World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government opens up public bank for small businesses

சிறு வணிகங்களுக்குப் பொது வங்கியின் சேவையை பிரெஞ்சு அரசாங்கம் திறந்துவிடுகிறது

By Pierre Mabut
25 October 2012
Back to screen version

சிறு வணிகங்களுக்கு நிதி கொடுக்கத் தனியார் வங்கிகள் மறுக்கையில், அரசாங்கம் பொது நிதிகளைப் பயன்படுத்தப்போகிறது; அதே நேரத்தில் அரசாங்கம் பொதுச் செலவுகளைக் குறைக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்கான பொதுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2017 ஐ ஒட்டி 3 சதவகிதம் தான் இருக்க வேண்டும் என்பதற்காக.

PIB அதன் செயற்பாடுகளை அடுத்த ஜனவரி மாதம் தொடங்கும். அதன் தலைவர் Jean-Pierre Jouyet, வங்கி, வேலைகளைக் காப்பாற்றும் நோக்கத்தைக் கொண்டிராது என்பதை உடனடியாகத் தெளிவாக்கினார். 600 வேலைகள் அச்சறுத்தலுக்கு உட்பட்டிருந்த கிழக்கு பிரான்ஸில் Florange இல் எஃகு உற்பத்தித் தொழிலுக்கு நிதியை வங்கி அளிக்குமா என்று கேட்கப்பட்ட வினாவிற்கு, Jouyet வங்கிகள் ஒன்றும் நொண்டி வாத்துக்களுக்கு நிதியளிப்பதற்காக இல்லை என்றார்.

மறுபுறமோ அரசாங்கம் மற்றொரு வங்கியான Banque PSA Finance (BPD) PSA-Citroen கார்த்தாயரிப்புக் குழுவின் ஒரு பகுதி, கார் வாங்குபவர்களுக்குக் கடன் அளிப்பது முட்டுக் கொடுத்து நிறுத்தப்படுவதற்காக 7 பில்லியன் யூரோக்களை வழங்க உள்ளது. 8,000 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்து அதன் Aulnay-sous-Bois ஆலையை மூட இருக்கும் PSA, வேலைகளை நீக்கவும் பெருநிறுவனப் போட்டித்தன்மையை அதிகரிக்கவும்  அரசாங்கத்திடம் இருந்து பச்சை விளக்கைப் பெற்றது. BPF ஐக் காப்பாற்ற நிதிகள் தேவைப்பட்டன; இது தர நிர்ணய நிறுவனங்களில் இருந்து தரக்குறைப்பு அச்சுறுத்தலைப் பெற்றது.

இதற்கு ஈடாக PSA ஒரு சில நூறு வேலை நீக்கம் செய்யாது என்பதை ஒப்புக் கொண்டு, BPF மேற்பார்வைக் குழுவில் தொழிற்சங்க அதிகாரிகள் பங்கு பெறுவதையும் அனுமதிக்கிறது. இது CGT தொழிற்சங்கத் தலைவர் பேர்னார்ட் தீபோவின் கோரிக்கைகளில் ஒன்றாகும்; அவருடைய கருத்துப்படி தொழிற்சங்கம் பெருநிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் அதிகம் பங்கு பெற வேண்டும்.

PIB என்பது முந்தைய மூலோபாய முதலீட்டு நிதியின் (FSI) ஒரு விரிவாக்கமாகும்; முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியால் FSI நிறுவப்பட்டிருந்தது. இதன் மூலதனம் 42 பில்லியன் யூரோக்கள் ஆகும்; இது FSI  ஐப்போல் இரு மடங்கு ஆகும்; பொருளாதார மந்திரி பியர் மோஸ்கோவிச்சி கருத்துப்படி இது ஒரு தாக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படும்.

PIB  யின் பங்கை ஜேர்மனியில் பொது KWF வங்கிக்கு பிரதம மந்திரி Jean Marc Ayrault ஒப்பிட்டார்; அது 2009ல் இருந்து கிட்டத்தட்ட 20,000 நிறுவனங்களுக்கு 14 பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது. தொழிற்சங்க அதிகாரிகள் PIB இன் தேசிய நோக்குநிலைக்குழுவில் முதலாளிகளுடன் அமர்வர்; அது நடுத்தர தொழில் துறையில் எப்பிரிவுகளில் முதலீடு செய்யப்படலாம் என்பதைத் தெரிவிக்கும்.

PIB வங்கி, பிரெஞ்சுத் தொழில்துறைக்கு ஏற்றம் கொடுக்கும் ஒரு திகைப்பு முயற்சியாகத் தொடக்கப்பட்டிருக்கிறது; இத்துறை கிட்டத்தட்ட உலகச் சந்தையில் அதன் பங்கை 1990ல் இருந்து இழந்துவருகிறது; இது 6.2 சதவிகிதத்திலிருந்து 3.6 சதவிகிதம் என்று உலக வணிகத்தில் பங்கை இழந்துள்ளது. பிரான்சில் வணிகப் பற்றாக்குறை மிக அதிக அளவான 73 பில்லியன் யூரோக்களை 2011ல் அடைந்தது. பிரெஞ்சு அரசாங்கம் தொழில்துறைப் போட்டித்தன்மையை உயர்த்துவதற்கு ஊதியங்களைக் குறைத்தல், சமூகநலச் செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது--குறிப்பாக முதலாளிகள் சமூகநலச் செலவுகளுக்கு கொடுக்கும் பங்களிப்பை குறைப்பதற்கு.

