சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Obama-Romney debate: Questions unasked and unanswered

ஒபாமா-ரோம்னி விவாதம் : கேட்கப்படாத வினாக்களும் பதிலளிக்கப்படாத  வினாக்களும்

Joseph Kishore
18 October 2012
use this version to print | Send feedback

செவ்வாயன்று ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கும் அவருடைய குடியரசுக் கட்சி போட்டியாளர் மிட் ரோம்னிக்கும் இடையே நடந்த விவாதம் நகர அரங்குக் கூட்டம் என அழைக்கப்பட்டது. தேர்தலில் மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்த உண்மையான அமெரிக்கர்களிடம் இருந்துவரும் வினாக்களுக்கு இரு வேட்பாளர்களும் பதிலளிப்பர் என்று கூறப்பட்டது. இந்நிகழ்வு ஒரு மக்களிடம் செல்லும் சந்தர்ப்பம் என்று பெரிதும் கூறப்பட்டது.

ஆனால் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும், முழுத்தேர்தலும் எப்படி எழுதித் தயாரிக்கப்பட்டு அரங்கேற்றப்படுகிறது என்பதையும், அதில் முக்கிய வினாக்களுக்கு பதில் கிடைப்பது ஒருபுறம் இருக்க, கேட்கப்படக்கூட இல்லை என்பதற்குத்தான் உதாரணமாயிற்று. அமெரிக்க அரசியல் சடங்குபோன்ற  தன்மையுடையதாக்கப்பட்டு, எங்கும் படர்ந்துள்ள நிலையில், எத்தகைய தன்னியல்பான எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அது போலித்திரையை அம்பலமாக்கி முழு ஏமாற்றுத்தன முறையையும் உடைந்துவிழச்செய்துவிடும்.

ஒரு பொருத்தமான பந்தயத்தை உறுதிப்படுத்துவதற்காக, பந்தயம்கட்டும் கருத்துக்கணிப்பு நிறுவனம் 82 தனிநபர்களைத் தேர்ந்தெடுத்து சார்பற்ற வாக்காளர்களைஅவர்கள் பிரதிபலிக்கின்றனர் என்று கூறியது. மக்களின் இத்தகையிபிரிவினர், பெரும் அமெரிக்க மத்தியதர வர்க்கம் போல், பெரிய அளவிற்கு அரசியல், செய்தி ஊடகக் கற்பனைதான். இரு வேட்பாளர்களையும் வெறுக்கும் மில்லியன் கணக்கான மக்கள் ஒதுக்கப்பட்டனர். அவர்கள் நடப்புக்களில் பெரும் இகழ்வு கொண்டும் விரோதப் போக்குடனும் உள்ள நிலையில் வாக்களிப்பது கூடக் கிடையாது.

இந்த 82 நபர்களும் முன்கூட்டியே தமது கேள்விகளை CNN  உடைய தலைமை அரசியல் நிருபரும் மற்றும் ஒரு நம்பகத்தன்மை உடைய முக்கிய செய்தி ஊடகத்தின் நிகழ்ச்சிகளை நடாத்தும் நடுவர் காண்டி கிரௌலியிடம் அளித்தனர். எந்த வினாக்களை 82 பேரில் எவர் கேட்கவேண்டும், எவர் பேச அனுமதிக்கப்படுவர் என்பதை கிரௌலி தீர்மானித்தார்.

செய்தி ஊடகத்திற்கு இரைபோடுவதற்கு முட்டுக்கொடுக்கும் வகையில்தான் வினாக்கள் இருந்தன. வினா கேட்டவர்கள் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட்ட கேள்விகளை அட்டைகளில் இருந்து வாசித்தனர். எவரேனும் முறையில் இருந்து தவற துணிந்தால், அவர் விலக்கிவைக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட விசாரணை என்ற பெயரில் பின்னறைக்குத் தள்ளப்படுவர் என்ற உணர்வுதான் இருந்தது. ஒப்புதலற்ற பின்கேள்வி இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிக் கருவி வினா எழுப்பியவர் கேள்வியை வாசித்தவுடன் அணைக்கப்பட்டுவிட்டது.

