WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி
அரசாங்கம் கலுவா அறிக்கை பற்றிய விவாதத்திலுள்ள சிக்கன நடவடிக்கைக்கு ஒப்புதல்
கொடுக்கிறது
By Alex
Lantier
25 October 2012
ஜனாதிபதி
பிரான்சுவா ஹாலண்டின் சமூக ஜனநாயக அரசாங்கம் முன்னாள் விண்வெளிப்-பாதுகாப்பு
நிறுவனத்தின்
(EADS) தலைமை
நிர்வாக அதிகாரி லூயி கலுவா மூலம் தயாரிக்கப்படும் ஒரு சார்பு சிக்கன அறிக்கையில்
இருந்து தூர முயன்று பின்னர் சமூக வெட்டுக்களுக்கு தனது ஆதரவை வலியுறுத்தி
வருகிறது. அதனுடைய சிக்கனக் கொள்கையைத் தொடரும் என்னும் அரசாங்கத்தின்
உத்தரவாதங்கள்,
கலுவா அறிக்கை
“புதைக்கப்படக்
கூடாது”
என்று முக்கிய பத்திரிகைச் செய்தி விமர்சனங்கள் ஏராளமானவை கூறியவற்றை அடுத்து
வந்துள்ளன.
கடந்த
வெள்ளியன்று, நவம்பர் 5ம் தேதி கலுவா வெளியிடயிருக்கும் அறிக்கையின் முக்கிய
விவரங்கள், கன்சர்வேடிவ் நாளேடான
La Figaro
விற்குக்
கசியவிடப்பட்டன. இவற்றுள் முதலாளிகளின் வரிகளில் இருந்து 20
பில்லியன் யூரோக்கள் வெட்டு,
சமூகச் செலவு
பங்களிப்புக்களுக்கு கொடுக்க வேண்டிய நிறுவன பங்களிப்புக்களில் 30 பில்லியன்
யூரோக்களுக்கான (39 பில்லியன் டாலர்) புதிய வெட்டுக்களுக்கான திட்டங்களும்
அடங்கும். இது பொதுச் செலவில்
“பெரும்
குறைப்புக்களை”
செய்யும் வகையில் ஈடுகட்டப்படும், அதைத்தவிர தொழிலாள வர்க்க
நுகர்வோரை அளவிற்கு மீறி அதிகமாகப் பாதிப்பதுடன் விற்பனை வரி உயர்வின் மூலமும்
ஈடுகட்டப்படும்.
கலுவாவைச்
சூழ்ந்தவர்கள்
Le Figaro
விடம் அவருடைய அறிக்கை
“பேர்சியிலுள்ள
நிதி அமைச்சரகம் உட்பட
“கீனிசியப்
பொருளாதாரவாதிகளிடம் செல்வாக்கு நாடுதலை”
எதிர்கொண்டிருக்கிறது என்று கூறினர்.
கடந்த மே
மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டபின் ஹாலண்ட் ஏற்பாடு செய்திருந்த இந்த அறிக்கை சோசலிஸ்ட்
கட்சி (PS)
அரசாங்கத்தின்
தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளை மிகவும் தெளிவாக்கிக் காட்டுகிறது. இது
முன்வைத்துள்ள திட்டங்களில் ஒன்று சமூக பெறுமதி கூட்டுவரி (VAT
) எனப்படுவதை அகற்றும் ஹாலண்ட் கருத்தை மாற்றுவது; இந்த செல்வாக்கற்ற விற்பனை
வரிகளில் அதிகரிப்பு இவருக்கு முன்பு பதவியில் இருந்த கோலிசவாத ஜனாதிபதி நிக்கோலா
சார்க்கோசியால் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி
கசிவு,
ஒரு புதிய
LH2
கருத்துக்கணிப்பு,
ஹாலண்ட்டிற்குக் கொடுக்கும் ஒப்புதல் கருத்துக் கணிப்பு அளவை
இன்னும் 9 சதவிகிதம் குறைத்து 40 சதவிகிதமாக எனக்காட்டிய சில நாட்களுக்குள்
வந்துள்ளது.
