World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greece The program of Syriza

கிரேக்கம்: சிரிசாவின் வேலைத் திட்டம்

By Christoph Dreier and Peter Schwarz
19 May 2012

ack to screen version

தீவிர இடதின் கூட்டணி (சிரிசா) தற்பொழுது கிரேக்க அரசியலில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறது. மே 6 நடந்த தேர்தல்களில் இந்த அமைப்பு மொத்த வாக்குகளில் 17% ஐப் பெற்று இரண்டாம் பெரிய கட்சியாக வெளிப்பட்டது. பின்னர் அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தன; இதற்குக் காரணம் சிரிசா முன்னாள் ஆளும் கட்சிகளாக இருந்த புதிய ஜனநாயகம் ND,  மற்றும் PASOK உடன் கூட்டணி சேர மறுத்ததுதான்.

கருத்துக் கணிப்புக்களின்படி, ஜூன் 17ம் திகதி நடக்க இருக்கும் புதிய தேர்தலில் சிரிசா முதல் இடத்தில் வரக்கூடும். கிரேக்கத் தேர்தல் சட்டத்தின்படி, மிக அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு 50 கூடுதலான இடங்கள் அளிக்கப்படுகின்றன; எனவே சிரிசா இல்லாமல் அரசாங்கம் ஒன்றை அமைப்பது கிட்டத்தட்ட இயலாததாகிவிடும். இதன் தலைவர் 38 வயது அலெக்சிஸ் சிப்ரஸ் கிரேக்கத்தின் அடுத்த பிரதம மந்திரியாகக்கூடும்.

சிரிசாவின் தேர்தல் வெற்றி நாட்டை ஆழ்ந்த மந்த நிலையில் தள்ளி, அதன் மக்களை வேலையின்மை, வறுமையில் ஆழ்த்திட்ட சிக்கன நடவடிக்கைகளை அது நிராகரித்துள்ளதைத் அடித்தளமாக கொண்டதாகும். ஓய்வூதியங்கள், ஊதியங்கள் இவற்றில் குறைப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், அரசாங்கச் சொத்துக்களை விற்பது நிறுத்தப்பட வேண்டும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் IMF உடன் உடன்பாடு காணப்பட்டிருக்கும் அரசாங்கக் கடன் திருப்பியளித்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும், மறு பேச்சுக்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கட்சி கோருகிறது. சிரிசாவின் பாராளுமன்றப் பிரதிநிதி Despoina “Charalambidou, முக்கூட்டுடனான உடன்பாடுகள் உடனே அகற்றப்பட வேண்டும். மீட்கும் திட்டம் கிரேக்க மக்களை வறுமை, வேலையின்மை என்பவற்றில் தள்ளி மக்களை வேறு இடங்களுக்குச் செல்ல வைத்துள்ளது. சாதாரணத் தொழிலாளர்கள் ஒன்றும் கடனை வாங்கிவிடவில்லை; இவற்றின் சுமை அவர்கள்மீது ஏற்றப்படக்கூடாது என்று Spiegel Online இடம் கூறினார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தையோ, அதன் நிறுவனங்களையோ சிரிசா வினாவிற்கு உட்படுத்தவில்லை; அதே போல் கிரேக்க அரசாங்கத்தையோ, அதன் முதலாளித்துவ அஸ்திவாரங்களையோ வினாவிற்கு உட்படுத்தவில்லை. சிரிசாவில் இலக்கு தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் அடிப்படையில் சமூகத்தை சோசலிச வகையில் மாற்ற வேண்டும் என்பது இல்லை; மாறாக சிக்கன நடவடிக்கைகளின் விளைவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மத்தியதர வகுப்பின் உயர்மட்டம் மற்றும் கிரேக்க முதலாளித்துவத்தின் பிரிவுகள் ஆகியவற்றிற்கு நல்ல சூழலை ஏற்படுத்துவது என்றுதான் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறித்துக் கொள்ள விரும்பவில்லை, எச்சூழலிலும் யூரோவில் இருந்து நீங்கவில்லை என்று வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம் சிப்ரஸ் வலியுறுத்துகிறார். புதன் அன்று CNN   இடம் அவர் கூறினார்: இத்திசையில் நாம் இயன்றதைச் செய்வோம், கிரேக்கத்தை யூரோப்பகுதிக்குள் வைப்போம், ஐரோப்பாவிற்குள் இருத்துவோம்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், யூரோப்பகுதிக்குள் தொடர்ந்து இருப்பதில் ஆர்வம் உடைய PASOK, ND இரண்டும் இதற்காக மிக அதிக விலை கொடுத்து விட்டன என்று சிப்ரஸ் நம்புகிறார். ஏதென்ஸ் இன்னும் சில தந்திரோபாயங்களைக் கையாண்டு பிரஸ்ஸல்ஸ், பேர்லினுடன் நல்ல ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.

