World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A new downturn in the global economy

உலகப் பொருளாதாரத்தில் ஒரு புதிய சரிவு

Nick Beams
27 October 2012
Back to screen version

பல நாடுளில் ஆழ்ந்த பொருளாதார மந்தநிலை இணைந்தவகையில்  உலகப் பொருளாதாரம் ஒரு புதிய நிதியக் கொந்தளிப்பினுள் நுழைய உள்ளதற்கான அதிகரித்துவரும் அடையாளங்கள் காணப்படுகின்றன.

அமெரிக்க முதலீட்டு வங்கி லெஹ்மன் பிரதர்ஸ் சரிவை அடுத்து 2008ம் ஆண்டு ஆரம்பித்த உலகப் பொருளாதாரச் சரிவிற்குப் பின் உடனடியாக உலகம் முழுவதும் இருக்கும் அரசாங்கங்கள் பெருகிய முறையில் நிதிய முறை முற்றிலும் சரிவடைவதைத் தடுக்க டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கடனாக எடுத்துக் கொண்டன. 20 நாடுகளின் குழுவின் (Group of 20) நடைபெற்ற கூட்டங்கள் முற்றிலும் 1930களில் நிலவிய சூழலுக்குத் திரும்பமாட்டோம் என்ற உறுதிமொழிகளின் மேலாதிக்கத்தைக் கொண்டிருந்ததுடன் வரலாற்றிலுருந்து படிப்பனைகளை கற்கப்பட்டுவிட்டன என்ற உத்தவரவாதங்களும் கொடுக்கப்பட்டன. 

கூடுதலான அரசாங்கச் செலவுகள் மந்த நிலைகளைச் சமாளிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று 1930களில் கூறிய பிரிட்டிஷ் பொருளாதார வல்லுனர் ஜோன் மேனார்ட்ஸ் கீன்ஸுடைய எழுத்துக்கள் திடீரென நடைமுறைக்கு வந்தன. ஆனால் ஜூன் 2010ல் ஒரு தீவிர திருப்பம் ஏற்பட்டது. அப்பொழுது G20 சிக்கனத்திற்குத் திரும்புதல் என்பதை ஆரம்பித்து, நிதிய ஸ்திரப்படுத்தல் சுமத்தப்பட வேண்டியதின் தேவையை வலியுறுத்தியது. இத்திட்டத்தின் சாராம்சம் வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை அரசாங்கச் செலவுகளில். குறிப்பாக சமூகநலச்செலவுகளில் பாரிய வெட்டை ஏற்படுவதின் மூலம் திரும்பப் பெறுதல் என இருந்தது.

ஆனால் இத்திட்டம் பொருளாதார வளர்ச்சியில் ஒரு சுருக்கத்தைக் கொண்டுவந்து, பெருநிறுவனங்களுக்கு குறைவான இலாபத்திற்கான வாய்ப்புக்களைத்தான் கொடுத்தது. இந்த நிலைமையை எதிர்கொண்ட அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு கூடியளவு பணத்தை அச்சடித்துவிடுதல்” (Quantitative Easing) என்னும் கொள்கையைத் தொடக்கியது. இதன்மூலம் வங்கிகளுக்கும் நிதிய நிறுவனங்களுக்கும் வரம்பில்லாமல் பணம் கொடுத்தலாகும். உலகெங்கிலும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை மிக அதிகமாகக் குறைத்தன, அதைத்தொடர்ந்து அவற்றின் சொந்த கூடியளவு பணத்தை அச்சடித்துவிடுதல்” (QE) ஐக் கொண்டு வந்தன. உண்மைப் பொருளாதாரம் தேக்கமடைந்த சூழலில், இந்த நடவடிக்கைகள் நிதியச் சொத்துக்களின் மதிப்பிற்கு ஏற்றம் கொடுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தன; இதனால் நிதிய நிறுவனங்கள் ஊக வணிக இலாபங்களை அடைய புதிய வாய்ப்பை கொடுத்தது.

கூடியளவு பணத்தை அச்சடித்துவிடுதல் திட்டமும் அதன் ஒப்பான நடவடிக்கைகளும் உலக மந்த நிலை மீண்டும் வருவதைத் தடுக்கும் ஒரு வழிவகை எனக்கூறப்பட்டாலும் (அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு தலைவர் பென் பெர்னன்கே சமீபத்தில் QE-3  திட்டம் வேலையின்மை அதிகரிப்பதால் ஊக்குதல் பெற்றது எனக் கூறினார்) அவை உண்மைப் பொருளாதாரத்திற்கு ஏற்றம் தருவதற்கு ஏதும் கிட்டத்தட்டச் செய்யவில்லை. அவற்றின் கணிசமான தாக்கம் நிதிய ஊகங்கள் மூலம் இலாபங்களை அதிகரித்தல் என்பதுதான்: இதற்கு மத்திய வங்கிகள் வழங்கிய வட்டிகுறைந்த பணம் உதவியது.

