WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
India: WSWS team attacked as NLC strike enters second month
இந்தியா NLC வேலைநிறுத்தம் இரண்டாம் மாதத்திற்குள் பிரவேசம் செய்கின்ற நிலையில்
WSWS
குழு தாக்குதலுக்குள்ளானது
By Arun Kumar
22 May 2012
ack to screen version
தென்னிந்திய
மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் நிறுவனத்தில்
(NLC)14,000
ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் இரண்டாம் மாதத்திற்குள் காலடி
எடுத்து வைக்கிறது.
நிரந்தரத்
தொழிலாளர்களுக்கு நிகரான சம ஊதியத்தையும் வேலைவாய்ப்பை
“நிரந்தரம்”
செய்யவும் கோரி
வரும் தொழிலாளர்கள்,
நிர்வாகத்தின்
அச்சுறுத்தல்களையும்,
அவர்களது
போராட்டத்தை “சட்டவிரோதம்”
என அறிவிக்கின்ற
நீதிமன்ற உத்தரவுகளையும்,
மற்றும் போலிஸ்
அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
இந்த
வேலைநிறுத்தம் நீடித்தால் தொழிலாளர்களின் மற்ற பிரிவுகளிலும் இது பரவலான தொழிலக
நடவடிக்கைகளை தூண்டக் கூடும் என்ற அச்சம் அரசாங்க மற்றும் வணிக வட்டங்களில்
நிலவுகிறது.
வேலைநிறுத்தத்தில்
இறங்கியிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவான பேரணிகளில்
NLC
இன் நிரந்தரத் தொழிலாளர்கள்
ஏற்கனவே பங்குபெறத் தொடங்கி விட்டிருக்கின்றனர்.
சென்ற புதனன்று
நெய்வேலியில் நடந்த ஒரு தர்ணாப் போராட்டத்தில் சுமார்
300 தொழிலாளர்கள்
பங்குபற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில்
NLC
தொழிலாளர்களிடையே
பிரச்சாரம் செய்து கொண்டிருந்த
WSWS
செய்தியாளர் குழு ஒன்றினை
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச்
(அஇஅதிமுக)சேர்ந்த
தொழிற்சங்க நிர்வாகிகளும் குண்டர்களும் தாக்கினர்.
போலிஸோ
தாக்கியவர்களைக் கைது செய்யாமல்
WSWS
ஆதரவாளர்களைக் கைது செய்து
மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.
(காணவும்:
”இந்தியாவில்
WSWS
ஆதரவாளர்கள் மீதான
தாக்குதலை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்கிறது”)
மாநிலத்தின்
அஇஅதிமுக அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் பாத்திரத்தை அம்பலப்படுத்துகின்ற ஒரு
துண்டுப் பிரசுரத்தை விநியோகம் செய்வதில் ஈடுபட்டிருந்த
WSWS
ஆதரவாளர்கள் மீதான
இத்தாக்குதல்,
ஒரு காட்டிக்
கொடுப்புக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது என்பதற்கான ஒரு தெளிவான அறிகுறியாகும்.
வேலைநிறுத்தம் செய்யும் போராட்டக்காரர்களை நீக்கி விட்டு புதிய தொழிலாளர்களை
பணியமர்த்தும்படி
NLC
நிர்வாகம் ஒப்பந்ததாரர்களை
வற்புறுத்தியிருக்கிறது.
அதற்கிணங்க
NLC
இன் ஒப்பந்ததாரர்களும்,
ஒப்பந்தத்
தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பத் தவறினால் அவர்கள்
தங்கள் கடமையில்
இருந்து தவறியதாகக் கருதப்பட்டு அவர்களிடத்தில் புதிய தொழிலாளர்கள்
பணியமர்த்தப்படுவர் என்று அறிவித்திருக்கின்றனர்.
அநேக
தனியார் மற்றும் அரசு நிறுவனங்களைப் போலவே
NLC
யும் தனது தொழிலாளர்
படையின் பெரும் எண்ணிக்கையை ஒப்பந்த ஊதிய அடிப்படையிலேயே பராமரித்து வருகிறது.
அவர்களுக்கு
வழங்கப்படும் ஊதியமானது அதே வேலைக்கு நிரந்தரத் தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தில்
ஏழில் ஒரு பங்கு என்கிற அளவுக்கும் கூட குறைவாய் இருக்கும்.