முதலாவதாக, நிதியத்துறையில் நலிந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் சமூக ஜனநாயக அரசியல் வாதிகளின் ஆதரவை அவர் நம்புகிறார்குறிப்பாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டை; ஐரோப்பிய ஒன்றியத்தின், ஜேர்மனியால் மிகவும் வலியுறுத்தப்படும் தற்பொழுதைய பணத்தட்டுப்பாடு நிதியக் கொள்கைகளை மாற்றுவதற்கு. மேலும் அவர் ஒரு பணவீக்கக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்கிறார். இரண்டாவதாக, அவர் ஐரோப்பிய ஒன்றியத்தை கிரேக்கத் தேசிய திவால் என்றும் அச்சத்தின்மூலம் அழுத்தம் கொடுக்க முற்படுகிறார்; இது மற்ற நாடுகளையும் யூரோவையுமே பெரும் பள்ளத்தில் ஆழ்த்திவிடக்கூடும்.

மேலே மேற்கோளிடப்பட்டுள்ள CNN சர்வதேச நிருபர் குழுத் தலைவர் Christine Amanpour க்குக் கொடுத்த பேட்டியில் இந்த மூலோபாயத்தை சிப்ரஸ் விரிவாகக் கூறியுள்ளார்; அதேபோல் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்  மற்றும் BBC உடனான விவாதங்களிலும் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடி ஒரு கிரேக்க நெருக்கடி மட்டும் அல்ல; இது ஓர் ஐரோப்பிய பிரச்சினை என்று அவர் CNN இடம் கூறினார். எனவே உடன்பாடு இரத்து செய்யப்பட்டு ஐரோப்பிய மட்டத்தில் மறு பேச்சிற்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்காகத் தான் தெற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் பங்காளிகளைத் தேட இருப்பதாகவும் கூறினார். சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மக்களுடைய வாழ்வில் விளையாடுவதாகவும், யூரோப்பகுதியை இடருக்கு உட்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வோல் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் சிப்ரஸ் கூறினார்: நம்முடைய முதல் விருப்பம் நம் ஐரோப்பிய பங்காளிகளை அவர்களுடை நலன்களின் அடைப்படையிலேயே நிதி அளித்தல் நிறுத்தப்பட வேண்டும் என நம்ப வைப்பது. ஆனால் இப்படி நடந்தால், கிரேக்கம் கடனைத்திருப்பக் கொடுக்க முடியாது. கிரேக்கத்தில் நிதியச் சரிவு என்பது யூரோப் பகுதி முழுவதையும் தன்னுடன் இழுத்துவிடும்.

மேலும் BBC யிடம் அவர் அச்சுறுத்தினார்: சிக்கன நடவடிக்கை என்னும் நோய் கிரேக்கத்தை அழித்தால், இது ஐரோப்பா முழுவதும் பரவும்.