ஆனால் இப்பொழுது உலகப் பொருளாதார நிலைமுறிவில் ஒரு புதிய கட்டம் வரவிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள் உள்ளன. இதில் சமீபத்திய பெருகிய மந்தப் போக்குகள் காணப்படுவதுடன், அதன்விளைவாக மத்திய வங்கிகளின் திட்டம் குறைவதின் தாக்கமும் காணப்படுகிறது.

கூடியளவு பணத்தை அச்சடித்துவிடுதலினால் ஏற்றம் பெற்ற அமெரிக்க பங்குச் சந்தை நிறுவனங்களின் விற்பனை, இலாபங்களில் சரிவு என்ற அறிக்கைகளை ஒட்டி மீண்டும் சரியத் தொடங்கிவிட்டன. அதே நேரத்தில் இன்னும் கூடுதலான வேலை வெட்டுக்கள் பற்றிய அறிவிப்புக்களும் வந்துள்ளன. இந்த வாரம் அமெரிக்க நிறுவனங்கள் உலகத் தேவைக் குறைப்பை சுட்டிக்காட்டி ஐரோப்பாவில் தொடர்ந்து இருக்கும் நிதிய நெருக்கடி தோற்றுவிக்கும் அச்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளன.

Dow Chemical தான் 2,400 வேலைகளை அகற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. இது அதன் உலகத் தொழிலாளர் தொகுப்பில் 5% ஆகும். 20 ஆலைகளைத் தான் மூட இருப்பதாகவும், முதலீட்டுச் செலவுகளை $500 மில்லியன் குறைக்க இருப்பதாகவும் கூறியுள்ளது. இதற்கு அண்மைக்காலத்தில் மெதுவான வளர்ச்சிச்சூழல் இருப்பதுதான் காரணம் என்றும் கூறியுள்ளது. அமெரிக்க இரசாயனக் குழுவில் மிகப் பெரிய நிறுவனமான Du Pont 1,500 பணிநீக்கங்களை அறிவித்துள்ளதுடன், மூன்றாம் காலாண்டில் நஷ்டத்தையும் காட்டியுள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தீவிர விற்பனைச் சரிவை அது சுட்டிக்காட்டியுள்ளது. அங்கு மொத்த விற்பனை ஓராண்டிற்கு முன் இருந்ததைவிட 10% குறைந்துவிட்டது. இது புதிதாகவரும் சந்தைகள் எனப்படுபவை உலகத் தேவைக்கு மாற்றீட்டு வளங்களை அளிக்கும் என்ற கூற்றிற்கு அடியை கொடுக்கிறது.

மொத்தத்தில் அமெரிக்கப் பெருநிறுவன இலாபங்களும், வருமானங்களும் 2009 ஆரம்பித்து முதல் தடவையாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் பற்றிய சமீபத்திய தகவல்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மூன்றாம் காலாண்டில் 2% ஆண்டு விகிதம் என்றுதான் வளர்ந்தது எனக் காட்டுகின்றன. இது வேலைத் தரங்களை பாதுகாப்பதற்குத் தேவையானவற்றை விட மிகவும் குறைந்தது ஆகும். பாதுகாப்புத் துறையில் செலவுகள் கூடியிருப்பதின் விளைவு இல்லை என்றால், இந்த எண்ணிக்கை சந்தை எதிர்ப்பார்ப்புக்களைவிடக் கணிசமாக குறைவாக இருந்திருக்கும்.

அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தித் தகவல் குறித்த மிக முக்கியமான கூறுபாடு முதலீட்டுச் செலவு பற்றி உள்ளது. இது தொடர்ந்து சரிந்து காலாண்டிற்கு மொத்த வளர்ச்சி விகிதம் 0.1% என்றுதான் இருக்கிறது. அதே நேரத்தில் ஏற்றுமதிகள், இறக்குமதிகள் இரண்டுமே சரிந்து, 0.2 சதவிகிதப் புள்ளிகள் இழக்கப்பட்டுவிட்டன.

மத்திய வங்கியாளர்கள் தொடர்ந்து நிதியச் சந்தைகளில் பணத்தை உட்செலுத்துகையில், இந்த நடவடிக்கைகள் சுற்றி இருக்கும் நிலைமையை மாற்ற ஏதும் செய்யாது. இந்தவாரம் ஒரு முக்கிய உரையில், இங்கிலாந்து மத்திய வங்கியின் மேர்வின் கிங் நிதி வழங்குவதில் ஏற்படும் ஒவ்வொரு அதிகரிப்பும் உண்மைப் பொருளாதாரத்தில் கீழ்நோக்கி செல்லும் பாதிப்பைத்தான் கொண்டுள்ளது என்றார்.

