WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
நேட்டோ
உச்சிமாநாட்டிற்குப்
பின்:
ஆப்கானிஸ்தான்
படுகொலைகள்
தொடரும்
Bill Van Auken
23 May 2012
use this
version to print | Send
feedback
திங்களன்று சிக்காக்கோவில் நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பின்
ஆப்கானிஸ்தானைப் பற்றி வெளிவந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒரு நாடு
“பாதுகாப்பிற்கு
சுயமாக தங்கியிருத்தல், முன்னேற்றமடைந்துள்ள ஆட்சிமுறை மற்றும் பொருளாதார, சமூக
வளர்ச்சி ஆகியவற்றின் வழியில் செல்லுகின்றது, ஆப்கானிய ஆண்கள், பெண்கள்,
குழந்தைகளின் வாழ்க்கைகள் அமெரிக்க நேட்டோ ஆக்கிரமிப்பின் கீழ் கடந்த தசாப்தத்தில்
கணிசமாக முன்னேறியுள்ளது”
என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தலைமையிலான போர் என்பதில் இருந்து
“இனி
பின்னோக்கிசெல்லாத மாற்றம்”
வரும் என அது உறுதியளிக்கிறது. ஆப்கானியப் படைகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியை ஒட்டி
நாடு தழுவிய பாதுகாப்பிற்கு தலைமை தாங்கும்”
என்றும் அது கூறுகிறது.
“ஒரு
அமைதியான, உறுதியுடைய, வளமை மிகுந்த ஆப்கானிஸ்தான் எழுச்சியடையும் என்று அது
கருதுவதுடன், அத்தகைய ஆப்கானிஸ்தான் முழுபிராந்தியத்திலும் பொருளாதார, சமூக
வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்யும் என்றும் கூறியுள்ளது.
இத்தகைய நேட்டோ ஆவணங்களின் குரல்நயம், வார்த்தைஜாலங்கள் பற்றி
அதிகம் அறியாத வாசகர்கள் அவநம்பிக்கையினால் தங்கள் கண்களைக் கசக்கி விட்டுக்
கொண்டால் மன்னிக்கப்படுவர். எந்த நாட்டைப் பற்றி இவர்கள் பேசிக்
கொண்டிருக்கின்றனர்?
“வளம்மிகுந்த”,
“உறுதியான”
நாடாக ஆப்கானிஸ்தான் எழுந்துகொண்டிருக்கிறது என்னும் கூற்று
ஆப்கானிய அரசாங்கம் முன்னேற்றமான பாதுகாப்பு, ஆட்சி, வளர்ச்சி ஆகியவற்றை வழங்கி
வருகிறது என்ற போலித்தனத்தைப் போல்தான் உள்ளது.
இந்த நாட்டில் பாதிக்கும் மேலான மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக்
கோட்டிற்குக் கீழே வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 30,000 குழந்தைகள்
ஊட்டச்சத்தின்மை என்னும் கொடுமையினால் உயிரிழக்கின்றன. மதிப்பீடுகள்
ஆப்கானிஸ்தானத்தை உலகின் மிக வறிய பத்து நாடுகளில் ஒன்றாக மதிப்பிட்டுள்ளன.
பிரசவத்தின்போதும் மற்றும் குழந்தைகள் இறப்பு வீகிதத்திலும் மிகவும் அதிகமான
விகிதங்கள் உலகிலேயே தாயாராக இருப்பதற்கு மோசமான நாடாக உள்ளது. வேலையின்மை
கிட்டத்தட்ட 40% என உள்ளது. அக்டோர் 2001ல் அமெரிக்கப் படையெடுப்பில் இருந்தே
இந்நிலைதான் உள்ளது. நாட்டை விட்டு ஏராளமானோர் வெளியேறுவது என்பது சமூக நிலைமைகள்
சரிந்து வருவதின் உறுதியான அடையாளம் ஆகும். நான்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும்
ஆப்கானியர்கள் 2011ல் நாட்டை விட்டு நீங்கியது மூன்று மடங்கு அதிகமாயிற்று.
அமெரிக்க ஆதரவு கொண்ட கைப்பாவை ஹமித் கர்சாயின் அரசாங்கத்தினை
“முன்னேற்றமடைந்த
ஆட்சி”
எனக் கூறியிருப்பது, புவியிலேயே மிக ஊழல் நிறைந்த ஆட்சிகளில் ஒன்று
என அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அவருடைய அரசாங்கம் எல்லா இடங்களிலும், அதிக மறைப்பு
இல்லாத போர்ப்பிரபுக்கள், அயோக்கியர்கள், வடிகட்டிய முதலாளித்துவத்தினர்
உதவிநிதிகளில் பில்லியன் கணக்கான டாலர்களை சுருட்டிக் கொண்டிருக்கின்றனர் என்னும்
நிலைதான் உள்ளது. முழுமையான, வெட்கம் அற்ற ஊழல் என்பது கர்சாயியுடைய
அரசாங்கத்திற்கு ஆப்கானிய மக்களின் வெறுப்பை ஈட்டித் தந்துள்ளது. அதேநேரத்தில் அவரை
அதிகாரத்தில் வைத்திருக்கும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு நடக்கும் எதிர்ப்பிற்கு
மக்களின் ஆதரவை அதிகப்படுத்தியுள்ளது.