நிரந்தரத்
தொழிலாளர்களுக்கு நிகரான ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளைக் கோரும் ஒப்பந்தத்
தொழிலாளர்களின் கோரிக்கைகளை
NLC
நிர்வாகம்,
நிறுவனத்தின் இலாபம்
பாதிக்கும் என்பதால்,
பிடிவாதமாக
எதிர்த்து வருகிறது.
NLC
இல்
போராடி வருவோர் முகம் கொடுக்கும் மிகப் பெரிய முட்டுக்கட்டை தொழிற்சங்கங்கள் தான்.
ஒப்பந்தத்
தொழிலாளர்கள் முகம் கொடுத்து வரும் கொத்தடிமை வேலை நிலைமைகளுக்கு எதிராய் பெருகி
வரும் எதிர்ப்பை மட்டுப்படுத்தும் ஒரு முயற்சியிலேயே,
ஸ்ராலினிச இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி(CPI)உடன்
இணைந்த தொழிற்சங்கமான
AITUC
வேலைநிறுத்தத்திற்கு
அழைத்தது.
எப்படியிருப்பினும்,
AITUCயும்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(CPM)உடன்
இணைந்த CITU
வும் தொழிலாளர்களைத்
திட்டமிட்டு தனிமைப்படுத்தியுள்ளன.
NLC
இன் நிரந்தத் தொழிலாளர்கள்
வேலையை நிறுத்திப் போராடுவதற்கு எந்த அழைப்பையும் விடுக்காத இந்த ஸ்ராலினிச
தொழிற்சங்கங்கள் இதன்மூலம் நிர்வாகம் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்கு உறுதியூட்டி
நிற்கின்றன.
வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆதரவாய் அஇஅதிமுக அரசாங்கம் தலையீடு
செய்யும் என்பதான ஆபத்தானதொரு பிரமையை
AITUC
மற்றும்
CITU
தொழிற்சங்கங்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.
சென்ற வியாழனன்று
ஒரு பேரணியில் உரையாற்றிய
CPI
இன் நாடாளுமன்ற
உறுப்பினரும்
AITUC இன் தலைவருமான
குருதாஸ் குப்தா,
ஒப்பந்தத்
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எல்லா தொழிற்சங்கங்களின் ஆதரவும்,
எல்லா அரசியல்
கட்சிகளின் ஆதரவும்,
அத்துடன்
“தமிழ்நாட்டின்
மாநில அரசாங்கத்தின் நல்லபிப்ராயமும்”
கிட்டியிருப்பதாக
மோசடியாய் அறிவித்தார்.
ஸ்ராலினிசக்
கட்சிகள் அஇஅதிமுக உடன் வைத்துக் கொண்ட சந்தர்ப்பவாதக் கூட்டணிகளுக்கு முலாம்
பூசுவதற்குத் தான் மாநில அரசாங்கத்தின்
“நல்லபிப்ராயம்”
குறித்த இந்த
உபதேசம்.
CPI
மற்றும்
CPM ஆகிய இரண்டு
கட்சிகளுமே 2011
ஆம் ஆண்டு நடந்த
மாநிலத் தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி வைத்து அக்கட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு
ஆதரவளித்தன.
ஆயினும்
அஇஅதிமுக அரசாங்கமோ
“சட்டவிரோதம்”
என்பதாக
அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு வேலைநிறுத்தத்திற்கு எதிராக போலிசை அமர்த்தி பெரும்
கூட்டமான கைதுகளுக்கு கொண்டு சென்றுள்ளது.
அஇஅதிமுக,
2003 இல்,
வேலைநிறுத்தம் செய்த
சுமார் 200,000
அரசாங்க ஊழியர்களை
வேலையிலிருந்து அகற்றி அவர்களுக்குப் பதிலாக தற்காலிகத் தொழிலாளர்களைப்
பணியமர்த்திய இழிபுகழ் பெற்றதாகும்.
அஇஅதிமுக
தொழிற்சங்கம் “நடுநிலை”
வகிப்பதாகக் கூறிக்
கொண்டு தற்போதைய NLC
வேலைநிறுத்தத்திற்கு
உத்தியோகபூர்வமான ஆதரவை வழங்க மறுத்து வந்துள்ளது.
ஆயினும்
தாஸ் குப்தாவோ
“ஒரு விரைவான
மற்றும் சுமூகமான தீர்வினைக் காணும் வகையில்”
இந்த விடயம்
குறித்து மத்திய அரசாங்கத்துடன் பேச தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு
விண்ணப்பம் செய்தார்.