அரசாங்கம்
ஆரம்பத்தில் கலுவா அறிக்கையில் இருந்து தன்னை தூரவிலக்கி வைத்துக் கொள்ள முயன்றது.
அறிக்கை கசிந்த அன்று, ஹாலண்ட் ஓர் அறிக்கையை வெற்றுத்தனமாக வெளியிட்டு,
“அறிக்கைக்குப்
பொறுப்பான ஆசிரியர், குடியரசின் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் கொள்கையை
நிர்ணயிப்பவர் அல்லர்”
என்று கூறியிருந்தார்.
வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களில் அதிகமானவற்றை கொண்டிருக்கும் சுகாதார மந்திரி
Marisol Touraine
கூறினார்
“பொது
நிதி இருக்கும் நிலைமையில் .... பிரெஞ்சு மக்கள் ஒரு புதிய பல பில்லியன் யூரோ
அதிர்ச்சியைத் தாங்க முடியும் என்று நான் நம்பவில்லை”
என்றார்.
பெருநிறுவன-நிதிய உயரடுக்கு,
விரைவில் ஹாலண்ட் அராசங்கத்தை ஏற்க வைக்கும் வகையில் செல்வாக்கைப்
பயன்படுத்தியது; இதையொட்டி கலுவாவின் அறிக்கை ஏற்கப்பட வேண்டும் என்று செய்தி ஊடகப்
பிரச்சாரம் நடைபெற்றது.
இது
தொடர்பான ஒரு கருத்துரையில்
Le Figaro
“அனைத்து பிரெஞ்சு
தொழில்முனைவோர்களும் ஒன்று சேர்ந்து அறிக்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்”
என அழைப்பு
விடுத்திருந்தது. தொழில்முனைவோர்கள் குழுவின் தலைவர்
Guillaume Cairou
சமூகநலச் செலவு வெட்டுக்கள்
பெருநிறுவனப் போட்டித்தன்மையை அதிகரிக்கும் என்று வலியுறுத்தினார்.
“ஒரு
சாதாரண உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது: பிரான்சில் இருக்கும் தொழில்முனைவோர்களாகிய
நாம் வரிகளைக் கொடுத்தபின் பிரித்தானியர்கள் அல்லது ஜேர்மானியர்களைவிட மூன்று
அல்லது நான்கு மடங்குகள் குறைவாகச் சம்பாதிக்கிறோம். பிரான்சிலுள்ள
தொழில்முனைவோர்களே, உண்மை இப்படி மறுக்கப்படுவதற்கு எதிராக நாம் ஒன்றுபடுவோம்”
என்றார்.
கார்த்தயாரிப்பு நிறுவனம் ரெனோல்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி
Carlos
Ghosn னும் கலுவா
அறிக்கைக்கு இசைவு தெரிவித்துக் கூறினார்:
“பிரான்சில்
வேலைகளை தோற்றுவித்து பிரான்சில் இருந்து தொழில்துறைகள் பாரிய முறையில் வெளியேறுவதை
தவிர்க்க வேண்டும் என்றால், நாம் நம் வேலைகளின் மீது பெரும் சுமையாகவுள்ள சமூகநலச்
செலவுகளை வெட்ட வேண்டும்.”
பிரான்சின் தொழிலாளர்களை குறைவூதிய நாடுகளில் இருக்கும்
தொழிலாளர்களுக்கு எதிராக இருத்திய நிலையில், அவர் பிரான்சிலுள்ள ரேனோல்ட் கிளியோ
கார்களின் தயாரிப்புச் செலவுகளை 1000 யூரோக்கள் குறைத்து, துருக்கியை விட பிரான்ஸ்
உற்பத்திக்கு உகந்த தளம் என்று செய்யவேண்டும் என்றார்.