தலைநகரத்தின் மையப்பகுதியில் மிக அதிகமான முறையில் தொடர்ந்து
நடத்தப்பட்டுள்ள சமீபத்திய தாக்குதல்கள் கர்சாயியை
“காபூல்
நகரமுதல்வர்”
என்று முன்பு விவரித்து வந்ததைக்கூட கேள்விற்குரியதாக ஆக்கிவிட்டன. ஒபாமாவின் கீழ்
ஆப்கானிஸ்தானத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மூன்று மடங்காக்கப்பட்டமை, பென்டகன்
விவரித்துள்ள நாடு முழுவதும்
“வலுவான
எழுச்சி”
பரவுவதில்தான் வெற்றிகண்டுள்ளது.
ஆப்கானிய கைப்பாவை பாதுகாப்புப் படையினர் ஜூன் 2013ல்
“தலைமை
ஏற்க உள்ளனர்”
என்பதைப் பொறுத்தவரை, பெப்ருவரி மாதம் கூட ஆப்கானிஸ்தானத்தில் உள்ள
அமெரிக்கப் படைகளின் துணைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் கர்ட்டிஸ் ஸ்காப்ரோட்டி
ஆப்கானிய இராணுவத்தில் 1 சதவிகிதம் மற்றும் பொலிஸ் பிரிவுகளில் ஒரு சதவிகிதம்தான்
சுதந்திரமாகச் செயல்படும் திறன் உடையவை என்பதை ஒப்புக் கொண்டார். இந்தச் சிறு
கையளவுப் பிரிவுகள்கூட உளவுத்தகவல்கள் மற்றும் தளவாடங்கள், நிதி ஆதரவிற்கு
அமெரிக்கப் படைகளைத்தான் நம்பி உள்ளன. ஆப்கானிய இராணுவத்திடம் விமானப்படைகளோ,
பீரங்கிகளோ கிடையாது.
சிக்காக்கோவில் வெளியிடப்பட்டுள்ள உவப்பான அறிக்கை
“நீலத்தைப்
பச்சை கொல்லுதல்”
எனக் கூறப்படுவதில் முறையாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதைப்பற்றி ஏதும்
குறிப்பிடவில்லை. அமெரிக்க, இன்னும் நேட்டோப் படைகள் அவற்றின் ஆப்கானிய நட்புப்
படைகளால் சுட்டுக் கொல்லப்படுவது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. இது ஆக்கிரமிப்புப்
படையினரிடம் பெரும் மனத்தளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அப்படிப்பார்த்தால்,
ஆக்கிரமிப்பாளர்களின் முடிவிலாத் தொடர் கொடுமைகளைப் பற்றியும் அறிக்கை ஏதும்
கூறவில்லை. ஒரு அமெரிக்க படையினன் 17 குடிமக்களைப் படுகொலை செய்தது பற்றியோ அல்லது
அமெரிக்கத் துருப்புக்கள் கொலையுண்ட ஆப்கானியர்கள் மீது சிறுநீர் கழித்தது,
சடலங்களை இழிவுபடுத்தியது, வான்வழித்தாக்குதல்களைத் தொடர்வது, முழுக்
குடும்பங்களையும் அழிக்கும்
“இரவுச்
சோதனைகள்”
என்னும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் அது ஏதும் கூறவில்லை.
2014இல் இருந்து தொடங்கவிருப்பதாக கூறப்படும்
“இனி
பின்னோக்கிச் செல்ல முடியாத மாற்றம்”
அதைத்தொடர்ந்து
“ஒரு
தசாப்த மாற்றங்கள்”
பற்றிய வனப்புரை அமெரிக்க மக்களை நம்பவைப்பதற்கு ஆகும். அங்கு கருத்துக்
கணிப்புக்கள் மக்களில் கால் பகுதியினர்கூட ஆப்கானிஸ்தானத்தில் நடக்கும் போருக்கு
ஆதரவு கொடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. அதேபோல் ஒபாமா கூறியிருப்பது போல்
“ஆப்கானியப்
போர் என நாம் விளங்கிக்கொண்டுள்ளது முடிந்துவிட்டது”
என்று ஐரோப்பியர்களுக்கும் தெரியப்படுத்துகிறது.
இந்த அப்பட்டமான பொய்யின் துணைமுடிவு போரின் புதிய கட்டம்
இப்பொழுதுதான் தொடங்குகிறது என்பதாகும். இந்தப் புதிய கட்டத்தின் தன்மை தளபதி ஜோன்
அலென், ஆப்கானிஸ்தானில் உள்ள உயர்மட்ட அமெரிக்கத் தளபதியால் முன்வைக்கப்படுகிறது.
அவர் அமெரிக்க, நேட்டோப் படைகள் அடுத்த ஆண்டு மற்றும் 2014 முழுவதும் ஈடுபடும்
என்று வலியுறுத்தியுள்ளார்; இது மக்களுடைய எதிர்ப்பை முற்றிலும் தகர்க்கும்
வகையிலான கிட்டத்தட்ட இனவழி அழிப்புப் பிரச்சாரம் என்ற அச்சுறுத்தலைத்தான்
கொண்டுள்ளது.