பிரஸ்ஸல்ஸிற்கு அச்சுறுத்தல்கள், வேண்டுகோள்கள் என்ற கலவையைக் கொண்ட சிப்ரஸின் கொள்கை பகற்கனவுகள், போலித்தோற்றங்கள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டது. அனைத்து மத்தியதர வகுப்பு அரசியல் வாதியைப் போலவே அவர் சர்வதேச முதலாளித்துவ நெருக்கடியின் பரப்பைப் பற்றி முற்றிலும் குறைமதிப்பைக் கொண்டுள்ளார்.

கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கைகள் என்பது நிதிய மூலதனத்தின் தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களுக்கு எதிரான ஒரு சர்வதேச தாக்குதலின் பகுதி ஆகும். இது 2008 நிதிய நெருக்கடிக் காலத்தில் இருந்து வியத்தகு அளவில் விரிவாகி, அனைத்து முதலாளித்துவ நாடுகளையும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலியில் இருந்து பிரானஸ், ஜேர்மனி வரை பாதித்துள்ளது.

இப்பொழுது அமெரிக்க, பிரித்தானிய அரசாங்கங்கள் கோரும் பணவீக்கக் கொள்ளை இத்தகைய தாக்குதல்களை மற்றொரு வடிவத்தில்தான் தொடரும். இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் விவாதிக்கப்படும் வளர்ச்சி உடன்பாடு, தன் நம்பிக்கையை அதிகம் சிப்ரஸ் கொண்டிருப்பது, நலிந்துள்ள வங்கிகளுக்குக் கூடுதல் பணம் அளித்தல், போட்டித்தன்மையை பெருக்க கட்டுமானச் சீர்திருத்தங்களை கொண்டு வருதல் என்பவற்றில்தான்; அதாவது, வளைந்து கொடுக்கும் பணிச்சூழல்கள், குறைந்த ஊதியங்கள் என்பதில். பொதுநலச் செலவுகள் தளர்வின்றி வெட்டுக்களுக்கு உட்படுத்தப்படும்.

கிரேக்கத் தேர்தலில் சிரிசா உண்மையில் வென்றால், இது அத்தகைய தாக்குதல்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்கைத்தான் கொண்டிருக்கும். சிரிசாவின் ஐரோப்பிய சகோதரக் கட்சிகளை காணும்போது, இத்தாலியில் Communist Refoundation, ஜேர்மனியில் இடது கட்சி, பிரான்ஸில் இடது முன்னணி என, இவை அனைத்தும் எந்த அரசாங்கத்தில் பங்கு பெற்றிருந்தாலும், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களில் பங்கு பெற்றுள்ளன.

சிப்ரஸும் இதைச் செய்யும் திறன் உடையவர். சிப்ரஸ் கொந்தளிப்பில் இருந்து ஒரு பொறுப்பான அரசியல் நிலைமைக்கு மாற்றத்தை அடைவார் என்று சிலர் கூறியுள்ளாதக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஜேர்மனிய செய்தித்தாள் Taz, பசுமைக் கட்சிக்கு நெருக்கமாக இருப்பது, இப்பிரச்சினையை நன்கு அறிந்துள்ளது, சிப்ரஸ், இயலாத உறுதிமொழிகளுடன் பிரச்சாரம் நடத்துவது ஒரு தடை அல்ல; அதாவது கிரேக்க மக்களுடன் அவர்கள் அனைத்தையும் கொள்ளலாம், யூரோ, புதிய உதவிகளில் மாற்றம், அவற்றின் பழைய வாடிக்கை நாடாக இருப்பது போன்றவற்றை. ஏனெனில் அவர்களுடைய நலன்களையும் விருப்பங்களையும் அவர் உருவகமாகக் கொண்டுள்ளார்; மக்கள் அவரை ஏற்பர்; துரதிருஷ்டவசமாக சீர்திருத்தங்கள் தேவை என்பதை அவர் புதிய அரசாங்கத்தின் தலைவராக ஒப்புக் கொள்வார்.