இந்தக் கொள்கை ஒரு சோவினிச பாதுகாப்புவாதப் பிரச்சாரமான பிரான்சில் தயாரித்த பொருட்களைவாங்குக என்பதுடன் இணைந்தது; இதற்கு தொழிற்துறை மீட்பு மந்திரி (Industrial Recovery) Arnaud Montebourg வழிநடத்துகிறார். Montebourg ஆப்பிள், நோக்கியா மற்றும் சோனிக்காகத் தயாரிக்கப்படும் சீன உதிரிபாகங்களுக்கு (ஸ்மார்ட்போன்களுக்கு) எதிராகப் பெரும் சீற்றத்தை காட்டியுள்ளார். பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவில் இருந்து வரும் இறக்குமதிகளை நிதானப்படுத்த வேண்டும்என்றார் அவர்; அவைகள் அடிமை உழைப்புத் தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்களை தளமாக உடையவைகள் என்றார்.

 பிரான்ஸில் தயாரிக்கப்பட்டதுபிரச்சாரம் ஒரு பிற்போக்குத்தன மோசடி ஆகும்; குறிப்பாக கிட்டத்தட்ட பிரான்சில் தயாரிக்கப்பட்டவை எனக் கூறப்படும் பொருட்களில் இருக்கும் பகுதிகளே அயல்நாடுகளில் இருந்து வந்தவை ஆகும்.

பிரெஞ்சு பொருளாதாரக் கண்காணிப்புக்களை மேற்பார்வையிடும் அமைப்பு (OFCE) 2013 ஆண்டு பிரான்சிற்கான அதன் பார்வையை அக்டோபர் 18 அன்று அளித்தது. இது வேலையின்மை வரலாற்றிலேயே இல்லாத 11 சதவிகித அளவிற்குச் செல்லும் என்றும் பூஜ்யப் பொருளாதார வளர்ச்சியையும்தான் கணித்துள்ளது. செப்டம்பர் 9 அன்று ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் பிரான்ஸ் ஓராண்டிற்குள் வேலையின்மை நிலைமையை மாற்றிவிடும் என அறிவித்திருந்தார்.

கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தின் மீது சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்த PS உதவுகையில், அது பிரான்சில் வேலையின்மை மிகப் பெரிய அளவிற்கு உயர்வதை அனுமதிக்கிறது.

Rouen க்கு அருகே Petroplus சுத்திகரிப்பு ஆலையை நீதிமன்ற ஆணைப்படி கலைத்துவிடுவது என்பது செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது; இதையொட்டி 550 வேலை இழப்புக்கள் ஏற்படும்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான தினசரி நாளேடான l’Humanite கருத்துப்படி, CGT  தலைமையில் இருக்கும் தொழிற்சங்கங்கள் அயல்நாட்டு முதலீட்டாளர் ஒருவர் ஆலையை எடுத்துக் கொள்ளுவார் என எதிர்பார்க்கின்றன என்று உள்ளது. துபாயில் தலைமையகத்தைக் கொண்ட நேடோயிலில் இருக்கும் முதலீட்டாளர்களாகக் கூடிய வாய்ப்பு இருப்பவர்களிடம் நாங்கள் பேசியுள்ளோம், அதேபோல் ஹாங்காங்கில் உள்ள Alafandi Petroleum குழுவிவிடமும் பேசியுள்ளோம் என்று CGT  யின் நிக்கோலா வின்சென்ட் கூறினார்.

 ஜனாதிபதி ஹாலண்டிற்கு அவருடைய கடமைகள் பற்றி நினைவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்; அரசாங்கத்திடம் இருந்து ஆதரவு மிகவும் வலுவாக இருக்கும்என்றும் உறுதியளித்துள்ளார். பெட்ரோப்ளஸ் தொழிற்சங்கங்கள் BIP வங்கியிடம் தலையீடு தேவை என்று வாதிட்டுள்ளன; “BIP  நிதிகளில் 42 பில்லியனில்1 சதவிகிதம்தான் எங்களுக்கு ஆலையை நவீனப்படுத்தத் தேவை; இது பிரான்சில் சுத்திகரிப்புத் தேவைகளில் 8 சதவிகிதத்தை நிறைவு செய்யும் என்றார் வின்சென்ட்.

தொலைத்தொடர்புக் கருவிகள் உற்பத்தி நிறுவனமான Alcatel-Lucent ல் கடந்த வாரம் உலகம் முழுவதும் 5,500 பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டன. ஐரோப்பாவில் 3,300 பணிகள் தகர்க்கப்படும்; பிரான்சில் 1,430 அறிவிக்கப்பட்டுவிட்டன; Vélizy இல் 2,500 பேர்களைக் கொண்டுள்ள ஆலை 2014 இல் மூடப்பட உள்ளது. இந்தப் பொருளாதார, சமூக அழிப்பிற்கு இடையே அரசாங்கம் கொண்டுள்ள ஒரே ஆலையை, இழிந்த முறையில் அதிக வெற்றியின்றி வாங்கும் திறன் உடையவர்களுக்காக தேடி அலைகிறது.

இக்கொள்கை அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஆதரவையும் பிரான்சின் தொழில்துறையைக் காப்பாற்றுதல் என்னும் பெயரில் கொண்டுள்ளது. இதன் விளைவு ஆளும் உயரடுக்கிற்கு இலாப விகிதங்கள் அதிகரிப்பது மற்றும் மிகவும் குறைவான தொழிலாளர் செலவுகளைக் கொடுக்கும் கீழ்மட்ட நாடுகளிடையே ஆலையைப் பெறுவதற்கான போட்டியும்தான்