World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greece: French Left Front backs SYRIZA’s appeal to the banks

கிரேக்கம்: பிரான்ஸின் இடது முன்னணி சிரிசா வங்கிகளுக்கு விடுத்துள்ள முறையீட்டிற்கு ஆதரவு அளிக்கிறது

By Antoine Lerougetel
25 May 2012

Back to screen version

கடந்த மாத பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் இடது முன்னணியின் (FG), வேட்பாளராக இருந் Jean-Luc Mélenchon திங்களன்று கிரேக்கத்தின் தீவிர இடது கூட்டணி (சிரிசா) தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸுடன் பாரிஸில் பேச்சுக்களை நடத்தினார்.

சிப்ரஸுக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோசலிஸ்ட் கட்சியை (PS) சேர்ந்த பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்டிற்கும் இடையே அரசியலில் இடைத்தரகராக இருப்பதுதான் மெலென்சோனின் பணி ஆகும். முன்னாள் PS மந்திரியான மெலென்சோன், ஹாலண்டிற்கு ஆதரவைக் கொடுத்திருந்தார்; பிந்தையவர் வரவு-செலவுத் திட்ட குறைப்புக்கள் தேவை, மற்றும் இலக்கு வைக்கப்படும் நிதிய உதவிகளில் வளர்ச்சிக் கூறுபாடு முக்கிய வங்கிகளுக்கும் தொழல்களுக்கும் தேவை எனப் பிரச்சாரம் செய்திருந்தார்.

சிப்ரஸின் ஐரோப்பியப் பயணம் பற்றிச்  செய்தி ஊடகங்கள் கொடுக்கும் தகவல்களில் இருந்து தெளிவாகத் தெரிவது போல், சிரிசாவும் ஹாலண்ட் போன்ற முன்னோக்கையே தளமாகக் கொண்டுள்ளது. மே 6ம் திகதி நடைபெற்ற கிரேக்கத் தேர்தல்களில் சிரிசா இரண்டாம் இடத்தைப் பிடித்தது; ஆனால் அந்நாட்டில் அரசாங்கம் அமைக்கப்படமுடியவில்லை, தற்பொழுது ஜூன் 17 நடக்கவிருக்கும் தேர்தல்களில் கருத்துக் கணிப்புக்களில் அது முன்னணியில் உள்ளது. மெலென்சோன் மற்றும் ஜேர்மனிய இடது கட்சி அதிகாரிகளைப் பேர்லினில் சந்திக்க அக்கட்சி சிப்ரஸை அனுப்பியுள்ளது; அதன் தற்போதைய கிரேக்க சிக்கன நடவடிக்கைகள் பற்றிய குறைகூறல்கள் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்கவில்லை என்ற உத்தரவாதங்களைக் கொடுப்பதற்காக அவர் வந்துள்ளார். (See: “The pseudo-left unmasked in Greece)

சோசலிஸ்ட் கட்சி, சிப்ரஸை நேரடியாகச் சந்திக்க மறுத்துவிட்டது; அவர் இன்னும் ஒரு அரசாங்கத் தலைவராக இல்லை என்பது காரணமாக இருக்கலாம். மாறாக, சிப்ரஸுடன் நேரடியாகப் பேசும் பணி மெலென்சோன் மற்றும் இடது முன்னணிக்குக் கொடுக்கப்பட்டது; இக்கட்சிதான் சிப்ரஸ் உரை ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; அக்கூட்டத்திற்கு ஒரு சில நூறு இடது முன்னணி உறுப்பினர்கள் வந்திருந்தனர்; இது தேசிய சட்டமன்றக் கட்டிடத்திற்கு முன் நடத்தப்பட்டது; பாரிஸ் நகரிலேயே பெரும் செல்வம் மிக்க பகுதிகளில் இது ஒன்றாகும்.

பேர்லினில் சிப்ரஸ், ஹாலண்ட் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியைத் தோற்கடித்ததற்குப் பாராட்டுத் தெரிவித்தார். சார்க்கோசி ஐரோப்பாவில் சிக்கனக் கொள்கைகளை வடிவமைப்பதற்காக ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலுடன் நெருக்கமாக உழைத்திருந்தார்.

