தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
100 years ago: First Balkan War beginsநூறு வருடங்களுக்கு முன்பு முதல் பால்கன் யுத்தம் தொடங்கியதுuse this version to print | Send feedbackபல்கேரியன் பிரங்கி அக்டோபர் 8 1912 அன்று, மொண்டெனேக்ரோ (Montenegro) அரசு ஒட்டோமான் (Ottoman) சாம்ராஜ்யத்தின் மீது யுத்தத்தை அறிவித்ததுமும் பெரிய மொண்டெனேகிரிய நகரமான பொட்கொரிக்கா (Podgorica) வுக்கு எதிரில் உள்ள டெட்சிடெக் (Detchitch) மற்றும் சேர்பியாவையும் மொண்டெனேகுரோவையும் பிரிக்கும் ஒட்டோமான் பிரதேசமான நொவி பசார் (Novi Pazar) இருக்கின்ற பகுதியில் அமைந்துள்ள ஒட்டோமனின் அரண்மனைகள் மீது தாக்குதலை தொடங்கியிருந்தது. பகுதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது. மொண்டெனேகிரிய படைகள் இரண்டு நாட்களுக்குள் டெட்சிடெக் அரண்மனையைக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டன. அக்டோபர் 17 ல் சேர்பியா மற்றும் பல்கேரியா மீது ஒட்டோமான் யுத்தப் பிரகடனத்தை வெளியிட்டதுடன் இருந்த முரண்பாடுகள் மிக அதிகளவில் விரிவடைந்தன. ஒக்டோபர் 18 இல் சேர்பியா, பல்கேரியா மற்றும் கிரீஸ் ஆகியன ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் மீது யுத்தத்தை தொடங்கின. இதைத் தொடர்ந்த நாட்களில் பெரிய இராணுவ மோதல்கள் ஆரம்பமாகின. மே 1913 வரை நடந்த இந்த முதலாவது பால்கன் யுத்தமானது, முதலாவது உலகப் போருக்கு வழியமைத்த ஐரோப்பிய கண்டத்தின் முரண்பாடுகளின் ஒரு பாரிய விரிவாக்கத்தை அடையாளம் காட்டியது. அதில் ஒட்டோமான் பிரதேசத்தினர் 100,000 பேர் மரணமடைந்ததாக மதிப்பிடப்பட்டிருக்கின்றன. அக்டோபர் 1 இல், சேர்பியா, பல்கேரியா, மொண்டெனேகுரோ மற்றும் கிரீஸ் ஆகிய மாநிலங்கள் இணைந்து உருவான பால்கன் குழு ஒட்டோமானின் கட்டுப்பாட்டினுள் இருந்த மசிடோனியாவிற்கு சுய ஆட்சி கொடுக்குமாறு ஒட்டோமான் சாம்ராஜ்யத்திடம் இறுதி எச்சரிக்கையை கொடுத்திருந்தன. பால்கன் பிராந்தியத்தில் பூகோள அரசியலின் சக்தியை மறுபங்கீடு செய்ய விரும்பிய பால்கன் குழுவின் அபிலாசைகளுக்கான துருக்கியர்களுடைய எதிர்ப்புகள் யுத்தத்தை நோக்கி நகர்த்தியது. சேர்பியா மற்றும் பல்கேரியா, ரஷ்யாவின் அனுசரணையுடன் மார்ச்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது யுத்தத்தின்போது ரஷ்யாவால் கட்டுப்படுத்தப்படும் ஒரு நடுநிலையான பகுதியாகவும், ஒரு சேர்பிய பகுதியாகவும், ஒரு பல்கேரிய பகுதியாகவும் மாசிடோனியாவை பிரிப்பதற்கு வழிவகுத்தது. ஒரு தொடர் இருதரப்பு உடன்பாடுகள் மூலம் போலியாக உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்ட இந்த பலமற்ற அரசியல் கூட்டுத்தான் பின்னர் பால்கன் குழு என அறியப்பட்டதாக உருவாகியது. அல்பானியர்களுக்கிடையிலான அதிகரித்துவந்த ஆயுதக் கிளர்ச்சிகளாலும், 1911-12 இத்தாலிய-துருக்கி போரினால் தற்போது லிபியா என்றழைக்கப்படுகின்ற ஒட்டோமானின் மாநிலத்தினை இத்தாலி இணைத்துக்கொண்டதாலும், 1908இன் இளம் துருக்கிய புரட்சியுடன் இணைந்த உள்நாட்டு அரசியல் ஸ்திரத்தின்மை இன்மையினாலும் ஒட்டோமான் சாம்ராஜ்யம் பலவீனப்பட்டிருந்தது. பால்கன் தேசியவாத்ததின் மீதான ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய அச்சுறுத்தலாலும், ரஷ்யாவின் ஆத்திரமூட்டும் செயல்களின் அதிகரித்த தன்மையும், ஜேர்மனியின் அதிகரித்துவந்த செல்வாக்கும் இப்பிராந்தியத்தின் ஸ்திரமற்றதன்மையை அதிகரித்திருந்தது. |
|
|