுரிமை”
குடியரசுக்
கட்சியினருடன்
குறிப்பாக
Medicare and Medicaid
பற்றியும் சமூகநலச்
செலவுகளில்
வெட்டுக்கள் பற்றியும் ஓர்
உடன்பாடு
கண்டு
டிரில்லியன்
கணக்கான
டாலர்களை
வெட்ட
இருப்பதாகத்
தெளிவுபடுத்திவிட்டார்.
தன்னுடைய
பங்கிற்கு
ரோம்னி
இரு
கட்சிகளுக்கும்
இடையே
ஒத்துழைப்பு
தேவை பற்றிய குறிப்பில் தானும்
ஜனநாயகக்
கட்சியினருடன்
இணைந்து
சிக்கன
நடவடிக்கைகளுக்கான
வங்கிகளின்
கோரிக்கைகளை
விரைவில்
செயல்படுத்துவேன்
என்று
அடையாளம்
காட்டியுள்ளார்.
அமெரிக்க
மக்களுக்குப்
பின்புறத்தே
புதிய
போர்களுக்கான
திட்டங்கள்
தீட்டப்படுகின்றன. ஈரான்
இதில்
முக்கிய
இலக்காக
உள்ளது.
பிரச்சாரம்
முன்னேறுகையிலேயே,
அமெரிக்கா
பாரசீக வளைகுடாவில்
வசந்த
காலத்தில்
இராணுவ
நடவடிக்கையின் சாத்தியப்பாட்டிற்காக போர்க்
கப்பல்களை
அதிகளவில் திரட்டி
வைத்துள்ளது.
அமெரிக்க
ஆளும்
வர்க்கம்
முக்கியமான
நாடுகளின் மீது
கட்டுப்பாட்டை
பெறுவதற்கு
திட்டமிட்டு இயங்குவதுடன்
பூகோள-அரசியலில்
அதன்
முக்கிய
போட்டியாளர்களையும்
குறைமதிப்பிற்கு
உட்படுத்தி
வருகிறது.
இதில்
சீனாவும்
ரஷ்யாவும்
அடங்கும்.
ஒபாமா
ஏற்கனவே
லிபியாவிற்கு
எதிரான
ஒரு
போரை
நடத்தியுள்ளார். தற்பொழுது
அமெரிக்கா
சிரியாவிற்குள்
ஓர்
உள்நாட்டுப்
போரைத்
தூண்டிவிடுவதில்
ஈடுபட்டுள்ளது.
உலகப்
பொருளாதார
நெருக்கடிச்
சூழலில்
அமெரிக்க
இராணுவவாதத்தின்
வெடிப்புத்
தன்மை
தவிர்க்கமுடியாமல்
பேரழிவுகரமான விளைவுகளை தரும்
உலகப்
போருக்கு
வழிவகுத்துக்
கொண்டிருக்கிறது.
ஜனநாயக
உரிமைகளை
பொறுத்தவரை,
இத்தேர்தல்களின்
ஒரு
முக்கிய
அடையாளம்
—வருங்கால
வரலாற்றாளர்கள்
இதைக்
குறிப்பர்—
அவற்றின் மீதான
தாக்குதல்கள்
ஒபாமா
நிர்வாகத்தின்
உலகளாவிய
கொள்கையான
அமெரிக்கக்
குடிமக்கள்
உட்பட நீதித்துறைக்குப்
புறத்தே
படுகொலைகள்
செய்வது
எந்த
விவாதமும்
இன்றி
நடந்துள்ளன
என்பதுதான்
உண்மை.
அமெரிக்க
அரசாங்கம்
ஒழுங்குமுறையான
வழக்கு
நடாத்துதல் என்னும்
அடிப்படை ஜனநாயகக்
கொள்கையை தூக்கி
எறிந்துள்ளது. அப்படியும்
கூட
இந்த
உண்மை
எந்த
விவாதங்களிலும்
வெளிப்படவில்லை,
மற்றும்
செய்தி
ஊடகங்கள்
வலதாயினும்,
இடதாயினும்
சரி,
முற்றிலும்
கிட்டத்தட்ட
புறக்கணித்துவிட்டன.