பிரெஞ்சுத் தேர்தலில் நிக்கோலோ சார்க்கோசி தோற்கடிக்கப்பட்டதை அடுத்து ஜேர்மனி-பிரான்ஸ் அச்சில் ஒரு பிளவு ஏற்படக்கூடும் என்ற உயர்ந்த நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புக்களையும் நாங்கள் கொண்டுள்ளோம் என்பது உண்மைதான் என்றார் சிப்ரஸ்.

நீண்ட காலம் முன்பு இடது இயற்றியிருந்த பிரச்சினைகள் இப்பொழுது G8 அளவில் விவாதிக்கப்படுகின்றன; உதாரணமாக யூரோப்பத்திரங்கள், ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து நேரடிக்கடன்கள் போன்ற பிரச்சினைகளாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் (EU), கிரேக்கத்தின் மீது சுமத்தியுள்ள பிணை எடுப்புக்களை மாற்றுவதற்கு பாரிஸிடம் இருந்து சிப்ரஸ் உதவியை நாடுகிறார். ஆனால் அத்தகைய கொள்கை, அதிகப்பட்சம், கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தைப் பேரழிவில் தள்ளியுள்ள சிக்கன நடவடிக்கைகளில் வெறும் வண்ணப்பூச்சுக்களைத்தான் அளிக்கும் என்பது விரைவில் தெளிவாகி வருகிறது.

ராய்ட்டர்ஸிடம் சிப்ரஸ் கூறினார்: பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் அரசாங்கங்கள் எங்கள் நிலைப்பாடு பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எங்களைப் பற்றி ஐரோப்பாவில் கூறப்படுவது நாங்கள் பிரதிபலிப்பதையோ, விரும்புவதையோ அல்ல. ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தின்மீது சுமத்தியுள்ள பிணை எடுப்புக்கள் நன்கு செயல்பட வேண்டுமானால்,  நீண்டகால சீர்திருத்தங்கள் தேவை; அப்பொழுதுதான் கிரேக்கம் அவர்கள் எங்களுக்குக் கொடுக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்க இயலும் என்றார் அவர். ஒபாமா நிர்வாகத்தின் அமெரிக்க சமூகநல வெட்டுக்களை முன்மாதிரியாக அவர் மேற்கோளிட்டார்: அமெரிக்க முன்மாதிரியைப் பின் பற்ற வேண்டும் என்று மேர்க்கெலுக்கு நாங்கள் வலியுறுத்த வேண்டும்.

பிரெஞ்சு செய்தி ஊடகத்திடம் பேசிய மற்ற சிரிசா அதிகாரிகளும் இதே போன்ற கருத்துக்களைத்தான் கூறியுள்ளனர். சிரிசாவின் பிரதிநிதி சோபியா சொகரபா Mediapart இடம் கூறினார்: எங்களுக்குச் சீர்திருத்தங்கள் தேவை, நாடு போட்டித் தன்மையைப் பெற வேண்டும் என விரும்புகிறோம், அரசாங்கம் இன்னும் திறமையுடன் செயல்படவேண்டும் என விரும்புகிறோம்; அப்பொழுதுதான் திறமையான ஆட்சி நீடிக்கும்.

ஆனால் கூறாதது என்னும் உண்மை கிரேக்கப் போட்டித்தன்மைக்கு ஏற்றம் கொடுக்கும் திட்டங்கள், வங்கிகளுக்கு திருப்பிக் கொடுத்தல், அமெரிக்கக் கார்த் தொழில் மறுகட்டமைக்கப்பட ஒபாமா நிர்வாகம் செய்தததைச் செய்வது என்பது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் ஆழ்ந்த வெட்டுக்களைக் கொடுக்கும் என்பதுதான்.

ஆயினும்கூட சிப்ரஸின் வருகை குறித்து மெலென்சோன் ஆர்வத்துடன் ஒப்புதல் கொடுத்துள்ளார். சிப்ரஸ் குறித்துப் பேசுகையில், மெலென்சோன், அப்படியே ஒருமித்த கருத்துக்களை நாங்கள் கொள்ளவில்லை, ஆனால் பல ஒப்புமைகளைக் காணமுடியும். என்றார்.