நிலக்கரித் துறை
அமைச்சரான ஸ்ரீபிரகாஷ் ஜஸ்வாலையும் புது டெல்லியில் இருமுறை சந்தித்த தாஸ் குப்தா
இப்பிரச்சினையைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு அவரிடம் கோரினார்.
ஆயினும்
NLC
க்கு உரிமையாளரான மத்திய
அரசாங்கம்,
தொழிலாளர்களின்
நலன்களைப் பலிகொடுத்து இலாபத்தை அதிகப்படுத்துவதில்,
NLC
நிர்வாகத்தின் அதே அளவுக்கு
முனைப்புடன் செயல்படுகிறது.
வெற்று
போர்க்கோல விண்ணப்பங்களின் மூலமாக தொழிற்சங்கங்களின் பாத்திரத்தை மூடிமறைப்பதற்கு
தாஸ்குப்தா முனைந்தார்.
பசியால் செத்தாலும்
சரி வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் போராட்டத்தில் தளர்ந்து விடக் கூடாது
என்று அவர் அறிவித்தார்.
“கோரிக்கைகள்
நிறைவேறும் வரை தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் அத்துடன்
மாவட்ட அளவிலான ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்ய வேண்டும் மற்றும்
கிராமங்களுக்கும் சென்று ஆதரவு திரட்ட வேண்டும்”
என்று அவர்
தொழிலாளர்களிடம் கூறினார்.
அதே
சமயத்தில் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருகின்ற ஒரு உடன்பாட்டுக்கு
தொழிற்சங்கம் தயாராய் இருப்பதையும் இந்த
AITUC
தலைவர் சூசகம் செய்தார்.
”நாங்கள் வீம்பு
செய்பவர்கள் அல்ல”
என்று அறிவித்த அவர்,
“நாங்கள்
பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம்.
ஆனால்
NLC
நிர்வாகம் தான்
பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைக்கும் விருப்பமின்றி இருக்கிறது”
என்றார்.
சம வேலைக்கு சம
ஊதியம் என்று கேட்பதற்குப் பதிலாய்,
நிரந்தரத்
தொழிலாளர்களில் கீழ் அடுக்கில் இருக்கும் தொழிலாளர்களுக்கு,
அதாவது துப்புரவுத்
தொழிலாளர்கள் போன்ற ஊழியர்களுக்கு நிகரான ஊதியத்தை,
ஒப்பந்தத்
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதாய் அவர் அறிவித்தார்.
இந்த
நிலைமைகளின் கீழ் தான்,
NLC
தொழிலாளர்கள்
“அரசியல்ரீதியாகவும்
அமைப்புரீதியாகவும் தொழிற்சங்கங்கள் மற்றும் இடது கட்சிகளில் இருந்து முறித்துக்
கொண்டு அவர்கள் தங்களது போராட்டத்தை ஒப்பந்தத் தொழிலாளர் முறை மற்றும் வறுமை
ஊதியங்களுக்கு எதிரான ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கத்தின் தாக்குதலுக்கு
தாக்குமுனையாக ஆக்குவதற்கு அழைப்பு விடுக்கும்”
ஒரு துண்டுப்
பிரசுரம்(காணவும்:
“இந்தியா:
வேலைநிறுத்தத்தில் இறங்கியிருக்கும்
NLC
ஒப்பந்தத்
தொழிலாளர்கள் போராட்டத்தை தொழிற்துறைரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் விரிவுபடுத்த
வேண்டும்”
)
விநியோகிக்கப்படுவதை தடுக்கும் முயற்சியில் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர் குழு
மீதான தாக்குதல் நடந்தது.
WSWS
வசம்
பேசிய NLC
தொழிலாளர்கள்,
செய்தியாளர் குழு
மீது நடத்தப்பட்ட தாக்குதலையும்,
போலிசின் கைது
நடவடிக்கையையும்,
வலதுசாரி தினமலர்
இதழில் உலக சோசலிச வலைத் தளத்திற்கு எதிராய் வெளியான அவதூறுக் கட்டுரையையும்
கண்டனம் செய்தனர்.
ஒரு ஒப்பந்த
தொழிலாளியான சாமி தெரிவித்தார்:
“நான் அங்கே
இருந்திருந்தால் உங்களைத் தாக்கிய நபர்களைத் தட்டிக் கேட்டிருப்பேன்.
உங்களது துண்டுப்
பிரசுரத்தில் மாநில அரசாங்கத்திற்கு எதிராய் நீங்கள் என்ன விமர்சனங்களை
எழுப்பியிருந்தாலும் சரி உங்களை தாக்கியது தவறு.