கேட்கப்பட்ட வினாக்களை விட குறிப்பிடத்தக்கது கேட்கப்படாத, கேட்கப்பட முடியாத வினாக்கள்தான் கீழே இருப்பதைப் போன்றவை:

*திரு. ஜனாதிபதி, அமெரிக்கக் குடிமக்களை எவ்வித நீதிவிசாரணைகளின்றி  படுகொலை செய்வதற்கு உங்கள் சட்டபூர்வ நியாயப்படுத்தல் என்ன? நிர்வாகம் இலக்குவைத்து மக்களைக் கொல்லும் உரிமையைக் கொண்டிருப்பதாகக் கூறும் உரிமை அமெரிக்காவிற்குள் இருக்கும் மக்களுக்கும், பொருந்துமா என்று கேட்டபோது FBI இயக்குனர் ரோபர்ட் முல்லர் இந்த ஆண்டு முன்னதாக அவருக்கு உறுதியாகத் தெரியாது என்றார். எந்த அமெரிக்கக் குடிமகனையும் நீங்கள் சொன்னால் போதும், அவர் கொல்லப்படலாம் என்பதை நீங்கள் நியாயப்படுத்த முடியுமா?

*ஜனாதிபதி ஒபாமா, நியூ யோர்க்ஸ் டைம்ஸில் கூறப்பட்டுள்ளதுபோல் நீங்கள் ஒவ்வொரு செவ்வாயன்றும் ஒரு கூட்டம் நடத்தி உலகெங்கிலும் இருக்கும் அமெரிக்க ஆளில்லாவிமானமான ட்ரோன்களால் எவர் கொல்லப்படலாம் என்பதை முடிவெடுப்பீர்கள் என்பது உண்மையா? எத்தனை மரண ஆணைகளில் நீங்கள் கையெழுத்திட்டுள்ளீர்கள்? உங்கள் நிர்வாகம் சித்திரவதை, உள்நாட்டு ஒற்றுவேலைக்காக புஷ் நிர்வாக அதிகாரிகளை குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏன் எதிர்க்கிறது?

*இக்கேள்வி இரு வேட்பாளர்களுக்குமாகும். அமெரிக்க மக்களின் முதுகிற்கு பின்னால் எத்தகைய போர்கள் திட்டமிடப்பட்டுள்ளன? அடுத்த ஆண்டு ஈரான்மீது அமெரிக்க தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேலுக்கு எத்தகைய உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன? அத்தகைய நடவடிக்கையை ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை எதிர்த்தாலும், அமெரிக்க போருக்குத் தயாராக உள்ளதா? அத்தகைய போரில் அணுவாயுதங்களை அமெரிக்கா பயன்படுத்துமா?

* ஜனாதிபதி ஒபாமா, ஆளுனர் ரோம்னி அவர்களே, உலகப் பொருளாதார நெருக்கடியை ஆரம்பித்த வோல் ஸ்ட்ரீட் சரிவிற்கு ஏன் எந்த வங்கியாளரோ, தனியார்முதலீட்டு மேலாளரோ பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை? மிக அதிக வறிய நிலைக்கும், பாரிய வேலையின்மைக்கும் மத்தியில் பங்குச் சந்தைகளும் பெருநிறுவன இலாபங்களும் மிகப் பெரிய ஏற்றத்தை எப்படிக் காண்கின்றன என்பதை நீங்கள் விளக்க முடியுமா?

* ஜனநாயகக் கட்சியனரும், குடியரசுக் கட்சியினரும் தற்பொழுது சமூகநலத் திட்டங்களில் டிரில்லியன் கணக்கான டாலர்களை வெட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். நீங்கள் செயல்படுத்த இருக்கும் வெட்டுக்கள் யாவை? சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளை வெட்டுதல் என்பது பற்றி உங்களால் பகிர்ந்து கொள்ளப்படும் கொள்கையின் அடிப்படை நோக்கமா மில்லியன் கணக்கான சாதாரண அமெரிக்கர்களின் சராசரி வாழ்க்கை காலத்தை குறைத்தல் என்பதா?

பட்டியல் இப்படி நீண்டுகொண்டே போகும்...

கேட்கப்பட்ட வினாக்களை அவர்கள் எதிர்கொண்ட முறையில் வேட்பாளர்களும் நடுவரும் மிக மிக்கியமான பிரச்சினைகளைப் பற்றிய குறிப்புகளை தவிர்ப்பதில் கவனம் காட்டினர். எரிசக்திக் கொள்கை முன்னும் பின்னும் இழுபறியில் இருக்கையில், இரு வேட்பாளர்களும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு இன்னும் கூடுதல் கூட்டாட்சி நிலத்தை எண்ணெய், இயற்கை எரிவாயு கண்டுபடிப்புக்களுக்குத் அதிகம் திறப்பர் என்று பேசுகையில், எவருமே 2010 இல் BP எண்ணெய் தோண்டுதல் வெடிப்பைப் பற்றிக்கூறவில்லை. அது 29 தொழிலாளர்களைக் கொன்றதுடன் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியது.

