சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama hails police state methods in Chicago

சிக்காகோவில் பொலிஸ் அரசாங்க நடைமுறைகளை ஒபாமா பாராட்டுகிறார்

Patrick Martin
22 May 2012
use this version to print | Send feedback

நகரத்தில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு வார கால வன்முறை, ஒடுக்குமுறை, போலிக் குற்றச்சாட்டுக்கள் என சிக்காகோ பொலிஸ் துறையினதும் சிக்காகோ நகரவை அதிகாரிகளின் செயற்பாடுகளையும் திங்களன்று ஜனாதிபதி பாரக் ஒபாமா பாராட்டியுள்ளார்.

நேட்டோ உச்சிமாநாடு முடிந்தபின் உரையற்றிய ஒபாமா அவருடைய அரசியல் ஆதரவாளரும் மற்றும் முன்னாள் வெள்ளை மாளிகை ஊழியர்கள் தலைவரும், தற்போதைய நகரசபை முதல்வர் ரஹ்ம் எமானுவேலுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். எதிர்ப்பாளர்களை சமாளிக்க ஆயிரக்கணக்கான பொலிசை அணிதிரட்டியது பற்றிக் குறிப்பிட்ட அவர், சிக்காகோவின் சிறந்த நிர்வாகிகள் கணிசமான அழுத்தம், நிறைய கண்காணிப்பு இவற்றிற்கு இடையே ஒரு சீரிய பணியை செய்துள்ளனர் என்றார்.

இந்த சீரிய பணி என்ன?

*சிக்காக்கோ நகர மையம நான்கு நாட்களுக்கு முற்றாக மூடப்பட்டது. இது வெள்ளியில் இருந்து திங்கள் வரை; 5,000 பேரை கொண்ட எதிர்ப்பாளர்களால் அல்ல, பொலிஸ், துணை இராணுவப் படை மிகப்பெரியளவில் அணிதிரட்டப்பட்டதாலாகும்.  ஆர்ப்பாட்டக்காரர்களை விட பல நேரமும் இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருந்தது. உச்சிமாடு நடந்த இடமான McCormic Place ஐச் சுற்றிய பகுதி முழுவதும் பிறர் நுழையமுடியாமல் செய்யப்பட்டது.

* அந்த வாரம் முழுவதும் பொலிசார் 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்தனர். இதில் ஞாயிறு மட்டும் கைதுசெய்யப்பட்ட 60 பேர் அடங்கும். அன்று பதட்டங்களை எதிர்கொண்டபோது பொலிசார் ஆப்கானிஸ்தான் மற்றும் பிற ஏகாதிபத்திய இராணுவத் தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தங்கள் தொடர்ச்சியான விரோதப் போக்கை வெளிப்படுத்தினர்.

*ஞாயிறு பிற்பகல் எதிர்ப்பாளர் கூட்டம் வன்முறையுடன் கலைக்கப்பட்டது முற்றிலும் ஒருலைப்பட்சமாக நடந்த நிகழ்வு ஆகும். Chicago Sun-Times என்னும் பொலிசுக்கு வலுவான ஆதரவு கொடுக்கும் பரபரப்புப் பத்திரிக்கை, எதிர்ப்பாளர்கள்மீது பொலிஸ் கலகப்படைப்பிரிவினர் மழையெனத் தாக்குதல் நடத்தினர் என்று தலையங்கமிட்டு தகவல்களைக் கொடுத்தது. தாக்குதல்கள் பரந்தும், பொறுப்பற்ற முறையிலும் மேற்கொள்ளப்பட்டன. செய்தித்தாளின் நிருபர் ஒருவரே இரத்தம்சிந்த நின்றார். குறைந்தப்பட்சம் 25 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமுற்றனர். டஜன் பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் செல்ல நேர்ந்தது. 

*இன்னும் கொடிய முறையில், ஐந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நேட்டோ உச்சமாநாட்டிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தயாரிப்பை நடத்தியதாக ஊகிக்கப்பட்டு பொலிசால் கைது செய்யப்பட்டனர். இரகசியமாக செயல்பட்ட பொலிசார் தாங்கள் கூட்டத்தில் தூண்டிவிட அல்லது பொறியில் வைக்க எவரேனும் அகப்படுவரா என்று சுற்றிவளைத்து திரிந்தபின், அதே இரண்டு தகவல்கொடுப்போரினால் காட்டிக்கொடுக்கப்பட்டு ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

நேட்டோ உச்சிமாநாட்டின்போது உள்நாட்டுப் பயங்கரவாத செயலை செய்ய சதி செய்தது என்ற குற்றச்சாட்டில் இவர்கள் Cook County Circuit Court முன் நிறுத்தப்பட்டனர். இது ஒபாமா நிர்வாகத்தால் திட்டமிடப்பட்ட அமெரிக்க நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலும் மற்ற ஏகாதிபத்தியத் தலையீடுகளிலும் செய்வதை எதிர்ப்பவர்களை அச்சுறுத்த வேண்டுமென்றே நடத்தப்பட்ட நடவடிக்கையாகும்.

கடந்த தசாப்தம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதில் கடைப்பிடிக்கப்பட்ட ஆத்திரமூட்டுதல், போலிக்குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்தல் ஆகியவை இப்பொழுது அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களினதும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன. உலக சோசலிச வலைத் தளம்  தொடர்ச்சியாக எச்சரித்து வந்துள்ளதுபோல், குடியேறுவோருக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக பரிசோதிக்கப்பட்ட வழிமுறைகள் இப்பொழுது அமெரிக்க மக்கள் அனைவரின் மீதும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.

போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்கள் முந்தைய ஆத்திரமூட்டுதல்களின் அடிச்சுவடுகளில் வந்துள்ளன. கடந்த மாதம் கிளீவ்லாந்துப் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டது, இதேபோன்ற போலியாக தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான். கடந்த குளிர்கால ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட பொலிஸ் வன்முறை ஆக்கிரமிப்பு முகாம்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. மற்றும் 2010 இலையுதிர்காலத்தில் மின்னியாபொலிஸ், சிக்காகோ ஆகிய இடங்களில் போர் எதிர்ப்பு நடவடிக்கையாளர்களுக்கு எதிராக அவர்கள் வீடுகளிலும் FBI இனால் சோதனைகள் இவ்வகையில்தான் நடத்தப்பட்டன.

ஒபாமா நிர்வாகம் செயல்படுத்தும் ஜனநாயக உரிமைகளின் மீதான பரந்த தாக்குதல்களில் ஒரு பகுதிதான் இவை. இந்நிர்வாகம் புஷ்ஷின் வெள்ளைமாளிகையைவிட ஒரு படி மேலே சென்று ஒரு பொலிஸ் அரசாங்கத்திற்கு அடித்தளம் அமைக்கிறது. தேசிய பாதுகாப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தில் -National Defense Authorization Act- ஒபாமா கையெழுத்திட்டார். இது ஜனாதிபதிக்கு எந்த விசாரணையும் இன்றி பயங்கரவாத அச்சுறுத்தல் உடையவர் என அவர் கூறுபவரை இராணுவக் காவலில் வைக்கும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. இலக்கு வைக்கப்பட்ட பயங்கரவாதிகள் எனக் கூறப்படுபவரை படுகொலை செய்யும் செயல்களையும் ஒபாமா தீவிரப்படுத்தியுள்ளார். இதில் அமெரிக்க குடிமக்கள் கொலையும் அடங்கும். மேலும் ஜனாதிபதிக்கு அவ்வாறு செய்ய ஒருதலைப்பட்ச உரிமை இருப்பதாகவும் அவர் வெளிப்படையாக வாதிட்டுள்ளார்.

இரு பெருவணிகக் கட்சிகளும் திட்டமிட்டு வழமையாக சட்டமியற்றும் உரிமையை கிழித்தெறிவதுடன், அமெரிக்க மக்களுடைய அரசியலமைப்பு உத்தரவாதம் பெற்ற உரிமைகளை அகற்றுகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றிற்காகப் போராடுகிறது என்று ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி அரசியல்வாதிகள் கூற்றுக்களில் இருக்கும் மோசடித் தன்மையை இந்த வன்முறை நடவடிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன. பரந்த எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் இருக்கும் நாட்டிற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் நடத்தும் போது அல்லது அத்தகைய இருப்புக்களுக்கு அருகே மூலோபாய முக்கியத்துவமான இடங்களை  ஆக்கிரமிக்கவோ அவை இச்சொற்களைப் பயன்படுத்துகின்றன.

தொழிற்துறை வளர்ச்சி அடைந்தநாடுகளில் மிகஅதிகமான போலிசை அமெரிக்கா கொண்டுள்ளது. உள்ளூர், மாநிலப் பொலிஸ், இராணுவம், FBI, CIA, பிற உளவுத்துறை அமைப்புக்கள், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் பல அமைப்புகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் கணக்கில்லாப் படைகள் என்று அனைத்தும் இணைந்த வகையில் பல மில்லியனுக்கு மேலான நபர்களைக் கொண்டுள்ளன.

இறுதி ஆய்வில், இந்தப் பரந்த அடக்குமுறைக் அமைப்பு, அமெரிக்க முதலாளித்துவத்தின் வலிமை என்பதற்கு மாறாக அதன் நெருக்கடிக்குத்தான் சான்றாக உள்ளது. சமூக அழுத்தங்கள் தீவிரமடைகையில், அரசியல் சூழ்நிலை  மாற்றமடைகிறது. எந்தளவிற்கு சலுகை பெற்ற உயரடுக்கை எதிர்த்து தொழிலாளர்களின் வெறுப்புணர்வு அதிகமாகிறதோ அந்தளவிற்கு ஆளும் வர்க்கம் மார்க்ஸும் ஏங்கல்சாலும் அரசின் முக்கிய சாரமாக வர்ணித்த ஆயுதேமேந்திய படைகளால் தன்னை சூழ்ந்துகொள்ள செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றது.

தகவல் கொடுப்போர், ஆத்திரமூட்டுவோர் உள்ளடங்கலாக பொலிசாரின் பங்கு மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் பங்கு ஆகியவை பற்றி சிக்காக்கோ நிகழ்வுகளை ஒரு எச்சரிக்கையாக தொழிலாளர் வர்க்கம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இங்கு தீர்மானகரமான விடயம் என்னவெனில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தெளிவுபடுத்தலும் மற்றும் ஒரு சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களினதும் ஒரு சுயாதீன, வெகுஜன அரசியல் அணிதிரளலின் அபிவிருத்தியுமாகும். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும், தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதற்குப் போராடும் அத்தகைய இயக்கம் ஒன்றுதான், பெருநிறுவன உயரடுக்கு, அதன் அரசியல் காவலர்களான ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் அடக்குமுறை, சர்வாதிகாரம் ஆகியவற்றிற்கான உந்துதலைத் தடுத்து நிறுத்த முடியும்.