சிப்ரஸின் வருகையைப் பயன்படுத்திச் சில போலி இடது தோற்றத்தைக் காட்டிக் கொள்ளும் வாய்ப்பை மெலென்சோன் கொண்டுள்ளார். பாரிஸில் இருந்துபோது, சிப்ரஸைச் சந்திக்க மறுத்திருப்பதற்கும், அவரை ஒதுக்கித் தள்ளி வைத்திருப்பதற்கும்  PS ஐ அவர் குறைகூறினார்; பிரெஞ்சுப் பெரு வணிகத்தின் முக்கிய கட்சியான சோசலிஸ்ட் கட்சி சர்வதேச ஒற்றுமை என்ற பெயரில் சந்தித்திருக்க வேண்டும்.... குறைந்தப்பட்சம் இடது ஒற்றுமையாவது நீடிப்பதற்கு என்று அபத்தமாகக் கோரியுள்ளார்.

உண்மையில் மெலென்சோனின் கொள்கைகள் நிதிய மூலதனத்தின் பிரிவுகள், மற்றும் வோல்ஸ்ட்ரீட் கொள்கைகளுடன் இயைந்து உள்ளன. இவை பெரும் பணப்புழக்கக் கொள்கையை விரும்புகின்றன; இதன்படி ஐரோப்பிய மத்திய வங்கி நிறைய யூரோக்களை அச்சடித்து நிதிய நெருக்கடியின்போது வங்கிகளுக்குப் பிணை எடுப்பு அளிக்கும். இக்கொள்கைக்க்கு ஹாலண்ட் தன் தேர்தலைத் தொடர்ந்து ஒப்புதல் கொடுத்தார்; அவருடைய நிர்வாகம் ஜூன் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களுக்கான திட்டங்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது. பார்க்க: பதவியேற்கவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களுக்கும், வங்கிகளுக்கு நிதியங்கள் வழங்குதலுக்கும் சைகை காட்டுகிறார்

ஆனால், சிப்ரஸ் குறிப்பிட்டுள்ளபடி ஐரோப்பாவில் இடதினால் அடையாளம் காணப்பட்டுள்ள இக்கொள்கைகள் கிரேக்கத் தொழிலாளர்களுடன் ஐக்கியம் என்பதுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. பணவீக்கத்தைக் கொடுக்கும் நாணயத்தை அச்சிடுதல் என்பது தொழிலாளர்களின் வாங்கும் திறனைக் குறைப்பதற்குத்தான் உதவும்; அதே நேரத்தில் சமூக சமத்துவமின்மையை அதிகரிக்கும் வகையில் பாரிய நிதிகளை தனியார் வங்கிகளுக்கு கொடுக்கும்; அவைதான் பொருளாதார நெருக்கடிக்கே காரணமானவை. உண்மையில், ஒபாமா நிர்வாகம் கூடுதலான பணவீக்கக் கொள்கையையைத் தொடர்ந்திருப்பது அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்திற்கு சமூகப் பேரழிவைத்தான் ஏற்டுத்தியுள்ளது.

லிபியாமீது குண்டுவீச்சு மற்றும் சிரியாவிற்கு இராணுவ அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்திருந்தாலும்கூட, மெலென்சோன் அமெரிக்காவிடம் இருந்து பிரான்ஸ் தேசியவாத முறையில் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை உடையவர்; ஆனால் அவர் ஆதரவு கொடுக்கும் கிரேக்கத் தலைவரோ ஓரளவிற்கு இந்நிலைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார். சிப்ரஸ் கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் மேற்கோளிடுகிறது: “G8 ற்கு நாங்கள் கொடுக்கும் செய்தி, அமெரிக்க உதாரணத்தை மேர்க்கெல் பின்பற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான்; அமெரிக்காவில் கடன் நெருக்கடி சிக்கன நடவடிக்கைகளினால் சமாளிக்கப்படவில்லை; விரிவாக்க அணுமுறைமூலம்தான் எதிர்கொள்ளப்பட்டது.