லிபியா பற்றிய விவாதம் மற்றும் அமெரிக்கத் தூதர் கொலை செய்யப்பட்டது பற்றிய விவாதம், பயங்கரவாதத்திற்கு எதிரான போர்எனக்கூறப்படுவதின் நடுவே அமெரிக்கா அல் குவேடாவுடன் பிணைப்பு உடைய இஸ்லாமிய ஜிஹாதிஸ்டுகளுடன் இணைந்துகொண்டு லிபியா மற்றும் இப்பொழுது சிரிய அரசாங்கங்களை அகற்றுவதற்கான உந்துதலில் ஈடுபட்டுள்ளது என்பது தவிர்க்கப்பட்டுள்ளது. விவாதத்திற்கு சற்று முன்தான் நியூ யோர்க் டைம்ஸ் CIA உதவியுடன் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் ஆயுதங்கள் முக்கியமாக அல் குவேடா சக்திகளுக்கு செல்லுகின்றன என எழுதியுள்ளது. ஆனால் இது விவாதிக்கப்பட முடியாது, ஏனெனில் முடிவிலாப் போர்களுக்கும் ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கும்தான் நியாயப்படுத்தப்பட்ட 11 ஆண்டுகளாக உள்ள அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய போலி நிலைப்பாட்டை இது தகர்த்துவிடும்.

ரோம்னியின் கருத்தான, எவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், செல்வந்தர்கள் நன்கு வாழ்வர் என்று சுருக்கிக் கூறப்பட்ட நிலையில் முதல் விவாதம் முடிந்தது. இரண்டாம் விவாதத்தின் முக்கிய கணம் ஒபாமாவின் முடிவுரைக்கருத்து ஆகும்: சுதந்திரமான வர்த்தக முறை என்பது உலக இதுவரை அறிந்தவற்றுள்ளேயே செழுமைக்கான மிகப் பெரிய இயந்திரம் ஆகும். சுயமாக தங்கியிருப்பது மற்றும் தனிநபர் முன்னெடுப்புகள், இடரை எதிர்கொள்ளுபவர்களுக்கு பரிசளிக்கப்படவேண்டும் என நான் நம்புகிறேன்.

இது ஒரு மிக முக்கியமான பிரச்சினை ஆகும். இரு வேட்பாளர்களும் சற்றும் தயக்கமின்றி முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாப்பதுடன், பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் நலன்களையும் பாதுகாக்கின்றனர். இவர்கள் இருவருமே 1930களுக்குப் பின் உலகில் மிகப் பெரிய நெருக்கடிக்கு வழிவகுத்த ஆளும் உயரடுக்கிற்கு ஆதரவாகப் பேசுகின்றனர்.

செய்தி ஊடகம் முன்வைத்துள்ள பல வெற்றுத்தனமான பேச்சுக் கருத்துக்களிடையே இந்த முழுநிகழ்வின் இழிந்த தன்மை மிக அழகாக ABC News  இனால் கூறப்பட்டது: உங்கள் குரல், உங்கள் வாக்கு.பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கினை நோக்கிய இன்னும் பொருத்தமான ஒரு கோஷமாக இருக்கக்கூடியது உங்கள் பணம், உங்கள் வேட்பாளர். நீங்கள் முடிவெடுங்கள். என்பதாகும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முக்கியமான முடிவை எதிர்கொள்ளவில்லை. இந்த இரு பெருவணிக வேட்பாளர்களில் எவருக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதல்ல பிரச்சினை. முழு அரசியல், பொருளாதார முறை பற்றி என்ன செய்யப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சினை.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர்கள் ஜெரி வைட், பிலிஸ் ஷேர்ரர் ஆகியோர் அமெரிக்கத் தேர்தல்களில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டமைப்பதற்குப் போராடுவதற்காகத் தலையீடு செய்துள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சி இம்மாத இறுதியிலும் நவம்பரிலும் மாநாடுகளை நடத்தி, தேர்தல்கள் பற்றிய அனுபவங்களைப் பரிசீலித்து இந்த புதிய தலைமை கட்டப்படவேண்டிய சோசலிச வேலைத் திட்டம் குறித்து விவாதிக்கும். தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இன்றே அவற்றில் பங்கு பெறுவது குறித்து திட்டமிடுமாறு நாங்கள் அழைப்புவிடுகின்றோம்.