World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Lecture on Sri Lankan SEP’s historical and international foundationsசோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் பற்றிய விரிவுரை5 November 2012Back to screen versionநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பும், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் என்ற நூலை அறிமுகப்படுத்துவதற்காக பகிரங்க விரிவுரை ஒன்றை நடத்தவுள்ளன. இந்த நூல், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் ஆரம்ப மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதான முன்னோக்குத் தீர்மானத்தை உள்ளடக்கியுள்ளது. முன்னோடி அமைப்பாக இருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை 1996ல் கட்சியாக மாற்றியமைத்த போதே சோசலிச சமத்துவக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ராலினிச, சீர்திருத்தவாத மற்றும் குட்டி முதலாளித்துவ போலி இடது தீவிரவாத கட்சிகளுக்கு எதிராக, இலங்கையிலும் தெற்காசியப் பிராந்தியத்திலும் தொழிலாள வர்க்கத்துக்கு புரட்சிகர தலைமைத்துவத்தை வழங்குவதற்காக அரசியல் ஆரம்பிப்பை மேற்கொள்வதற்காகவே, கழகம் கட்சியாக மாற்றப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக்கொடுப்பால் உருவாக்கப்பட்ட, தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்ப்பதற்காக 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. தன்னை ட்ரொட்ஸ்கிசவாதியாக அழைத்துக்கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி, 1964ல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்துகொண்டமை தெற்காசியா பூராவும் வெகுஜனங்களுக்கு துன்பகரமான விளைவுகளைக் கொணர்ந்தது. பிராந்தியத்தில் மிகவும் கடினமான நிலைமைகளின் கீழ், குறிப்பாக இலங்கையில் தமிழர்-விரோத உள்நாட்டு யுத்தத்தின் மத்தியில், 28 ஆண்டுகளாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த கொள்கைப் பிடிப்பான மற்றும் உத்வேகமான போராட்டம், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குத் தீர்மானத்தினுள், அதன் வரலாற்று சர்வதேசிய சூழ்நிலையில் நிறுத்தி கலந்துரையாடப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச சர்வதேசியவாதத்துக்காகவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாகவும் மற்றும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரதும் புரட்சிகர ஐக்கியத்துக்காவும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சி 43 ஆண்டுகளாக முன்னெடுத்த போராட்டத்தின் கறைபடியாத சாதனைகள் பற்றிய இந்த பகுப்பாய்வு, இன்று உலகம் பூராவும் கட்டவிழ்ந்துவரும் புரட்சிகர போராட்டங்களுக்கு ஒரு வழிகாட்டியாக மிகப்பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாம் சகல சமூகங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் இந்த விரிவுரைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கின்றோம். இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம் திகதியும் நேரமும்: நவம்பர் 8, வியாழன், மாலை 4.00 மணிக்கு விரிவுரையாளர்: சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ் |
|