எந்த புறநிலை
சட்ட தரத்தின் படியும்,
அமெரிக்க
ஜனாதிபதி
பெரிய
குற்ற
விசாரணைக்கு
உட்படுத்தப்பட
வேண்டும். ஆனால்
அவருடைய
முக்கிய
எதிராளியும்
முழுச்
செய்தி
ஊடகமும்,
அரசியல்
நடைமுறையும்
இக்குற்றத்திற்கு
உடந்தையாக
உள்ளன.
வைட்டிற்கும்
ஷெரருக்கும்
வாக்களிப்பது
என்பது
ஒரு
ஆரம்பமாகும்.
ஓர்
உண்மையான
அரசியல்
மாற்றீட்டிற்கு
போராடுவதவற்கு
ஆதரவு
வழங்குவது என்பதின்
அறிவிப்புத்தான்
அது.
சோசலிச மாற்றீடு என்பது சமூக
சமத்துவத்தை
அடித்தளமாகக்
கொண்ட
உலகளாவிய
ஒருங்கிணைப்புக்
கொண்ட
பொருளாதார
அமைப்புமுறையை
தோற்றுவித்தல்
என்பதாகும். இதில்
உற்பத்திச்
சக்திகள்
ஜனநாய
முறையில்
கட்டுப்படுத்தப்பட்டு
சமூகத்
தேவையின்
நலன்களுக்காக
செயல்படுத்தப்படும்.
ஒபாமாவிற்கு
வாக்களிப்பவர்கள்
உள்ளடங்கலான அமெரிக்காவின் மில்லியன்
கணக்கான
மக்களிடையே
தேர்தல்கள்
எதையும்
மாற்றாது
என்ற
உணர்வு
ஏற்பட்டுள்ளது.
நான்கு
ஆண்டுகளுக்கு
முன்பு
ஒபாமாவைப்
பற்றி
ஏற்பட்டிருந்த
பரந்த
போலித்
தோற்றங்கள்
பெரிதும்
கரைந்துவிட்டன. இது அவர்
செயல்படுத்திய உண்மையான
கொள்கைகளின்
விளைவாகும். தொழிலாளர்களும்
இளைஞர்களும்
முழு
சமூக
அரசியல்
அமைப்புமுறையில்
ஏதோ
தவறு
உள்ளது
என்பதை
உணர்ந்து
விட்டனர். ஒரு
புரட்சி
இல்லாமல்
எதுவும்
மாற்றப்பட
முடியாது
என்பதையும்
புரிந்து
கொள்ளத்
தொடங்கிவிட்டனர்.
இத்தேர்தல்களுக்குப்
பின்னணியில்
முதலாளித்துவத்தின்
உலகளாவிய
நெருக்கடி
உள்ளது.
உலகெங்கிலும்
பெருநிறுவனங்களும்
வங்கிகளும்
தன்னுடைய
வாழ்க்கை
நிலைமைகளில்
ஒரு வரலாற்றுத்
தன்மையான
முன்னைய
வாழ்க்கை நிலைக்குத்
திரும்புதலை தொழிலாள
வர்க்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று
கோருகின்றன.
அமெரிக்க
மக்களுக்கும்
உலகிற்கும்
முதலாளித்துவம்
வறுமை,
வேலையின்மை,
போர்,
சர்வாதிகாரம்
ஆகியவற்றைக்
கொண்ட
எதிர்காலத்தைத்தான்
காட்டுகிறது.
ஆளும்
வர்க்கம்
இக்கொள்கையை
வெகுஜனப்
போராட்டங்களை
தூண்டாமல்
தொடரலாம்
என
நினைத்தால்,
அது
தன்னைத்தானே
பெரிதும்
ஏமாற்றிக்
கொள்ளுவதுதான்.