அதிகாரத்திற்கு
வரும் முன்பாக அவர்கள்
[அஇஅதிமுக]
ஏராளமான
வாக்குறுதிகளை அளித்தனர்,
ஆனால் அந்த
வாக்குறுதிகளை எல்லாம் அவர்கள் ஏன் நிறைவேற்றவில்லை?”
“எங்களது
வழக்கமான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மற்றும் கைதாகுபவர்களின் எண்ணிக்கை
குறித்து தப்புத் தப்பாக செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சானல்கள் மற்றும் ஊடகங்கள்
குறித்தெல்லாம் இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
உதாரணமாக,
3000 பேர் கலந்து
கொண்ட ஒரு ஆர்ப்பாட்டத்தைக் குறித்த ஒரு செய்தியில் வெறும்
500 பேர் மட்டுமே
கலந்து கொண்டதாக கூறப்பட்டிருந்தது.
நீங்கள் எங்கள்
போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட சென்னையில் இருந்து வந்திருக்கிறீர்கள்.”
குண்டர்
ஒருவரின் தாக்குதலில் இருந்து ஒரு
WSWS
ஆதரவாளரைப் பாதுகாக்கும்
பொருட்டு தலையிட்ட ஒரு இளம் ஒப்பந்தத் தொழிலாளியான செந்தூரன் விளக்கினார்:
”அவரைக் காப்பாற்ற
முயற்சித்தேன்,
ஆனால் அந்தத்
தொழிற்சங்கத் தலைவர்கள் வலுமிஞ்சியவர்களாய் இருந்தனர்.
இந்த சம்பவம் எனக்கு
மிகுந்த வருத்தத்தைத் தந்தது.
உடனடியாக தர்ணா
நடந்த இடத்திலிருந்து சென்று இந்த சம்பவம் குறித்து இணையத்தில்
WSWS
க்கு தகவல் தெரிவித்தேன்.
NLC
ஒப்பந்தத் தொழிலாளர்களிடம்
நேர்காணல் செய்து ஏற்கனவே
WSWS
இல் வந்திருந்த முந்தைய
கட்டுரையை நான் படித்திருக்கிறேன்.
எனது நண்பர்களில்
ஒருவருக்கு அந்தக் கட்டுரையின் அச்சுப் பிரதியை நான் அளித்தேன்.”
சம்பவம்
சடுதியில் நடந்து முடிந்து விட்டது,
அத்துடன்
WSWS
ஆதரவாளர்களை போலிஸ் உடனே
சம்பவ இடத்தில் இருந்து கொண்டு சென்று விட்டது என்பதால் போராட்டத்தில் இருந்த பல
தொழிலாளர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்று செந்தூரன் கூறினார்.
நிரந்தர
ஊழியர் ஒருவர் கூறினார்:
“அவர்கள் உங்களைத்
தாக்கியது தவறு.
இது ஒரு மிக மோசமான
சம்பவம்.”தினமலர்
கட்டுரை குறித்துக் கூறுகையில் அவர் சொன்னார்:
“இது உங்கள் மீது
சேறிறைப்பதற்கு நடந்த ஒரு திட்டமிட்ட முயற்சி.
உங்கள் பெயர் அடையாள
விவரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளதால்,
அஇஅதிமுக நபர்கள்
உங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு உங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.”
மதுரா என்ற
போராட்ட பெண் ஆர்வலர் ஒருவரும் தினமலர் செய்தி குறித்து கருத்துத் தெரிவித்தார்:
“உங்களை
‘மர்ம நபர்கள்’
என்றும்
உங்களுக்குத் ‘தீவிரவாதிகளுடன்’
தொடர்பு
இருப்பதாகவும் அவர்கள்
[போலிஸ்]
நினைத்தால் உங்களை
போலிஸ் நிலையத்தில் இருந்து செல்வதற்கு அவர்கள் விட்டிருப்பார்களா.
இதை நீங்கள் சும்மா
விடக் கூடாது.
இந்த அவதூறுகளுக்கு
எதிராக நீங்கள் போராட வேண்டும்.
இந்த அவதூறுகளுக்கு
பொருத்தமானதொரு பதிலடியுடன் நீங்கள் இங்கு மீண்டும் வர வேண்டும்,
நீதிக்கான உங்கள்
போராட்டத்தை நான் ஆதரிப்பேன்.”
|