பொருளாதார
மந்திரி
Pierre Moscovici
கலுவா அறிக்கை
“புதைக்கப்படவில்லை”
என்று நிதியப் பிரபுத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்க விரைந்தார்.
“இந்நாட்டில்
நாம் எதிர்கொண்டிருக்கும் சவால்களைச் சந்திக்க முன்னோடியில்லாத பெருமளவு அமைப்பியல்
சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் பேரவாக்களை நாம் கொண்டுள்ளோம்”
என்று அவர்
அறிவித்து, இந்த வெட்டுக்கள்
“முற்றிலும்
நாங்கள் செயல்படுத்த விரும்பும் பல ஆண்டுகாலப்போக்கில் இருக்கும்”
என்றும் உறுதியளித்தார்.
நேற்று
பிரதம மந்திரி
Jean-Marc Ayrault தான்
“கலுவா
அறிக்கையைப் புதைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை”
என்று கூறி,
பெருநிறுவனப் போட்டித்தன்மை பிரச்சினையில்
“அரசாங்கம்
தன்னை விலக்கிக் கொள்ளவில்லை, தீவிரமாக அது குறித்து உழைக்கிறது”
என்றார். கலுவா
அறிக்கை அரசாங்கக் கொள்கைக்கு ஓர்
“அடிப்படைப்
பங்களிப்பு”
என்ற அவர்,
அறிக்கையைத் தயாரிக்கும்போது தானே கலுவாவிற்கு
“முழுச்
சுதந்திரம்”
கொடுத்ததாகவும் கூறினார்.
கலுவா
அறிக்கை குறித்த விவாதம் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் வர்க்கத் தன்மையைத்
தெளிவாக்குகிறது. கருத்துக் கணிப்புக்களில் ஆதரவு பெரும் சரிவைக்கண்டுள்ளதை அது
தளர்ச்சியுடன் காண்கையில், சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின்
சீற்றம் பெருகுவதைக் காண்கையில், சிக்கன நடவடிக்கைகளின் வேகத்தைக்கூட அது குறைக்க
முடியாது, உடனடியாக சக்திவாய்ந்த பெருநிறுவன நலன்களின் ஆணைகளுக்குத்
தலைவணங்குகிறது.
புதிய
முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA),
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF)
போன்ற குட்டி முதலாளித்துவக் கட்சிகளின் வாதங்களை இது அம்பலப்படுத்துகிறது;
கீழிருந்து வரும் மக்கள் அழுத்தங்களுக்கு ஹாலண்ட் விடையிறுப்பார் என்று இவைகள்
கூறியிருந்தன.
NPA மற்றும்
PCF இரண்டுமே
இப்பொழுது PS
நடத்தும் தாக்குதல்களுக்கு அரசியல் பொறுப்பைக் கொண்டுள்ளன; ஏனெனில்
இந்த அரசாங்கம் இவற்றின் ஆதரவில்தான் பதவிக்கு வாக்களிக்கப்பட்டு வந்துள்ளது.
Journal du Dimanche
பேட்டியில் கலுவா
அறிக்கையின் திறனாய்வாளர்களில் ஒருவர்
PSல்
இருப்பவரான ஜாக் அத்தாலியுடையது காட்டியிருப்பது போல்,
PS
ஆனது ஆழ்ந்த சிக்கனக் கொள்கையில்தான் ஒன்றுபட்டிருக்கிறது. ஜனாதிபதி
பிரான்சுவா மித்திரோனுக்கு பொருளாதார ஆலோசகராக இருந்த அத்தாலி, ஜேர்மனிய
அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளை, சமூகப் பொருளாதாரச் சரிவிற்கு இடர் என்று
விமர்சித்தார்; ஆனால் இப்பொழுது இன்னும் கவனமாக இலக்கு கொள்ளப்பட்டால் பெரிய சமூக
வெட்டுக்களுக்கு அவைகள் உதவும் எனக் கூறியுள்ளார்.