ஐரோப்பா,
தென்னாபிரிக்கா,
ஆசியா
மற்றும்
அமெரிக்காவிலும் கூட தொழிலாள
வர்க்கம்
எதிர்த்துப்
போராடத்
தொடங்கிவிட்டது.
ஆனால்
இப்போராட்டங்கள்
முதலாளித்துவத்திற்கு
எதிராக
ஒரு நனவுமிக்க புரட்சிகர
இயக்கமாக
மாற்றப்பட
வேண்டும். அத்துடன் ஒரு
புதிய
தலைமை
கட்டமைக்கப்பட
வேண்டும்.
சோசலிச
சமத்துவக் கட்சி,
தன்னுடைய
தேர்தல்
பிரச்சாரத்தை
தொழிலாளர்
வர்க்கத்துள்
இத்தலைமையை
கட்டமைப்பதற்கு
போராடும்
ஒரு
வழிவகையாக
ஆரம்பித்தது.
இப்பிரச்சாரம்
ஓகையோவில்
கூப்பர்
டயர்
தொழிலாளர்களின்
போராட்டங்களுக்கு
ஊடே,
இல்லிநோய்ஸ்
ஜோலியட்டில்
காட்டர்பில்லர்ஸ்
தொழிலாளர்ளின்
போராட்டங்களுக்கு
இடையே, சிக்காகோவில்
ஆசிரியர்கள்
போராட்டத்திற்கு
நடுவே மற்றும் இன்னும்
நாடு
முழுவதும்
தொழிலாள
வர்க்கத்தின்
பிற
பிரிவுகளுடைய
போராட்டங்களுக்குள் பரந்த
அளவில்
அறியப்பட்டுள்ளது. இப்பிரச்சாரம்
நாடு
முழுவதும்
நடந்த
டஜன்
கணக்கான
கூட்டங்களில் மாணவர்களும்
இளம்தொழிலாளர்ளும்
பெருகிய
முறையில்
அரசியல்மயமாவதை பிரதிபலித்தது.
அதன்
பிரச்சாரத்தை
ஆதரித்த
அனைவரையும்
சோசலிச சமத்துவக் கட்சி
வைட்டிற்கும்
ஷேரருக்கும்
வாக்களிக்க
வேண்டும்
என்றும்
சோசலிசத்திற்கு
தீவிரமான போராட்டத்தை
எடுத்துக்
கொள்ள
வேண்டும்
என்றும்
அழைப்பு
விடுகிறது.
சோசலிச்
சமத்துவக்
கட்சியில்
சேர்ந்து
அதைக்
கட்டமைக்குமாறும்,
அதன்
இளைஞர்
பிரிவான
சமுக சமத்துவத்திற்காகன
சர்வதேச
மாணவர் இளைஞர்
அணியிலும்
சேர்ந்து அதைக்
கட்டியமைக்குமாறும்
அழைப்பு
விடுகிறது.
*
* *
வாக்குச்
சீட்டில்
பதிவாதற்கே
பல
நேரமும்
பல்லாயிரக்க்க்கான
கையெழுத்துக்கள்
தேவைப்படும் அமெரிக்காவில்
இருக்கும்
ஜனநாயக
விரோதத்
தேர்தல்
சட்டங்களினால் வைட்
மற்றும்
ஷெரரின்
பெயர்கள்
விஸ்கோன்சின்,
கோலோரடோ
மற்றும்
லூயிசியானா ஆகிய மூன்று
மாநிலங்களின்
வாக்குச்
சீட்டுக்களிலேயே தோன்றும்:.
சில
பிற
மாநிலங்களில்
சோசலிச சமத்துவக் கட்சி
வேட்பாளர்கள்
உத்தியோகபூர்வ
எழுதுமுறை
சான்றைக்
கொண்டுள்ளனர்.
(முழுப்பட்டியலுக்கும்
சோசலிச சமத்துவக் கட்சிக்கு
எப்படி
வாக்களிப்பது
என்பதை
அறிந்து
கொள்ளுவதற்கும்
) |