இவருடைய எச்சரிக்கை வரலாற்றுப் போக்குளால் உறுதியாக்கப்படுகின்றன. பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில் நிதியப் பகுப்பாய்வாளர் சத்யஜித் தாஸ் 2001 க்கும் 2008க்கும் இடையே உயரும் மதிப்புடைய வீடுகள் மீது கடன் வாங்கியது அமெரிக்க வளர்ச்சியில் அரைப்பகுதிக்கு பங்களித்தது என்று சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் தொடரும் கடன்வாங்குதல்கள்தான் வளர்ச்சியை நீடிக்கத் தேவைப்படும். இது 1950களில் இருந்த 1 டாலர் வளர்ச்சிக்கு 2 டாலர் என்பதுடன் ஒப்பிடுகையில் 2008 களில் 1 டாலர் வளர்ச்சிக்கு 4 முதல் 5 அமெரிக்க டாலர் கடன் தேவைப்பட்டது.  சீனாவிற்கு இப்பொழுது 1 டாலர் வளர்ச்சிக்கு 6 முதல் 8 அமெரிக்க டாலர் கடன் தேவைப்படுகிறது. இது 15-20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையான 1 டாலர் இல் இருந்து 2 டாலர் என்பதில் இருந்து அதிகரித்துவிட்டது.

2009ல் நடந்த G20 கூட்டங்களில் அரசாங்கத் தலைவர்கள் 1930களில் இருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்பதல் இருக்காது என வலியுறுத்தினர். அத்தகைய நடவடிக்கைகள் உலக வணிகத்தில் பேரழிவு தரும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால் கூடியளவு பணத்தை அச்சடித்துவிடுதல் (QE) திட்டம் என்பது பெருமந்த நிலைக்காலத்தில் இருந்த உங்கள் அண்டை நாட்டவரைப் பிச்சைக்காரராக ஆக்குங்கள் என்ற கொள்கையின் 21ம்நூற்றாண்டுப் பதிப்பைத்தான் கொடுத்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பில் இருந்து வெள்ளமென வந்த பணம் அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைத்து, அதன் போட்டியாளர்களின் ஏற்றுமதிச் சந்தைகளையும் தாக்கியது. இது நாணயப் போர்களின் அதிகரிப்பிற்கு இட்டுச்சென்றது. ஏனெனில் நாடுகள் தங்கள் நிலைமையை தக்க வைத்துக் கொள்ள முயன்றன.

மேலும் தாமதமான பொருளாதார வளர்ச்சி சூழலில் நிதியச் சொத்துக்களுக்கு ஏற்றம் கொடுப்பது 2008ல் இருந்த உடைவு நிலைமைகளை விட மோசமான அளவில் தூண்டிவிட்டதைப் போல்தான் உள்ளது. இதற்குக் காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை போல் இல்லாமல், மத்திய வங்கிகளே இப்பொழுது நிதியச் சந்தைகளில் பெரிதும் ஈடுபட்டுள்ளன. சந்தைச் சரிவை ஒட்டி பாரிய நிதிகளை இழக்க உள்ளன.

மத்திய வங்கியாளர்களும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் அவர்களுடைய நடவடிக்கைகள் வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும், குறைந்தப்பட்சம் அவை 1930களின் நிலைமை மீண்டும் வராமல் தவிர்த்துக் கொண்டுவிட்டன என்று கூறுகின்றனர். இக்கூற்றுக்கள் ஸ்பெயின், கிரேக்க நிலைமைகளால் தவறாகிறது. இந்நாடுகளில் வேலையின்மை ஏற்கனவே 1930 தரத்தை ஒட்டித்தான் உள்ளது.

மேலும் ஒரு வரலாற்று முன்னோக்கிலிருந்து பார்க்கும்போது, இவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்வது சற்றே காலத்திற்குமுற்பட்ட நிகழ்வுதான். 1914ல் முதல் உலகப் போர் வெடித்தபின் ஆரம்பித்த உலகளாவிய முதலாளித்துவ நிலைமுறிவு ஏற்படுத்திய நிதிய மற்றும் பொருளாதாரக் கொந்தளிப்பின் பத்தாண்டுகளுக்குப் பின்தான் பெருமந்த நிலை தோன்றியது.

இம்முறை முதலாளித்துவ நிலைமுறிவு என்பது நிதிய நெருக்கடியுடன் ஆரம்பித்துள்ளது. அது இப்பொழுது உலகப் பொருளாதாரத்தில் ஆழ்ந்த சுருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு முந்தைய காலத்தில் தமது ஆளும் உயரடுக்கினர் இருந்ததைப் போலவே, தற்போதைய ஆளும் உயரடுக்குகளும் இலாபமுறை நெருக்கடி என்ற வரலாற்று ரீதியான நெருக்கடிக்கு உரிய விடைகளைக் கொண்டிருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சமூக எதிர்ப்புரட்சி, இராணுவவாதம் மற்றும் சர்வாதிகார ஆட்சிவகைகள்தான் அவர்களிடமுள்ள பதிலாகும்.

எனவே முற்றுப்பெற்றது என்பதற்கு முற்றிலும் மாறாக, உலகப் பொருளாதார நெருக்கடி இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளது. தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்துடன், திவாலாகிவிட்ட முதலாளித்துவ இலாபமுறையை தூக்கியெறிவதற்கும், வங்கிகள் பெரிய நிறுவனங்களை பொதுச் சொத்துடமைக்குள் கொண்டுவருவதற்கும் திட்டமிட்ட உலக சோசலிசப் பொருளாதாரத்தை நிறுவுவதற்குமான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்யவேண்டும்.