அரசாங்கச்
செலவுகள்
“இன்னும்
திறமையுடன்”
இருக்க வேண்டும் என
அழைப்பு விடுத்த அவர், பேர்லினின் தலைமையில் கிரேக்கத்தில் சுமத்தப்பட்டுள்ள
வெட்டுக்களைத் தாக்கினார்.
“போட்டித்தன்மை
என்பது சமூகநலச் செலவுகளை வெட்டும் பிரச்சினை அல்ல. அப்படியென்றால் கிரேக்கம்
இன்னும் பெரும் போட்டித்தன்மையைக் கொண்டிருக்கும்.”
போட்டித்தன்மைக்கு ஏற்றம் கொடுத்து அதே நேரத்தில் சமூகநலன்களையும் பாதுகாத்தல்
என்பது ஒரு
“பக்தி
போன்ற விரும்பம்தானே”
எனக்
கேட்கப்பட்டதற்கு, அத்தாலி இல்லை என்று பதிலளித்து,
“உதாரணமாக
ஜேர்மனிய சமூக முறையுடன் நம்மைப் பிணைத்துக் கொண்டால், அது
தவறாகிவிடும்...ஜேர்மனியர்கள்தாம் நம்முடைய குடும்பக் கொள்கையுடன் பிணைத்துக் கொள்ள
வேண்டும்; இல்லாவிடின் நாம் 20 ஆண்டுகளில் அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்துக்
கொண்டிருப்போம்”
என்றார்.
பிரான்ஸின்
நிதிய உதவிகள் குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களுக்குக் கொடுக்கப்படுவது
குறித்து அத்தாலி குறிப்பிடுகிறார்; இதில்தான் ஜேர்மனிய, பிரெஞ்சு குழந்தைப்
பிறப்பு விகிதங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு, 1.42 மற்றும் 2.08 குழந்தைகள் ஒரு
பெண்ணிற்கு முறையே என்ற நிலையில், பங்களிப்பைக் கொடுக்கிறது. தற்போதை போக்குகளில்
2050ஐ ஒட்டி பிரான்சில் 75 மில்லியன் மக்கள் இருப்பர், ஆனால் ஜேர்மனியில் 65-70
மில்லியன் மக்கள்தான் இருப்பர்.
ஆயினும்கூட
கலுவா முன்வைத்துள்ள பெரிய, செல்வாக்கற்ற சமூக வெட்டுக்களுக்கு அத்தாலி
வாதிட்டுள்ளார்; இவற்றை ஒட்டி ஊதியங்கள், சமூக சேவைகளில் பெரும் வெட்டுக்கள்
ஏற்படும்.
“ஒரு
நீடித்த, தொடர்ச்சியான, எப்பொழுதும் செல்வாக்கற்ற கொள்கையில் இருந்து பிரான்ஸ்
தப்பிக்க முடியாது; அதுதான் காலப்போக்கில் நலன்களை அளிக்கும்.... இன்னும் அதிக
உலகளாவிய சீர்திருத்தங்கள் நமக்குத் தேவை; பகல் பாதுகாப்பு உதவியாளர்களுக்குப்
பயிற்சியில் மாற்றம் என்பதில் இருந்து தொழிலாளர்கள் செலவு வரை; பொதுப் பணிகளில்
கணினிகள் ஈடுபடுத்துவது உட்படும்”
என்றார் அவர்.
“ஒவ்வொரு
ஆண்டும் 20 பில்லியன் யூரோக்கள் மூன்று ஆண்டுகளுக்கு தேவை, அத்துடன் ஒவ்வொரு
ஆண்டும் 10 பில்லியன் யூரோக்கள் புதிய வரிகளில் வசூலிக்கப்பட வேண்டும்”
என்றும் அழைப்பு விடுத்தார். |