சிக்காக்கோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக முன்பு பாதுகாப்பு மந்திரி
லியோன் பானெட்டா தலைவராக இருந்த தேசிய கொள்கைகளுக்கான அமைப்பு-Center
for National Policy-
வெளியிட்ட அறிக்கை ஒன்று என்ன நடக்கும் என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
கிட்டத்தட்ட 30,000 துருப்புக்கள், அவற்றுள் முக்கால் பங்கு அமெரிக்கப் படைகள்,
சிறப்புப் படைகள் கட்டுப்பாட்டின்கீழ் ஆப்கானிஸ்தானத்தில் காலவரையற்று
இருக்கவேண்டும் என அழைப்புவிடுகின்றது. இதில் இம்மாதம் முன்னதாக ஒபாமா மற்றும்
கர்சாய் கையெழுத்திட்டுள்ள மூலோபாய பங்காளித்தனத்தில் உள்ள பத்து ஆண்டுகளும்
உள்ளடங்கும். இவற்றிற்கு
“தாக்குதல்
மற்றும் வான் ஆதரவும்”
கிடைக்கும்.
“மத்திய
உளவுத்துறை அமைப்புடன் இணைந்து செயல்படும்”;
இப்படையினர் ஆப்கானிஸ்தானம்
மற்றும் பாக்கிஸ்தான் இரண்டிலும் இருக்கும் எழுச்சியாளர்களுக்கு எதிரான
“நேரடி
நடவடிக்கைகளைத் தொடரும்”.
காந்தஹார் விமானத் தளம், காம்ப் பாஸ்டியன்/லெதர்மெக் என ஹெல்மாண்ட்
மாநிலத்தில் இருக்கும் விமானத்தளம் மற்றும் பக்ரம் விமானத்தளம் ஆகியவை மூன்றும்
மூலோபாயத் தளங்களாக இப்படையினரால் கட்டுப்படுத்தப்படும்.
வேறுவிதமாகக் கூறினால்,
“மாற்றம்”
என்பது ஆப்கானிய-பாக்கிஸ்தானிய எல்லைகளில் இன்னும் கொலைகள், இன்னும் அதிகக்
குண்டுவீச்சுக்கள், இன்னும் கூடுதலான இரவுச் சோதனைகள், இன்னும் அதிக ஆளற்ற விமான
ட்ரோன் தாக்குதல்கள் என்பதையை அர்த்தப்படுத்துகின்றது. இதன் நோக்கம், அமெரிக்கா
மட்டும் போரில் மாதம் ஒன்றிற்கு 10 பில்லியன் டாலரைச் செலவழிக்கும் நிலையில் நேட்டோ
தலைவர்கள்
“சிக்கன
நடவடிக்கைக்காலம்”
என்று குறிக்கப்படுவது, கொடூரத்தை குறைந்த செலவில் நடத்துவதாகும்.
தனக்கு முன் பதவியில் இருந்த ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் மூலோபாய
இலக்குகளைத்தான் ஒபாமாவும் தொடர்கிறார். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்
என்ற மறைப்பில், அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுடனும் ஈரானுடனும் எல்லைப் பகுதிகளைக்
கொண்ட ஒரு நாட்டில் நிரந்தரத் தளங்களைப் பெறுவதற்கு உறுதியாக உள்ளது. மேலும் மத்திய
ஆசியப் பகுதியின் எண்ணெய்ச் செழிப்பு உடைய பகுதிகளும் இதற்கு அருகேதான் உள்ளன.
இந்நாடு அமெரிக்க ஆளும் வட்டங்களால் வரவிருக்கும் புதிய, இன்னும் இரத்தம்சிந்தும்
ஏகாதிபத்திய போர்களை ஆரம்பிப்பதற்கு உகந்த மூலோபாயப் பகுதி எனக் காணப்படுகிறது.
புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பு என்பது
பெரும் ஆதிக்கம் செலுத்திய வகையில் நடந்த தேர்தல்களில், 2009ல் ஒபாமா பதவிக்கு
வந்ததில் இருந்து, 1,350 அமெரிக்க படையினரும், மரைன்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதைத்தவிர கணக்கிலங்கா ஆப்கானிய, பாக்கிஸ்தான் குடிமக்கள், ஆண்கள், பெண்கள்,
சிறுவர்கள் எனக் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக நடக்கும் இப்போரில்
நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளன.
சிக்காக்கோவில் நடந்த நேட்டோ உச்சிமாநாடு, போருக்கு எதிராக
அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் தமது போராட்டத்தை தங்கள் சுயாதீன அரசியல் வலிமையை
ஒபாமா நிர்வாகம் மற்றும் இருகட்சி முறைக்கு எதிராக அணிதிரட்டுவதின் மூலம்தான் நடத்த
முடியும் என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. அத்தகைய போராட்டம் போருக்கும்
இராணுவவாதத்திற்கும் மூலகாரணமாக இருக்கும் முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி
வைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.
|